தன் மகள் ஸ்ருதிஹாசனை சூட்டிங் ஸ்பாட்டில் சந்தித்தார் சரிகா

தன் மகள் ஸ்ருதிஹாசனை சூட்டிங் ஸ்பாட்டில் சந்தித்தார் சரிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

shruti haasan and sarikaநடிகை ஸ்ருதிஹாசன் தற்போது தேசிய விருது பெற்ற இயக்குநர் மகேஷ் மஞ்சரேக்கர் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

கேங்ஸ்டர்களின் உலகத்தைப் பற்றிய இந்த படத்தில் ஸ்ருதிஹாசனின் பற்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து காட்சிகளை அமைத்திருக்கிறாராம் இயக்குநர் மகேஷ் மஞ்சரேக்கர்.

இதன் படபிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அங்கு ஸ்ருதிஹாசனின் அம்மாவும், கமலின் முன்னாள் மனைவியுமான நடிகை சரிகா வருகை தந்து, மகளின் நடிப்பை பார்வையிட்டிருக்கிறார்.

இதைப் பற்றி படக்குழுவினர்களிடம் விசாரித்தபோது, ‘‘மகேஷ் மஞ்சரேக்கர் போன்ற திறமையான கதை சொல்லிகளின் படைப்பில் உருவாகும் படத்தில் நடிக்க ஸ்ருதி ஒப்புக்கொண்டதை கேள்விப்பட்ட சரிகா உண்மையிலேயே சந்தோஷமடைந்தார்.

இயக்குநரின் வழிகாட்டலை ஸ்ருதி பின்பற்றினால் அவரின் திறமை மேலும் பளிச்சிடும் என்றார்.

அத்துடன் ஸ்ருதியை இது போன்ற தேசிய விருது பெற்ற இயக்குநர்களின் கைகளில் தன்னை ஒப்படைத்ததற்காகவும் அவர் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்’’ என்றனர்.

படபிடிப்பு தளத்திற்கு வருகை தந்த தன் தாயாரை அங்கு பணியாற்றிய அனைவருக்கும் தனித்தனியாக அறிமுகப்படுத்தினார் ஸ்ருதிஹாசன்.

அதன்பின் தன் தாயாரின் எண்ணத்தை நன்றாக உணர்ந்திருந்த ஸ்ருதி, படத்தில் தான் ஏற்றிருக்கும் கேரக்டரைப் பற்றியும், இயக்குநர் தன்னிடம் வேலை வாங்கும் நுட்பத்தையும் அழகாக சரிகாவிடம் விவரித்தார்.

தன் மகளின் நேர்த்தியான விளக்கத்தைக் கேட்ட சரிகா, படபிடிப்பு தளத்தில் மகிழ்ச்சியுடன் இருந்தார்.

படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்து தன்னை உற்சாகப்படுத்தியதற்காக நடிகை ஸ்ருதியும் சந்தோஷத்துடனேயே வலம் வந்தார்.

காஞ்சிபுரத்தில் பட்டு சேலை கடையை திறந்து வைத்தார் ஸ்ரீ திவ்யா

காஞ்சிபுரத்தில் பட்டு சேலை கடையை திறந்து வைத்தார் ஸ்ரீ திவ்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actress sridivyaவருத்தப்படாத வாலிபர் சங்கம், காக்கி சட்டை உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா.

இவர் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே நெல்லுக்காரத் தெருவில் புதியதாக ஸ்ரீ காஞ்சி பட்டு சேலை விற்பனை கடையை திறந்து வைத்துள்ளார்.

பின்னர் குத்து விளக்கு ஏற்றி வைத்து பல்வேறு விதமான புத்தம் புது ரக சேலைகளை பார்வையிட்டார்.

மேலும் திரைபடங்களில் மட்டுமே பார்த்து வந்த நடிகை ஸ்ரீதிவ்யாவை நேரில் கண்ட கடையின் பெண் ஊழியர்கள் மிக ஆர்வத்துடன் அவருடன் செல்ஃபி மற்றும் புகைப்படங்களை எடுத்து கொண்டனர்.

புதியதாக திறக்கப்பட்ட இந்த புதிய பட்டு சேலை கடையில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புத்தம் புதிய இரகங்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும் அவர் அங்குள்ள அம்மன் கோயிலுக்கும் சென்று அம்மனை தரிசித்தார்.

