‘நம்மவர் மோடி’ பைக் ரேலி & நிர்வாகிகள் நியமன கூட்டத்தால் போக்குவரத்து நெரிசல்

‘நம்மவர் மோடி’ பைக் ரேலி & நிர்வாகிகள் நியமன கூட்டத்தால் போக்குவரத்து நெரிசல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nammavar Modi Our Man Modi bike rally launch at Chennaiபிரதான் மந்திரி ஜன் கல்யாண்காரி யோஜனா பிரசார் பிரசார் அபியான் PMJKYPPA (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி) நடத்தும் ‘நம்மவர் மோடி’ இரு சக்கர வாகன ஊர்வலம் முன்னோட்டம்.

பிரதான் மந்திரி ஜன் கல்யாண்காரி யோஜனா பிரசார் பிரசர் அபியான் அமைப்பின் சென்னை மற்றும் காஞ்சிபுரம் நிர்வாகிகளை அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜெய் கணேஷ் அவர்கள் இந்த ‘நம்மவர் மோடி’ இரு சக்கர வாகன ஊர்வல முன்னோட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

இந்த நிகழ்வில் திரு. கண்ணன் கேசவன் காஞ்சிபுர மாவட்ட நிர்வாகி. திரு. செந்தில், திரு.பால்ராஜ், திரு.ஜீவரத்தினம் ஆகியோர் மத்திய சென்னை நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டனர்.

நம்மவர் மோடி எனும் இருசக்கர ஊர்வலத்தை அதன் தேசிய தலைவர் திரு.ஜெய் கோஷ் திவேதி கொடி அசைத்து துவங்கி வைத்தார்.

இந்த ஊர்வலம் முன்னோட்டம் சென்ற கேளம்பாக்கம் மற்றும் படூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது.

நம்மவர் மோடி இரு சக்கர வாகன ஊர்வலம் முன்னோட்டத்தின் நோக்கம்…

மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களை பற்றிய விழப்புணர்வை ஏற்படுத்திய பயனாளிகளை உருவாக்கும் PMJKYPPA (Tamilnadu & Puducherry) பிரிவை மக்களுக்கு அறிமுகப்படுத்தி PMJKYPPA (Tamilnadu & Puducherry) என்பது ஒரு இயக்கம். மக்களுக்கு தொண்டு செய்ய பாரத பிரதமரால் உருவாக்கப்பட்ட திட்டம். இது பாஜக.வின் கட்சி சார்ந்த திட்டமல்ல.

இந்த இயக்கமானது 4 மந்திரிகள், 7 பாராளுமன்ற உறுப்பினர்கள், ஓய்வு பெற்ற ஆட்சியர்கள் ஆகியோரை கொண்டு உருவாக்கப்பட்டது.

இந்த அமைப்பில் உள்ள மத்திய அரசின் திட்டங்களை நேரடியாக மக்களிடம் கொண்டு சேர்க்க திட்டமிட்டுள்ளோம்.

இந்த பைக் ரேலி செல்வதன் மூலம் மக்களின் கவனம் ஈர்க்கப்படும். இதன் மூலம் மத்திய அரசின் திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு வெகுஜன மக்களிடையே ஏற்படும்.

இதனை மக்கள் அறியும் போது அதை முழுமையாக பயன்படுத்தவும் பயன் அடையவும் முடியும்.

முதலில் 50 பேரை கொண்டு இந்த பைக் ரேலியை ஆரம்பிக்க திட்டமிட்டோம். ஆனால் தற்போது 2000 பேர் வரை இந்த பைக் ரேலிக்கு வர தயாராகவுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் எல்லா தாலுக்காக்களிலும் முகாம் வைத்து இதனை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

விவசாயிகளின் வளர்ச்சி, பெண்கள் முன்னேற்றம், குழந்தைகள் மற்றும் மாணவர்கள் கல்வி வளர்ச்சி உள்ளிட்ட 165 திட்டங்கள் பற்றிய பிரச்சாரங்களை செய்ய உள்ளோம்.

