சமுத்திரக்கனி மற்றும் பிரபுதேவாவை இயக்கும் பார்த்திபன்

சமுத்திரக்கனி மற்றும் பிரபுதேவாவை இயக்கும் பார்த்திபன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

parthibanபார்த்திபன் இயக்கத்தில் ஐஸ்வர்யா படு கவர்ச்சியாக நடித்து வெளியான படம் உள்ளே வெளியே.

கடந்த 1993ம் ஆண்டு வெளியான இப்படத்தின் இரண்டாவது பாகத்தை விரைவில் இயக்க முடிவு செய்திருப்பதாக பார்த்திபன் அறிவித்தார் என்பதை பார்த்தோம்.

இப்படத்தின் முக்கிய கேரக்டரில் சமுத்திரக்கனி நடிக்கவிருக்கிறாராம்.

இவர்களுடன் மம்தா மோகன்தாஸ், ஆடுகளம் கிஷோர், எம்.எஸ்.பாஸ்கர், ரோபோ சங்கர் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இப்படத்தைத் தொடர்ந்து, பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளாராம் பார்த்திபன்.

ஏற்கெனவே ஜேம்ஸ் பாண்டு’, `சுயம்வரம்’ ஆகிய படங்களில் பார்த்திபன் மற்றும் பிரபுதேவா இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் ஆண்டனி பெயரில் சமந்தாவை லவ் பண்ணும் விஜய் தேவரகொண்டா

விஜய் ஆண்டனி பெயரில் சமந்தாவை லவ் பண்ணும் விஜய் தேவரகொண்டா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mahanati vijayபழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படம் தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரிலும், தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரிலும் உருவாகி வருகிறது.

இதில் சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க ஜெமினி கணேசனாக துல்கர் சல்மான் நடித்துள்ளனர்.

இதன் பர்ஸ்ட் வெளியானவுடன் இவர்களின் மேக் அப்பை பலரும் பாராட்டினர்.

மேலும் சமந்தா, விஜய் தேவரகொண்டா, மோகன்பாபு, பிரகாஷ் உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர்.

மதுரவாணி என்ற பத்திரிகை நிருபராக நடிக்கிறார் சமந்தா.

இதனிடையில் விஜய் தேவரகொண்டாவின் போஸ்டரை வெளியிட்டனர்.

படத்தில் இவருடைய பெயர் விஜய் ஆண்டனியாம். இவரும் சமந்தாவும் படத்தில் காதலர்களாக வருகிறார்கள் எனத் தெரிய வந்துள்ளது.

வருகிற மே 9ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.

Vijay Deverakonda as Vijay Antony romance with Samantha in Mahanati movie

mahanati

பிரியா வாரியரை இயக்குகிறாரா சூது கவ்வும் பட இயக்குனர்..?

பிரியா வாரியரை இயக்குகிறாரா சூது கவ்வும் பட இயக்குனர்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nalan kumarasamyஒரு அடார் லவ் என்ற மலையாள படத்தில் இடம் பெற்ற மாணிக்க மலராய பூவி என்ற பாடலின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் ப்ரியா வாரியர்.

இந்த படமே இன்னும் வெளியாகாத நிலையில் இவர் செய்த புருவ அசைவுகள் படத்திற்கு பெரும் பப்ளிசிட்டியாக அமைந்து விட்டது.

எனவே படத்தை மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியிட உள்ளனர்.

இதனால் ப்ரியா வாரியரை தங்களது படத்தில் நடிக்க வைக்க பல இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் போட்டி போட ஆரம்பித்து விட்டனர்.

இந்நிலையில், சூது கவ்வும், காதலும் கடந்து போகும் ஆகிய படங்களை இயக்கிய நலன் குமாரசாமி இயக்கத்தில் பிரியா நடிக்க போவதாக செய்திகள் வந்தன.

ஆனால் இதை டைரக்டர் நலன் குமாரசாமி மறுத்துள்ளார்.

இரண்டே நாட்களில் நடக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையில் வரலட்சுமி

இரண்டே நாட்களில் நடக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையில் வரலட்சுமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Varalakshmi fighting for tribal people in Velvet Nagaram movieமேக்கர்ஸ் ஸ்டூடியோஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண் கார்த்திக் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘வெல்வெட் நகரம்.’

