சஜன் சகஜமாக ரொமான்ஸ் சொல்லிக் கொடுத்த அஞ்சனா கீர்த்தி

சஜன் சகஜமாக ரொமான்ஸ் சொல்லிக் கொடுத்த அஞ்சனா கீர்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sajan Anjana Keerthy starrer Yaagan movie updates‘மாப்பனார் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் யோகராஜா சின்னத்தம்பி தயாரித்துள்ள படம் தான் ‘யாகன்’. வினோத் தங்கவேல் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு லண்டன் வாழ் தமிழர் நிரோ பிரபாகர் இசை அமைத்துள்ளார்.

படத்தின் கதாநாயகனாக டென்மார்க் தமிழரான சஜன் என்பவர் அறிமுகமாகியுள்ளார். நாயகியாக அஞ்சனா கீர்த்தி நடிக்க, முனீஸ் ராஜா, தவசி, பாவா லட்சுமணன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

கிராமங்களில் நடைபெறும் பல வன்முறை சம்பவங்களுக்கு அடிப்படையே ஒருத்தொருத்தர் புரிந்துகொள்ளாமல் மோதுவதும், அந்த மோதலால் ஏற்படும் இழப்பு எத்தகையது என்பதையும் சொல்லும் படைப்பாக உருவாகியுள்ளது இந்த ‘யாகன்’.

சினிமாவில் நடிக்கவேண்டும் என்கிற தனது தீராத ஆர்வம் குறித்தும், ‘யாகன்’ படத்தில் நடித்த அனுபவம் குறித்தும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார் பட நாயகன் சஜன்.

“நினைவு தெரிந்த நாளில் இருந்து எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களை பார்த்து பார்த்து, நடிக்கவேண்டும் என்கிற ஆர்வம் இயல்பாகவே எனக்குள் வந்துவிட்டது.

டென்மார்க்கில் சில குறும்படங்களில் நடித்துள்ளேன்.. தமிழில் நடிகனாக அறிமுகமாக வேண்டும் என இங்கே வந்தபோது வினோத் தங்கவேல் சொன்ன இந்த ‘யாகன்’ கதை என்னை கவர்ந்தது.

இங்கே கூத்துப்பட்டறையில் சேர்ந்து நடிப்பின் நுணுக்கங்களை கற்றுக்கொண்டேன்.

சிறுவயதில் இருந்தே டான்ஸ் கற்றுக்கொண்டதாலும், நிறைய மேடைகளில் நடனமாடி பரிசுகள் பெற்றதாலும் இங்கே பாடல் காட்சிகளில் நடிப்பது எனக்கு சுலபமாக இருந்தது.

நான்கு நாட்கள் திட்டமிட்ட பாடலை இரண்டு நாட்களில் எடுத்து முடிக்க அது உதவியது.

ஆனால் நடனம் எளிதாக வந்ததைப்போல, ரொமான்ஸ் காட்சிகளில் அவ்வளவு எளிதாக என்னால் ஆரம்பத்தில் பொருந்தமுடியவில்லை.. கூச்சமாக இருந்தது.

எனது தந்தை கூட முதலில் நான் சிரமப்படுவதை பார்த்து ‘உனக்கு இது புதிது தானே’ என்றார்.

அவர் சினிமாவில் நடிப்பதை சொல்கிறாரா இல்லை ரொமான்ஸ் காட்சியில் நடிப்பதை சொல்கிறாரா என்று எனக்கு கொஞ்சம் குழப்பமாக கூட இருந்தது.

ஆனால் படத்தின் நாயகி அஞ்சனா கீர்த்தி எனது கூச்சத்தை போக்கி நடிப்பதற்கு உதவி செய்தார். தொடர்ந்து வந்த நாட்களில் ரொமான்ஸ் காட்சிகளில் சிறப்பாக நடித்தேன்.

எந்தளவுக்கு என்றால் அந்தக்காட்சிகளை படமாக்கும்போது படப்பிடிப்பு தளத்தில் என் தந்தை நிற்கிறார் என்பதே எனக்கு மறந்துபோகும் அளவுக்கு ரொமான்ஸ் காட்சியில் சிறப்பாக நடித்துள்ளேன்.

படக்குழுவினர் கூட எனக்கும் கதாநாயகிக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருப்பதாக பாராட்டினார்கள்.

சண்டைக்காட்சிகள் தான் என்னை பெண்டு நிமிர்த்திவிட்டது.. ஒருமுறை மேலிருந்து ஜம்ப் பண்ணும்போது என் கழுத்தை சுற்றி கயிறு வீசும் காட்சி படமாக்கப்பட்டது.