சென்னையில் தொடங்கி தொடர்ந்து 48 நாட்கள் முழுவதும் நடத்தி மீண்டும் சென்னைக்கு வந்து முடிக்க திட்டமிட்டுள்ளோம். இதில் மத்திய மந்திரிகள் கலந்துக் கொள்வார்கள்.

நிறைய திட்டங்கள் இருந்தும் சாதாரண மக்களிடம் திட்டங்கள் சென்று சேர்வதில்லை என்பதால் இந்த வழியில் மக்களிடம் சென்றடைய உள்ளோம்.

முக்கியமாக முத்ரா திட்டம். இந்த திட்டத்தை இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் முத்ரா லோன் அதிகமாக பெறப்பட்டுள்ளது. இது போல சில திட்டங்களை மக்களுக்கு தெரிகிறது.

இந்த திட்டத்தை செயல்படுத்துவதே மத்திய அரசுதான் என்பது பலருக்கும் தெரியவில்லை. அதனையும் இந்த பைப் ரேலி விழிப்புணர்வு மூலம் தெரியப்படுத்துவோம்.

மேலும் மத்திய அரசின் நிறைய திட்டங்கள் தமிழக மக்களுக்கு சென்று அடைவதில்லை. எனவே தான் நாங்கள் களத்தில் நேரடியாக இறங்கி செயல்பட உள்ளோம்.

இவ்வாறு PMJKYPPA அமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜெய் கணேஷ் அவர்கள் கூறினார்.

இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களான மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.ராம்குமார் சேர்மக்கனியும், காஞ்சிபுர மாவட்ட நிர்வாகியான திரு.கண்ணன் கேசவன் இருவரையும் தேசிய பொதுச் செயலாளரும் மாநில பொதுச் செயலாளரும் பெரிதும் பாராட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Nammavar modi Our man modi bike rally

அவென்சர் கதையை விட ‘83’ தான் சூப்பர் ஹீரோஸ் கதை.. – கமல்

அவென்சர் கதையை விட ‘83’ தான் சூப்பர் ஹீரோஸ் கதை.. – கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

83 movie story is real heros story says Kamal1983 ஆம் ஆண்டில் முதல் முறையாக இந்தியா உலககோப்பையை வென்ற தருணம் இந்தியா முழுதும் எழுந்து நின்று ஆர்பரித்த வரலாற்றின் பொன்னான தருணம். ஒரு திரில்லர் படத்திற்கிணையான போராட்டத்தை நடத்தி, நம் அணி வீரர்கள் உலககோப்பயை வென்றார்கள்.

அப்போதைய இந்திய கிரிக்ட் அணி கேப்டன் கபில்தேவ் அவர்களின் வாழ்க்கை பின்னணியில் நம் அணி உலககோப்பையை வென்றதை மீட்டுருவாக்கம் செய்துள்ள படம் தான் “83”.

கமலஹாசனின் தயாரிப்பு நிறுவனமாகிய ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல், ரிலயன்ஸ் எண்டர்டெயின்மெண்ட், ஒய் நாட் ஸ்டுடியோஸ் இணைந்து இவ்வாண்டின் எதிர்பார்ப்பு மிக்க வெகு முக்கிய படைப்பான “83” படத்தின் தமிழ் பதிப்பை தமிழில் வழங்குகிறார்கள்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு இன்று கோலாகலமாக நடைபெற்றது.

நடிகர் ரன்வீர் சிங் பேசியது….

இந்த மிகப்பெரிய வரவேற்புக்கு நன்றி. சென்னைக்கு இது எனது முதல் பயணம். இங்கு கமல் சாருடன் இருப்பது பெருமை. இந்தப்படமே ஒரு மாயாஜாலம் தான். கபீர்கான் திரையில் எப்போதும் மாயாஜாலங்கள் நிகழ்த்தக்கூடியவர்.

அவர் இந்தப்படம் பற்றி கூறியபோது பிரமிப்பாக இருந்தது. என்னை சுற்றி நிறைய நல்ல விசயங்கள் நடக்கின்றன. இன்று கமல் சார், கபில்தேவ், ஶ்ரீகாந்த் என ஜாம்பவான்களுடன் இருக்கிறேன்.

