எங்க பெரியம்மாவும் ட்விட்டருக்கு வந்துட்டாங்க..;. ராதா மகள் கார்த்திகா ட்வீட்

எங்க பெரியம்மாவும் ட்விட்டருக்கு வந்துட்டாங்க..;. ராதா மகள் கார்த்திகா ட்வீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

karthika ambikaசிவாஜி, ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ், பிரபு, மோகன் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்தவர் நடிகை அம்பிகா.

1980களில் தென்னிந்திய சினிமாவை கலக்கியவர்களில் இவரும் ஒருவர்.

இவரைப் போலவே இவரின் தங்கை நடிகை ராதாவும் மிகப்பிரபலம்.

ரஜினி & கமல் படங்களில் இவர்கள் இணைந்தும் நடித்துள்ளனர்.

திருமணத்திற்கு பிறகு இவர்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தனர்.

அம்பிகா சில படங்களில் நடித்து வருகிறார்

தற்போது, சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் ‘ட்விட்டர்’ சமூக வலைதளத்தில் இணைந்துஉள்ளார்.

‘பேஸ்புக்’ பக்கத்தில் மட்டுமே கணக்கு வைத்துள்ள இவர், ட்விட்டரில் இணைந்ததை, ராதாவின் மகள் கார்த்திகா அறிவித்து உள்ளார்.

ராதாவின் மகள் கார்த்திகா ‘கோ’ படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

நடிகர் பிருத்விராஜுக்காக தன் மனைவி ஷாலினியை திட்டிய அஜித்

நடிகர் பிருத்விராஜுக்காக தன் மனைவி ஷாலினியை திட்டிய அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அவள் வருவாளா படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்திருந்தவர் பப்லு என்ற பிருத்விராஜ்.

அந்த படத்தில் சிம்ரனின் முதல் கணவராக நடித்திருப்பார் பிருத்விராஜ்.

ஆனால் ஷாலினியுடன் பிருத்விராஜ் எந்த படத்திலும் நடிக்கவில்லை.

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அஜித் & ஷாலினியும் ஓர் ஸ்டார் ஹோட்டலுக்கு சென்றுள்ளனர்

அங்கு பிருத்விராஜும் வந்துள்ளார்.

ஆனால் பல முறை பார்த்தும் ஷாலினியும், பப்லுவும் பேசிக் கொள்ளவில்லையாம்.

இதனையடுத்து அஜித் இது பற்றி ஷாலினியிடம் கேட்டாராம். நாங்கள் சேர்ந்து நடிக்கவில்லை என்றாராம் ஷாலினி.

ப்ரித்விராஜ் ஒரு சீனியர் நடிகர், என் நண்பர்… அவரை பார்த்தால் பேசியிருக்க வேண்டும் என்று கூறி கோபப்பட்டாராம்.

இதனையடுத்து பிருத்விராஜ்க்கு போன் செய்து ஷாலினியே இந்த தகவலை தெரிவித்து பேசினாராம்.

இதனால் ஆச்சர்யப்பட்டுப் போன பப்லு.. ‘ஷாலினியிடம் அப்படி கூறியிருக்க வேண்டியது அவசியமில்லை. அதுதான் அஜித். அவர் ஒரு பெர்ஃபெக்ட் ஜென்டில்மேன்’ எனத் தெரிவித்துள்ளார்.prithviraj

திரைநட்சத்திரங்கள் பாராட்டிய குறும்படம்: ‘எது தேவையோ அதுவே தர்மம்’

திரைநட்சத்திரங்கள் பாராட்டிய குறும்படம்: ‘எது தேவையோ அதுவே தர்மம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project - 2020-07-11T161014.531நடிகர் விஷால் , இயக்குநர்கள் பா. ரஞ்சித்,
லோகேஷ் கனகராஜ்,சீனு ராமசாமி ,
கார்த்திக் சுப்புராஜ் , ராஜுமுருகன், விஜய்மில்டன் ,அருண்ராஜா காமராஜ், மூடர் கூடம் நவீன் , நடிகை சுனேனா, ரியோ, மைம் கோபி ஆகியோர் ‘ எது தேவையோ அதுவே தர்மம்’ குறும்படத்தைப் பார்த்துப் பாராட்டியுள்ளனர்.

“ஒரு நல்ல குறும்படத்தைப் பார்த்த திருப்தி எங்களுக்குக்கிடைத்தது “என்று அவர்கள் மனதார படக்குழுவினரை பாராட்டியுள்ளனர்.

