பேண்டஸி பிக்ஃசன் கதையில் சூப்பர் ஹீரோவானார் கிரிக்கெட் தல தோனி

பேண்டஸி பிக்ஃசன் கதையில் சூப்பர் ஹீரோவானார் கிரிக்கெட் தல தோனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கிராபிக் நாவலான அதர்வா – தி ஆரிஜின் என்ற நாவலில், இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி நடிக்கிறார்

இதில் சூப்பர் ஹீரோவாக தோன்றுகிறார்.

இந்த நாவல், தோனியின் முதல் பேண்டஸி பிக்சன் திரைப்படமாகும்.

கதையை ரமேஷ் தமிழ் மணி எழுதியுள்ளார். இதற்காக, 150 க்கும் மேற்பட்ட வண்ணப்படங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாம்.

தற்போது படக்குழுவினர் தோனியின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இது குறித்த தோனி கூறியதாவது:…

“அதர்வா – தி ஆரிஜின் ஒரு கலைத் தன்மை கொண்ட வசீகரிக்கும் கிராபிக் நாவல்.

எழுத்தாளர் ரமேஷ் தமிழ்மணியின் தொலைநோக்குப் பார்வையில் நான் கவரப்பட்டேன்.

நவீன காலத்திய தொடர்புடன் இந்தியாவின் முதல் புராண சூப்பர் ஹீரோவை அறிமுகப்படுத்தும் அவரது ஐடியாவை கேட்டவுடனே நடிக்க சம்மதித்தேன்.”

இவ்வாறு தோனி கூறினார்.

MS Dhoni in a new avatar for fantasy graphic series

‘மம்மி & தேவகி’ படங்களை தொடர்ந்து லோகித் இயக்கத்தில் ‘மாஃபியா’

‘மம்மி & தேவகி’ படங்களை தொடர்ந்து லோகித் இயக்கத்தில் ‘மாஃபியா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் முன்னணி நடிகர்களின் படங்களை பெங்களூரில் விநியோகம் செய்து வருபவர் குமார்.

இவர் முதன் முறையாக தமிழ் படத்தை தயாரிக்கிறார். படத்தின் பெயர் ‘மாஃபியா’.

இந்தப் படத்தை எச். லோகித் இயக்குகிறார்.

இதில் நாயகனாக பிரஜ்வால் தேவ்ராஜ் நடிக்கிறார். இவர் கன்னடத்தில் ஏராளமான படங்களில் நடித்தவர்.

படம் குறித்து இயக்குநர் லோகித் கூறியதாவது …

: ‘‘சினிமாவுக்கு வந்த பிறகு நான் இயக்கும் மூன்றாவது படம் இது. இதற்கு முன் ‘மம்மி’ மற்றும் பிரியங்கா உபேந்திரா நடித்த ‘தேவகி’ ஆகிய படங்களை இயக்கியுள்ளேன்.

கன்னடத்தில் வெற்றி பெற்ற அந்தப் படங்கள் பெரிய வெற்றியடைந்ததோடு தமிழிலும் டப் செய்யப்பட்டது.

‘மம்மி’ படத்தின் திரையரங்கு உரிமையை தயாரிப்பாளரும் நடிகருமான ஜே.எஸ்.கே.சதீஷ் வாங்கியிருந்தார்.

என்னுடைய மூன்றாவது படத்தை நேரடி தமிழ் படமாக இயக்குவதில் மிகுந்த சந்தோஷம்.

இதில் நாயகனாக நடிக்கும் பிரஜ்வால் தேவ்ராஜ் கன்னடத்தில் பல ஹிட் படங்களில் நடித்தவர். இந்தப் படத்தை தயாரிக்கும் குமார் கர்நாடகவில் முன்னணி விநியோகஸ்தர்.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் முன்னணி நடிகர்களின் படங்களை பெங்களூரில் விநியோகம் செய்து வருகிறார். அவருடன் இதில் இணைவதில் மகிழ்ச்சி.