முதல் தடவை பண்ணும்போது டைமிங் கொஞ்சம் மிஸ்ஸாகி கயிறு என் கழுத்தை இறுக்கி கிட்டத்தட்ட மரணத்தின் வாசல் வரை சென்று திரும்பினேன்.

ஆனால் அடுத்த காட்சியிலேயே அதில் வெற்றிகரமாக நடித்து முடித்து மாஸ்டரிடம் பாராட்டு பெற்றேன்.

அதேமாதிரி இந்தப்படத்தின் கேரக்டர் இதுதான் என இயக்குனர் சொல்லிவிட்டாலும், அதில் எந்தமாதிரி நடிக்கலாம் என அந்த மூடுக்கு ஏற்றவாறு என்னை தயார்படுத்திக்கொண்டேன்.

ஹாலிவுட்டில் இதை மெத்தேட் ஆக்டிங் என்பார்கள். குறிப்பாக படத்தின் பாடல்களை முன்கூட்டியே கேட்டு வாங்கி ஒவ்வொரு காட்சிக்கான மூடுக்கு என்னை தயார்படுத்திக்கொண்டேன்.

ஆரம்பத்தில் இயக்குனர் கூட என்னடா இவன் பாடல்களை எல்லாம் தேவையில்லாமல் முன்கூட்டியே கேட்டு வாங்கி, அதிகம் தலையிடுகிறானே என்று நினைத்தார்.

ஆனால் இதற்காகத்தான் என நான் விளக்கம் சொன்னதும் அவரும் புரிந்துகொண்டு ‘அட இது நல்லா இருக்கே’ என எனக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு தேனி மாவட்டத்தில் தான் நடந்தது. இங்கே கிராமத்தில் ஒவ்வொருவரும் உறவுகளுக்கு கொடுக்கும் அன்பும் மரியாதையும் அவர்களின் ஒற்றுமையும் பார்த்தபோது டென்மார்க் தமிழரான எனக்கு புதிதாக, ஆச்சர்யமாக இருந்தது.

படப்பிடிப்பின்போது ஒருமுறை காய்ச்சலால் நான் அவதிப்பட்டபோது கிராமத்தில் இருந்த ஒரு பாட்டி, எனக்கு பாட்டி வைத்தியம் பார்த்து குணப்படுத்தியது மறக்கமுடியாத அனுபவம்.

இன்னொரு விஷயம் நான் இலங்கை தமிழர் என்பதால் நான் பேசும் தமிழுக்கும் இங்கே உள்ள தமிழுக்கும் குறிப்பாக கிராமத்தில் உள்ள பேச்சு வழக்கு தமிழுக்கும் நிறைய வித்தியாசம் இருப்பதை உணர்ந்தேன்.

அதனால் படப்பிடிப்பு நடந்த கிராமங்களில் மதிய, இரவு நேரங்களில் அப்படியே கிராமத்தை சுற்றி, அங்குள்ள மக்களுடன் பேசிப்பழகி ஓரளவு எனது பேச்சுமுறையை மாற்றிக்கொண்டேன்.

இது முதல் படம் என்பதால் எனக்கு வேறு ஒருவர் டப்பிங் பேசியுள்ளார்.. அடுத்தடுத்த படங்களில் நானே டப்பிங் பேசும் அளவுக்கு மாறிவிடுவேன்..

யாகன் படத்தின் கதை அப்பாவுக்கும் மகனுக்குமான உறவை பற்றியது. நிஜத்தில் சொல்லவேண்டுமென்றால் எனது தந்தை யோகராஜா சின்னத்தம்பி (இந்தப்படத்தின் தயாரிப்பாளர்) சினிமாவில் தீராத ஆர்வம் கொண்டவர்.
ஆனால் அவர் காலத்தில் சினிமாவுக்குள் அவரால் நுழைய முடியவில்லை.. அதேசமயம் எனக்குள் அந்த ஆசை இருப்பதை உணர்ந்து, என்னை நடிகனாக்க தமிழ் சினிமாவில் களம் அமைத்து கொடுத்துள்ளார்.

இந்தப்படத்தில் நடித்த அனுபவத்தை வைத்து சொல்லவேண்டும் என்றால் இந்தப்படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது.. நம் தொப்புள் கொடி உறவுகள் என்னையும் தங்கள் பிள்ளையாகக் கருதி வெற்றிப் படிகளில் ஏற்றி வைப்பார்கள் , மனதார ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகிறேன்” என்கிறார் சஜன் நம்பிக்கையாக.