83 உலககோப்பையை வென்றது இந்திய சரித்திரத்தின் பெருமை மிகு தருணம். அந்த தருணத்தை நாங்கள் திரையில் கொண்டுவரவுள்ளோம். இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இன்று உங்கள் முன் வெளியிடுவதில் மகிழ்ச்சி. கபில்தேவ் ஒரு முறை கூட போல்டானதில்லை அவரது சாதனைகள் அளப்பரியது. அவர் வாழ்வில் என்னை அனுமதித்ததற்கு அவர் கதாப்பாத்திரம் செய்ய அனுமதி தந்ததற்கு நன்றி.

83 அணி இன்றும் நட்பாக இருக்கிறார்கள். அந்த நட்பு குழு மனப்பான்மைதான் வெற்றியை பெற்று தந்தது. நானும் இப்படத்தில் பணிபுரிவதில் நிறைய நட்பை சம்பாதித்திருக்கிறேன். இப்படம் உங்கள் அனைவரையும் மகிழ்விக்கும் நன்றி.

பின் மேடையில் 83 அணியில் விளையாடியவர்களின் கதாப்பாதிரங்களாக இப்படத்தில் நடிப்பவர்களை, ஒவ்வொருவராக, கலகலப்பான வார்த்தைகளில் அறிமுகப்படுத்தினார் ரன்வீர் சிங்.

நடிகர் ஜீவா பேசியது….

கமல் சார் இந்த மேடையில் 18 வருடம் முன் அறிமுகப்படுத்தினார். இன்று இங்கு இருப்பது மகிழ்ச்சி. கபீர் சார் இந்தக் கதாப்பாத்திரம் செய்வதாக சொன்னபோது ஶ்ரீகாந்த் சார் கேரக்டரை நான் எப்படி செய்ய முடியும் என பயந்தேன்.

ஆனால் படக்குழு அனைவரும் மிகவும் ஆதரவாக இருந்தார்கள். என்னை 6 மாதம் பயிற்றுவித்தார்கள். ஷீட்டிங்கின் போது கபில்தேவ் சார் வந்திருந்தார். அவர் நிறைய சொல்லித்தந்தார். ரன்வீர் உடன் பணிபுரிந்தது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது.

அவர் ஓய்வே இல்லாமல் இக்கதாப்பாத்திரத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார். இப்படம் மூலம் மிகப்பெரிய நட்பு வட்டம் கிடைத்திருக்கிறது. இந்தியா முழுதும் எங்கு போனாலும் இன்று எனக்கு நட்பு இருக்கிறது.

ஶ்ரீகாந்த் நடிப்பதற்கு அறிவுரை கேட்டபோது “கண்ண மூடிட்டு சுத்து பட்டா பாக்கியம் படலனா லேகியம்” என்றார். அவர் கலகலப்பானவர். ஶ்ரீகாந்தாக நடித்தது என் வாழ்வில் என்றும் மறக்க முடியாத மகிழ்வான தருணம் என்றார்.

இயக்குநர் கபீர்கான் பேசியது….

கமல் சாருடன் இன்று இருப்பது பெருமை. நான் சிறுவனாக இருந்த போது 83 உலககோப்பையை வென்றதை பார்த்திருக்கிறேன். உலககோப்பையை வென்றபோது அந்த அணியில் இருந்தவர்கள் இளம் வீரர்கள். அவர்களை யாரும் நம்பவில்லை ஆனால் அவர்கள் கோப்பையை வென்றெடுத்தார்கள்.

இந்தியாவே மொத்தமாக கொண்டாடிய தருணம் அது. கமல் சார் இப்படத்தை தமிழில் முன்னெடுப்பது எங்களுக்கு மிகப்பெரிய சந்தோஷம்.

தயாரிப்பாளர் சசிகாந்த் பேசியது….

