ஆக்ஷன் கவிதை சொல்லும் விஜய் ஆண்டனி – சரத்குமார் – சத்யராஜ் கூட்டணி

ஆக்ஷன் கவிதை சொல்லும் விஜய் ஆண்டனி – சரத்குமார் – சத்யராஜ் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆக்ஷன் கவிதை சொல்லும் விஜய் ஆண்டனி – சரத்குமார் – சத்யராஜ் கூட்டணி

*’மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டீசர் 29 மே 2024 அன்று வெளியாகிறது!*

விஜய் ஆண்டனி, சரத்குமார் மற்றும் பலர் நடித்துள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

‘ரோமியோ’ படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு விஜய் ஆண்டனி தனது அடுத்த படமான ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தை வெளியிட தயாராகி வருகிறார்.

‘அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது’, ‘கோலி சோடா’, ’10 எண்றதுக்குள்ள’, ‘கோலி சோடா2’ போன்ற படங்களை இயக்கியவரும் ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன் ‘மழை பிடிக்காத மனிதன்’ (MPM) படத்தை அதிக பட்ஜெட்டில் இயக்கியுள்ளார்.

விஜய் ஆண்டனி, ‘சுப்ரீம் ஸ்டார்’ சரத்குமார், பிரபல கன்னட ஹீரோ ‘டாலி’ தனஞ்ஜெயா, மேகா ஆகாஷ், முரளி ஷர்மா, ப்ருத்வி ஆம்பர், சரண்யா பொன்வண்ணன், ‘தலைவாசல்’ விஜய், ஏ.எல். அழகப்பன், ‘திருமலை’ படப்புகழ் இயக்குநர் ரமணா மற்றும் பலர் நடித்துள்ளனர். ‘

‘புரட்சித் தமிழன்’ சத்யராஜ் ஒரு சிறப்பான, முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பது படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.

‘மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படம், சக மனிதர்கள் மீதான தனது அக்கறை மற்றும் கருணையுள்ள ஒருவன் எப்படி ஒரு புதிய தீவில் நுழைந்து யாரோ ஒருவரின் எதிர்காலமாக மாறுகிறார் என்பதுதான் கதை. படம் அந்தமான் தீவுகள், டையூடாமன் தீவுகள் மற்றும் பல நகரங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

‘கோடியில் ஒருவன்’, ‘கொலை’, ‘ரத்தம்’ படங்களின் வெற்றியைத் தொடர்ந்து இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸின் கமல் போஹ்ரா, டி லலிதா, பி, பிரதீப் மற்றும் பங்கஜ் போஹ்ரா ஆகியோர் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.

இத்திரைப்படம் ‘கவிதைத் தனத்துடன் ஆக்‌ஷன் என்டர்டெய்னர்’ என்ற புதிய வகையை (Genre) முன்வைக்கிறது. ஏனெனில், இது வழக்கமான ஆக்‌ஷன் மசாலா படமாக இருக்காது.

ஆனால், சமூகம் தாழ்த்தப்பட்டவர்களை எப்படி நடத்துகிறது மற்றும் அவர்களின் எதிர்காலத்தை மாற்றும் ஹீரோவின் பாத்திரத்தைப் பற்றிய பின்னணியில் வலுவான உணர்ச்சிகளைக் கொண்ட கவிதையாக படம் இருக்கும். படத்தின் இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

விரைவில், திரையரங்குகளில் வெளியாகும். அதற்கு முன்பாக மே 29, 2024 அன்று டீசரை வெளியிட்டு படத்தின் புரோமோஷனை படக்குழு தொடங்கியுள்ளது. இதன் தெலுங்கு பதிப்பிற்கு ‘டூஃபான்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் படம் வெளியிடப்படும்.

