வீட்டு முதியவர்களை கொலை செய்யும் தமிழின குடும்பச் சடங்கு ‘தலைக்கூத்தல்’

வீட்டு முதியவர்களை கொலை செய்யும் தமிழின குடும்பச் சடங்கு ‘தலைக்கூத்தல்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘தமிழ்ப் படம்’ தொடங்கி, ‘இறுதி சுற்று’, ‘விக்ரம் வேதா’ உள்ளிட்ட வித்தியாசமான முயற்சிகள் கொண்ட பல வெற்றிப் படங்களை தயாரித்தவர் எஸ். சஷிகாந்த்.

இவர் தலைமையிலான YNOT ஸ்டுடியோஸ், சிறந்த அறிமுக இயக்குநருக்காக தயாரிப்பாளருக்கு வழங்கப்படும் இந்திரா காந்தி விருது மற்றும் சிறந்த வசனத்திற்காக தேசிய விருது ஆகியவற்றை வென்ற ‘மண்டேலா’ படத்தை தயாரித்ததன் மூலம் தேசியளவில் கவனம் பெற்றது.

ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் ‘தலைக்கூத்தல்’ என்கிற புதிய படத்தை YNOT ஸ்டுடியோஸ் தற்போது தயாரித்துள்ளது.

இந்த வரிசையில் அடுத்த நேர்மையான படைப்பாக தலைக்கூத்தல் வெளியாகவுள்ளது.

அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றிய ஜெயப்பிரகாஷ், அறிமுக இயக்குநர்களுக்கு வழங்கப்படும் கொல்லப்புடி ஸ்ரீநிவாஸ் விருது பெற்ற ‘லென்ஸ்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

எந்த இயக்குநரிடமும் உதவியாளராக இவர் பணியாற்றியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

‘லென்ஸ்’ திரைப்படத்தை தொடர்ந்து ‘தி மஸ்கிடோ பிலாஸபி’ என்ற படத்தை இவர் இயக்கினார். பல்வேறு திரைப்பட விழாக்களில் இது இடம் பெற்றது. அதற்கு பிறகு தேசிய அளவிலான தொடர் திரைப்படம் (ஆந்தாலஜி) ஒன்றில் ஒரு அத்தியாயத்தை இயக்கியுள்ளார். இது விரைவில் வெளியாகவுள்ளது.

“தலைக்கூத்தல்’ பற்றி ஜெயப்பிரகாஷ் கூறுகையில்….

“2018-ல் இந்தப் படத்திற்கான யோசனை தோன்றியது. வயது முதிர்ந்தவர்களை சொந்த குடும்பத்தினரே கொல்லும் இது போன்ற ஒரு பழக்கம் தென் தமிழ்நாட்டில் உள்ள சில பகுதிகளில் நடைபெறுவது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

அதை பற்றி பல்வேறு தளங்களில் ஆராய்ச்சி மேற்கொண்டேன். இது சரியா தவறா என்பதை விவாதிப்பதை விட. எந்த சூழலில் குடும்பத்தினர் இந்த முடிவை எடுக்கிறார்கள் என்பதை யோசித்த போது நிறைய கேள்விகள் தோன்றின.

இந்த கேள்விகளுக்கான விடையை தேடுவதே இந்த படத்தின் நோக்கம்,” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர்…

“நடுத்தர குடும்பம் ஒன்று இத்தகைய சூழ்நிலையை எதிர்கொள்கிறது. அப்போது அந்த குடும்பத்தினர் என்ன முடிவு எடுக்கிறார்கள், எவ்வாறு அந்த சூழ்நிலையை எதிர்கொள்கிறார்கள் என்பதை பார்ப்பவர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இப்படம் விவரிக்கும்,” என்றார்.

இந்த கதையை தயாரிக்க முன்வந்த YNOT ஸ்டுடியோஸ் எஸ். சஷிகாந்த் மற்றும் இதில் நடிக்க ஒப்புக்கொண்ட சமுத்திரக்கனிக்கு எனது நன்றி என்று இயக்குநர் மேலும் தெரிவித்தார்.

வையாபுரி, கதிர், முருகதாஸ், வசுந்தரா, கதாநந்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் தலைக்கூத்தல் திரைப்படத்தில் நடித்துள்ளார்கள்.

தமிழ்ப் படம் – 1 மற்றும் 2 ஆகிய படங்களுக்கு இசையமைத்த கண்ணன் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

யுகபாரதி இரண்டு பாடல்களுக்கு உணர்வுப்பூர்வமான வரிகள் எழுதியுள்ளார். ஒளிப்பதிவு பணிகளை மார்ட்டின் டான்ராஜும், படத்தொகுப்பை டேனி சார்லசும் மேற்கொண்டனர்.

ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, கதிர், வசுந்தரா நடிப்பில் YNOT ஸ்டுடியோஸ் எஸ். சஷிகாந்த் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘தலைக்கூத்தல்’ விரைவில் திரைக்கு வரவுள்ளது.