கௌதம் கார்த்திக் உடன் நடிக்கும் ரெஜினாவுக்கு இதுதான் முதன்முறையாம்

கௌதம் கார்த்திக் உடன் நடிக்கும் ரெஜினாவுக்கு இதுதான் முதன்முறையாம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Regina Cassandra done dubbing for first time in Mr Chandramouli tamil movieதிரு இயக்கத்தில் நவரச நாயகன் கார்த்திக் மற்றும் அவரது மகன் கௌதம் இணைந்துள்ள படம் `மிஸ்டர்.சந்திரமௌலி’.

கவுதம் கார்த்திக் இந்த படத்தில் பாக்ஸராக நடித்துள்ளார்.

இதில் நாயகிகளாக ரெஜினா கசாண்ட்ரா மற்றும் வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

இவர்களுடன் சதீஷ், மகேந்திரன், அகத்தியன், விஜய் சந்திரசேகர் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இந்த படத்தை கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் அன்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தனஞ்செயன் தயாரித்துள்ளார்.

விரைவில் இப்படம் சென்சாருக்கு அனுப்பப்பட உள்ளதால் இதன் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அண்மையில் இப்படத்திற்காக ரெஜினா அவரது காட்சிகளுக்கு டப்பிங் பேசி முடித்துள்ளார். ஒரு தமிழ் படத்திற்கு ரெஜினா டப்பிங் பேசியிருப்பது இதுதான் முதன்முறையாம்.

சாம்.சி.எஸ். இசையமைத்திருக்கும் இந்த படத்தை விரைவில் வெளியிட உள்ளனர்.

Regina Cassandra done dubbing for first time in Mr Chandramouli tamil movie

regina dub

பாலிவுட்லும் பட்டைய கிளப்புவாரா அஜித்தின் ஹிட் பட டைரக்டர்

பாலிவுட்லும் பட்டைய கிளப்புவாரா அஜித்தின் ஹிட் பட டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith and vishnu vardhanஅறிந்தும் அறியாமலும்’, `பட்டியல்’, `சர்வம்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் விஷ்ணு வர்தன்.

அதன் பின்னர் முன்னணி நடிகரான அஜித்தின் `பில்லா’, `ஆரம்பம்’ உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமானார்.

இவரின் தம்பி கிருஷ்ணா மற்றும் ஆர்யா இருவரும் இணைந்து நடித்த `யட்சன்’ படத்தை கடைசியாக இயக்கியிருந்தார்.

தற்போது 3 வருட இடைவேளைக்குப் பிறகு இந்தியில் ஒரு படத்தை இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த அறிவிப்பை பாலிவுட்டின் பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருமான கரன் ஜோஹர் வெளியிட்டுள்ளார்.

கார்கில் போரின் போது உயிர்த் துறந்த கேப்டன் விக்ரம் பத்ராவின் வாழ்க்கையை மையப்படுத்தி அந்த படம் உருவாக இருப்பதாகவும், அதில் விக்ரம் பத்ராவாக பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்கோத்ரா நடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தர்மா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் கரன் ஜோஹர் மற்றும் ஷபீர் பாக்ஸ்வாலா இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர்.

சந்தீப் ஸ்ரீவத்சவா இந்த படத்திற்கான கதையை எழுதி இருக்கிறார்.

கோலிவுட்டில் கலக்கியது போல் பாலிவுட்டிலும் பட்டைய கிளப்புவாரா விஷ்ணு வர்தன் என்பதை பார்ப்போம்.

 

ரஜினியின் காலா இசை வெளியீடு நடைபெறும் இடம் இதுதான்

ரஜினியின் காலா இசை வெளியீடு நடைபெறும் இடம் இதுதான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kaala audio launchசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்தவுள்ள ‘காலா ‘படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற மே 9 ஆம் தேதி சென்னையில் உள்ள YMCA மைதானத்தில் ( நந்தனம் ) பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

காலா படத்தினை (நடிகர்/தயாரிப்பாளர்) தனுஷின் ‘வுண்டர்பார் பிலிம்ஸ்’ தயாரித்துள்ளது. கபாலி மற்றும் மெட்ராஸ் பட புகழ் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கி சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

இந்த இசைவெளியீட்டு விழாவானது நேரலையாக டுவிட்டர், பேஸ்புக், யூடியூபில் ஒளிபரப்பப்பட உள்ளது.

சந்தோஷ் நாராயணன் தனது (Dopeadelicz & RAP குழு)
இசைக்குழுவினருடன் இணைந்து காலா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நேரடி இசை நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளார்.