*தொழில்நுட்பக் குழு:*

எழுத்து, இயக்கம் மற்றும் ஒளிப்பதிவு: விஜய் மில்டன்,
இசை: அச்சு ராஜாமணி – விஜய் ஆண்டனி,
எடிட்டர்: பிரவீன் கே.எல்.,
கலை இயக்குநர்: ஆறுமுகசாமி,
ஸ்டண்ட்: ‘சுப்ரீம்’ சுந்தர்,
உடைகள்: ஷிமோனா ஸ்டாலின்,
டிசைனர்ஸ்: தண்டோரா-சந்துரு,

Mazhai Pidikkatha Manithan teaser from 29th May 2024

#MazhaiPidikkathaManithan
#மழைபிடிக்காதமனிதன்

@vijayantony‘s next after ‘Romeo’ #MPM is gearing up for the Release.

#MPMTeaser from 29th May.

🎬 @vijaymilton

@realsarathkumar #Sathyaraj @akash_megha #SaranyaPonvannan @murlisharma72 @Dhananjayang @AmbarPruthvi @FvInfiniti
@SureshChandraa
@AbdulNassarOffl
@DoneChannel1 @digitallynow

மலையாள இயக்குனருடன் கைகோர்த்த யோகிபாபு – காளிவெங்கட் – ரமேஷ் திலக்

மலையாள இயக்குனருடன் கைகோர்த்த யோகிபாபு – காளிவெங்கட் – ரமேஷ் திலக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாள இயக்குனருடன் கைகோர்த்த யோகிபாபு – காளிவெங்கட் – ரமேஷ் திலக்

யோகி பாபு நடிக்கும் ‘வானவன்’ பட படப்பிடிப்பு நிறைவடைந்தது*

‘ஈடன் ஃபிளிக்ஸ்’ குழுவினர் தயாரிப்பில், இயக்குநர் சஜின் கே சுரேந்திரன் இயக்கத்தில், யோகிபாபு,
ரமேஷ் திலக் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் ‘வானவன்’ படத்தின் முழுப்படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது.

படப்பிடிப்பு முடிந்த நிலையில் படக்குழு தற்போது போஸ்ட் புரடக்சன் பணிகளைத் துவக்கியுள்ளது.

யோகி பாபு, ரமேஷ் திலக், காளி வெங்கட், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, Master ஷக்தி ரித்விக் ( பிகில், மாஸ்டர்) , ‘லவ் டுடே’ பிராத்தனா நாதன் & கல்கி ராஜா ஆகியோர் இணைந்து நடிக்கும் மல்டி ஸ்டாரர் திரைப்படமாக வானவன் உருவாகி வருகிறது.

யோகி பாபுவின் நகைச்சுவையுடன் Feel Good, Fantasy ஜானரில், குழந்தைகள் மற்றும் குடும்ப பார்வையாளர்கள் கொண்டாடும் வகையில் அசத்தலான காமெடியுடன் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த சஜின் கே சுரேந்திரன் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இதற்கு முன் மலையாளத்தின் முதல் வெப் சீரிஸான மாஸ்குரேட் சீரிஸை இயக்கியுள்ளார்.

இப்படத்திற்கு பவி கே பவன் ஒளிப்பதிவு செய்துள்ளார் (அசோக வனமாலோ அர்ஜுனா கல்யாணம் மற்றும் ரெஜினா புகழ்), அறிமுக எழுத்தாளர் ஹரிஹரன் எழுத்தும் மற்றும் ஃபின் ஜார்ஜ் படத்தொகுப்பு செய்துள்ளார்.

இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா மற்றும் பாடலாசிரியர் கார்த்திக் நேதா வெற்றிக்கூட்டணி இப்படத்தில் மீண்டும் இணைந்துள்ளது.

இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள், மதுரை மற்றும் சென்னையின் கிராமப்புறங்களைச் சுற்றி படம்பிடிக்கப்பட்டுள்ளது. EDENFLICKS PRODUCTIONS பேனரின் கீழ் அமெரிக்க தொழிலதிபர் தாமஸ் ரென்னி ஜார்ஜ் தயாரித்துள்ளார்.

கடந்த ஆண்டு வெளியான சாய் பல்லவி நடித்த கார்கி படத்தின் தயாரிப்பாளர் தாமஸ் இணைந்து தயாரித்தார் என்பது குறிப்பிடதக்கது.

