அஜித்-விஜய்-சூர்யாவுடன் நடித்தவருடன் ஜோடி போடும் ஸ்ருதிஹாசன்

அஜித்-விஜய்-சூர்யாவுடன் நடித்தவருடன் ஜோடி போடும் ஸ்ருதிஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vidyut-Jamwalஅஜித்தின் ‘பில்லா 2’ மற்றும் விஜய்யின் ‘துப்பாக்கி’ படங்களில் வில்லனாக நடித்தவர் வித்யூத் ஜாம்வால்.

இவர் சூர்யாவுக்கு நண்பனாக ‘அஞ்சான்’ படத்திலும் நடித்திருந்தார்.

கோலிவுட்டில் வில்லனாக இருந்தாலும் பாலிவுட்டில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

தற்போது மகேஷ் மஞ்ரேகர் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் வித்யூத் ஜாம்வாலுக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முக்கிய வேடங்களில் நஸ்ருதின் ஷா, அமோல் பலேகர் ஆகியோர் நடிக்கவிருக்கிறார்களாம்.

இதற்கு முன்பே ‘யாரா’ என்ற படத்தில் வித்யூத் ஜாம்வாலுடன் ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Shrutihaasan to romance again with Vidyut Jamwal

ஸ்டெர்லைட் போராட்டத்தில் மாணவர்களுடன் பங்கேற்ற நடிகர் பிரபா

ஸ்டெர்லைட் போராட்டத்தில் மாணவர்களுடன் பங்கேற்ற நடிகர் பிரபா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Prabha supports Tuticorin peoples Sterlite Protestதிருட்டு விசிடி மற்றும் மதுரை மாவட்டம் படங்களில் நடித்து பிரபலமான நடிகர் பிரபா, ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று காலை மாணவர்களுடன் இணைந்து சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்னம் ஸ்டேடியமில் உண்ணாவிரதப் போரட்டத்தில் கலந்துக்கொன்டார்

தமிழ்நாட்டில் ஸ்டெரிலைட் போராட்டம் பெரிய அதிர்வலைகளை கிளப்பியுள்ளது.

தூத்துக்குடி மக்கள் தங்கள் வாழ்வாதரத்திற்கு மட்டுமின்றி வருங்கால சந்ததியினர் வாழ்க்கைக்காக போராடி வருகின்றனர்.

ஸ்டெரிலைட்டால் வருங்கால சந்த்ததியே கேன்சர், மற்றும் பலவிதமான நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். 15 நாட்களுக்கு மேலாக ஸ்டெரிலைட் ஆலையை மூடச்சொல்லி பெருமளவில் மக்கள் பலவிதங்களில் போராடி வருகின்றனர்.

ஆனால் தமிழக அரசும், மத்திய அரசும், மக்களை கண்டுகொள்ளாமல் வஞ்சித்து வருகின்றது

இப்போது போரட்டம் பலவிதங்களில், பல இடங்களில் பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் முதல் ஆளாக இந்தப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மாணவர்க்ளுடன் இணைந்து இன்று காலை உண்ணாவிரதப் போராட்டதில் இறங்கியுள்ளார் நடிகர் பிரபு.

தமிழ் சினிமா உலகில் இருந்து இது வரை எவரும் இந்தப்போரட்டதிற்கு ஆதரவாய் இறங்காத நிலையில் புதுமுக நடிகராக இருந்தாலும் துணிந்து அரசுக்கெதிராக மக்களுக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளார் நடிகர் பிரபா.

தங்களுக்கு ஆதரவாய் களமிறங்கிய பிரபாவிற்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பும் பாராட்டும் கிடைத்துள்ளது.

Actor Prabha supports Tuticorin peoples Sterlite Protest

போராட்டத்தில் ரசிகர்களை கண்டித்த கமல்; அதன்பின்னர் அளித்த விளக்கம் இதோ!

போராட்டத்தில் ரசிகர்களை கண்டித்த கமல்; அதன்பின்னர் அளித்த விளக்கம் இதோ!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal warning to his fans at Ban Sterlite protestதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக குமரெட்டியாபுரத்தில் 49வது நாளாக பொது மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்தில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் போராட்டத்தில் பங்கேற்று தனது ஆதரவை தெரிவித்தார்.

அப்போது அவர் ஒரு காரில் நின்று கொண்டு மைக்கில் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது சிலர் ரசிகர்கள் கைதட்டியவாறு தலைவா, ஆண்டவரே, இங்கே பாருங்க என கூட்டலிட்டனர்.
இதனால் கடுப்பான கமல், சும்மா இருங்க. சும்மா இரு. இங்க் பேசிட்டு இருக்கே. விஷயம் தெரியாம விளையாட்டு பண்ணீட்டு இருங்கீங்க என்று கண்டிப்புடன் பேசினார்.

