நீங்க வந்தா வர்றோம்..; முதல்வர் வேட்பாளர் ரஜினிக்கே ஆதரவு.. இல்லன்னா.. – லாரன்ஸ்

நீங்க வந்தா வர்றோம்..; முதல்வர் வேட்பாளர் ரஜினிக்கே ஆதரவு.. இல்லன்னா.. – லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

raghava lawrence rajinikanthரஜினியின் அரசியல் வருகை குறித்து அடிக்கடி தன் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார் நடிகர் ராகவா லாரன்ஸ்.

தற்போது மீண்டும் தன் கருத்தை பதிவிட்டுள்ளார். அதில்…

“தலைவர் (ரஜினிகாந்த்) தன்னுடைய முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டுகிறேன்.

கடந்த வாரம் நான் ஒரு ட்வீட் போட்டதும் மீடியா நண்பர்கள் உள்ளிட்ட பலரும் எல்லா கட்சியும் உங்களுக்குச் செய்துள்ளது என்றும் அனைவரையும் மதிப்பதாகவும், ரஜினி கட்சி தொடங்கினால் நீங்கள் அவரை ஆதரிக்கவுள்ளதாகவும், ஏனெனில் மற்றவர்களைத் தவறாகப் பேசும் எதிர்மறை அரசியல் உங்களுக்கு பிடிக்கவில்லை என்று கூறியிருந்தீர்களே என்று என்னிடம் கேட்கின்றனர்.

மேலும் ரஜினியை முதல்வர் வேட்பாளராகவோ அல்லது அவர் தேர்ந்தெடுக்கும் ஒருவரை ஆதரிப்பீர்களா என்றும் கேட்கின்றனர்.

இன்று இப்போது இதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். உண்மையைச் சொல்லவேண்டும் என்றால் தலைவர் முதல்வர் வேட்பாளராக நிற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

லீலா பேலஸ் ஹோட்டலில் தனது முடிவை அவர் அறிவித்த போது, நான் அவரது முடிவை ஆதரித்து ட்வீட் செய்தேன். ஏனென்றால் நான் அவருக்கு எதிராக செயல்பட விரும்பவில்லை. ஆனால் முழு மனதோடு என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

நான் மட்டுமல்ல அனைத்து ரசிகர்களும் அப்படியே உணர்ந்ததாக நினைக்கிறேன். ஒவ்வொரு வாரமும் நான் தலைவரிடம் இதைப் பற்றி நான் பேசும்போது கூட அவரது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு வேண்டுகோள் வைக்கிறேன்.

எனவே தலைவர் முதல்வர் வேட்பாளராக நின்றால் மட்டுமே நான் அவருக்காகச் சேவை செய்ய நான் தயாராக இருக்கிறேன். மற்றவர்களுக்கு அல்ல. அவரை சம்மதிக்க வைக்க என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

இல்லையென்றால் தொடர்ந்து நான் என்னுடைய சேவையைத் தனிப்பட்ட முறையில் செய்வேன். தலைவர் தன்னுடைய முடிவை மறுபரிசீலனை செய்து முதல்வர் வேட்பாளராக நிற்க வேண்டும் என்று என்னுடைய பணிவான வேண்டுகோளை வைக்கிறேன்.

எதிர்காலத்தில் அவர் விரும்பினால் யாரையாவது தேர்வு செய்யட்டும், ஆனால் இப்போது அவரே முதல்வராக நிற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இதை அவருடைய அனைத்து ரசிகர்களும் வலியுறுத்த வேண்டும் என்று விரும்புகிறேன். ஏனென்றால் இது நடக்கும் என்று என் மனம் சொல்கிறது.

நீங்க வந்தா நாங்க வரோம். இப்ப இல்லன்னா எப்போ…

நவம்பர்?”

இவ்வாறு நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

Rajini must reconsider his partys CM candidate says Lawrance

நீட் தேர்வு விதிமுறைகள்.. : மாஸ்க் தருவோம்.. முழு கைச்சட்டை கூடாது.. பாட்டிலில் நீர் வெளியே தெரியனும்.. 3 மணி நேரம் முன்பே வரனும்

நீட் தேர்வு விதிமுறைகள்.. : மாஸ்க் தருவோம்.. முழு கைச்சட்டை கூடாது.. பாட்டிலில் நீர் வெளியே தெரியனும்.. 3 மணி நேரம் முன்பே வரனும்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

neet exam rulesஇந்திய நாடு முழுவதும் நாளை செப். 13ல் மருத்துவ படிப்பு தகுதிக்கான நீட் தேர்வு நடைபெற உள்ளது.

கொரோனா காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தேர்வுக்கு வரும் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் என்ன என்பதை பார்ப்போம்..

பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெறும் நீட் தேர்வுக்கு, மாணவர்கள் 3 மணி நேரத்துக்கு முன்பே வர தொடங்க வேண்டும்.

காலை 11 மணி முதல் ஒரு மணி நேரத்துக்கு தலா 100 மாணவர்கள் வீதம் பரிசோதிக்கப்பட்டு தேர்வு மையத்திற்குள் அனுப்பப்படுவர்.

மாணவர்கள் தேர்வு மையத்துக்கு வந்த பின் அங்கு தரப்படும் முகக் கவசத்தை தான் அணிந்து கொள்ள வேண்டும்.

தேர்வு எழுத வரும் மாணவர்கள் முழு கைச்சட்டை அணிந்து வரக் கூடாது.

வெளியில் தெரியும் படியான பாட்டிலில் தான் குடி தண்ணீர் எடுத்து வர வேண்டும்.

மாணவர்கள் படிவத்தில் கையெழுத்து போடும் முன் கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

வினாத்தாள் கொடுக்கும் முன் தேர்வு கண்காணிப்பாளர் கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.

காய்ச்சல் உள்ளதா என பரிசோதிக்க உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், காய்ச்சல் உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட மாணவர் தனி அறையில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.

தேர்வு முடிந்த பின் அனைவரும் ஒரே நேரத்தில் வெளியே வரக் கூடாது.

Check NEET 2020 New Rules Amid COVID-19

திமுக எம்.பி ஜெகத்ரட்சகனின் ரூ 89 கோடி சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை

திமுக எம்.பி ஜெகத்ரட்சகனின் ரூ 89 கோடி சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jagathrakshakan mpதமிழகத்தில் பிரபல கட்சியான திமுக வைச் சேர்ந்த எம்.பி ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது மகன் சந்தீப் ஆனந்த் இருவரும் RBI அனுமதி வாங்காமல் சிங்கப்பூரை சேர்ந்த சில்வர் பார்க் இண்டர்நேஷனல் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர்.

அதாவது விதிகளுக்கு புறம்பாக சிங்கப்பூரில் முதலீடு செய்துள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக ஜெகத்ரட்சகன் மற்றும் குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.

மேலும் அவர்களது தமிழகத்தில் உள்ள விவசாய நிலங்கள், வீட்டு மனை, வீடு மற்றும் அவர்களது வங்கி கணக்குகளையும் முடக்கி உள்ளதாக அமலாக்கத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த சொந்த மதிப்பு ரூ.89.19 கோடி மதிப்பாகும்.

ED seizes Rs 89-cr properties of DMK MP S Jagathrakshakan and his family

ஏன் NEET Exam வேண்டாம்னு பசங்கள பயமுறுத்துறீங்க..? கோச்சிங் கொடுப்போம்.. – ஆர்த்தி அட்வைஸ்

ஏன் NEET Exam வேண்டாம்னு பசங்கள பயமுறுத்துறீங்க..? கோச்சிங் கொடுப்போம்.. – ஆர்த்தி அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actress harathiமத்திய அரசால் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வு மாணவர்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதனால் தமிழகத்தில் அடுத்தடுத்து மாணவர்கள் தற்கொலை செய்து வருகின்றனர். ஒரு வாரத்தில் மட்டும் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இது குறித்து நடிகை ஆர்த்தி தன் ட்விட்டரில் கூறியுள்ளதாவது…

எனதன்பு மாணவ உறவுகளே…உங்களுடைய சக்தி ஆளப்பெரியது எள்ளளவும் சந்தேகம் வேண்டாம்.நீட் தேர்வு நீங்கள் மனம் வைத்தால் தைரியத்துடன் எதிர்கொன்டாள் நிச்சயம் வெற்றி பெறும் முழுஆண்டு தேர்வு போல என்று முதலில் மனதில் பதியவையுங்கள்.. சுலபமாகும்..இனி #Suicide வேண்டாம் pls #RIPJodhidhurga

ஏன் #NEETExam வேண்டாம்னு சொல்லி படிக்கிறபசங்களை பயமுறுத்தி சரியா படிக்கவிடாம பண்றீங்க?? அதுக்கு பதிலா இருக்கப்பட்டவங்க எல்லாம் சேர்ந்து எல்லா studentsக்கும் நல்ல couching கொடுப்போம். உற்சாகபடுத்துவோம்!!students exam வேண்டாம்னு சொல்லல பயப்படறாங்க அந்த பயம் தான் போக்கனும்..

Free Coaching centers nadathanum…all India one education system for students will work out… let’s motivate them not discourage nor degrade our students..