விரைவில் இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

Yogibabu and Kaali Venkat starrer Vaanavan

It’s a WRAP for #Vaanavan

Stay tuned !! Coming soon to theatres 🤗

Directed by @sajinksofficial

#Edenflicks #ThomasGeorge @iYogiBabu @thilak_ramesh @LakshmiPriyaaC @Kaaliactor @Nathanprathana
#Kalkkiraja #Shakthirithvik @PaviKPavan1 #GovindVasantha @iamKarthikNetha
#FinnGeorgeVarghes #Sasikumar @hariosambo @pro_thiru

‘சைரன்’ அந்தோனி பாக்யராஜ் வாழ்க்கையில் கிரீன் சிக்னலாக வந்த ரம்யா

‘சைரன்’ அந்தோனி பாக்யராஜ் வாழ்க்கையில் கிரீன் சிக்னலாக வந்த ரம்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘சைரன்’ அந்தோனி பாக்யராஜ் வாழ்க்கையில் கிரீன் சிக்னலாக வந்த ரம்யா

‘சைரன்’ படத்தின் இயக்குனர் அந்தோனி பாக்யராஜ் – ரம்யா திருமணம் இனிதே நடைபெற்றது.

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வெற்றி பெற்ற ‘சைரன்’ படத்தை இயக்கிய இயக்குனர் அந்தோனி பாக்யராஜ் – ரம்யா திருமணம், கடந்த ஞாயிற்றுகிழமை (19.5.2024) அன்று இனிதே நடைபெற்றது.

அன்று மாலை கோவிலம்பாக்கத்தில் உள்ள PR பேலஸில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில்…

Actor Jayam Ravi – Aarti Ravi
Actor Director Samuthirakani
Producer Editor Mohan
Producer Sujatha Vijaykumar
Director Siva (Kanguva)
Producer Dhananjeyan
Actor Sathish
Actor Director Azhagam Perumal
Editor Ruben
Director R. Ravikumar (Ayalaan)
Director Arunraja Kamaraj
Director Sam Anton
Director PS Mithran
Director P. Virumandi
Director M. R. Madhavan
Director Kishore Rajkumar
Choreographer Director Bobby Master
Director R.Savari Muthu
Director Shanmugam Muthusamy
Director DOP Saravanan
Art Director Sakthee
Actress Chandini
Lyricist Snekan – Kannika snekan
Lyricist Murugan Mandhiram
DOP Dinesh B Krishnan
DOP Selvakumar SK
Art Director Kadhir

உள்ளிட்ட பல திரை பரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Siren director Antony Bakiyaraj got married

‘கல்கி 2898 கிபி’ பட எதிர்பார்ப்பை எதிறச் செய்த 5வது சூப்பர் ஸ்டாரின் ப்ரெண்ட் புஜ்ஜி

‘கல்கி 2898 கிபி’ பட எதிர்பார்ப்பை எதிறச் செய்த 5வது சூப்பர் ஸ்டாரின் ப்ரெண்ட் புஜ்ஜி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘கல்கி 2898 கிபி’ பட எதிர்பார்ப்பை எதிறச் செய்த 5வது சூப்பர் ஸ்டாரின் நண்பர் புஜ்ஜி

*கல்கி 2898 கிபி படத்தின் எதிர்பார்ப்பு எகிற ஆரம்பித்துவிட்டது. 5வது சூப்பர் ஸ்டார் & பைரவாவின் நம்பகமான நண்பரான புஜ்ஜி 22 மே 2024 ல் அறிமுகமாகிறார் !!*

கல்கி 2898 கி.பி., படம் வெளியீடு நெருங்கி வரும் நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு உட்சகட்டத்தை எட்டியுள்ளது.

கல்கி படத்தின் ஐந்தாவது சூப்பர் ஸ்டார் பைரவாவின் சிறந்த நண்பரான புஜ்ஜியின் அறிமுகம் மே 22, 2024 அன்று வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது

‘From Skratch EP4: Building A Superstar’ என்ற தலைப்பிலான கண்கவர் திரைக்குப் பின்னால் நம்மை ஒரு அசாத்தியமான காட்சி அனுபவத்திற்குள் கூட்டிச் செல்கிறார் இயக்குனர் நாக் அஷ்வின். 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கிய இந்த பயணம் நம்மை வியக்க வைக்கிறது.