இந்த வீடியோ காட்சியை மட்டும் எடிட் செய்து பலர் இணையங்களில் பரப்பி வந்தனர்.

ஆனால் அதன்பின்னர், இது என் குடும்பம். அதனால் உரிமையுடன் கண்டிப்பேன் என்று விளக்கம் அளித்திருந்தார்.

அந்த வீடியோவை யாரும் பதிவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Kamal warning to his fans at Ban Sterlite protest

மக்களை காப்பதை விட காப்பர் அவசியமா..? ஸ்டெர்லைட் போராட்டத்தில் கமல் பேச்சு

மக்களை காப்பதை விட காப்பர் அவசியமா..? ஸ்டெர்லைட் போராட்டத்தில் கமல் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Copper is not necessary in Peoples living area says Kamal in Ban Sterlite protestதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.குமரெட்டியாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடர் போராட்டத்தை ஆரம்பித்து நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, தூத்துக்குடி குமரெட்டியாபுரம் கிராமத்தில் நடைபெற்றும் வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று நேரில் சென்று பங்கேற்றார்.

இதுதொடர்பாக, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், மக்களின் உயிரை விட காப்பர் வியாபாரம் முக்கியம் என நினைக்க வேண்டுமா? அப்படி எனில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது தான் நல்லது. குடியிருப்பு, விவசாய பகுதிகளில் ஆலை அமைப்பது தவறு.

மத்திய அரசும், தமிழக அரசும் ஸ்டெர்லைட் விவகாரத்தில் பாராமுகமாக நடந்து கொள்கின்றன. நான் செல்லும் இடமெல்லாம் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக பிரசாரங்கள் மேற்கொள்வேன்.

நான் புதிதாக விளம்பரம் தேட வேண்டிய அவசியம் இல்லை, ஐந்து வயதில் இருந்தே எனக்கு விளம்பரத்திற்கு பஞ்சம் இல்லை” என தெரிவித்துள்ளார்.

Copper is not necessary in Peoples living area says Kamal in Ban Sterlite protest

பிரபல டைரக்டர் சி.வி.ராஜேந்திரன் காலமானார்

பிரபல டைரக்டர் சி.வி.ராஜேந்திரன் காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Cinema Director CV Rajendran passed awayபிரபல பழம்பெரும் தமிழ்த் திரைப்பட இயக்குநர் சி.வி.ராஜேந்திரன் ஞாயிறன்று காலமானார். இவருக்கு வயது 81.

அவரை பற்றிய சிறுகுறிப்பு இதோ….

முத்துராமன், ராஜஸ்ரீ, ரி.எஸ்.பாலையா நடித்த “அனுபவம் புதுமை” என்ற படம்தான் இவரது முதல் படம்.

இப்படம் 1967-இல் வெளிவந்தது. ஸ்ரீதரிடம் இருந்தபோது “மீண்ட சொர்க்கம்”, “கலைக்கோவில்”, “கொடி மலர்”, “நெஞ்சம் மறப்பதில்லை”, “நெஞ்சிருக்கும் வரை” போன்ற படங்களுக்கு உதவி இயக்குநராக பணியாற்றினார்.

”காதலிக்க நேரமில்லை” படத்தின் போது அசோஸியேட் இயக்குனரானார். “அனுபவம் புதுமை” படத்தில் தான் முதன்முதலாக ஸ்லோமோஷன் காட்சிகளை அமைத்தவர் இவர்.

ஜேம்ஸ்பாண்ட் பாணியிலான கதையை ஜெய்சங்கர், பாரதி, நாகேஷ், ஜெயந்தி, விஜயலலிதா நடிக்க வைத்து இவர் இயக்கிய “நில் கவனி காதலி” என்ற படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

இவரது இயக்கத்தில் வெளிவந்த “சங்கிலி” என்ற திரைப்படத்தில் தான் இளைய திலகம் பிரபுவை அறிமுகம் செய்தார்.

1993-லிருந்து 4 வருடங்கள் நடிப்பதிலிருந்து விலகியிருந்த சிவாஜி கணேசனை தனது சொந்தப் படமான “ஒன்ஸ்மோர்” படத்தில் நடிக்க வைத்தார்.

இவர் இயக்கிய “கோகிலா எங்கே போகிறாள்” இன்ற தொடருக்கு சிறந்த இயக்குநர் விருது இவருக்குக் கிடைத்தது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது “கலைமாமணி’’ விருது கொடுத்து கௌரவித்தார்.

