புதுச்சேரி மாநில மாணவர்களுக்கு மதிய உணவுக்கு பதிலாக உதவித்தொகை & அரிசி தானியங்கள்

புதுச்சேரி மாநில மாணவர்களுக்கு மதிய உணவுக்கு பதிலாக உதவித்தொகை & அரிசி தானியங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

pudhucherry govtபுதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களும் ஒன்றிணைந்தது தான் புதுச்சேரி.

தற்போது கொரோனா தொற்று பரவல் தடுப்பு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளது.

பள்ளிகளை எப்போது திறக்கலாம் என தெரியாமல் மத்திய & மாநில அரசுகளே திண்டாடி வருகிறது.

இந்த சூழ்நிலையால் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க முடியவில்லை.

இதனால் பள்ளிகள் மூலம், பெற்றோர்களிடம் அரிசி மற்றும் உதவித்தொகை நேரடியாக நேற்று செப்டம்பர் 15 முதல் வழங்க அரசு உத்தரவிட்டது.

தேசிய உணவு பாதுகாப்பு சட்டப்படி.. ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களுக்கு சமைக்கப்பட்ட உணவுக்கு பதிலாக தானியங்கள், உதவித்தொகை வழங்கப் படுகிறது.

ஒன்றாம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 4 கிலோ அரிசி, ரூ.290 ரொக்கமும், 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 4 கிலோ அரிசி, ரூ.390 ரொக்கமும் வழங்கப்படுகிறது.

அந்தந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்கு சென்று இதனை பெற்றுக்கொள்ளலாம்

Pudhucherry govt provides 4kg rice to school students

வித்தியாசமான காமெடி, காதல், கலந்த ஹாரர் படம் ” மாய மாளிகை ” K.N.பைஜூ இயக்குகிறார்

வித்தியாசமான காமெடி, காதல், கலந்த ஹாரர் படம் ” மாய மாளிகை ” K.N.பைஜூ இயக்குகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

KN Baijuதேவா கிரியேஷன்ஸ் மற்றும் நவகிரஹா சினி ஆர்ட்ஸ் என்ற இரண்டு பட நிறுவனங்களும் இணைந்து தயாரித்துள்ள படம் ” மாயமாளிகை ”

K.N.பைஜூ கதை, திரைக்கதை எழுதி,இயக்கி கதாநாயகனாக நடிக்கிறார்.நாயகிகளாக இரண்டு புதுமுகங்கள் நடிக்க உள்ளனர். மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் ரியாஸ்கான், கேசவ தேவ், கஞ்சா கருப்பு, சம்பத்ராம், முத்துக்காளை ஆகியோர் நடித்துள்ளனர். மற்றும் இவர்களுடன் ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்

இசை – அஜெய் ஸரிகமா

பாடல்கள் – சினேகன்

கலை – பிஜு தாஸ்

துணை இயக்கம் – ஜெயராஜ்

இணை இயக்கம் – வி.பி.சுந்தர்
மக்கள் தொடர்பு – மணவை புவன்

தயாரிப்பு – A.P.கேசவ தேவ்

கதை, திரைக்கதை, இயக்கம் – K.N.பைஜூ

படம் பற்றி நாயகனும், இயக்குனருமான K.N.பைஜூ கூறியதாவது…

காதல், காமெடி, கலந்த ஹாரர் படம். திருமணமான நாயகன், நாயகி இருவரும் தேனிலவுக்கு மலை பிரதேசத்தில் தங்களுக்கு சொந்தமான 10 ஏக்கரில் உள்ள பங்களாவிற்கு செல்கிறார்கள்.
அங்கே போனவுடன் சில திடுக்கிடும் சம்பவங்கள் நடக்கின்றன.
அங்கே இருக்கும் பேய் அந்த தம்பதிகளிடம் 40 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை சொல்கிறது. அந்த சம்பவத்திற்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு என்பதே படத்தின் திரைக்கதை.
முதல் பாதி முழுக்க முழுக்க காமெடி கலாட்டாவாகவும், இரண்டாவது பாதி காதல் கலந்த ஹாரராகவும் இருக்கும். வழக்கமான பேய் படங்களை போல் இல்லாமல் ஒரு வித்யாசமான முயற்சியை இந்த படத்தில் கையாண்டிருக்கிறார்கள். அது படம் வெளியான பிறகு மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெரும். முதன் முறையாக ரியாஸ்கான் இந்த படத்தில் பக்கா காமெடியனாக நடித்துள்ளார்.
முழுக்க முழுக்க பங்களாவிற்குள்ளேயே நடக்கும் கதை இது.

KN Baijus new film titled Maya Maaligai

‘அண்ணாத்த’ ரஜினிகாந்தை மிரட்ட வரும் விஜய் பட வில்லன்

‘அண்ணாத்த’ ரஜினிகாந்தை மிரட்ட வரும் விஜய் பட வில்லன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jackie shroffரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் ‘அண்ணாத்த’.

இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.

சிவா இயக்கி வரும் இப்படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவு செய்ய டி.இமான் இசையமைத்து வருகிறார்.

இதில் பிரபல தெலுங்கு நடிகர் கோபிசந்த் வில்லனாக நடிப்பார் என கூறப்பட்டது.

இந்த நிலையில் வில்லனாக ஜாக்கி ஷராஃப் நடிக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகரான இவர் விஜய்யுடன் ‘பிகில்’ படத்தில் நடித்திருந்தார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு தற்போது அரசு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து விரைவில் தொடங்கவுள்ளது.

