தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கோவை மாவட்டத்தில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார் நடிகர் சத்யராஜ்.
அப்போது நடிகர் விஜய்யின் கல்வி விருது குறித்த கேள்விகளை சத்யராஜிடம் கேட்டனர் செய்தியாளர்கள்.
அதற்கு அவர் பதிலளிக்கையில்..:
“அரசியலுக்கு வருவது பற்றி விஜய் வெளிப்படையாக எதையும் சொல்லவில்லை.
அவரே சொல்லாதபோது நான் அது குறித்து பேசுவது நன்றாக இருக்காது.
தலைவர்கள் அம்பேத்கர், பெரியார், காமராஜர் பற்றி படிக்க வேண்டும் என்ற விஜய்யின் கருத்தை வரவேற்கிறேன்.
சிறந்த மாணவ. மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாக விஜய் செய்தது நல்ல விஷயம். இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கிறார் விஜய்.” இவ்வாறு சத்யராஜ் பதிலளித்தார்.
Sathyraj open talk about Vijays politics