அறம், தர்மம், நீதி, நியாயம், மனசாட்சி என்பது பற்றியெல்லாம் ஆளுக்கொரு ஒரு விளக்கம் கூறுவார்கள். ஆனால் ”எது தேவையோ அதுவே தர்மம்” என்பது தான் நடைமுறையில் அனைவராலும் ஒப்புக் கொள்ளக்கூடிய ஓர் உண்மையாக இருக்கும். அதுபோல் சமகால மக்களின் வாழ்வியல் பிரச்சினையில் உள்ள நியாய தர்மத்தின் அடிப்படையை மையமாக வைத்து உருவாகும் படங்கள் மக்களின் ஏகோபித்த வரவேற்பை கண்டிப்பாக பெரும். அந்த வகையில் சமகால கடைநிலை மக்களின் வாழ்வியலை அதன் தன்மை மாறாமல் அப்படியே நம் கண்முன் கொண்டுவந்துள்ளது ”எது தேவையோ அதுவே தர்மம்” என்ற குறும்படம்.

விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பையும், 20க்கும் மேற்பட்ட பல்வேறு விருதுகளையும் வென்று சாதனை படைத்து வரும் இப்படத்தை து.ப.சரவணன் இயக்கியுள்ளார். “எது தேவையோ அதுவே தர்மம்” என்கிற இந்த வசனம் ‘ஆரண்ய காண்டம் ‘ படத்தில் முதலில் இடம்பெறும் வசனமாகும். அது பிடித்துப் போய் அதையே தலைப்பாக்கி இருக்கும் இயக்குநர் து.ப.சரவணன் இக்குறும் பட அனுபவம் பற்றி கூறும்போது….

“நான் திரையுலகில் எட்டு ஆண்டுகளாக இருக்கிறேன். பாலாஜி இயக்கிய ‘குள்ளநரிக்கூட்டம்’, கணேஷ் விநாயக் இயக்கிய ‘தகராறு’, ‘வீரசிவாஜி’ மற்றும் நிசப்தம் போன்ற படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றினேன். பிறகு சினிமா கனவோடு இருந்த நான், என்னை நிரூபிக்க முதலில் குறும்படம் ஒன்றை எடுப்பது என்று முடிவு செய்து, இதற்கான கதையை தயார் செய்தேன். அப்போது உருவானதுதான் இந்த “எது தேவையோ அதுவே தர்மம்” என்ற குறும்படத்தின் கதை.

இப்படத்தைத் தயாரிக்க மூன்று லட்ச ரூபாய் வரை தேவைப்பட்டது. பண உதவி தேவைப்பட்டதால் வெளிநாட்டிலிருந்த என் தங்கை கணவர் சந்திரசேகரிடம் கதையை அனுப்பி, பிடித்திருந்தால் உதவி செய்யுங்கள் என்று உதவி கேட்டேன். அவரும் கதையைப் படித்து விட்டு உடனே ஐம்பதாயிரம் ரூபாய் எனக்கு அனுப்பி, படப்பிடிப்பை தொடங்கச் சொன்னார். அப்படி தொடங்கப்பட்டதுதான் இந்தப் படம்.

இப்படத்தின் நாயகன் ஸ்ரீநி ‘தோழர்’, ‘பொம்ம
வெச்ச பென்சில்’, ‘நானும் இந்த உலகத்துல தான் இருக்கேன்’ போன்ற குறும் படங்களிலும், ‘சூப்பர் டூப்பர்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்தவர். இவர் தற்போது ‘வெல்வெட் நகரம்’ என்கிற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இவர் மூலம்தான் ஒளிப்பதிவாளர் வினோத் ராஜேந்திரன், கதாநாயகி ஷீலா ராஜ்குமார் ஆகியோர் அறிமுகமானார்கள். உலக அரங்கில் திரையிடப்பட்டு தேசிய விருது உட்பட பல்வேறு விருதுகளைக் குவித்த ‘டு லெட்’ படத்தின் கதாநாயகியாக நடித்தவர்தான் இந்த ஷீலா. அதுமட்டுமல்ல அண்மையில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘திரௌபதி’ படத்திலும் நாயகியாக நடித்தவர்.

படப்பிடிப்பின்போது கதாநாயகன் ஸ்ரீநி மற்றும் கதாநாயகி ஷீலா ராஜ்குமார் ஆகியோர் கொடுத்த ஒத்துழைப்பை மறக்கமுடியாது. இப்படத்தில் நடித்திருக்கும் சிறுவன் கொடுத்த ஒத்துழைப்பும் மறக்க முடியாது. அவனிடம் கதையைக் கொடுத்தபோது மறுநாளே வசனங்களை மனப்பாடம் செய்து காட்டினான். அப்படி ஒரு ஆர்வம் ஈடுபாடு.