இதில் முதல் முறையாக கதையின் நாயகியாக நடித்திருக்கிறார் வரலட்சுமி. இவருடன் மாளவிகா சுந்தர், ரமேஷ் திலக், அர்ஜெய், ‘துருவங்கள் பதினாறு’ புகழ் பிரகாஷ் ராகவன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

பகத்குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு, ‘அருவி’ படத்தின் படதொகுப்பாளர் ரேமாண்ட் டெரீக் க்ராஸ்தா எடிட்டிங் செய்கிறார். ‘கோலி சோடா 2’ புகழ் இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி இசையமைக்கிறார்.

இப்படத்திற்கு சண்டை பயிற்சி ‘துப்பறிவாளன்’ தினேஷ். இதற்கு திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் மனோஜ்குமார் நடராஜன்.

படத்தைப் பற்றி அவரிடம் கேட்டபோது,‘ கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஃபீமேல் சென்ட்ரிக் (female centric) திரைப்படம் இது.

சில ஆண்டுகளுக்கு முன் கொடைக்கானல் மற்றும் சென்னையில் நடைபெற்ற வெவ்வேறு உண்மை சம்பவங்களை தழுவி ஆக்சன் திரில்லராக உருவாக்கப்பட்ட படம் தான் ‘வெல்வெட் நகரம்’.

இதன் திரைக்கதை 48 மணி நேரத்தில் நடைபெறுவது போல் விறுவிறுப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது.

இதில் மதுரையில் களப்பணியாற்றும் பத்திரிக்கையாளராக வரலட்சுமி நடித்திருக்கிறார்.

கொடைக்கானலில் வசிக்கும் பழங்குடி இன மக்களுக்கு இழைக்கப்பட்ட ஒரு அநீதிக்கான ஆதாரத்தைத் தேடியும், அதன் முழு பின்னணியையும் பற்றி துப்பறிவதற்காக மதுரையிலிருந்து சென்னைக்கு வருகிறார் வரலட்சுமி.

இங்கு அவர் சந்திக்கும் எதிர்பாராத சம்பவங்களை விறுவிறுப்பான ஆக்சன் கலந்து சொல்லும் படமாக ‘வெல்வெட் நகரம்’ தயாராகியிருக்கிறது.

படத்தின் படபிடிப்பு சென்னை, கொடைக்கானல், மதுரை உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்றிருக்கிறது. இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது.’ என்றார்.

Varalakshmi fighting for tribal people in Velvet Nagaram movie

velvet nagaram varalaxmi

பியாண்ட் தி க்ளவுட்ஸ் படத்திற்காக தாராவி இளைஞராக மாறிய இஷான்

பியாண்ட் தி க்ளவுட்ஸ் படத்திற்காக தாராவி இளைஞராக மாறிய இஷான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Beyond the clouds movie news and release updatesஎந்த புதுமுக நடிகருக்கும் கிடைக்காதபெருமை, ‘பியாண்ட் த க்ளவுட்ஸ்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமாகும் நடிகர் இஷான் கட்டாருக்கு கிடைத்திருக்கிறது.

அது உலகப்புகழ் பெற்ற இயக்குநர் மஜீத் மஜிதியின் இயக்கத்தில் ஹிந்தி படத்தில் அறிமுகமாவது. அதனை பெற்றிருக்கும் இஷான் தன்னுடைய கனவு நனவாகியிருக்கும் சந்தோஷத்தில் இருக்கிறார்.

இந்த படத்தில் மாளவிகா மோகனன் என்ற புதுமுக நடிகையுடன் இஷான் அறிமுகமாகிறார்.

இந்த படத்தில் அமீர் என்ற கேரக்டரில் தாராவி பகுதியில் சுற்றித் திரியும் இயல்பான பையனாக நடித்திருக்கிறார் இஷான் கட்டார்.

பிரபலமானவராக இருந்தாலும், இந்த படத்தில் தாராவி பகுதியை சேர்ந்த பையனாக நடிக்கவேண்டியதிருந்ததால், இஷான் கட்டார், அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுடன் இணைந்து, பழகி, அவர்களுடன் நட்பு பாராட்டி, உண்மையாகவே அப்பகுதியை சேர்ந்த ஒரு வாலிபனாக அற்புதமாக நடித்திருக்கிறார்.