“சூப்பர் ஹீரோ”, “பைரவாவின் சிறந்த நண்பன், ” புஜ்ஜி” என பில்ட் அப்கள், நெட்டிசன்கள் மத்தியில் மிகப்பெரிய ஆர்வத்தைத் தூண்டுகிறது.

இது குறித்தான வீடியோ லிங்க்

2 நிமிட 22 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ, கேரேஜ் அமைப்பிலான செட்டிங்கில், பிரபாஸுடனான சந்திப்பு காட்சிகளைக் காட்டுகிறது, இது மே 22 ஆம் தேதி வெளியாகவுள்ள புஜ்ஜியின் பிரமாண்ட அறிமுகத்திற்கான ஆர்வத்தை இன்னும் அதிகரிக்கிறது.

சமீபத்தில் 2898 கி.பி கல்கியின் சாம்ராஜ்யத்தில் அமிதாப் பச்சனின் அஸ்வத்தாமாவின் தோற்றம், ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளை ஒருங்கிணைத்து உண்மையான பான்-இந்திய டீஸராகக் அசத்தலால வெளியாகியுள்ளது இந்த டீசர்.

அற்புதமான படைப்பாளி நாக் அஸ்வின் இயக்கத்தில், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், மற்றும் திஷா பதானி போன்ற இந்தியளவிலான முன்னணி நட்சத்திரங்களின் கூட்டணியில், வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், கல்கி 2898 AD இந்த ஆண்டின் மிக முக்கிய படைப்பாக எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

இப்படம் ஜூன் 27, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Meet Bujji The trusted friend 5th Super Star

சர்வதேச விருதுகளை வென்ற கருணாஸின் ‘ஆதார்’ மலையாளத்தில் ரீமேக் ஆகிறது

சர்வதேச விருதுகளை வென்ற கருணாஸின் ‘ஆதார்’ மலையாளத்தில் ரீமேக் ஆகிறது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சர்வதேச விருதுகளை வென்ற ‘ஆதார்’ மலையாளத்தில் ராம்நாத் இயக்கத்தில் ரீமேக் ஆகிறது

*கருணாஸ் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘ஆதார்’ படம் மலையாளத்தில் உருவாகிறது..

*மலையாளத்தில் அறிமுகமாகும் இயக்குநர் ராம்நாத் பழனிகுமார்*

பல சர்வதேச விருதுகளை வென்று, ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பையும் பெற்ற, வெண்ணிலா கிரியேஷன்ஸ் பி. சசிகுமார் தயாரிப்பில், இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில், கருணாஸ் நடிப்பில் வெளியாகி, 2022 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த ஊடகத்தின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பிய ‘ஆதார்’ திரைப்படம் மலையாளத்தில் உருவாகிறது.

இப்படத்தை இயக்குவதன் மூலம் இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் மலையாளத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார்.

தமிழில் உருவான ‘ஆதார்’ படத்தில் அருண் பாண்டியன் நடித்த அழுத்தமான ரைட்டர் கதாபாத்திரத்தில் மலையாள நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான திலீஷ் போத்தன் நடிக்கவிருக்கிறார்.

கருணாஸ் நடிப்பில் வெளியான ‘திண்டுக்கல் சாரதி’ எனும் வெற்றி பெற்ற படத்திற்கு திரைக்கதை & வசனம் எழுதியவர்.

ஜீவா- நயன்தாரா நடிப்பில் வெளியான ‘திருநாள்’, கருணாஸ் நடிப்பில் வெளியான ‘அம்பாசமுத்திரம் அம்பானி’ மற்றும் ‘ஆதார்’ ஆகிய திரைப்படத்தை இயக்கியவர் ராம்நாத் பழனிகுமார்.