ஒளிப்பதிவாளர் வினோத் ராஜேந்திரன் இல்லாவிட்டால் இப்படிப்பட்ட காட்சி அமைப்புகள் படத்தில் வந்திருக்காது. அவரின் ஸ்மார்ட்டான வேலை செய்யும் யுக்தி எங்கள் வேலையைச் சுலபமாக்கியது. அது மட்டுமல்லாமல் இப்படத்தில் ஆர்ட் டைரக்டர் சூர்யாவின் பங்கு அளப்பரியது. இந்த படத்திற்காக நாங்கள் பல வீடுகளை தேடி பார்த்தும் எங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றாற்போல் எந்த வீடும் திருப்திகரமாக அமையவில்லை. அப்போதுதான் எங்கள் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் வகையில் ஆர்ட் டைரக்டர் சூர்யா தனது வீட்டையே எங்கள் எதிர்பார்ப்பிற்கு ஏற்றாற்போல் மாற்றி அமைத்து படப்பிடிப்புக்குக் கொடுத்து உதவி செய்தார். அவர் நல்ல திறமைசாலி.

இசையமைப்பாளர் தீசன், கதைக்கான உணர்வை இசையில் கொண்டுவந்து பார்ப்பவரை கண்கலங்க வைத்திருக்கிறார். அதேபோல் காட்சிகளை தொய்வின்றி எடிட் செய்துள்ளார் எடிட்டர் தமிழ்க்குமரன். இந்தக் கூட்டணி இல்லாவிட்டால் இந்தப் படம் இந்த அளவுக்கு வந்திருக்காது” என்கிறார் இயக்குநர் சரவணன்.

இப்படத்திற்கு இதுவரை 20 விருதுகள் கிடைத்துள்ளன. தமிழ் ஸ்டுடியோ வழங்கும் பாலுமகேந்திரா நினைவு விருது, இப்படத்தின் சிறந்த ஒளிப்பதிவுக்குக் கிடைத்தது. அது மட்டுமல்லாமல் அங்கே பார்வையாளர்களிடையே வாக்கெடுப்பு நடத்தி பெஸ்ட் பீப்பிள்ஸ் சாய்ஸ் விருதும், பத்தாயிரம் ரூபாய் பரிசுத் தொகையும் இப்படத்திற்கு கிடைத்தது. குஜராத் அகமதாபாத்தில் நடந்த 3வது சித்ரபாரதி திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதுடன், ரூ.50 ஆயிரம் ரூபாய் பரிசும் நாயகன் ஸ்ரீநிக்கு கிடைத்தது. அதேபோல் இண்டோ ரஷ்யன் ஃபிலிம் பெஸ்டிவல், காஸ்மோ ஃபிலிம் பெஸ்டிவல் ஆகியவற்றிலும் சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது. இப்படி சுயாதீன பட விழா சென்னை 2020, பபாஸியின் புத்தக கண்காட்சி குறும்பட விழா என்று இதுவரை 20 விருதுகள் இந்த குறும்படத்திற்கு கிடைத்துள்ளன. இக்குறும்படத்தில் ஸ்ரீநி, ஷீலா ராஜ்குமார் ஆகியோருடன் இணைந்து லிங்கேஷ், தாஸ், நாகராஜன், ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சுமார் அரை மணி நேரம் ஓடும் இக்குறும்படத்தை செகண்ட் காட் புரொடக்ஷன்ஸ் சார்பாக இயக்குநர் து.ப சரவணன், ப்ளாட்பார்ம் புரொடக்ஷன்ஸ் சார்பாக நாயகன் ஸ்ரீநி, க்ளிக் அண்ட் ரஷ் புரொடக்ஷன்ஸ் சார்பாக ஒளிப்பதிவாளர் வினோத் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

படம் பார்த்த திரையுலகினர் மற்றும் பார்வையாளர்கள் அனைவரையும் கவர்ந்த இந்த “எது தேவையோ அதுவே தர்மம்” குறும்படம் இன்று உலக மின்னணுத் திரைகளில் ஒளிரும்.

Short film Link
#EdhuThevaiyoAdhuveDharmam
#ETADshortfilm
#Moviebuff
#ActorSrini #ToletSheela
Link : https://youtu.be/Fn5upsWBaVM

இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரின் ரசிகர்கள் எடுத்த சபதம்!

இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரின் ரசிகர்கள் எடுத்த சபதம்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

k balachanderஇயக்குநர் சிகரம் கே. பாலசந்திரன் பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடுவதாக சபதம் எடுத்துள்ளனர் அவருடைய ரசிகர்கள்.

இயக்குநர் சிகரம் அவர்களின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு,90 மரக் கன்றுகளை நடுவதற்கு, இயக்குநர் சிகரம் அவர்களின் புதல்வி திருமதி.புஷ்பா கந்தசாமி அவர்களும், மருமகன் திரு.கந்தசாமி அவர்களும், முதல் இரு மரக்கன்றுகளையும், நன்கொடையாக பத்தாயிரம்(10,000/-)ரூபாயும், கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்க பொதுச் செயலாளர் கவிதாலயா வீ.பாபு அவர்களிடம் கொடுத்தார்கள்.