இப்படத்திற்காக தாராவி பகுதியில் வசிக்கும் இளைஞர் ஆகாஷ் என்பவரை இயக்குநர் மஜீத் மஜீதி தேர்ந்தெடுத்து இஷானுக்கு நண்பராக நடிக்க வைத்திருக்கிறார். அத்துடன் அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஏராளமானவர்கள் படத்திலும் தோன்றியிருக்கிறார்கள்.

ஆகாசும், இஷானும் நெருங்கிய நண்பர்களாக படத்தில் வருவதால், இயக்குநரின் கட்டளைப்படி இருவருமே படபிடிப்பு தளத்திற்கு பின்னாலும் ஒன்றாக சுற்றி வந்தனர். அவர்களின் இந்த பந்தம் திரையில் அற்புதமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

இதைப் பற்றி படக் குழுவினரிடம் கேட்ட போது,‘ இந்த படத்தில் இஷானின் நடிப்பிற்கு பின்னணியாக இருந்தது இயக்குநர் மஜீத் மஜிதியின் திரை பார்வை தான்.

இஷான் ஒவ்வொரு காட்சி படமாக்கப்படும் முன் அந்த காட்சியைப் பற்றி மிகவும் அக்கறையுடன் கேட்டு தெரிந்துகொண்டு, இயக்குநரின் எதிர்பார்ப்பை உள்வாங்கி நடித்திருக்கிறார்.

படப்பிடிப்பிற்கு முன்னரே இந்த படத்தில் நடிக்கவிருக்கும் தாராவி பகுதி இளைஞர்களுடன் இஷான் ஒன்றாக பழக ஆரம்பித்துவிட்டார்.

அவர்களுடன் பழகி அவர்களின் உலகம் எப்படி இயங்குகிறது? அவர்கள் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்? அவர்களின் உடல் மொழி, பேச்சு, பாவனை போன்றவற்றை உற்று கவனித்துக் கொண்டேயிருப்பார். குறிப்பாக ஆக்சன் காட்சிகளில் தாராவி பகுதியைச் சேர்ந்தவர்கள் எப்படி செயல்படுவார்கள்? என்பதை அறிந்து அதனை அப்படியே காட்சியில் பிரதிபலித்திருக்கிறார் இஷான்.

படப்பிடிப்பிற்கு முன்னரும், படப்பிடிப்பிற்கு பிறகு இஷானும் ஆகாசும் ஒன்றாகவே திரிவார்கள். படப்பிடிப்பிற்கு முன்னரே இஷானுக்கு, ஆகாஷ் ஒரு ராப்பர் என்று தெரிய வந்திருக்கிறது.

ராப் இசையில் பாடக்கூடிய திறமைப் பெற்றவர் என்பதை அறிந்ததும், அவரிடமிருந்து ஒரு சில பாடல் வரிகளை இவரும் கற்றிருக்கிறார். படத்தில் இஷான் குத்துச் சண்டை தெரிந்தவராக நடிக்கிறார். தனித்தனி திறமைகளுடன் இருக்கும் இருவரும் நண்பர்களாகி விட்டனர்.

இந்நிலையில் தன்னுடன் நடித்த ஆகாஷைப் பற்றி இஷான் பேசும் போது,‘ இந்த படத்திற்காக ஆகாஷை தேர்ந்தெடுக்கும் போது இவரும் இவரது நண்பர்களான ராகுல், நவீன் மற்றும் பால் ஆகியோர் தாராவி பகுதியில் சிறந்த ராப் கலைஞர்களாக இருந்தனர்.

இவர்களை இப்படத்திற்கு பைனல் ஆடிசன் போது சந்தித்தேன். இயக்குநர் மஜீத் சார், இவர்களுடன் என்னையும் வைத்து ஒரு டெஸ்ட் சூட் நடத்தினார். அப்போது சென்ஸ் என்ற கேரக்டரில் நடிக்கும் ஆகாஷ் சிறப்பாக நடித்தார். பிறகு அவர்களுடன் இணைந்து ராப் பாடலை கற்றுக் கொண்டே குத்துச்சண்டை போடுவதற்கும் பயிற்சி பெற்றோம்.

அதன் பின்னரே தாராவி பகுதியை அனைத்து பகுதிகளுக்கும் சென்று வந்தோம். அப்போது உண்மையிலேயே என்னுடைய அமீர் என்ற கேரக்டரை எனக்குள்ளேயே உருவாக்கிக் கொண்டேன்.

