மக்களை சிந்திக்க விடாத பழமைவாதிகள்.; ‘அயலி’ தயாரிப்பாளர் குஷ்மாவதி ஆவேசம்

மக்களை சிந்திக்க விடாத பழமைவாதிகள்.; ‘அயலி’ தயாரிப்பாளர் குஷ்மாவதி ஆவேசம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அண்மைக்காலமாக வரும் வெப் சீரிஸ் என்று சொல்லப்படுகிற இணைய தொடர்களில், தணிக்கை இல்லை என்கிற சுதந்திரத்தை மட்டும் சாதகமாக எடுத்துக் கொண்டு செயற்கையான ஒரு பரபரப்பு ஏற்படுத்துவதற்காக அதீத வன்முறை, பாலுணர்ச்சி மிகுந்து பார்ப்பவர்கள் முகம் சுழிக்கும்படியான காட்சிகள் வசனங்கள் என்று உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறார்கள்.

ஆனால் இவற்றுக்கு மத்தியில் அண்மையில் வந்த ‘அயலி’ என்கிற இணைய தொடர் ஒரு மக்களுக்கான தொடராக மாறி பார்த்தவர்கள் பாராட்டி அடுத்தவர்களுக்கு தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து பரிந்துரைக்கும் படியான ஒரு தொடராக வெற்றி பெற்றுள்ளது.

இந்தத் தொடர் இணைய வழியை நோக்கி வெகுஜன மக்களை ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டிருந்ததே இந்தச் சிறப்புக்குக் காரணம்.இது ஜீ5 தமிழில் வெளியானது.

தயாரிப்பாளர் எஸ். குஷ்மாவதி என்கிற பெண்மணி இதைத் தனது ‘எஸ்ட்ரெல்லாஸ் ஸ்டோரீஸ்’ (Estrella stories) நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளார் என்பது கூடுதல் பெருமை.

பெங்களூருக் காரரான இவர், தமிழில் கலாச்சார மண்வாசனை கொண்ட கதையைப் புரிந்து கொண்டு இதைத் தயாரிக்க முன் வந்ததற்காகப் பலராலும் பாராட்டப்படுகிறார்.

பொறுப்பின்றி எடுக்கப்படும் செயற்கையான பாவனை கொண்ட தொடர்களில் இருந்து மாறுபட்டு ஆண்களும் பெண்களும் குடும்பத்தினரும் பார்க்கும்படியான ஒரு இணையத் தொடராக அயலி புகழ்பெற்று பாராட்டுகளைக் குவித்து வருகிறது.

இந்தியச் சூழலில் பெண்களுக்கான கல்வி மறுக்கப்படுவதை, புறக்கணிக்கப்படுவதை, அலட்சியப்படுத்தப்படுவதை பெரும்பாலான பெண்கள் தங்கள் வாழ்க்கையில் சந்தித்து வந்துள்ளனர்.

அந்தக் கசப்பான அனுபவத்தைக் கடந்து விட்டுத் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எனவே இந்தத் தொடரைப் பார்க்கும் பெண்கள் அனைவருக்கும் இது தங்கள் வாழ்க்கையுடன் தொடர்பு படுத்திக் கொள்ளும் ஒன்றாக மனநெருக்கம் கொண்டுள்ளது.

அதனால் தான் இவ்வளவு பெரிய வெற்றி பெற்றுள்ளது என்று கூற வேண்டும். பார்ப்பவர்கள் எண்ணங்களில் ஒரு செயலி போல் தூண்டத்தக்கது. இயங்கத்தக்கது தான் இந்த ‘அயலி’
அப்படிப்பட்ட இந்த அயலி தொடரின் வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் ஒரு வெற்றி மகிழ்வு பகிர்வு என்ற வகையில் ஒரு சந்திப்பு நிகழ்வு சென்னையில் நட்சத்திர ஓட்டலில் நடந்தது.

