மக்களை காக்க கொரோனா யாகம் நடத்திய ரோஜா செல்வமணி

மக்களை காக்க கொரோனா யாகம் நடத்திய ரோஜா செல்வமணி

Roja and RK Selvamani made special yaagam to prevent from Corona attackகொரோனா வைரஸ் தன் தாக்குதலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதன் பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்ற இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளும் போராடி வருகின்றனர்.

மருத்துவர்கள், காவலர்கள், துப்புரவு தொழிலாளர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டவர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து போராடுகின்றனர்.

இந்த நிலையில் ஆந்திராவிலுள்ள நகரி தொகுதி எம்எல்ஏவான நடிகை ரோஜாவும் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை ஈடுபட்டு வருகிறார்.

இந்து மதம் இருப்பதால் கொரானா பாதிப்பு இந்தியாவில் இல்லை.; சூர்யா கார்த்தி பட நடிகை விளக்கம்

தன் தொகுதி மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்மணிக்கு சிகிச்சை கொடுக்க வசதி இல்லாததால் அங்கிருந்து வேறு மருத்துவமனைக்கு தனது சொந்த காரில் அந்த பெண்ணை அனுப்பி வைத்திருந்தார் ரோஜா.

தற்போது ஆந்திராவிலுள்ள தனது இல்லத்தில் கணவர் ஆர்.கே.செல்வமணி மற்றும் பிள்ளைகளுடன் இணைந்து கொரோனாவிலிருந்து கடவுள் மக்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, சிறப்பு யாகத்தை நடத்தியிருக்கிறார் ரோஜா.

Roja and RK Selvamani made special yaagam to prevent from Corona attack

Roja and RK Selvamani made special yaagam to prevent from Corona attack

ரஜினி படத்தை முடித்து விட்டு மீண்டும் அஜித்துடன் இணையும் சிவா.?

ரஜினி படத்தை முடித்து விட்டு மீண்டும் அஜித்துடன் இணையும் சிவா.?

Siva plans to join with Thala Ajith for 5th Timeசில ஆண்டுகளுக்கு முன் அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் வரிசையில் சரண் இருந்தார்.

தற்போது அந்த வரிசையில் சிவா இடம் பிடித்துள்ளார்.

அஜித்தின் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் உள்ளிட்ட 4 படங்களை அடுத்தடுத்து இயக்கியிருந்தார் சிவா.

விஸ்வாசம் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு சூர்யா படத்தை சிவா இயக்குவார் எனவும் அந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரிப்பார் எனவும் அறிவிப்பு வெளியானது.

கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் அஜித்தின் தக்ஷா குழு

ஆனால் ரஜினியின் அண்ணாத்த படத்தை இயக்க சென்றுவிட்டார் சிவா.

இந்த படத்தில் ரஜினியுடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், சூரி உள்ளிட்டோர் பலர் நடிக்கின்றனர்.

தற்போது கொரோனா பாதிப்பால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் ரஜினி அண்ணாத்த படத்தை முடித்துவிட்டு மீண்டும் அஜித்துடன் இணையவிருக்கிறாராம் சிவா.

Siva plans to join with Thala Ajith for 5th Time

கொரோனாவை தடுக்க தெரு தெருவாக கிருமி நாசினி தெளித்த விமல்

கொரோனாவை தடுக்க தெரு தெருவாக கிருமி நாசினி தெளித்த விமல்

Vimal sprayed natural made liquids to prevent from corona virus attack கொரோனா வைரஸ் பாதிப்பால் மோசமான சூழ்நிலையை இந்தியா உள்ளிட்ட நாடுகள் சந்தித்து வருகிறது.

எனவே கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு ஏற்பாடுகளை சந்தித்து வருகிறது.

இதனையடுத்து மக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்க இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நடிகர் விமல், நேற்று தனது சொந்த ஊரான திருச்சி மாவட்டம், மணப்பாறையில் கொரோனா தடுப்பு பணியில் இறங்கியுள்ளார்.

இவருடன் அந்த கிராமத்து இளைஞர்களும் களத்தில் இறங்கியுள்ளனர்.

அதாவது இளைஞர்களுடன் இணைந்து தெரு தெருவாக சென்று கிருமி நாசினி தெளித்து வருகிறார்.

விமலின் இந்த களப்பணி அந்த கிராமத்து மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Vimal sprayed natural made liquids to prevent from corona virus attack

BREAKING நாட்டுப்புற பாடகியும் நடிகையுமான பரவை முனியம்மா காலமானார்

BREAKING நாட்டுப்புற பாடகியும் நடிகையுமான பரவை முனியம்மா காலமானார்

Folk Singer Actress Paravai Muniyamma passes awayமதுரை மாவட்டம் பரவை என்ற பகுதியைச் சேர்ந்தவர் முனியம்மா.

நாட்டுப்புற பாடல்கள் மூலம் கிட்டதட்ட 30 ஆண்டுகள் பாடல் அந்த துறையில் கோலோச்சி வருபவர் இவர்.

வெளிநாடுகளிலும் கூட இவரது நாட்டுப்புற பாட்டுக்கு ரசிகர்கள் உருவாகினர். அங்கும் சில மேடை நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டுள்ளார்.

விக்ரம் நடித்த ‘தூள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். இதுவரை 80 படங்களில் நடித்திருக்கிறார்.

கடைசியாக சிவகார்த்திகேயனின் ‘மான் கராத்தே’ படத்தில் நடித்திருந்தார்.