இவரது திரைப்படங்களில் கதை சொல்லும் பாணி வித்தியாசமாக இருப்பதுடன் எளிய மனிதர்களின் வாழ்வியலை மையப்படுத்தி உருவாகி இருப்பதால் அனைத்து தரப்பு ரசிகர்களிடத்திலும் பெரும் வரவேற்பை பெற்றது.

கடந்த 2022 ஆம் ஆண்டில் கருணாஸ், அருண் பாண்டியன், பிரபாகர், உமா ரியாஸ் கான், ரித்விகா, இனியா, திலீபன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் ராம்நாத் பழனி குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘ஆதார்’.

இப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்றது.

மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘கும்ப்ளாங்கி நைட்ஸ்’, ‘ஜோஜி’, அண்மையில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘பிரேமலு’ ஆகிய படங்களின் தயாரிப்பாளர் – ‘மகேஷிண்டே பிரதிகாரம்’, ‘ஜோஜி’ ஆகிய வெற்றி பெற்ற படத்தை இயக்கிய இயக்குநர் – அறுபதிற்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்து நட்சத்திர நடிகராகவும் வலம் வரும் திலீஷ் போத்தன்.. ‘ஆதார்’ படத்தின் தமிழ் பதிப்பில் அருண் பாண்டியன் நடித்த அழுத்தமான ரைட்டர் வேடத்தில் நடிக்கவிருக்கிறார்.

‘ஆதார்’ திரைப்படத்தின் மலையாள ரீமேக்கில் திலீஷ் போத்தன் முக்கிய வேடத்தில் நடிப்பதால்.. இந்த திரைப்படம் மலையாள மொழியிலும் பெரிய வெற்றியை பெறும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Blockbuster movie Aadhar remake in Malayalam

கட்டப்பா போல ‘வெப்பன்’ பட கேரக்டர் காலத்திற்கும் நிற்கும்… – சத்யராஜ்

கட்டப்பா போல ‘வெப்பன்’ பட கேரக்டர் காலத்திற்கும் நிற்கும்… – சத்யராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கட்டப்பா போல ‘வெப்பன்’ பட கேரக்டர் காலத்திற்கும் நிற்கும்.; சத்யராஜ் நம்பிக்கை

*மில்லியன் ஸ்டுடியோ புரொடக்‌ஷன்ஸ், எம்.எஸ். மன்சூர் வழங்கும் குகன் சென்னியப்பன் இயக்கத்தில், நடிகர்கள் சத்யராஜ் & வசந்த் ரவி நடித்துள்ள ’வெப்பன்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!*

குகன் சென்னியப்பன் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் த்ரில்லர் படமான ’வெப்பன்’ மே மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

ஒளிப்பதிவாளர் பிரபு ராகவ் பேசியதாவது,..

“இந்த வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. சத்யராஜ் சார் லெஜெண்ட்! வசந்த்ரவி சார், தான்யா ஹோப் இவர்களுடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி. ராஜீவ் மேனன் சாருக்கு பிரேம் வைத்தது என்னுடைய பாக்கியம். படத்தில் என்னுடன் வேலைப் பார்த்த எல்லோருக்குமே நன்றி!”.

விஎஃப்எக்ஸ் மேற்பார்வையாளர் கோகுல், “படத்தின் தயாரிப்பாளர் மன்சூர் சாருக்கும் இயக்குநர் குகன் சாருக்கும் நன்றி. நிறைய சிஜி பணிகள், கரெக்‌ஷன் செய்திருக்கிறோம்.

புதிய டெக்னாலஜி, ஏஐ உபயோகப்படுத்தி இருக்கிறோம். நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டோம். சிறந்த பணியை கொடுத்திருக்கிறோம் என்ற நம்பிக்கை உண்டு. நீங்கள் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.

தயாரிப்பாளர் தனஞ்செயன்..

“சமூகத்திற்கு தேவையான கருத்தோடு படம் வந்திருக்கிறது என்பது மகிழ்ச்சி. இந்தப் படத்திற்கு பிறகு ‘ராக்கி’ வசந்த்ரவி என்ற பட்டம் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். படத்தை சரியான முறையில் பார்வையாளர்களிடம் கொண்டு சென்று வெற்றிப் பெற செய்யுங்கள். ஆக்‌ஷன் – எண்டர்டெயினராக படம் அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. வாழ்த்துகள்!”.

