‘காக்டெய்ல்’ கடவுள் போஸ்டர்; யோகி பாபு ஏற்படுத்திய புதிய சர்ச்சை

‘காக்டெய்ல்’ கடவுள் போஸ்டர்; யோகி பாபு ஏற்படுத்திய புதிய சர்ச்சை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Murugan clarifies Yogibabus Cocktail first look controversy PG மீடியா ஒர்க்ஸ் சார்பில் பிரபல ஒளிப்பதிவாளர் PG முத்தையா தயாரித்து வரும் படம் ‘காக்டெய்ல்’. இந்த படத்தை அறிமுக இயக்குநர் முருகன் இயக்கியுள்ளார்.

யோகிபாபு, மற்றும் யோகிபாபுவின் நண்பர்களாக ரமேஷ், மிதுன், மற்றும் விஜய் டிவி கலக்கப்போவது யாரு புகழ் பாலா, குரேஷி, ஆகியோருடன் சாயாஜி ஷிண்டே, மனோபாலா, மைம் கோபி, லொள்ளுசபா சாமிநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இவர்களுடன் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த “காக்டெய்ல்” என்கிற பறவையும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறது.

இந்திய சினிமாவில் முதன்முறையாக ஒரு பறவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது இதுதான் முதல் முறை.. இந்த பறவையுடன் ஒரு முருகன் சிலையும் படத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. அதில் நடிகர் யோகிபாபு முருகன் வேடத்தில் இருப்பது போன்ற புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

இந்த போஸ்டரை பார்த்துவிட்டு சில இந்து அமைப்புகள் படத்தில் முருகனை தவறாக சித்தரித்துள்ளதாகவும் இது தங்களது மத உணர்வை புண்படுத்துவதாக அமைந்துள்ளது என்றும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதை தொடர்ந்து காக்டெய்ல் படத்தின் இயக்குநர் முருகன் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது ;

“நிச்சயமாக எந்த யாரின் உணர்வுகளையும் புண்படுத்தும் விதமாக இந்த படத்தின் கதையும் சரி, இந்த போஸ்டரும் சரி உருவாக்கப்படவில்லை.. என் பெயரிலேயே முருகனை கொண்டுள்ள நானும் ஒரு முருக பக்தன்.. யோகிபாபுவும் ஒரு முருக பக்தர்.
அதனால் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் இப்படி செய்யும் எண்ணம் எங்களுக்கு துளியும் இல்லை.

இந்த படத்தின் கதைப்படி முருகன் சிலை ஒரு முக்கிய கதாபாத்திரமாகவே இடம்பெற்றுள்ளது. அதன் அடிப்படையில்தான் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை நாங்கள் வடிவமைத்தோம்

முருகனையும் சிவனையும் கொண்டாடும் நாம் திரு விழாக்களில் முருகர் வேடமிடுகிறோம். சிவன் வேடம் அணிகிறோம்.

மாறுவேடப் போட்டிகளில், தமிழர் கலை சார்ந்த பண்பாட்டு நிகழ்ச்சிகளில் வேடங்கள் அணிகிறோம்…

எம் முருகப் பெருமானை வேடமிட்டு ஆராதிப்பது தமிழக மக்களின் வாடிக்கை தானே..?

அதையே சினிமாவில் காட்டும்போது மட்டும் எப்படி தவறாகி விடும்..?

இது முருகன், சிவனை போன்ற கடவுளை வழிபடும் கொண்டாடும் எங்களைப் போன்ற ஒவ்வொருக்கும் உண்டான தனிப்பட்ட உரிமையாகத்தான் பார்க்கிறோம்..

நாங்கள் வழிபடும் கடவுளை நாங்களே எப்படி தவறாக சித்தரிப்போம்..?

இது ஒரு மதுவை மையப்படுத்திய படமும் அல்ல.

இந்த படத்திற்கு வைக்கப்பட்டுள்ள காக்டெய்ல் என்கிற டைட்டில் கூட ஆஸ்திரேலியாவில் வாழும் ஒரு காக்டெய்ல் என்கிற கிளியை மையப்படுத்தியே வைக்கப்பட்டுள்ளதே தவிர அதற்கும் வேறு எந்த தவறான காரணமும் இல்லை.