Sajan Anjana Keerthy starrer Yaagan movie updates

yaagan

சிவகார்த்திகேயனுக்கு கேக் ஊட்டி பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா

சிவகார்த்திகேயனுக்கு கேக் ஊட்டி பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nayanthara celebrated her Birthday with Sivakarthikeyan and Velaikkaran teamதமிழ் சினிமாவில் மட்டுமல்லாது தென்னிந்திய சினிமாவிலும் கொடி கட்டி பறக்கும் நடிகை என்றால் அது நம்ம லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராதான்.

ஹீரோவுக்கு இணையான கேரக்டர்களை தேர்ந்தெடுத்து அசத்தி வருகிறார்.

அண்மையில் இவரது நடிப்பில் வெளியான அறம் படம் தமிழக மக்களின் பேராதரவைப் பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது.

இதனையடுத்து இவரது நடிப்பில் வேலைக்காரன், இமைக்கா நொடிகள் ஆகிய படங்கள் திரைக்கு வர தயாராகவுள்ளன.

இந்நிலையில் இவர் தனது 33வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார்.

இந்நிலையில், நேற்று நடந்த வேலைக்காரன் பட பிரிவு விழாவில் சர்ப்ரைஸாக நயன்தாராவின் பிறந்தநாளை படக்குழுவினர் கொண்டாடினர்.

இதில், சிவகார்த்திகேயன், இயக்குனர் மோகன் ராஜா உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர்.

அப்போது சிவகார்த்திகேயன், நயன்தாராவுக்கு கேக் ஊட்டி விட்டார். அதே போன்றும், நயன்தாராவும், சிவகார்த்திகேயனுக்கு கேக் கொடுத்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

Nayanthara celebrated her Birthday with Sivakarthikeyan and Velaikkaran team

velaikkaran farewell day

ஒருவழியாக சூர்யா பட டீசர் தேதியை வெளியிட்டார் விக்னேஷ்சிவன்

ஒருவழியாக சூர்யா பட டீசர் தேதியை வெளியிட்டார் விக்னேஷ்சிவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

tsk teaser updateநானும் ரௌடிதான் படத்தை தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம் என்ற படத்தை இயக்கி வருகிறார் விக்னேஷ்சிவன்.

இப்படத்தில் சூர்யாவுடன் கீர்த்தி சுரேஷ், ரம்யாகிருஷ்ணன், செந்தில் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தை ஞானவேல்ராஜா தயாரித்து வருகிறார்.

இப்படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் வெளியான நிலையில் இதன் டீசர் தேதியை ரசிகர்கள் கேட்டுக் கொண்டே இருந்தனர்.

இதற்கு பதிலளிக்காமல் விக்னேஷ் சிவன் காலம் தாழ்த்தி வந்தார்.

இந்நிலையில் இப்படத்தின் ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டு வருகிற நவம்பர் 30ஆம் தேதி தானா சேர்ந்த கூட்டம் பட டீசர் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

Vignesh Shivan revealed Thaana Serntha Kootam Teaser release date

ஹாக்கி விளையாட்டில் இணையும் சுந்தர்.சி-ஹிப் ஹாப் ஆதி

ஹாக்கி விளையாட்டில் இணையும் சுந்தர்.சி-ஹிப் ஹாப் ஆதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sundar C and Hiphop Aadhi teams up for movie based on Hockey gameநடிப்பு, இசை, பாடல்கள், பாடலாசிரியர், இயக்கம் என தன் முதல் படத்திலேயே மீசைய முறுக்கியவர் ஹிப்ஹாப் ஆதி.

மாபெரும் வெற்றிப் பெற்ற இப்படத்தை இயக்குனர் சுந்தர் சி. இயக்கியிருந்தார்.

இந்த வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் ஹிப்ஹாப் ஆதி நடிக்கவுள்ள புதிய படத்தை தயாரிக்கவிருக்கிறார் சுந்தர். சி.

இப்படத்தை சுந்தர் சி. இயக்கக்கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படமானது ஹாக்கி விளையாட்டை மையப்படுத்தி உருவாகவுள்ளதாம்.

விரைவில் இப்படம் தொடங்கும் என கூறப்படுகிறது.

Sundar C and Hiphop Aadhi teams up for movie based on Hockey game

என் தங்கமே லவ் யூ… நயன்தாராவை வாழ்த்திய விக்னேஷ்சிவன்

என் தங்கமே லவ் யூ… நயன்தாராவை வாழ்த்திய விக்னேஷ்சிவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nayanthara vignesh shivanநடிகை நயன்தாரா இன்று தனது 33வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

எனவே இதற்கு ரசிகர்கள், நடிகர்கள், நடிகைகள் என பல்வேறு தரப்பினரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவனும் தன் வாழ்த்துக்களை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அதில் “உன்னைத் நினைத்து பெருமைப்படுகிறேன். என் தங்கமே என்றெல்லாம் ரொமான்டிக்காக வாழ்த்தியுள்ளார்.

