தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பழம்பெரும் தென்னிந்திய திரைப்பட நடிகர்களில் ஒருவர் சரத் பாபு.
நடிகர் சரத்பாபு கடந்த மாதம் 20-ஆம் தேதி ஐதராபாத்தில் கச்சிபௌலி எனும் இடத்தில் உள்ள தனியார் அனுமதியில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார்.
சரத்பாபுவின் சிறுநீரகங்கள், கல்லீரல், நுரையீரல் பாதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.
இப்படியொரு சூழலில் நேற்று ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.
கமல், குஷ்பு உள்பட பலரும் இரங்கல் தெரிவித்திருந்தனர்.
ஆனால் அது வதந்தி என சரத்பாபுவின் சகோதரர் மகன் ஆயுஷ் தேஜாஸ் மற்றும் உறவினர்கள் சொன்னபிறகே பொய் ஊடகங்கள் அமைதி காத்தன.
இந்த நிலையில் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் நடிகர் சரத்பாபு இன்று மே 22ம் தேதி காலமானார். அவருக்கு வயது71.
மேலும், நடிகர் சரத்பாபு இன்று இறந்ததால் ஏற்கனவே, வந்த வதந்திகளுக்கு சரத்பாபு முற்றுப்புள்ளி வைத்ததாகவும் அதனை ஹைதராபாத் டாக்டர்கள் உண்மையாக்கியதாகவும் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Sarathbabu put an end to rumours, Hyderabad doctors made it come true