அதில் இயக்குநர் பாரதிராஜா கலந்துக் கொண்டு சிறப்பித்தார். அவருடன் இயக்குநர்கள் பாண்டியராஜ், சுசீந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டார்கள். மூவரும் தேசிய விருது பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

‘அயலி’ தொடரில் நடித்த நடிப்புக் கலைஞர்களுக்கும் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் சிறப்பு விருந்தினர் இயக்குநர் பாரதிராஜா நினைவுக் கேடயங்களை வழங்கினார்.

அயலி

இவ்விழாவில் பேசிய தயாரிப்பாளர் எஸ். குஷ்மாவதி,

முதலில் அயலி தொடரை தயாரிக்க தனக்கு வாய்ப்பளித்தற்கு Zee5 நிறுவனத்திற்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

மேலும் அவர் பேசும் போது,

” இந்தத் தொடரை எடுத்து இருக்கும் இயக்குநர் இப்படியும் கதை சொல்லலாம் என்ற முத்திரையைப் பதிந்துவிட்டார். பெண்ணியம் சார்ந்த தொடரை ஒரு பெண்ணான நான் தயாரிக்க எனக்கு வாய்ப்பளித்தற்கு Zee5-க்கு நன்றி கூறுகிறேன்.

மேலும் அயலி போன்ற தொடரைத் தயாரித்ததற்காக மிகவும் பெருமைப்படுகிறேன். அயலி தொடரை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்த மீடியா மற்றும் பத்திரிகை நண்பர்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும் .

1990களில் புதுக்கோட்டை மாவட்டத்தின் ஓரத்தில் இருக்கும் வீரப்பண்ணை என்னும் கிராமத்தில் நிகழும் கதையே இந்த அயலி.

இந்த கிராம மக்கள் பல நூறு ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கும் சம்பிரதாயங்களையும் கட்டுப்பாடுகளையும் கைவிடாமல் வாழ்கின்றனர். அங்கிருக்கும் பழமை வாதிகள் மக்களை வேறு எதையும் சிந்திக்க விடாமல் செய்கிறார்கள்.

பெண்கள் வயதுக்கு வந்துவிட்டால் படிக்கக் கூடாது, கோயிலுக்குள் செல்லக் கூடாது, உடனே திருமணம் செய்ய வேண்டும் என்றெல்லாம் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள். அதையும் மீறி 13 வயதுச் சிறுமி தமிழ் (தமிழ்ச் செல்வி) படிக்க நினைக்கிறாள். தன்னைப் பற்றி மட்டும் யோசிக்காமல், தன் சக தோழிகளின் வாழ்க்கையிலும் ஒளியேற்ற ஆசைப்படும் தமிழின் கனவு என்ன ஆனது என்பதே கதை.

ஒரு சமூகம் என்பது அதில் உள்ள பெண்களைச் சார்ந்தது, அப்பெண்ணும் படித்தால் மட்டுமே அந்தச் சமூகம் வளரும் என்ற கருத்தை அழகாக, ஆணித்தரமாக, யாரையும் புண்படுத்தாமல் அனைவருக்கும் புரியுமாறு சொன்னதில் இயக்குநர் முத்துக்குமார் வெற்றி பெற்றிருக்கிறார் .

தொடரின் ஒவ்வொரு காட்சியையும் ரசிக்ககூடியதாக காட்சியமைத்துள்ளார் ஒளிப்பதிவாளர் ராம்ஜி. அவர்களுக்குப் பாராட்டுக்களும் நன்றிகளும்.
இத்தொடரில் நடித்த அபி நட்சத்திரா, அனுமோல், அருவி மதன், சிங்கம்புலி, TSR, லிங்கா, லவ்லின், காயத்திரி, தாரா மற்றும் இதில் நடித்த அனைவருக்கும் பாராட்டுக்கள்.

அனைவரும் அவர்களின் கதாபாத்திரத்தை நேர்த்தியாக, எங்கும் மிகைப்படுத்தாமல், உணர்வு பூர்வமாக நடித்ததே இத்தொடரின் வெற்றிக்கு காரணம்” என்றார்.

ஒரு தயாரிப்பாளராக இருந்து கொண்டு தான் தயாரித்த படைப்பில் பணியாற்றிய அனைவரையும் சமமாக மதித்து உரிய அங்கீகாரம் கொடுத்துப் பாராட்டியது படக்குழுவினரை நெகிழ வைத்தது.