கலை இயக்குநர் சுபேந்தர்..

”இந்த படத்தில் வாய்ப்பு கொடுத்த இயக்குநர் குகன் சாருக்கு நன்றி. எல்லோருமே சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்தார்கள்”.

எடிட்டர் கோபி..

“சூப்பர் ஹூயூமன் கான்செப்ட்டோடுதான் இந்தப் படம் வந்திருக்கிறது. படப்பிடிப்பு முடித்த பின்னர்தான் இந்த படத்தையே நான் பார்த்தேன். வழக்கமான நக்கல், நையாண்டி எதுவும் இல்லாத இளமையான சத்யராஜ் சாரை இந்தப் படத்தில் பார்க்கலாம். விஷூவலாக படம் நன்றாக இருக்கும். தமிழ் சினிமாவில் இது அடுத்தக் கட்டத்திற்கான நகர்வு ‘வெப்பன்’. வித்தியாசமான ஜானரில் படம் உங்களுக்கு புது அனுபவம் கொடுக்கும்”.

இயக்குநர் கார்த்திக் யோகி..

“இயக்குநர் குகன், வசந்த் ரவி ஆகியோர் எனது நண்பர்கள். படம் நிச்சயம் வெற்றி பெறும். வாழ்த்துகள்!”.

இயக்குநர் அஸ்வின்,..

“குகன், நான், கார்த்திக் யோகி மூன்று பேருமே நாளைய இயக்குநர் சமயத்தில் இருந்தே நண்பர்கள். குகனுக்கு இந்த படம் வெற்றி பெற வேண்டும்”.

இயக்குநர் எழில், “சினிமாவை நேசிக்க கூடிய தயாரிப்பாளர்களின் படம் இது என்று சொல்லலாம். செட் எல்லாமே ‘பாகுபலி’ படத்திற்கு இணையாக பிரம்மாண்டமாக இருந்தது. படம் நன்றாக வந்திருப்பதாக சொன்னார்கள். இப்போது தமிழ் சினிமாவுக்கு படம் வெற்றி அடைந்து மிகப்பெரிய நம்பிக்கை கொடுக்க வேண்டும்”.

இயக்குநர் ஆர்.வி. உதயகுமார்..

“விஜயகாந்த் vs சத்யராஜ் என்று போட்டி ஆரோக்கியமாக இருந்த காலம் அது. அப்போதிருந்து இப்போது வரை சத்யராஜ் கலக்கி வருகிறார். அவர் பல இயக்குநர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

‘வெப்பன்’ படத்தின் போஸ்டர், டிரெய்லர் வித்தியாசமாக இருக்கிறது. முதல் படத்திலேயே இப்படி ஒரு ஜானரை இயக்குநர் முயற்சி செய்திருப்பது பாராட்டுதலுக்குரியது. தொழில்நுட்ப குழுவினருக்கும் படத்திற்கும் வாழ்த்துக்கள்! “.

ஸ்டண்ட் இயக்குநர் சுதீஷ், “பட்ஜெட் பற்றி யோசிக்காமல் படம் செய்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. நிறைய ஆக்‌ஷன் இருந்தாலும் அதைப்பற்றி எல்லாம் யோசிக்காமல் செய்த சத்யராஜ் சாருக்கு நன்றி. வசந்த் ரவி 100% சிறப்பாக வர வேண்டும் என்று முழு ஒத்துழைப்பு கொடுத்தார். உங்கள் எல்லோருடைய ஆதரவும் வேண்டும்”.

நடிகர் மைம் கோபி, “இயக்குநர் குகன் திறமைசாலி. சத்யராஜ் அண்ணன் சிறப்பாக நடித்திருக்கிறார். அவருடன் சேர்ந்து நடித்தது மகிழ்ச்சி. பிரம்மாண்டமான படமாக இது இருக்கும். உங்கள் ஆதரவு தேவை!”