கூடுதல் தகவல்…

வீட்டில் செயலற்று கிடக்கும் முதியவர்களை கொலை செய்யும் ‘தலைக்கூத்தல்’ என்ற சடங்கு முறையை மையப்படுத்தி உருவான படம் தான் ‘பாரம்’

இதை மையப்படுத்தி 2018-ஆம் ஆண்டு வெளியான தமிழ் சினிமா ‘பாரம்’ அந்தாண்டிற்கான சிறந்த படத்திற்கான தேசிய விருதை வென்றது.

Samuthirakani Kathir and Vasundhara starrer Thalaikoothal produced by YNOT Studios

நாடாளுமன்றத்தில் இளையராஜா வாங்கிய பூஜ்யம்.; நெட்டிசன்கள் கிண்டல்

நாடாளுமன்றத்தில் இளையராஜா வாங்கிய பூஜ்யம்.; நெட்டிசன்கள் கிண்டல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 2022 டிசம்பர் 7ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடைபெற்றது.

இந்த கூட்டத் தொடர் 2 வாரங்கள் நாட்கள் வரை நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரில் மாநிலங்களவை உறுப்பினர்களின் வருகை பதிவு தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டன.

அந்த வகையில்.. நியமன எம்.பி.க்களில் தடகள வீராங்கனை பி.டி.உஷா 13 நாட்கள் குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ளார். அவர் ஒரு விவாதத்திலும் கலந்துகொண்டார்.

அதுபோல வீரேந்திர ஹெக்டே 5 நாட்களும், விஜயேந்திர பிரசாத் 2 நாட்களும் கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ளனர்.

ஆனால் தமிழ்நாட்டிலிருந்து நியமிக்கப்பட்ட இசையமைப்பாளர் இளையராஜா கூட்டத்தொடரின் ஒருநாள் கூட பங்கேற்கவில்லை. அவருடைய வருகைப்பதிவு பூஜ்ஜியமாக உள்ளது.

எனவே நெட்டிசன்கள் இளையராஜாவை கிண்டல் செய்து வருகின்றனர். பிரதமர் மோடியால் கொடுக்கப்பட்ட பதவியை அவர் மதிக்கவில்லை எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Rajya Sabha MP Ilaiyaraja attendance details

எந்தக் கடவுள் அப்படி சொல்லுச்சு.?? நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நெத்தியடி பதில்

எந்தக் கடவுள் அப்படி சொல்லுச்சு.?? நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நெத்தியடி பதில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கேரள மாநில சபரிமலையில் உள்ள உலக புகழ்பெற்ற ஐயப்பன் கோயிலில் 10 முதல் 50 வயதிற்கு உட்பட்ட பெண்கள் அனுமதிக்கப்படுவது இல்லை.

பெண்களின் மாதவிடாய் பிரச்சினை காரணமாக இக்கோயிலில் கடைபிடிக்கப்பட்டு வரும் ஐதீக மரபு இது என பல ஆண்டுகளாக சொல்லப்பட்டு வருகிறது.

சில ஆண்டுகளுக்கு முன் இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது. சபரிமலை கோயிலுக்குள் பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என மகளிர் அமைப்புகள் பெரும் போராட்டங்கள் நடத்தினர்.

மக்களில் ஒரு பிரிவினர் இதற்கு ஆதரவு அளித்தாலும் ஐயப்பன் கோவில் நிர்வாகம் இதற்கு மறுப்பு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் மலையாளத்தில் அண்மையில் வெளியான ‘மாளிகாப்புரம்’ என்ற படத்தில் பெண்கள் கோயிலுக்குள் செல்வது குறித்து கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ பட பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த பிரச்சனை தொடர்பாக தன் கருத்தை தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது..

“பொண்ணுங்களுக்குனா தீட்டா..”எந்த கடவுள் சொல்லுச்சு. கடவுள் எல்லோருக்கும் ஒன்று தான்.

ஆண், பெண் வித்தியாசமெல்லாம் கடவுளுக்கு கிடையாது. எந்தக்கடவுளும் என் கோவிலுக்கு இவர்கள் வரலாம், அவர்கள் வரக்கூடாது என சொல்லவில்லை.

அப்படி எந்த கடவுளாவது சொல்லியிருக்கிறார்களா? எந்த கடவுளும் இது பண்ணக்கூடாது. இது சாப்பிடக்கூடாது என சட்டம் வைக்கவில்லை. எல்லாமே மனிதர்கள் உருவாக்கியது தான்.”

இவ்வாறு ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்தார்.

Which god said that.? Actress Aishwarya Rajesh bold reply

‘பாபா’-வை தொடர்ந்து ‘ஆளவந்தான்’ ரீ ரிலீஸ்.: ரஜினி வழியில் கமல் வெல்வாரா.?

‘பாபா’-வை தொடர்ந்து ‘ஆளவந்தான்’ ரீ ரிலீஸ்.: ரஜினி வழியில் கமல் வெல்வாரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி நடித்த ‘அண்ணாமலை’, ‘வீரா’, ‘பாட்ஷா’, ‘பாபா’ உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் சுரேஷ் கிருஷ்ணா.

அது போல கமல் நடித்த ‘சத்யா’, ‘இந்திரன் சந்திரன்’, உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சுரேஷ் கிருஷ்ணா.