நிகழ்ச்சியில் இயக்குநர் பாண்டிராஜ் பேசும்போது,

“இந்த கூட்டு முயற்சியில் அனைவரும் சிறப்பாகப் பணியாற்றி இருந்தார்கள். இயக்குநரைப் பாராட்டினால் அனைவரையும் பாராட்டினது போலத்தான்.அனைவரையும் பாராட்டினால் இயக்குநரைப் பாராட்டியது போல்தான்.

இதில் பணியாற்றி இருக்கும் தொழில்நுட்ப கலைஞர்கள் நடிகர்கள் என ஒவ்வொருவரைப் பற்றியும் சொல்லிக் கொண்டே போகலாம்.

மற்ற படங்களில் காமெடியனாக நடித்தவர்களைக் கூட இதில் கேரக்டர் ஆகப் பயன்படுத்தியிருக்கின்றார்கள்.

பார்த்தவர்களுக்கு நல்ல அனுபவமாக இருந்தது. கேமராமேன், ஆர்ட் டைரக்டர், எடிட்டர் என எல்லாருமே சிறப்பாகப் பணியாற்றி இருக்கிறார்கள். 55 நாட்களில் இந்தத் தொடரை முடித்து இருக்கிறார்கள். கிட்டத்தட்ட இரண்டு படத்துக்கான கால அளவு. இவ்வளவு விரைவாக முடித்தது சரியான திட்டமிடல் இருந்ததால்தான் சாத்தியப்பட்டிருக்க வேண்டும்.

இதைப் பார்த்துவிட்டு என் உதவியாளர்களிடம் எல்லாம் நாம் பார்க்கச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். இந்தப் பட குழுவில் இருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். வெளியிட்ட zee5 நிறுவனத்திற்கும் வாழ்த்துக்கள்” என்றார்.

இயக்குநர் பாரதிராஜா பேசும்போது,

” பூப்போல பொண்ணு பூப்படஞ்சா அவளைப் பூட்டுங்க வச்சி சாரைக்குள்ள “என்று ஒரு பாட்டு இருக்கிறது. இந்த சின்ன விஷயத்தை பெரிதாக்கி கொண்டு சமைந்த பெண்களை நமது சமுதாயத்தில் வெளியே விடுவதில்லை. அதையெல்லாம் உடைக்க வேண்டும் என்று தான் நான் நிறைய படங்களில் என்னால் முடிந்ததைச் சொல்லி இருக்கிறேன்.

என்னுடைய படங்களில் பெண்கள் பூப்படைவதும் பூப்படைந்த பெண்கள் வெளியே வருவதையும் சொல்லி இருப்பேன்.

பல படங்களில் பெண்ணுரிமை பேச வைத்திருப்பேன். இந்தச் சிறப்பான தொடரை இயக்கிய இயக்குநர் முத்துக்குமாருக்கும் இந்தக் கதையை ஒப்புக்கொண்டு பெங்களூரில் இருந்து வந்து தயாரித்துள்ள தயாரிப்பாளர் குஷ்மாவதிக்கும் பணியாற்றிய கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்” என்றார்.

அயலி

Producer Khusmavathi speech at Ayali success meet

ஒத்த கருத்துடைய இருவர் உலகத்தில் இல்லை..; ‘பியூட்டி’-யில் இணைந்த தமிழக தலைமை செயலாளர் இறையன்பு

ஒத்த கருத்துடைய இருவர் உலகத்தில் இல்லை..; ‘பியூட்டி’-யில் இணைந்த தமிழக தலைமை செயலாளர் இறையன்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குநர் கோ.ஆனந்த் சிவா எழுதி இயக்கியிருக்கும் படம் ‘பியூட்டி’. ஓம் ஜெயம் தியேட்டர் சார்பில் ஆர்.தீபக் குமார் தயாரித்திருக்கும் இப்படத்தில் ரிஷி நாயகனாக நடிக்க நாயகியாக கரீனா ஷா நடித்திருக்கிறார்.