என் முன்னால் இன்று மிகப்பெரும் ஜாம்பவான்கள் இருக்கிறார்கள். கிரிக்கெட் நம் வாழ்க்கையின் ஒரு பகுதியாய் இருந்திருக்கிறது. நம் வாழ் நாளின் சந்தோஷமான நினைவுகள் அனைத்தும் கிரிக்கெட்டை சுற்றிதான் அமைந்திருக்கும். நான் 83 படத்தில் இணைந்திருப்பது எனக்கு மிகப்பெரும் மகிழ்ச்சி.

இப்படத்தில் ரண்வீர், கபீர்கான், தீபிகா என நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்களாக பெரும் ஆளுமைகள் பங்குகொண்டிருக்கிறார்கள். இப்படம் பற்றி முன்பு ஒரு சிறு ஐடியாகவாக பேசும்போது நடக்குமா என்கிற சந்தேகம் இருந்தது. இப்போது உண்மையிலேயே நடக்கிறது.

கமல் சார் இதில் இணைந்திருப்பது எங்களுக்கெல்லாம் பெருமை. இப்படத்தை அவர் முன்னெடுத்து செல்வது மிகப்பெரிய வரவேற்பை தரும் நன்றி.

கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்த் பேசியது….

உண்மை என்னவெனில் 83 உலககோப்பையை வெல்வோம் என நம்பிய ஒரே மனிதன் கபில்தேவ் தான். அவன் தன் முதுகில் மொத்தத்தையும் சுமந்தான். கபில்தேவ்வாக யாருடா நடிப்பார்கள் எனப் பார்த்தேன். ரன்வீர் கடும் உழைப்பை தந்திருக்கிறார்.

ஒரு நாளில் 16 மணி நேரம் பயிற்சி எடுத்து செய்துள்ளார். கபீர்கான் மிகச்சிறந்த இயக்குநர் மிக அருமையாக எடுத்திருத்திருக்கிறார். கபில்தேவ் எப்படி உற்சாகமாக இருப்பரோ அதே போல் ரன்வீர் இருக்கிறார்.

ஜீவாவும் நன்றாக செய்துள்ளார். நான் வளர்ந்தது வாழ்வது இங்கே சென்னை தான் கமல் சார் பற்றி என்ன சொல்ல முடியும். அவர் சாதனைகள் அளப்பரியது. இங்கு வந்து ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி.

கபில்தேவ் பேசியது….

என்னுடன் இருந்த 83 அணிக்கு முதலில் நன்றி. இப்போது அதனை மீட்டுருவாக்கம் செய்யும் அனைவருக்கும் நன்றி. தமிழகம் வந்தபோது நான் தமிழை கற்றுக்கொள்ள ஆசைப்பட்டேன் எவ்வளவு அழகான மொழி. ஐ லவ் சென்னை.

கமல்ஹாசன் சார் இன்று எங்களுடன் இணைதிருப்பதற்கு நன்றி. ஶ்ரீகாந்த் அப்போது விளையாடியபோது எப்போதும் உற்சாகமாக பரபரப்பாக இருப்பார். பிரதமர் இந்திராகாந்தி வந்தபோது எல்லோரையும் நான் அறிமுகப்படுத்தினேன் அப்போது ஶ்ரீகாந்தை அறிமுகப்படுத்திய போது விரைப்பாக நின்றார்.

ஆனால் முப்பதாவது நொடியில் மீண்டும் கலகலப்பை ஆரம்பித்து விட்டார். பிரதமர் முன்னால் இப்படி செய்யலாமா எனக்கேட்டேன் அவர் தான் தொடங்கினார் என பிரதமரை சொன்னார். அத்தனை கலகலப்பானவர் அவர். இப்படம் பல நினைவுகளை தரக்கூடியது இதனை சாத்தியபடுத்திய அனைவருக்கும் நன்றி.

இந்நிகழ்வில் கமல்ஹாசன் பேசியது

இது மிக அரிய தருணம். இத்தனை திறமைகளுடன் நிற்பது பெருமை. 83 உலககோப்பைய வென்றது மட்டுமே நமக்கு தெரியும். இயக்குநர் கபீர்கான் அதன் பின்னால் இருக்கும் அறியப்படாத கதைகள் சொன்னார். பிரமிப்பாக இருந்தது.