இயக்குனர் சி.வி.ராஜேந்திரனுக்கு ஜானகி என்ற மனைவியும், ஒரு பெண், ஒரு ஆண் என்ற இரு வாரிசுகளும் உள்ளனர்.

Cinema Director CV Rajendran passed away

காவிரி மேலாண்மை & ஸ்டெர்லைட் பிரச்சனைகளுக்காக திரையுலகினர் போராட்டம்

காவிரி மேலாண்மை & ஸ்டெர்லைட் பிரச்சனைகளுக்காக திரையுலகினர் போராட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tamil Cinema Industry supports TN Peoples Cauvery and Sterlite Protestதென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதில் நடிகர் சங்க தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி துணை தலைவர் பொன்வண்ணன், செயற்குழு உறுப்பினர்கள், உதயா, விக்னேஷ், பிரேம், பிரகாஷ், குட்டிபத்மினி நியமன செயற்குழு உறுப்பினர்கள் மனோபாலா ஹேமசந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் பேசும்போது, ‘இப்போது தமிழ் சினிமாவுக்கு மிகவும் இக்கட்டான சூழ்நிலை, டிஜிட்டல் டெக்னாலஜி வந்த பிறகு தமிழ் சினிமாவில் நிறைய பிரச்சனைகள் உள்ளது.

எந்த ஒரு தொழிலுமே விஞ்ஞான வளர்ச்சிக்கு பின்னர் செழிப்பாக தான் இருக்கும். ஆனால் நமது சினிமா மட்டும் மாறாக பல பிரச்சனைகளை சந்தித்து பின்னோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது.

இதை சரி செய்ய வேலை நிறுத்தம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எப்போதும் வேலை நிறுத்தம் என்றால் சில நாட்கள் நடைபெறும் அதன் பின்னர் நிறைவடைந்துவிடும் ஆனால் மாறாக இந்த முறை வேலை நிறுத்தம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கு ஆதரவாக திரையுலகமே உள்ளது.

இதனால் தினமும் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். இந்த இறுக்கமான சூழ்நிலை இளகவைக்க நாங்கள் சில நாட்களாக இரவும் பகலும் பேசி ஒரு முடிவுக்கு வந்துள்ளோம். அதை நடிகர் சங்கத்தின் துணை தலைவர் பொன் வண்ணன் கூறுவார்’ என்றார்.

இதை தொடர்ந்து நடிகர் சங்க துணை தலைவர் பொன்வண்ணன் பேசும்போது,

‘நான் சினிமாவுக்கு வந்த காலத்தில் தயாரிப்பாளர்கள் ஒரு கூட்டு குடும்பமாக தான் வேலை செய்து வந்தார்கள்.

தயாரிப்பு என்பது ஒரு தயாரிப்பாளர் மட்டுமே செய்யும் வேலை அல்ல, அதை தமிழகத்தில் உள்ள அனைத்து விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் இணைந்து செய்யும் வேலை. அனைவரும் ஒவ்வொரு படத்தையும் தங்களுடைய படமாக நினைத்து தான் வேலை செய்து வந்தார்கள்.

இதையெல்லாம் நான் பத்து வருடங்களாக கண்ணால் பார்த்திருக்கிறேன். ஒரு கூட்டாக இணைந்து செய்யப்பட்டுக்கொண்டிருந்த இந்த தொழில் நம்பிக்கையின்மையால் மாறியுள்ளது

எந்த வித கணக்கு வழக்கும் இல்லாமல் ஒரு நடிகரை சம்பளத்தை குறைக்க சொல்லும் போது அந்த நடிகர்கள் மனரீதியாக வருத்தப்படுகிறார்கள்.

ஆன்லைன் டிக்கெட் புக்கிங் சார்ஜெஸ் அதிகமாக இருப்பதால் மக்கள் திரையரங்குக்கு வருவது கம்மியாகியுள்ளது, அதனால் அதை குறைக்க வேண்டும்.

சினிமா என்பது மக்களுக்காக தான். நாங்கள் இந்த விஷயத்தில் தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஆதரவாக இருப்போம்.

மேலும் காவிரி மேலாண்மை, ஸ்டெர்லைட் பிரச்சனைகளுக்காக மக்களுக்கு ஆதரவாக அழுத்தம் தரும் வகையில் விரைவில் அதற்கென ஒரு போராட்டமோ அல்லது உண்ணாவிரதமோ அடுத்த வாரத்தில் அரசாங்கத்திடம் முறைப்படி அனுமதி வாங்கி நடத்தப்படும்’ என்றார்.

Tamil Cinema Industry supports TN Peoples Cauvery and Sterlite Protest

More Articles
Follows