இவர்களுடன் காயா கபூர், சிங்கமுத்து, ஆதேஷ் பாலா, மனநல மருத்துவர் ஆனந்தன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தை தயாரித்திருக்கும் ஆர்.தீபக் குமார் படத்திற்கு ஒளிப்பதிவும் செய்திருக்கிறார். இலக்கியன் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்களை தமிழக தலைமை செயலாளர் மற்றும் எழுத்தாளர் வெ.இறையன்பு மற்றும் தமிழ்முருகன் எழுதியுள்ளனர்.

சங்கர்.கே படத்தொகுப்பு செய்ய, கூல் ஜெயந்த் நடனக் காட்சிகளை வடிமைத்துள்ளார். சண்டைக்காட்சிகளை ஃபயர் கார்த்திக் வடிவமைக்க, கிளாமர் சத்யா பி.ஆர்.ஓ-வாக பணியாற்றுகிறார்.

இப்படத்தின் இயக்குநர் கோ.ஆனந்த், கே.பாக்யராஜின் பாக்யா பத்திரிகையில் பல வருடங்கள் பணியாற்றியதோடு, கே.பாக்யராஜ் உள்ளிட்ட பல இயக்குநர்களிடம் உதவி மற்றும் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

தனது முதல் படத்தை முழுமையான கமர்ஷியல் திரைப்படமாக இயக்கியிருந்தாலும், சமூகத்திற்கு தேவையான மிக முக்கியமான மெசஜையும் இப்படத்தில் சொல்லியிருக்கிறார்.

பியூட்டி

இப்படம் குறித்து கூறிய இயக்குநர் கோ.ஆனந்த் சிவா…

“முற்றிலும் வித்தியாசமான, எதிர்மறை எண்ணம் கொண்ட ஒருவருடன் நான் பழக நேர்ந்த பொழுது, அவரின் செயல்பாடுகள் என்னைப் பெரிதும் பாதித்தன… அவரிடம் நான் பார்த்த பல அதிர்ச்சிகரமான சம்பவங்களை அடிப்படையாக வைத்து நான் எழுதி, இயக்கியிருக்கும் படம் இந்த ‘பியூட்டி’

”ஒத்தக் கருத்துடைய இருவர் உலகத்தில் இல்லை” என்று சொல்லப்படுவதுண்டு, மதுவில் கூட பலவிதமான மணம், நிறம், சுவை கொண்ட மது வகைகள் இருக்கின்றன…

போதைக்காக என்றாலும் அவரவர்களுக்குப் பிடித்தமான மணம், நிறம், சுவையைத்தான் ஒவ்வொருவரும் விரும்புகிறார்கள், இது எல்லோருக்குமான பொதுவான ரசனை. என் கதாநாயகனுக்கும் அப்படியொரு விருப்பம் இருக்கிறது. ஆனால், நாயகியின் விருப்பம் முற்றிலும் வேறாக இருக்கிறது.

இதனால், அழகான காதலில் சிக்கல்கள் உருவாகி, பெரிதாகி ஆபத்தில் போய் முடிகிறது. அந்த இளம் காதலர்களின் வாழ்க்கை என்னவாகிறது? என்பது சண்டை மற்றும் சேஸிங் காட்சிகளுடன் பரபரப்பான பொழுது போக்குப் படமாக உருவாக்கப்பட்டுள்ளது.

கதைக்குப் பொருத்தமான கதாபாத்திரமாய் மாறியிருக்கும் ரிஷியும், அறிமுகமாக இருந்தாலும் கதையின் தன்மையை உணர்ந்து நடித்திருக்கும் நாயகி கரீனா ஷாவும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

கதைக்கும், கதை நடக்கும் காலகட்டத்துக்கும் ஏற்ப ஒளிப்பதிவு செய்திருக்கும் ஆர்.தீபக் குமாரும், பாடல்களுக்கு மட்டுமல்லாமல் பின்னணி இசையிலும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தியிருக்கும் இசையமைப்பாளர் இலக்கியனும் ’பியூட்டி’ யின் வெற்றியில் முக்கியமான பங்கு வகிக்கிறார்கள்.