அவர்கள் எத்தனை கஷ்டங்களை தாண்டி வென்றார்கள் என்ற கதையை கேட்டபோது சூப்பர் ஹீரொக்கள் வரும் அவஞ்சர் கதையை விட இது தான் உண்மையான சூப்பர் ஹீரோக்களின் கதை என தோன்றியது.

இந்த படத்தை நிஜமாக்கிய அனைவருக்கும் வாழ்த்துகள். கபில்தேவ் அவர்களுக்கான உண்மையான பாராட்டு இன்னும் கிடைக்கவில்லை அவர் அத்றகு கவலைப்படவும் மாட்டார். ஆனால் அவர் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.

கிரிக்கெட்டர் ஶ்ரீகாந்தை என் படத்தில் நடிக்க வைக்க ஆசைப்பட்டேன் முடியாமல் போய்விட்டது. அவரை நண்பராக பல ஆண்டுகள் தெரியும்.

இப்படத்தின் நடிகர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். கபீர்கான் மிக நன்றாக இயக்கியிருக்கிறார். நான் இப்படத்தை இயக்கியதாகவே நினைக்கிறேன். ஆனால் என்னை விட கிரிக்கெட் மீது காதல் கொண்டு கபீர்கான் இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் என்னையும் இணைத்து கொண்டதற்கு அனைவருக்கும் நன்றி என்றார்.

“83” படத்தை Kabirkhan Films Productions, Rajkamal Films International, Reliance Entertainment இணைந்து வழங்குகிறார்கள்.
தயாரிப்பு – கபீர்கான், தீபிகா படுகோன், விஷ்ணு இந்தூரி, சஜீத் நாதியத்வாலா, Phantom Films, Reliance Entertainment.

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் கேப்டன் கபில்தேவ்வாக நடிக்கிறார். இவருடன் தாஹிர் ராஜ் பாஷின், ஜீவா, சாஹிப் சலீம், ஜதீன் சர்னா, சிராக் படேல், டிங்கர் சர்மா, நிஷாந்த் தாஹியா, ஹார்டி ஷந்து, ஷஹில் கத்தார், அம்மி விர்க், ஆதிநாத் கொதாரே, தாய்ர்யா கர்வா, R பத்ரி, பங்கஜ் திரிபாதி ஆகியோர் அணி வீரர்களாக நடித்துள்ளார்கள். தீபிகா படுகோன் கபில்தேவ் மனைவி ரோமி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

Reliance Entertainment, Y Not X இணைந்து விநியோகிக்கும் இத்திரைப்படம் 2020 ஏப்ரல் 10 உலகம் முழுதும் தமிழ் தெலுங்கு ஹிந்தி மொழிகளில் வெளியாகிறது.

83 movie story is real heros story says Kamal

83 movie launch Kapil dev kamal ranveer jeeva

ஆதியுடன் இணைந்து பட்டைய கிளப்பும் ‘படையப்பா’ டைரக்டர்

ஆதியுடன் இணைந்து பட்டைய கிளப்பும் ‘படையப்பா’ டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

KS Ravikumar plays comedy villain in Naan Sirithal moovieஅவ்னி மூவிஸ் சார்பில் சுந்தர்.சி வழங்கும் ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி கதாநாயகனாக நடிக்கும், ‘நான் சிரித்தால்’ .

படத்தின் தலைப்பு போலவே இது ஒரு முழு நீள நகைச்சுவை திரைப்படம். ஆனால், எந்த நகைச்சுவையும் திணிக்கப்பட்டதாக இருக்காது. கதையோடு ஒன்றிய நகைச்சுவையாக இருக்கும்.

குடும்பத்துடன் பார்த்து ரசித்துவிட்டு, போகும்போதும் நகைச்சுவையைக் கொண்டு செல்லலாம். இரண்டு மணி நேரம் சிரித்தோம் என்பதைத் தாண்டி, மன நிறைவு தரும் வகையில் நகைச்சுவையோடு ஒரு நல்ல கருத்தையும் கூறியிருக்கிறோம்.