Director Vignesh Shivan wishes Nayanthara on her birthday

Vignesh ShivN‏Verified account @VigneshShivN
Happy Birthday to a woman I really look upto Stay Boldstay beautiful jus keep creating that stunning story of what is #Nayanthara Proud of u as always!! Loads of Love & respect to u my Thangameyyy #HBDLadySuperStarNayanthara

இந்தியாவுக்கு பெருமைத் தேடித்தர காமன்மேன் சதீஷ் எடுத்த முடிவு

இந்தியாவுக்கு பெருமைத் தேடித்தர காமன்மேன் சதீஷ் எடுத்த முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

common man sathishசமூக ஊடகங்களில் முகநூலில் ‘யூடியூப் தளங்களில் வியூஸ் அதாவது பார்வையாளர்கள் ஆயிரங்கள் தாண்டி லட்சத்தைத் தொட்டாலே சாதனை என்றும் சரித்திரம் என்றும் பரவசப்படுவார்கள்.

ஒரு சிறிய குறும்படம் முகநூலில் (Facebook) வெளியான 5 நாட்களில் 65லட்சம் பேர் பார்த்து 60 ஆயிரம் பேர் பகிர்ந்து ஒருலட்சம் பேர் விரும்பி (Like) சாதனை படைத்துள்ளது. அந்தப் படம் தான் ‘இந்தியன் டூரிஸ்ட்’.

இக் குறும்படத்தைக் ‘காமன் மேன் மீடியா’ தயாரித்துள்ளது. நடித்து இயக்கி தயாரித்தும் உள்ளார் காமன் மேன் சதீஷ். அவருடன் கே.பி. செல்வா உறுதுணையாகப் பங்கெடுத்துள்ளார்.

இந்தியாவுக்குச் சுற்றுலா வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் சந்திக்கும் பிரச்சினைகள்தான் கதையின் மையக்கரு.

யாரோ சில சமூக விரோதிகள் செய்யும் தவறுகள் ஒட்டு மொத்த நாட்டைப் பற்றிய தவறான பிம்பத்தை உருவாக்குகிறது. சுற்றிப் பார்க்க இந்தியா நல்ல நாடுதான் என்று முடிகிறது படம்.

இதில் வெளிநாட்டிலிருந்து வருகிற சுற்றுலாப் பயணியாக போலந்து நாட்டைச் சேர்ந்த டோமினிகா நடித்துள்ளார்.

இவர் படிப்பதற்கு இந்தியா வந்த போலந்து மாணவி நடிப்பு ஆர்வத்தில் படத்தில் இணைந்து இருக்கிறார்.

அவருடன் சதீஷ், காவ்யா, தாஸ், ராகுல் ஆகியோரும் நடித்துள்ளனர்.

முகநூல் பக்கத்தில் பதிவேற்றிய 5 நாட்களில் 55 லட்சம் பேர் பார்த்துள்ள இக் குறும்படம், 3 மணி நேரத்தில் இயற்கை ஒளியில் வெறும் 3500 ரூபாய் செலவில் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சதீஷு உடன் ரேக்ஸ், சண்முகம், தேவ் கண்ணன், சுபு சிவா, என்.யூ. ஆனந்த், விஜயன், சக்தி சரவணன், பார்த்தி, சத்யன் என தொழில் நுட்பக் கூட்டணி இணைந்து இக் குறும்பட முயற்சியில் கைகோர்த்துள்ளனர்.

லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேசத் திரைப்பட விழாவில் இந்த ‘இந்தியன் டூரிஸ்ட்’ குறும்படம் அரையிறுதி வரை சென்றது என்கிற பெருமைக்குரியது.

இப்படத்தை இயக்கியுள்ள காமன் மேன் சதீஷ் அடுத்து ‘நொடிக்கு நொடி’ என்கிற குறும்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படம் வருகிற டிசம்பர் 4-ல் சென்னையில் நடைபெறும் ரஷ்யத் திரைப்பட விழாவில் திரையிடப் படவுள்ளது.

இப்படத்தைத் திரையுலக வி.ஐ.பிக்கள் பலரும் பார்த்துப் பாராட்டியுள்ளனர்.

INDIAN TOURIST SHORT FILM CREATED RECORD WITH 55 LAKHS VIEWS AND 60K SHARES

indian tourist

More Articles
Follows