அதனால்தான் இந்த போஸ்டரில் முருகனின் வாகனமான மயிலை பயன்படுத்துவதற்குப் பதிலாக அந்த காக்டெய்ல் என்கிற கிளியை நாங்கள் பயன்படுத்தி இருக்கிறோம்” என விளக்கம் அளித்துள்ளார் இயக்குநர் முருகன்.

Murugan clarifies Yogibabus Cocktail first look controversy

கார்த்தியை அடுத்து சூர்யாவுடன் இணையும் ராஷ்மிகா.?

கார்த்தியை அடுத்து சூர்யாவுடன் இணையும் ராஷ்மிகா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Is Rashmika Mandanna doing Suriya 39 film with Hariசூர்யா நடித்துள்ள சூர்ரைப் போற்று திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இதனையடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா.

இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்தப் படத்துக்கு வாடிவாசல் என்று டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக இயக்குநர் வெற்றிமாறன் அறிவித்துள்ளார்.

ஹரி இயக்கத்தில் சூர்யாவுடன் மோதும் பிரசன்னா

இந்த படத்தை அடுத்து ஹரி இயக்கவுள்ள படத்தில் நடிக்கிறார் சூர்யா.

இதில் சூர்யா ஜோடியாக நடிக்க ராஷ்மிகா மந்தனாவிடம் பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடித்து பிரபலமானார் இவர்.

தற்போது கார்த்தி ஜோடியாக ‘சுல்தான்’ படத்தில் ராஷ்மிகா நடித்து வருகிறார்.

Is Rashmika Mandanna doing Suriya 39 film with Hari

100 கோடி தந்த ‘கைதி’யை பாலிவுட்டுக்கு கொண்டு செல்லும் SR பிரபு

100 கோடி தந்த ‘கைதி’யை பாலிவுட்டுக்கு கொண்டு செல்லும் SR பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kaithi collected 100 crores and will be remade in Hindiகடந்த 2019 தீபாவளியன்று கைதி படம் வெளியானது.

இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரித்திருந்தனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்திருந்தார்.

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் தீபாவளிக்கு வெளியாகி உலகமெங்கும் மாபெரும் வெற்றி பெற்றது.

LOT OF TWIST WITH LORRY… கைதி விமர்சனம் 4/5

அதுமட்டுமில்லாமல், கார்த்தி இதுவரை நடித்த படங்களிலேயே இந்தப் படம்தான் முதன் முறையாக 100 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்துள்ளதாம்.

இதனைத் தொடர்ந்து, ஹிந்தியிலும் இப்படத்தை ரீமேக் செய்கிறார்கள்.

இதன் மூலம் இந்தியில் முதன் முதலாக கால் பதிக்கிறது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ். ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார்கள்.

இப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிய வந்துள்ளது.

Kaithi collected 100 crores and will be remade in Hindi

ஹர்பஜன் சிங்குங்கு ஜோடியானார் பிக்பாஸ் லொஸ்லியா

ஹர்பஜன் சிங்குங்கு ஜோடியானார் பிக்பாஸ் லொஸ்லியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Cricketer Harbhajan to debut as lead in Tamil Cinema with Losliya தமிழகத்தை பொறுத்தவரை சினிமாவையும் அரசியலையும் பிரித்து விட முடியாது. இரண்டும் எப்போதும் ஒன்றோடு ஒன்றாக பின்னி பிணைந்துள்ளது.

தற்போது கிரிக்கெட்டும் இந்த வரிசையில் இணைந்துள்ளது.

ஹிந்தி மற்றும் தமிழ் சினிமாவில் நிறைய கிரிக்கெட் நட்சத்திரங்கள் நடிக்க தொடங்கியுள்ளனர்.

அண்மையில் ஹர்பஜன் சிங் தமிழ் சினிமாவில் நடிக்கவுள்ளார் என்பதை பார்த்தோம்.