ரஜினி நடிக்கும் காட்சிகளை 2021 ஜனவரியில் படமாக்கி 2021 ஏப்ரலில் படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளதாம் படக்குழு.

Bollywood actor Jackie Shroff to play the main villain in Rajinikanth’s Annaatthe

பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் சனம் ஷெட்டி ரியோ ராஜ் ஷாலு ஷம்மு அம்ரிதா & ரக்‌ஷன்

பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் சனம் ஷெட்டி ரியோ ராஜ் ஷாலு ஷம்மு அம்ரிதா & ரக்‌ஷன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bigg boss 4விரைவில் விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 4 சீசன் தொடங்கவுள்ளது.

இதில் ரம்யா பாண்டியன், சுனைனா உள்ளிட்டோர் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியானது.

ஆனால் இருவரும் அந்த தகவலை மறுத்தனர்.

ஆனால் சனம் ஷெட்டி, ரியோ ராஜ், ஷாலு ஷம்மு, அம்ரிதா ஐயர் ஆகியோரர் கலந்து கொள்ள உள்ளனர் என கூறப்படுகிறது.

இவர்கள் யாரும் இத்தகவலை மறுக்கவில்லை.

இந்த நிலையில் ‘கலக்கப்போவது யாரு’ தொகுப்பாளரும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட நடிகருமான ரக்‌ஷன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Bigg Boss 4 Tamil contestants list here

82 வயதிலும் செம ஃபிட்..; யூடியூப் சேனல் தொடங்கி சீக்ரெட் சொல்லும் விஷால் டாடி

82 வயதிலும் செம ஃபிட்..; யூடியூப் சேனல் தொடங்கி சீக்ரெட் சொல்லும் விஷால் டாடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishal fatherகொரோனா காலத்தில் உடலை ஆற்றலோடு வைத்துக் கொள்வது எப்படி? – விளக்குகிறார் நடிகர் விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி

நடிகர் விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி எப்போதும் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தருபவர்.

அதிலும் நாள் தவறாமல் உடற்பயிற்சி செய்வார். அதுதான் அவர் 82 வயதிலும் மிகவும் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பதற்கு முக்கியக் காரணமாக விளங்கி வருகிறது.

ஆகையால், தன்னைப் போலவே எல்லோரும் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக GK Reddy என்ற அவரது பெயரிலேயே ஒரு யூடியூப் சேனலை ஆரம்பித்திருக்கிறார்.

முக்கியமாக, இந்த கொரோனா காலத்தில் உடல் ஆற்றலை மேம்படுத்திக்கொள்ள வீட்டில் இருந்தபடியே செய்யக்கூடிய எளிய உடற்பயிற்சிகளை விவரிக்கிறார்.

பல்வேறு உடற்பயிற்சிகளை பதிவேற்றம் செய்து வருகிறார். அந்த காணொளியில் அவரே உடற்பயிற்சி செய்தும் காட்டுகிறார்.

How to keep the body energized during the corona period? – Explains actor Vishal’s father GK Reddy

BREAKING எவனென்று நினைத்தாய்.; கமல் லோகேஷ் அனிருத் மெகா கூட்டணி

BREAKING எவனென்று நினைத்தாய்.; கமல் லோகேஷ் அனிருத் மெகா கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கைதி பட வெற்றியை தொடர்ந்து மாஸ்டர் படத்தை இயக்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

விஜய் & விஜய்சேதுபதி இணைந்துள்ள இந்த பட ரிலீஸ் கொரோனா ஊரடங்கால் தள்ளி போய்விட்டது.

கொரோனா பிரச்சினை முடிந்து தியேட்டர்கள் திறக்கப்பட்டதும் படம் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கவுள்ள படத்தை லோகேஷ் இயக்குவார் என கூறப்பட்டது.

ஆனால் அண்ணாத்த படத்தை முடிக்காமல் ரஜினி வேறு படங்களில் நடிக்க மாட்டார்.

மேலும் நவம்பர் மாதம் முதல் அரசியலில் களம் காணவுள்ளார் ரஜினிகாந்த்.

எனவே கமல்ஹாசன் நடிக்கவுள்ள படத்தை முடிவு செய்துவிட்டார் லோகேஷ் என்பதை நாம் நேற்றே பார்த்தோம்.

இப்பட அறிவிப்பை இன்று செப்டம்பர் 16 மாலை 6 மணிக்கு சற்றுமுன் வெளியிட்டுள்ளனர்.

கமல்ஹாசனின் 232 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.

இப்படத்தை கமலே தன் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பாக தயாரிக்கிறார்.

அனிருத் இசையமைக்கவுள்ளார்.

இப்படத்தை 2021 கோடை விடுமுறையில் ரிலீஸ் செய்வதாக அறிவித்து பர்ஸ்ட்லுக்கை வெளியிட்டுள்ளனர்.

லோகேஷ் கனகராஜ், கமல்ஹாசன் இணையும் படத்துக்கு தலைப்பு வைக்கப்படவில்லை.

எவனென்று நினைத்தாய் என்ற வார்த்தை ஹேஷ்டேக் மட்டுமே..ராஜ்கமல் பிலிம்ஸ் தகவல்

Kamal 232 will be directed by Lokesh Kanagaraj and music by Anirudh

IMG-20200916-WA0044

More Articles
Follows