என பல பதிவுகளை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

actress harathi tweet on neet exam

NEET பயம்: படிப்பே இல்லையென்றாலும் பிழைக்கலாம் என்பதை சொல்லி கொடுங்கள். – சேரன்

NEET பயம்: படிப்பே இல்லையென்றாலும் பிழைக்கலாம் என்பதை சொல்லி கொடுங்கள். – சேரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director cheranமத்திய அரசால் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வு மாணவர்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதனால் தமிழகத்தில் அடுத்தடுத்து மாணவர்கள் தற்கொலை செய்து வருகின்றனர்.

இது குறித்து நடிகர் & இயக்குனர் சேரன் கூறியுள்ளதாவது…

படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லைன்னு இந்த குழந்தைகளுக்கு எந்த பள்ளியில் சொல்லிக்கொடுப்பது.. இத்தனை வருடம் வளர்த்த பெற்றோர்களை ஏமாற்ற எப்படி மனம் வருகிறது. முதலில் மாணவர்களுக்கு தேவை படிப்பே இல்லையென்றாலும் பிழைக்கலாம் என்ற பயிற்சி. மக்களே குழந்தைகளை இழக்காமல் இருக்க சிந்தியுங்கள்…

@CMOTamilNadu உயிர்கள் இழக்கப்படாமலிருக்க உடனே நீட்டை ரத்து செய்ய உங்கள்அம்மா எடுத்த முடிவை கையிலெடுத்து போராடுங்கள். எதிர்கட்சிகள் தங்கள் குரலை வலுவாக பதிவுசெய்து இனிஒரு உயிர் இழக்காமல் தடுக்கவும்.@draramadoss @mkstalin @thirumaofficial @maiamofficial @PMOIndia @NaamTamilarOrg

கூறியும் செவிகொடுக்காத மத்திய அரசை தேர்தல் களத்தில் வீழ்த்தி அதற்கான பலம் கொண்ட கட்சி ஆட்சிக்கு வந்து அதிகாரத்தின் துணையோடு தான் எதிர்கொள்ள முடியும். நீட் தேர்வு அவசியமற்றதுதான்.. போராடுவது நம் உரிமைதான். ஆனால் குழந்தைகளை பாதுகாக்க வேண்டியது என் கடமை. அதை செய்தேன். #BanNEET

தங்கை அனிதாவின் மரணத்தின் போதே நான் எழுதிய கவிதை. வாக்காளன் குரல் என்ற எனது டுவிட்டர் ஐடியில். இங்கே யாரும் நீட்டை ஆதரித்து கொடி பிடிக்கவில்லை. இது தெரியாத மகான்களுக்கு பதில் சொல்ல அவசியமில்லை. நீட் தேர்வு ரத்து செய்யப்படவேண்டும் என முதல்வராய் இருந்த ஜெயலலிதா அவர்களே #BanNEET https://t.co/TU6zMTPwWG

Tamil director Cheran about students suicide in tn

விரும்பினாலும் விரும்பா விட்டாலும் திணிப்பு.; நீட் தேர்வை எதிர்கொள்ள அமீர் அட்வைஸ்

விரும்பினாலும் விரும்பா விட்டாலும் திணிப்பு.; நீட் தேர்வை எதிர்கொள்ள அமீர் அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு ‘நீட்’ எனும் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம் ஆகும்.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு, கடந்த மே மாதம் 3-ந் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக நாளை 2020 செப்டம்பர் 13 (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது.

தற்போதுள்ள சூழ்நிலையில் தேர்வை நடத்த வேண்டாம் என சில மாநில அரசுகள், அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்புகள், திரை பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இருப்பினும், தேர்வு நடத்தியே தீருவோம் என்ற முனைப்பில் மத்திய அரசு தீவிரமாக பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் இயக்குனர் அமீர் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.

அதில்..

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. நாம் விரும்பினாலும், விரும்பா விட்டாலும் நம் மீது வழியே திணிக்கப்பட்டுள்ளது. நாளை நீட் தேர்வு நடக்க இருக்கிறது.

நீட் தேர்வுக்கான போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும் கூட, இந்த தேர்வை எழுதி வெற்றி பெற வேண்டும் என்ற அவசியம் நமக்கு இருக்கிறது. உங்களால் நிச்சயம் நீட் தேர்வில் வெற்றி பெற முடியும்.

உங்களால் முடியும் என்ற நம்பிக்கையோடும், உங்களது பெற்றோர்களின் எதிர்காலம், நாட்டின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு, நீட் தேர்வை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். வெற்றி பெறுவோம். நிச்சயமாக சூழ்ச்சிகளில் நாம் தோற்றுவிட கூடாது என்ற காரணத்திற்காகவும், எதிர்கொண்டு வெற்றி பெறுவோம். வெற்றி உங்கள் பக்கம். வாழ்த்துகள். என்று கூறியிருக்கிறார்.

Director Ameer requests students who appear neet exam

More Articles
Follows