பரவை முனியம்மா நலம் பெற்று வருகிறார்..; வதந்திகளை நம்பாதீர்

இவருக்கு 3 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். இதில் செந்தில் குமார் என்ற மகன் மட்டும் மூளை வளர்ச்சி குறைந்தவர்.

இவரை நினைத்தே அடிக்கடிவருந்துவார்.

எனவே தமிழக அரசு சார்பில் ஏதேனும் உதவிகள் கிடைக்குமா எனப் பலமுறை முயற்சி செய்து வந்தார்.

மேலும், கிராமப்புற சமையல் என்ற நிகழ்ச்சியின் மூலம் டிவி நிகழ்ச்சியிலும் கலந்துக் கொண்டுள்ளார்.

மண் பானையிலேயே சமையல் செய்வதால் அதிலும் பிரபலமானார்.
சில வருடங்களுக்கு முன்பு உடல்நிலை காரணமாக சினிமா வாய்ப்பு குறைந்து போனதால் வறுமையில் வாடினார்.

அப்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதா இவருடைய நிலையை அறிந்து 6 லட்ச ரூபாய் நிதியுதவி செய்தார்.

இவரின் வங்கி கணக்கில் பணத்தை செலுத்தி, அதன் வட்டித் தொகை இவருக்குக் கிடைப்பது போன்று செய்தார்.
சமீப காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.

இவரின் மருத்துவ சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவித்து வந்தார்.

இதனையடுத்து திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் பலர் உதவி செய்தனர். மேலும், நடிகர் சங்கம் சார்பில் உதவித்தொகையும் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று அதிகாலை காலமானார்.

தமிழக அரசு இவருக்கு கலைமாமணி பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Folk Singer Actress Paravai Muniyamma passes away

‘கட்டில்’ குழு நடத்தும் கொரோனா விழிப்புணர்வு கவிதைப்போட்டி

‘கட்டில்’ குழு நடத்தும் கொரோனா விழிப்புணர்வு கவிதைப்போட்டி

Kattil team announces Corona awareness Poem competitionமேப்பிள் லீப்ஸ் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கும் “கட்டில்” திரைப்படத்தை இ.வி.கணேஷ்பாபு இயக்கி, கதாநாயகனாக நடிக்கிறார்.

சிருஷ்டிடாங்கே கதாநாயகியாக நடிக்க, உடன் பல பிரபலங்கள் இப்படத்தில் நடிகர்களாக இணைந்துள்ளனர்.
இப்படக்குழுவினர் ஒரு கவிதை போட்டி நடத்துகின்றனர்.

முதல் பரிசு : 25,000
இரண்டாம் பரிசு : 15,000
மூன்றாம் பரிசு : 10,000
ஆறுதல் பரிசு : 20 பேருக்கு கவிதை நூல்கள்…….

நமது மத்திய,மாநில அரசுகள் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து, மக்களை மீட்க போர்க்கால நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் , முழுக்க முழுக்க, மக்களிடம் அது சார்ந்த விழிப்புணர்வை மேலும் தூண்டும் விதமாக கட்டில் திரைப்படக்குழு,கரோனா விழிப்புணர்வு கவிதைப்போட்டியை அறிவித்திருக்கிறது….

12 வரிகளுக்கு மிகாமல் கவிதை எழுதி, [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மார்ச் 31(2020) ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்குள் அனுப்பவும்.

தேர்வுக்குழு முடிவே இறுதியானது……

உலகில் எந்த நாடுகளிலிருந்தும், அனைத்து வயதினரும்,பங்கேற்கும் இப்போட்டியில் ஒருவர் ஒரு கவிதை மட்டுமே அனுப்பலாம்.

பிரபல கவிஞர்களை கொண்டு தேர்ந்தெடுக்கப்படும் சிறப்பான கவிதைகளுக்கு, விரைவில் நடைபெற இருக்கும் கட்டில் திரைப்பட (Audio Release) பாடல் வெளியீட்டு விழாவில் பரிசு தொகை காசோலையாக வழங்கப்படும் என்று இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு அறிவித்திருக்கிறார்.

Kattil team announces Corona awareness Poem competition

கொரானா நிவாரண நிதிக்கு கோடிகளை அள்ளி கொடுத்த வள்ளல் அக்‌ஷய்குமார்

கொரானா நிவாரண நிதிக்கு கோடிகளை அள்ளி கொடுத்த வள்ளல் அக்‌ஷய்குமார்

Corona Akshay Kumar pledges 25 crore to Prime Minster Cares fundகொரோனா வைரஸ் பாதிப்பு தன் தாக்குதலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்தியாவிலும் இது தீவிரமடைந்து வருகிறது.

இந்த வைரஸ் பரவலை தடுக்க இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி பிறப்பித்துள்ளார். தற்போது 3 நாட்களை கடந்துள்ளோம்.

ஊரடங்கு உத்தரவால் நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மாபெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மத்திய, மாநில அரசுகள் நிவாரண நிதி கேட்டு வருகின்றன.

இந்த நிலையில், 2.0 படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்த அக்‌ஷய் குமார், கொரோனா வைரஸ் பாதிப்புக்காக பிரதமர் மோடியின் நிவாரண நிதிக்கு 25 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

இதுவரை நிதி அளித்த நடிகர்களிலேயே இவர் தான் உச்சம்.

Corona Akshay Kumar pledges 25 crore to Prime Minster Cares fund

More Articles
Follows