வுண்டர்பார் ஸ்டுடியோஸ் நிறுவனமும் அதன் டிஜிட்டல் பங்குதாரரான டிவோ (DIVO) நிறுவனமும் இணைந்து காலா படத்தின் பாடல்களையும்,இசைநிகழ்ச்சியினை நேரடியாக இணையதளங்களில் வெளியிட உள்ளனர்.

இசை வெளியீட்டு விழாவின் நேரலையை கீழ்கண்ட லிங்க்-களில் காணலாம்

https://www.facebook.com/OfficialWunderbarFilms/

https://www.youtube.com/wunderbarstudios

ஹெலிகாப்டர் சோதனை பைலட் பதவியில் அஜித்; சம்பளத்தை மாணவர்களுக்கே கொடுக்க முடிவு

ஹெலிகாப்டர் சோதனை பைலட் பதவியில் அஜித்; சம்பளத்தை மாணவர்களுக்கே கொடுக்க முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

thala ajith at MITஅஜித் எப்போது விஸ்வாசம் படப்பிடிப்பில் கலந்துக் கொள்வார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறார்கள்.

அவர் எம்ஐடி எனப்படும் சென்னை தொழில்நுட்பக் கல்லூரியில், யுஏவி ரக ஆளில்லா விமானத்தை உருவாக்குவதில் மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் பிஸியாக உதவி செய்து கொண்டிருக்கிறார்.

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் நடைபெறும் மிகவும் புகழ்பெற்ற ‘மெடிக்கல் எக்ஸ்பிரஸ் – 2018 யுஏவி சேலஞ்ச்’ எனும் போட்டியில் எம்ஐடி வெற்றி பெறுவதற்காகத் தான்.

இந்த போட்டியின் இறுதிச்சுற்று வரும் 2018 செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் எம்ஐடி யுஏவி ரக ஆளில்லா விமானத்தை உருவாக்குவதில் உதவி புரிவதற்காக ‘ஹெலிகாப்டர் சோதனை பைலட் மற்றும் யுஏவி சிஸ்டம் அட்வைஸர்’ எனும் புதிய பதவியை அஜித் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

பள்ளி மாணவராக இருக்கும்போதே ஏரோ மாடலிங்கில் விருப்பம் கொண்டவர் நடிகர் அஜித்.

மேலும் ரிமோட் கண்ட்ரோல் வாகனங்களை இயக்குவதிலும், சோதனை செய்வதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

எனவே அவர் இந்த பதவியை ஏற்றுக்கொண்டதில் ஆச்சரியம் இல்லைதானே.

எம்ஐடியின் தாக்‌ஷா (Dhaksha) எனப்படும் டீம் உடன் தான் கடந்த வியாழன் முதல் அஜித் இந்த பணியை மேற்கொண்டு வருகிறார்.

ஒருமுறை எம்ஐடிக்கு வந்து இந்த போட்டிக்காக உதவுவதற்கு அஜித் பெறும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? 1,000 ரூபாய்.

கோடிகளில் புரளும் அஜித், இதனால் வரும் வருமானத்தை எம்ஐடியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கே கொடுக்க முடிவு செய்துள்ளார்.

எம்ஐடியின் ஏரோஸ்பேஸ் ஆய்வு மையத்தின் பொறுப்பு இயக்குநரான துணை பேராசிரியர் கே.செந்தில்குமார் இதுகுறித்து கூறுகையில்,

“தனியார் நிறுவனங்கள், ஆய்வு மையங்கள், அரசாங்கம் தான் இந்த போட்டிக்கு நிதி அளிக்கிறது. இந்த போட்டிக்கு சென்ற 100 நாடுகளில் 55 நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் மட்டுமே இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி போட்டிக்கு தயாராகிக் கொண்டு வருகிறோம். இந்த துறையில் அஜித்தின் திறமை மற்றும் அனுபவத்தால் எங்களின் எண்ணம் வலுப்பெறும்” என்கிறார்.

மருத்துவமனையின் ஆய்வுக்கூடத்திலிருந்து 30 கிலோமீட்டருக்கு அப்பால் வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களால் தவிக்கும் நோயாளிகள், தொலை தூர கிராமங்களில் உள்ள நோயாளிகளின் ரத்த மாதிரியை பெற்று வரும் வகையில் ஆளில்லா விமானத்தை உருவாக்குவது தான், இந்த போட்டிக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சவால்.

More Articles
Follows