‘பியூட்டி’யை பொறுப்புடன் தன் தோளில் தாங்கிக் கொண்டு உலகமெங்கும் கொண்டு சேர்த்துவிடும் உத்வேகத்தோடு பரபரப்பாக இயங்கும் தயாரிப்பாளரும் ஒளிப்பதிவாளருமான ஆர்.தீபக் குமார் அவர்களின் முயற்சியால் ’பியூட்டி’ நிச்சயமாக ஒரு வெற்றிப் படமாக அமையும்.” என்றார்.

இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி மக்களிடம் வரவேற்பு பெற்றிருப்பதோடு, படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், வரும் மார்ச் 10 ஆம் தேதி ‘பியூட்டி’ திரைப்படம் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

பியூட்டி

Chief Secretary of TN Govt Irai Anbu wrote songs in Beauty

‘கலாபக் காதலன்’ உடன் இணைந்த ஹன்சிகா..; மிரட்டும் பிக்பாஸ் ஆரி

‘கலாபக் காதலன்’ உடன் இணைந்த ஹன்சிகா..; மிரட்டும் பிக்பாஸ் ஆரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

’96’, ’ரோமியோ ஜூலியட்’, ’கலாப காதலன்’ போன்ற குறிப்பிடத்தக்க தமிழ்ப் படங்களை மெட்ராஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.

தற்போது, அன்ஷு பிரபாகர் ஃபிலிம்ஸ், ஹன்சிகா மோத்வானி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘மேன்’ படத்தைத் தயாரித்து வருகிறது.

இகோர் (’கலாப காதலன்’ படப்புகழ்) இயக்கி வரும் இப்படத்தில் ‘பிக்பாஸ்’ புகழ் ஆரி அர்ஜுனன் முதல்முறையாக வில்லனாக நடிக்கிறார்.

கலாபக் காதலன்

இந்தப் படத்துக்கு ‘மேன்’ என்று தலைப்பு வைத்ததன் காரணத்தைப் பகிர்ந்துகொண்ட இயக்குநர் இகோர்…

“ஆண்மை என்பது ஒரு அகங்காரக் கூறாக மாறிவிட்டது. இது ஒரு போலி அடையாளத்தை உருவாக்கியுள்ளது.

மேலும், இது பெண்களை அடக்கி, ஆதிக்கம் செலுத்துவது போன்ற ஒரு பிம்பத்தையும் கட்டமைத்துள்ளது. இந்த இயற்கைக்கு எதிரான ஒரு பெண்ணின் கிளர்ச்சிப் போரை உள்ளடக்கியதே ‘மேன்’ என்ற தலைப்புக்குக் காரணம்.

ஹன்சிகா மோத்வானி இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இதற்கு முன்பு பார்த்திராத ஹன்சிகாவை ரசிகர்கள் திரையில் பார்த்து ரசிப்பார்கள்.

ஆரி அர்ஜுனன் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார், அவருடைய அர்ப்பணிப்பு மற்றும் நடிப்பு மிகவும் அசாதாரணமானது. அத்தகைய எதிர்மறையான பாத்திரத்தில் நடிக்க அவருக்கு நிறைய தைரியம் தேவை” எனவும் கூறினார்.

கலாபக் காதலன்

’மேன்’ திரைப்படம் சீட்டின் நுனியில் பார்வையாளர்களை அமர வைக்கும் வகையிலான சைக்காலஜிக்கல் த்ரில்லர் திரைப்படம். ’96’ படத்தில் உதவி ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்த மணிகண்டன் ஒளிப்பதிவு செய்கிறார் மற்றும் ஜிப்ரான் இசையமைக்கிறார்.

ஆரம்பம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை திரையில் ஒட்ட வைக்கும் திரைக்கதையை சரண்யா பாக்யராஜ் எழுதியுள்ளார்.

பொன் பார்த்திபன் படத்திற்கு மிக அழுத்தமான வசனங்களை எழுதியுள்ளார். படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளை ஸ்டண்ட் இயக்குனர்களான நைஃப் நரேன் மற்றும் பிரபு ஆகியோர் கையாண்டுள்ளனர்.