சென்னை மற்றும் பல இடங்களில் படப்பிடிப்பு நடத்தினோம்.

ஹிப்பாப் ஆதி, ஐஸ்வர்யா மேனன், கே.ஸ். ரவிகுமார், முனீஸ்காந்த், ‘படவா’ கோபி, ரவி மரியா, பாண்டியராஜன், ஷாரா, ‘எரும சாணி’ விஜய், இன்னும் பலர் நடித்திருக்கிறார்கள். ஒவ்வொருவரின் கதாபாத்திரமும் ஒரு திடுக்கிடும் வகையில் இருக்கும்.

கே.எஸ்.ரவிகுமார் சார் வில்லனாக நடித்திருக்கிறார். வழக்கமாக வரும் வில்லனாக இல்லாமல் அனைவரும் ரசிக்கும்படியான வில்லனாகவும், சிரிக்கும் படியாகவும் இருப்பார். அவரும், கதாநாயகனும் சந்திக்கின்ற காட்சிகளில் நகைச்சுவை கலந்த ஒரு த்ரில் இருக்கும்.

இப்படத்தின் சிறப்பம்சம் சவாலான விஷயம் கதாநாயகன் சிரிக்கின்ற காட்சிகள் தான்.

ஏனென்றால், அவர் நிறைய இடங்களில் சிரித்துக்கொண்டே இருப்பார். அப்படி அவர் சிரிக்கும் போது காட்சிக்கு தகுந்தவாறு பார்வையாளர்களுக்கு சிரிப்பும், நகைச்சுவையும், பயமும், பரிதாபமும் ஏற்பட வேண்டும். இதற்கு கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்தால் மட்டுமே இதை செய்ய முடியும்.

இதுவரை ‘ஹிப்ஹாப்’ ஆதி நடித்த இரண்டு படங்களிலேயே இந்தப் படத்தில்தான் கடின முயற்சி எடுத்து நடித்திருக்கிறார்.

இரண்டு படங்களிலும் அவர் அவராகவே நடித்திருப்பார். இந்தப் படத்தில்தான் வேறு ஒரு நபராக தன்னை மாற்றிக்கொண்டு நடித்திருக்கிறார்.

பிப்ரவரி 14 ல் “நான் சிரித்தால்” வெளியீடு.

KS Ravikumar plays comedy villain in Naan Sirithal moovie

த்ரிஷாவின் பரமபத விளையாட்டை வெளியிடும் அபிராமி ராமநாதன்

த்ரிஷாவின் பரமபத விளையாட்டை வெளியிடும் அபிராமி ராமநாதன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Trishas Paramapadham Vilayattu release updatesதிரிஷா தமிழ் திரையுலகிற்கு வந்து 20 ஆண்டுகள் ஆகிறது. இப்போதும் நாயகியாகவே நடிக்கிறார். தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நாயகர்களுடன் ஜோடியாக நடித்து வந்தார்.

அவர் நடித்த பெரும்பாலான படங்கள் மாபெரும் வெற்றிகளைக் குவித்திருக்கின்றது. இதன் மூலம் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார்.

இந்த நிலையில், சில ஆண்டுகளாக நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பத்திரமாகத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

தற்போது, ‘பரமபத விளையாட்டு’ படத்தில் முதன்முறையாக ஆக்ஷன் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படம் அரசியல் சார்ந்த திகில் படமாக உருவாகி வருகிறது.

ஒரு இரவுக்குள் நடக்கும் கதையைப் படமாக்கியிருக்கிறார்கள். திரிஷாவின் 60வது படமான இத்திரைப்படத்தை திருஞானம் இயக்குகிறார்.

இதில் ரிச்சர்டு, நந்தா, ஏ.எல். அழகப்பன், வேல ராமமூர்த்தி, சாம்ஸ் இமான் அண்ணாச்சி சோனா ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் டப்பிங், பின்னணி இசைக் கோர்ப்பு பணிகள் வருகின்றது.