என்னைப் போன்றே அவர்களும் இசை மற்றும் நடனத்தின் மீது ஆர்வம் இருந்ததால் அனைவரும் ஒன்றாக கூடி பழக முடிந்தது. படப்பிடிப்பு முடிந் தபிறகும் தற்போது கூட நான் அவர்களுடன் தொடர்பில் இருக்கிறேன். சந்தித்து நட்பு பாராட்டுகிறேன்.’ என்றார்.

ஜீ ஸ்டுடியோ மற்றும் நாமா பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் பியாண்ட் தி க்ளவுட்ஸ் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதியன்று வெளியாகிறது.

Beyond the clouds movie news and release updates

beyond the clouds still

எதுக்குடா கிரிக்கெட்டு.? அதிகாரத்த சரிகட்டு; போட்டு தாக்கும் விஜய்

எதுக்குடா கிரிக்கெட்டு.? அதிகாரத்த சரிகட்டு; போட்டு தாக்கும் விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Lyricist Pa Vijays poem to support cauvery and to ban IPL Cricketகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டி ஒட்டு மொத்த தமிழகமே போராடி வருகிறது.

இருந்தபோதிலும் ஐபிஎல் போட்டிகள் நடந்தாலும் அதையும் பார்ப்போம் என சிலர் ரசிகர்கள் சொல்லி வருகின்றனர்.

ஆனால் ஐபிஎல் போட்டியை தற்காலிமாக இங்கே நடத்தக் கூடாது. மீறி நடத்தினால் போராட்டங்கள் செய்வோம் என்று தமிழ் உணர்வாளர்கள் எதிர்த்து வருகின்றனர்.

இதனால் இனி 2018ஆம் ஆண்டின் ஐபிஎல் போட்டிகள் சென்னையில் நடைபெற வாய்ப்பு இருக்காது என கூறப்படுகிறது.

இந்நிலையில் பாடலாசிரியர் பா விஜய் அவர்கள் ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு எதிராக ஒரு கவிதையை படித்து வீடியோ பதிவில் வெளியிட்டுள்ளார்.

அதில்…

தறிகெட்டுப்போன நாட்டுக்கு எதுக்குடா கிரிக்கெட்டு..
முதல்ல தரங்கெட்டுப் போன அதிகார வர்க்கத்த சரிகட்டு..!

சே..சே..னு கூட்டம் மிதப்புல மிதக்கலாம் சேப்பாக்காம்.
அத செங்கல் செங்கலா எங்க சிங்கக் கூட்டம் தூள் தூளாக்கும்..!

கடற்கரை ஓரத்த பூட்டி வச்சிப்புட்டியே காவலாளி..
புயல் காத்துக்கு பூட்டு போட்டவன் யாருடா புத்திசாலி..!

ஆட்டம் நடக்கட்டும் மட்டைய தூக்கி அடிப்பாய்ங்க..
எங்கப் பசங்க ஒருநாள் பாராளுமன்றத்தையே புடிப்பாய்ங்க..!

விளம்பரத்துல தன்னையே வித்தவனெல்லாம் வீரன்ற..
தேச எல்லையில செத்த எத்தன பேருக்கு இது தேவன்ற..!

ஒரே இந்தியா ஒரே ரத்தம்னு கூவுறியே..
அட காவிரிக்கு மட்டும் கட்டத்த மாத்தி தாவுறியே..!

ஆவட்டும் சாரே! ஆன வரைக்கும் ஊர ஏமாத்து..
எங்கப் பச்சத்தமிழனுக்கு புரிஞ்சு போச்சு உங்க பம்மாத்து..!

காவிரி எங்க கரிகாலனால தாண்டா ஆறாச்சு..
எங்க தொண்டைய மிறிச்சு தொண்டுனு சொல்லுற வாய் சேறாச்சு..!

காவிரில பல பேர் கால் கழுவ மட்டும்தான், கால் வச்சான்..
அப்புடி வீணான தண்ணியில விவசாயத் தமிழன்தான் நெல் வச்சான்..!

பால் குடிச்ச சிசுவோட கழுத்த நெறிச்ச பேய்க்கூட்டம்..
உங்கள விரட்டி அடிச்சு, வெளுக்கத் தாண்டா இந்தப் போராட்டம்..!

என்று எழுதியுள்ளார். இதை அவரே பாடல்போலவும், படித்துள்ளார்.

Lyricist Pa Vijays poem to support cauvery and to ban IPL Cricket

More Articles
Follows