இதை தொடர்ந்து கலைமாமணி நடிகை குமாரி சச்சு, நடிகை திருமதி.ரேணுகாகுமரன், நடிகர்கள் திரு.ராஜேஷ், திரு.பூவிலங்குமோகன், திரு.ரகுமான்,
திரு.ராம்ஜி,
திரு.குமரன்,
நடிகரும் கராத்தே மாஸ்டருமான திரு.சிஹான் உசேன் HU,
இயக்குநர் நடிகர் தயாரிப்பாளருமான திரு.T.P.கஜேந்திரன்,
நடிகரும் இயக்குநருமான திரு.ரமேஷ்கண்ணா,
கவிஞர் இயக்குநர் திரு.கண்மணி சுப்பு,
இயக்குநர் திரு.நாகா,
தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்க தலைவர் திரு.தளபதி,
பொதுச் செயலாளர் திரு.C.ரெங்கநாதன்,
இணைச் செயலாளர் திரு.T.R.விஐயன், கே.பி.அவர்களின் வண்டி ஓட்டுனர், திரு.கோவிந்தசாமி,
திரு.ராஜேந்திரன் ஆகியோர்,முதல் பகுதியாக கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்க நிர்வாகிகளிடம் மரக்கன்றுகளை
வழங்கினார்கள்.

தொடர்ந்து, கே.பி.90-மரம் நடும் சபதம் என்கிற தலைப்பில் இந்த வருடம் முழுவதும் கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்க நிர்வாகிகள் தலைமையில் மரக்கன்றுகள் நடப்படும் என்று தெரிவித்துள்ளனர் அவருடைய ரசிகர்கள்.

அரசியலில் குதிக்கும் சத்யராஜ் மகள் திவ்யா.; யாருக்கு போட்டியோ..?

அரசியலில் குதிக்கும் சத்யராஜ் மகள் திவ்யா.; யாருக்கு போட்டியோ..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

divya sathyarajசினிமாவில் நுழைய பலர் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் ஒரு சிலரோ நடிகர்களின் வாரிசு என ஈஸியாக நுழைந்து விடுகின்றனர்.

அப்படி ஒரு வாய்ப்பு இருந்தும் அதிலிருந்து விலகி தனக்கென தனிப்பாதையை அமைத்துக் கொண்ட பெண்மணி தான் நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா.

இவர் சென்னையின் வெற்றிகரமான ஊட்டச்சத்து நிபுணராக வலம் வருகிறார்.

மேலும் உலகின் மிகப்பெரிய மதிய உணவு திட்டமான ’அக்‌ஷய பாத்திரா’வின் விளம்பரத் தூதுவராக செயல்பட்டு வருகிறார் திவ்யா.

இத்துடன் ‘வேர்ல்டு விஷன்’ என்ற அமைப்புடன் இணைந்து கிராமப்புற பகுதிகளில் வாழும் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் ஊட்டச்சத்து மிகுந்த உணவு வழங்கும் முயற்சியையும் செய்து வருகிறார் திவ்யா.

அண்மையில் அமெரிக்காவின் சர்வதேச தமிழ் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார் இவர்.

இந்த நிலையில் வருகிற 2021 ஆண்டில் திவ்யா அரசியல் களம் காண உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இது தொடர்பாக அவரின் அண்மை பேட்டியில்… சத்யராஜின் மகளாக மட்டுமல்லாமல் தமிழ்ப் பெண்ணாக மக்கள் நலன் காக்க உழைப்பேன் என தன் அரசியல் பிரவேசம் குறித்து குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் பத்தி நிறைய தெரிந்து கொண்டும் அதற்கான களப்பணியும் செய்து கொண்டு வருகிறாராம்.

வாழ்த்துகள் திவ்யா…

வில்லன் பொன்னம்பலம் உடல் நலக்குறைவு; உலக நாயகன் கமல் உதவி

வில்லன் பொன்னம்பலம் உடல் நலக்குறைவு; உலக நாயகன் கமல் உதவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasan ponnambalamஏராளமான திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் நடிகர் பொன்னம்பலம்.

இவர் சிறுநீரக கோளாறு காரணமாக அடையாறில் உள்ள VHS மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது சிகிச்சைக்கு நடிகர் கமல்ஹாசன் உதவி வருகிறார்.

மேலும் பொன்னம்பலம் அவர்களிடம் தினமும் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்து வருகிறார்.

இந்த சூழ்நிலையை கருத்தில்கொண்டு அவரின் இரண்டு குழந்தைகளின் படிப்பு செலவினை உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்.

பொன்னம்பலம் அவர்கள் பூரண குணமடைந்து திரும்ப வேண்டும்.

More Articles
Follows