படத்தின் கதாநாயகி தான்யா ஹோப் பேசியதாவது, “இந்தப் படத்தில் நான் வேலை செய்ததை என்னுடைய அதிர்ஷ்டமாக நினைக்கிறேன். படத்தில் வேலை செய்த அனைவருக்கும் நன்றி, வாழ்த்துகள்!”

நடிகர் வசந்த் ரவி..

“தமிழில் சூப்பர் ஹூ்யூமன் கதைகளை எடுத்து செய்வது என்பது சாதாரண விஷயம் கிடையாது. அதை இயக்குநர் குகன் விரும்பி செய்திருக்கிறார். சின்ன வயதில் இருந்தே நிறைய காமிக்ஸ் கதைகளை அவர் படித்து வளர்ந்ததால் சினிமாவில் அதை செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டு அதற்கான முதல்படியாக ‘வெப்பன்’ படத்தை எடுத்திருக்கிறார்.

இந்த மாதிரியான படங்களுக்கு பெரிய பட்ஜெட் தேவைப்படும். அதை செய்து கொடுத்த மில்லியன் ஸ்டுடியோவுக்கு நன்றி. படத்தின் டிரெய்லரை நெல்சன் சாரிடம் இரண்டு நாட்களுக்கு முன்பு காட்டினேன். ‘டிரெய்லர் ரொம்ப நல்லாருக்கு. இதுபோன்ற ஃபேண்டஸி ஆக்‌ஷன் படம் வந்து ரொம்ப நாள் ஆச்சு என்றார்.

’ராக்கி’ படத்தில் பாரதிராஜா சாருடன் நடித்தேன். பின்பு, ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினி சாருடன். அவர்களிடம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேனோ அதேபோலதான், சத்யராஜ் சாரிடமும் நிறையக் கற்றுக் கொண்டேன்.

மனதில் இருக்கும் எதையும் வெளிப்படையாக சொல்லி விடுவார். அவர் எவ்வளவோ படங்கள் நடித்தி்ருந்தாலும் இந்த படம் அவரது கரியரில் மறக்க முடியாததாக இருக்கும். அவருடன் இணைந்து பணிபுரிந்தது மகிழ்ச்சி. தான்யா இதுவரை நடித்த படங்களிலேயே தனக்குப் பிடித்த படமாக ‘வெப்பன்’தான் சொன்னார்.

நான் எவ்வளவோ ஜானர்களில் படங்கள் செய்து இருந்தாலும் சூப்பர் ஹூயூமன் என்பது புது ஜானர். ஹாலிவுட் படங்களைப் போல இந்தப் படத்தைப் பாருங்கள். இது ப்ரீகுவல்தான். குகன் இந்த கதைக்கு ஒரு யுனிவர்ஸே வைத்துள்ளார். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்” என்றார்.

நடிகர் சத்யராஜ்,…

“திரையில காட்டுவதை விட, தரையில வீரத்தைக் காட்டுவதுதான் சூப்பர் ஹீரோ. இந்த மாதிரி படத்திற்கு அதிக பட்ஜெட் தேவைப்படும்.

படத்தின் கதையை நம்பி மட்டுமே இவ்வளவு பட்ஜெட் தயாரிப்பாளர் மன்சூர் செய்துள்ளார். என் நண்பர் விஜயகாந்த்திற்கு ‘வானத்தைப் போல…’ என்ற அற்புதமான பாட்டைக் கொடுத்தவர் ஆர்.வி. உதயகுமார். அவருக்கு நன்றி. இந்தப் படத்தின் இரண்டு ஹீரோக்களாக நான் நினைப்பது தயாரிப்பாளர் மன்சூரையும் இயக்குநர் குகனும்தான்.

தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படம் ரொம்ப ஸ்டிராங்க். கட்டப்பா போல இந்தப் படத்திலும் என்னுடைய கதாபாத்திரம் காலத்தால் அழியாத ஒன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். படம் வெற்றிப் பெற வாழ்த்துகள்!”.

Like Kattappa character Weapon movie will stand says Sathyaraj

More Articles
Follows