இதற்கிடையில், இப்படத்தைத் தன் குடும்பத்துடன் பார்த்த ‘அபிராமி’ ராமநாதன் சென்னை விநியோக உரிமையை வாங்கியுள்ளார்.

‘பரமபத விளையாட்டு’ இம்மாத இறுதியில் வெளியாகும்.

Trishas Paramapadham Vilayattu release updates

“டாணா” உங்களை ஆச்சர்யபடுத்தும் இயக்குநர் யுவராஜ் சுப்பிரமணியம் !

“டாணா” உங்களை ஆச்சர்யபடுத்தும் இயக்குநர் யுவராஜ் சுப்பிரமணியம் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Taana stillsநடிகர் வைபவ் தமிழ் சினிமா உலகின் நம்பிக்கை நாயகனாக மாறியிருக்கிறார். மிக வித்தியாசமான, எளிமையான கதைகள். சாதாரண ரசிகன் தன்னை தொடர்புபடுத்திகொள்ளும் எதிர் வீட்டு பையனின் நடிப்பு என, அவர் படங்கள் வரிசையாக அனைத்து தரப்பினரையும் கவர்ந்து வெற்றி பெற்று வருகிறது. இந்த வாரம் இயக்குநர் யுவராஜ் சுப்பிரமணியம் இயக்கத்தில் வைபவ், நந்திதா நடிப்பில் வெளியாகவுள்ள “டாணா” திரைப்படம் டிரெயலர் மூலம் ரசிகரகளிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. உணர்ச்சிவசப்படும் தருணங்களில் திடீரென பெண்குரல் வந்துவிடும் வைபவ் கதாப்பாத்திரம் படத்தின் சுவாரஸ்யத்தை கூட்டியிருக்கிறது.

படப்பிடிப்பின் சுவாரஸ்யங்கள் குறித்து இயக்குநர் யுவராஜ் சுப்பிரமணியம் பகிர்ந்து கொண்டது…
பெண் குரலில் பேசும் வைபவின் கதாப்பாத்திரம் ரசிகர்களை கண்டிப்பாக சிரிக்க வைக்கும். ஆனால் படப்பிடிப்பில் இதற்காக அவர் மேற்கொண்ட சிரத்தை மிகப்பெரிது. அவர் தனது சொந்த குரலில் பேசி பின் பெண் குரலில் டப்பிங் செய்யப்பட்டதாக அனைவரும் நினைக்கலாம். ஆம் அப்படிதான் செய்தோம். ஆனால் படப்பிடிப்பில் அவர் முழுக்க தன் குரலில் பேசவில்லை, கதாபாத்திரதன்மைக்காக தன் குரலை முழுக்க மாற்றி, கிட்டதட்ட பெண் குரல் மாதிரியே அவர் பேசினார். இது அவருக்கு மிகுந்த சவாலாக இருந்தது ஆனாலும் ரசிகர்கள் பார்க்கும் போது அது சரியாக இருக்கவேண்டுமென அவர் மிகவும் கஷ்டப்பட்டார். இப்பொது பெருமளவில் வரவேற்பு கிடைத்திருப்பது எங்கள் மொத்த படக்குழுவையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. படத்தினை தியேட்டரில் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என உறுதியாக நம்புகிறேன். இப்படம் அனைவரையும் கவரும் கமர்ஷியல் கலாட்டாவாக இருக்கும்.