இவர் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் சிஷ்யர் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

கமல்ஹாசன் மற்றும் சுரேஷ் கிருஷ்ணா கூட்டணியில் 2001ல் வெளியான படம் ‘ஆளவந்தான்’. கலைப்புலி தாணு இந்தப் படத்தை மிகப் பிரமாண்டமாக தயாரித்து இருந்தார்.

கமல் இரு வேடங்களில் நடித்த இப்படம் இந்தியில் அப்ஹே என்ற பெயரில் வெளியானது.

மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் படுதோல்வியை தழுவியது. கமலின் நடிப்பு பாராட்டப்பட்டாலும் படத்தின் நீளம்.. கதையின் வேகம் மற்றும் திரைக்கதை சரியில்லை என கருத்துக்கள் வந்திருந்தன.

அதன் பின்னர் “படத்தின் தோல்விக்கு கமலே காரணம்.. நிறைய வீண் செலவு” எனவும் தெரிவித்திருந்தார் தாணு.

இதனையடுத்து.. “கமல் ஒரு சிறந்த கலைஞன்.. அவரை நீங்கள் இப்படி சொல்லலாமா? என்று அப்போது தாணுவிடம் ரஜினி கேள்வி கேட்டிருந்தார்.

அந்த சமயத்தில் இந்த விஷயங்கள் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த நிலையில் தற்போது 22 வருடங்களுக்குப் பிறகு ‘ஆளவந்தான்’ மீண்டும் ரீ-ரீலீசாகிறது. உலகமெங்கும் 1000 தியேட்டர்களில் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

‘வெல்லுவான் புகழ் அள்ளுவான்’ எனவும் அதில் குறிப்பிட்டு இந்த படத்தை டிஜிட்டல் செய்து வெளியிட உள்ளனர்.

கடந்த வருடம் 2022 ஆம் ஆண்டு தன்னுடைய ‘பாபா’ படத்தை ட்ரீம் செய்து வெளியிட்டார். இந்தப் படத்தை முதல் தடவை பார்ப்பது போல ரஜினி ரசிகர்கள் கொண்டாடினர். மேலும் பல திரையரங்குகளில் இந்த படம் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடியது.

இதன்மூலம் தோல்வி படம் என சொல்லப்பட்ட ‘பாபா’ படத்தை வெற்றி படமாக்கி இருந்தார் ரஜினி.

இந்த நிலையில் தற்போது தோல்வி அடைந்த ‘ஆளவந்தான்’ படமும் மீண்டும் ரீலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி தயாரித்து நடித்த ‘பாபா’ மற்றும் கமல் நடித்த ‘ஆளவந்தான்’ இரண்டு படங்களையும் இயக்கியவர் சுரேஷ் கிருஷ்ணா என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

‘Aalavandhan’ re-release after ‘Baba’: Will Kamal win in Rajini’s way?

ரஜினியின் ‘பாபா’ படத்தைத் தொடர்ந்து ரீ ரிலீஸ் ஆகும் கமலின் பழைய படம்

ரஜினியின் ‘பாபா’ படத்தைத் தொடர்ந்து ரீ ரிலீஸ் ஆகும் கமலின் பழைய படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியத் திரையுலகில் சமீபகாலமாக ரீ-ரிலீஸ் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. ரஜினிகாந்த் தனது 20 வருட பழமையான ‘பாபா’வை 2022 டிசம்பரில் தனது பிறந்தநாளில் மாற்றியமைத்து மீண்டும் வெளியிட்டார்.

உலகநாயகன் கமல்ஹாசனின் ஆளவந்தான் திரைப்படம் பிரமாண்டமாக மறுவெளியீட்டுக்கு தயாராக உள்ளது . ஆளவந்தான் 2001 ஆம் ஆண்டு வெளியான உளவியல் த்ரில்லர்.

ஆளவந்தான் படத்தின் மறுபதிப்பு உலகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் மீண்டும் வெளியிடப்படும் என்று படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டு அறிவித்தார்.

Kamal Haasan’s cult film to re-release following Rajinikanth’s ‘Baba’

மாபெரும் வெற்றிக்காக மீண்டும் இணையும் ‘திருச்சிற்றம்பலம்’ டீம்!

மாபெரும் வெற்றிக்காக மீண்டும் இணையும் ‘திருச்சிற்றம்பலம்’ டீம்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனுஷின் 50வது படத்தை ‘டி50’ தயாரிக்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ‘ராயன்’ என்று சொல்லபடுகின்ற இந்த மெகா பட்ஜெட் தனுஷின் இரண்டாவது இயக்கத்தில் உருவாவதாக தெரிகிறது.

மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த படத்திற்காக ‘திருச்சிற்றம்பலம்’ காம்போ மீண்டும் இணைகிறது என்பது தெரிய வந்துள்ளது.

திரைப்பட இயக்குனர் மித்ரன் ஜவஹர் தனுஷுடன் இணைந்து ராயனின் திரைக்கதையில் பணியாற்றுகிறார், என்றும் அனிருத் இசையமைக்கிறார் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

‘Thiruchitrambalam’ team to reunite for Dhanush’s film!

More Articles
Follows