சினிமாவில் அறிமுகமாகும் லாஸ்லியா; ரசிகர்கள் குஷி

சந்தானம் நடிப்பில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகி வரும் `டிக்கிலோனா’ படத்தில் முக்கிய கேரக்டரில் அவர் நடித்து வருகிறார்.

மேலும் ‘பிரண்ட்ஷிப்’ என்ற படத்தில் நாயனாக நடிக்கவுள்ளார்.

இதனை `அக்னிதேவி’, `சென்னையில் ஒருநாள் 2′ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர்கள் ஜான்பால் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா ஆகியோர் இயக்க உள்ளனர்.

இந்த நிலையில் படத்தில் ஹர்பஜனுக்கு ஜோடியாக, பிக்பாஸ் புகழ் லொஸ்லியா நடிக்கவுள்ளார் என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

Cricketer Harbhajan to debut as lead in Tamil Cinema with Losliya

பாஃப்டா திரைப்பட விருது விழாவில் 7 விருதுகளை அள்ளிய ‘1917’

பாஃப்டா திரைப்பட விருது விழாவில் 7 விருதுகளை அள்ளிய ‘1917’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

'1917 movie won 7 Awards including Best movie at BAFTAsஇங்கிலாந்தின் லண்டன் நகரில் நடைபெற்ற பாஃப்டா திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், முதலாம் உலக போரை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட1917 திரைப்படம், சிறந்த திரைப்படம், ஒளிப்பதிவு உள்ளிட்ட 7 பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது.

ஜோக்கர் திரைப்படத்தில் நடித்த ஜாக்குவின் பீனிக்ஸ் சிறந்த நடிகருக்கான விருதை வென்றார்.

ஜுடி திரைப்படத்தில் நடித்த, ரெனி ஜெல்வெகர் சிறந்த நடிகையாகயும், சிறந்த துணை நடிகருக்கான விருதை பிராட் பிட்டும், துணை நடிகைக்கான விருதை லாரா டேரனும் தட்டிச்சென்றனர்.

தென் கொரியாவின் பாரசைட் திரைப்படம் சிறந்த வெளிநாட்டு படமாகவும், நெட் பிளிக்ஸ் வெளியிட்ட கிளாஸ் திரைப்படம், சிறந்த அனிமேஷன் படமாகவும் தேர்வாகி உள்ளது.

‘1917 movie won 7 Awards including Best movie at BAFTAs

தமிழகத்தை ஆள ரஜினியை அனுமதிக்க முடியாது.; பாரதிராஜா பாய்ச்சல்

தமிழகத்தை ஆள ரஜினியை அனுமதிக்க முடியாது.; பாரதிராஜா பாய்ச்சல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

I Wont allow Rajini to rule Tamilnadu says Bharathirajaரஜினிகாந்த் தமிழர் இல்லை. அவர் தமிழகத்தை ஆள அனுமதிக்க முடியாது என மீண்டும் தன் பேச்சை ஆரம்பித்துள்ளார் பாரதிராஜா.

இவரின் சமீபத்திய பேட்டியில்…

கேரளாவை மலையாளி ஆள்கிறார். அசாமை ஒரு அசாமியர் ஆள்கிறார். கர்நாடகாவை கர்நாடகக்காரர் ஆள்வது போல் தமிழகத்தை ஒரு தமிழர்தான் ஆள வேண்டும்.

ரஜினி பேர சொல்ல ஏன் பயம்?; சாகுற காலத்துல நடிக்கிறார்.. மன்சூர் அலிகான்

நம் நாட்டை ஒரு வெள்ளைக்காரன் ஆள்வதை எப்படி ஏற்கமுடியாதோ அது போல் தமிழகத்தை ரஜினி ஆள்வதை ஏற்க முடியாது.

தான் தமிழன் தான் என ரஜினிகாந்த் சொன்னாலும். அவர் வாழ வந்தவர். அவர் தமிழகத்தி பிறக்கவில்லை. என கூறினார்.

மேலும் ரஜினியை போன்ற ஒரு எளிமையான மனிதரை பார்க்க முடியாது. அவர் மிகவும் நல்லவர் என்றும் கூறினார்.

I Wont allow Rajini to rule Tamilnadu says Bharathiraja

More Articles
Follows