இப்படம் வெறும் நகைச்சுவையில் மட்டுமே பயணிக்கும் படமாக இருக்காது. பயமுறுத்தும் ஹாரர், காமெடி, ரொமான்ஸ், ஆக்‌ஷன் என பல தளங்களில் இப்படம் பயணிக்கும். தயாரிப்பாளர் M C கலைமாமணி மற்றும் M N லக்‌ஷ்மி கலைமாமணி இருவருக்கும் என் மீது நம்பிக்கை வைத்து இப்படத்தை தயாரித்ததற்காக இந்நேரத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இப்படத்தில் பணிபுரிந்துள்ள அத்தனை நடிகர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் தங்கள் முழு திறமையையும் தந்துள்ளார்கள். நடிகை நந்திதா தனது கதாப்பாத்திரத்தை அருமையாக செய்துள்ளார். யோகிபாபு, வைபவுடன் திரையில் வரும் தருணங்கள் அனைத்திலும் ரசிகர்கள் வயிறு குலுங்க சிரிப்பார்கள். நடிகர் பாண்டியராஜன் எங்கள் அனைவரையும் விட மிகப்பெரும் திரை அனுபவம் கொண்டிருந்தாலும், மிக எளிமையாக பழகினார். அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். இப்படத்தின் மீது ஆர்வம் கொண்டு மிகப்பெரிய வெளியீடாக மாற்றித்தந்திருக்கும் Positive Print Studios ராஜேஷ்குமார் மற்றும் L.சிந்தன் அவர்களுக்கு பெரும் நன்றியை தெரிவித்துகொள்கிறேன் என்றார்.

Nobel Movies சார்பில் M.C.கலைமாமணி, M N லட்சுமி கலைமாமணி இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார்கள். இயக்குநர் யுவராஜ் சுப்ரமணி எழுதி, இயக்கியுள்ளார். வைபவ், நந்திதாவுடன் வி ஐ பி படப்புகழ் ஹரீஷ் பெராடி, பசங்க சிவக்குமார், உமா பத்மநாபன், யோகிபாபு ஆகியோர் நடித்துள்ளார்கள்

இசை – விஷால் சந்திரசேகர்

ஒளிப்பதிவு – சிவா GRN

படத்தொகுப்பு – பிரசன்னா G.K

கலை இயக்குநர் – பாசர் N.K.ராகுல்

சண்டைப்பயிற்சி – V. கோட்டி

நடனம் – சதீஸ்

பாடல்கள் – கு. கார்த்திக், தனிகொடி

நிர்வாக தயாரிப்பு – V. சுதந்திரமணி

இணை தயாரிப்பு – H. சனா உல்லா கான் , பிராசாந்த் ரவி, S.சந்தோஷ்

Positive Print Studios சார்பில் ராஜேஷ்குமார் மற்றும் L.சிந்தன் ஆகியோர் வெளியிடும் இத்திரைப்படம் 2020 ஜனவரி 24 தமிழகமெங்கும் வெளியாகிறது.

பாலா படத்திற்காக 25 கிலோ எடை கூட்டிய ஆர்கே. சுரேஷ்

பாலா படத்திற்காக 25 கிலோ எடை கூட்டிய ஆர்கே. சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

RK suresh in bala filmதமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர்களில் பாலாவும் ஒருவர்.
விக்ரம், சூர்யா, அதர்வா, விஷால் உள்ளிட்ட பல நடிகர்களுக்கு நடிப்பு திறமை இருக்கிறது என்பதையே இவர்தான் அடையாளம் காட்டினார்.

இவர் விக்ரமின் மகன் துருவ் நடிப்பில் ‘வர்மா’ படத்தை இயக்கினார்.

ஆனால் அநத் படத்தை தயாரிப்பு நிறுவனம் வெளியிட மறுத்து புதிய படத்தை தயாரித்து வெளியிட்டது.

அதன்பின்னர் பாலா எந்த படத்தையும் இயக்கவில்லை.

சூர்யாவுக்காக ஒட்டு மொத்த வித்தையை இறக்கும் பாலா

இந்த நிலையில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குனர் பாலா படம் குறித்து தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

அதில் ‘பாலா படத்துக்காக 73 கிலோவில் இருந்து, 95 எடை கூட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் இயக்குனர் பாலா இயக்கத்தில் ஆர்.கே.சுரேஷ் நடிப்பது உறுதியாகியுள்ளது.

பாலாவின் தாரை தப்பட்டை படத்தில் ஆர்.கே.சுரேஷ் வில்லன் நடித்திருந்தார் என்பதை யாராலும் மறக்கமுடியாது.

More Articles
Follows