இயக்குநர் இகோர், சிக்மண்ட் பிராய்டின் கோட்பாட்டின் கூறுகளை உள்ளடக்கிய ‘ஆண்மை’ என்ற அகங்காரக் கருத்துக்குப் பின்னால் உள்ள உளவியலை வெளிக்கொண்டு வர முயற்சித்துள்ளார்.

தற்போது, ‘மேன்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கலாபக் காதலன்

Igore directorial Hansika starrer Man

நடிகர் சங்க கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயர்.; மீசை ராஜேந்திரன் கோரிக்கை

நடிகர் சங்க கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயர்.; மீசை ராஜேந்திரன் கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று மார்ச் 8 மகளிர் தினத்தை முன்னிட்டு மார்க் ஆண்டனி படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது.

இதற்கான விழாவில் நடிகர் விஷால், எஸ் ஜே சூர்யா உள்ளிட்ட பல கலைஞர்கள் கலந்து கொண்டனர். இதனையடுத்து நடிகர் விஷால் செய்தியாளர்களை சந்திக்கும் போது.. “விரைவில் விஜயகாந்துக்கு பாராட்டு விழா நடத்த திட்டமிட்டுள்ளோம்” என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் பிரபல நடிகர் மீசை ராஜேந்திரன் இதுபற்றி தெரிவித்துள்ளதாவது..

“விஜயகாந்த் தமிழ் சினிமாவில் பல நடிகர்களை உருவாக்கியவர். பல இயக்குனர்களை உருவாக்கியவர். நடிகர் சங்க கடனை அடைத்தவர்.

எல்லோருடைய மனதிலும் இடம் பிடித்தவர். ஆகவே, பாராட்டு விழாவோடு, நடிகர் சங்க புதிய கட்டிடத்திற்கு கேப்டன் விஜயகாந்த் பெயரை வைக்க வேண்டும்” என நடிகர் மீசை ராஜேந்திரன் கோரிக்கை வைத்துள்ளார்.

New Building of Nadigar Sangam should be named Vijayakanth says Meesai Rajendran

தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படப்பிடிப்பில் இணைந்த ரஜினி பட நடிகர்

தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படப்பிடிப்பில் இணைந்த ரஜினி பட நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கேப்டன் மில்லர்’.

இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக தெலுங்கு நடிகர் சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் மற்றும் நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளனர்.

தனுஷின் மூத்த சகோதரனாக சிவராஜ்குமார் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தின் படப்பிடிப்பு குற்றாலத்தில் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், சிவராஜ்குமார் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.

மேலும், சமீபத்தில் ‘ஜெயிலர்’ படத்தின் மங்களூர் ஷெட்யூலில் சிவராஜ்குமார் தனது பகுதிகளை முடித்தார் என்பது குறிப்பிட்டதக்கது.

சிவராஜ்குமார்

Shivarajkumar joins the shoot of ‘Captain Miller’

ஷாருக்கானின் ‘ஜவான்’.; ஜகா வாங்கிய விஜய்.; RRR பட நடிகரை தேடிய அட்லி

ஷாருக்கானின் ‘ஜவான்’.; ஜகா வாங்கிய விஜய்.; RRR பட நடிகரை தேடிய அட்லி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷாருக்கான், நயன்தாரா, விஜய்சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜவான்’.

இப்படத்தை அட்லி இயக்க ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

அனிருத் இசையமைக்கிறார்

இதில் உள்ள ஒரு கெஸ்ட் ரோலில் விஜய்யை நடிக்க வைக்க திட்டமிட்டாராம் அட்லி.. ஆனால் விஜய் மறுக்கவே தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனிடம் பேசினாராம்.

அவரும் மறுத்த நிலையில் ஆர்ஆர்ஆர் பட நடிகர் ராம்சரணிடம் அட்லீ பேசி வருவதாகக் கூறப்படுகிறது.

ஜவான்

director atlee has approached ramcharan to play a cameo in jawan

More Articles
Follows