கதையை குறித்து சொல்வதாக இருந்தால் இது மாஃபியா பற்றிய கதைகளில் சொல்லப்படாதவைகளாக இருக்கும். அத்துடன் மாஃபியா கதைகளுக்குரிய விறுவிறுப்புக்கும் ஆக்ஷனுக்கும் பஞ்சமிருக்காது.

இந்தப் படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் என்ற நம்பிக்கை இருக்கிறது’‘ என்றார்.

நடிகர், நடிகைகள்:

பிரஜ்வால் தேவராஜ், தேவராஜ், அதிதி பிரபுதேவா, ஷைனி ஷெட்டி, வாசுகி வைபவ், ஓரட்டா பிரசாந்த்.

தொழில் நுட்ப கலைஞர்கள் :

தயாரிப்பு நிறுவனம் : பெங்களூரு குமார் பிலிம்ஸ்.

தயாரிப்பு : பி. குமார்,
எச்.லோகித்.

இயக்கம் /கூடுதல் திரைக்கதை: எச். லோகித்.

இசை : ஜே. அனூப் செலின்

ஒளிப்பதிவு : அனிஷ் தருண் குமார்

வசனம் : மஸ்தி

எடிட்டர் : சி. ரவிச்சந்திரன்

சண்டை : டிபரண்ட் டேனி, விநோத், அன்பறிவ், ரவி வர்மா

நடனம் : இம்ரான் சர்தாரியா, ராஜூ சுந்தரம், அதில் சாகித், பிருந்தா, கலை.

சவுண்ட் மிக்ஸ்: டி. உதயகுமார்

சவுண்ட் டிசைன் : பிரதாப் வேவ் ஒர்க்ஸ்

ஸ்டில்ஸ் : அபிஷேக் பிரான்சிஸ்.

மக்கள் தொடர்பு : பிரியா.

Watch out the Stunning ?? First Glimpse of #Mafia

Mummy and Devaki fame director Lohith’s next film is titled Mafia

சூர்யாவுடன் மோதலை தவிர்த்து ஒருநாள் பின் வாங்கினார் பிரபாஸ்

சூர்யாவுடன் மோதலை தவிர்த்து ஒருநாள் பின் வாங்கினார் பிரபாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாண்டிராஜ் இயக்கத்தில் இமான் இசையமைப்பில் சூர்யா நடித்துள்ள படம் ‘எதற்கும் துணிந்தவன்’.

அடுத்த மார்ச் மாதம் 10ஆம் தேதி இந்த படத்தை வெளியிடவுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் நேற்று அறிவித்தது.

இந்த நிலையில் பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகியுள்ள ‘ராதே ஷியாம்’ மார்ச் 11 அன்று வெளியாகிறது.

அதன் விவரம் வருமாறு…

யு வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகியுள்ள ‘ராதே ஷியாம்’ மார்ச் 11 அன்று வெளியாகிறது.

யு வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகியுள்ள ‘ராதே ஷியாம்’ திரைப்படம் மார்ச் 11 அன்று பல்வேறு மொழிகளில் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாகிறது.

‘ராதே ஷியாம்’ படத்தில் விக்ரம் ஆதித்யா என்ற கைரேகை நிபுணராக பிரபாஸ் நடித்துள்ளார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு முழு நீள காதல் கதையில் பிரபாஸ் நடிப்பதால் ரசிகர்கள் மட்டற்ற மகிழ்ச்சியில் உள்ளனர்.

இப்படத்தின் டிரைலர், பாடல்கள் மற்றும் போஸ்டர்கள் பெரும் வரவேற்பை பெற்றிருக்கின்றன.

ராதே ஷியாம் திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் பாக்கிய ஸ்ரீ, சச்சின் ஹெடெக்கர், குணால் ராய் கபூர், ஜெகபதி பாபு, ப்ரியதர்ஷி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் கையாண்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ஒரே சமயத்தில் ‘ராதே ஷியாம்’ வெளியாகவுள்ளது.

Suriya and Prabhas movie release date announced

தனுஷ் இல்லாமல் மீண்டும் இணைந்த ‘வட சென்னை’ கூட்டணி

தனுஷ் இல்லாமல் மீண்டும் இணைந்த ‘வட சென்னை’ கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் அமீர் & இயக்குநர் வெற்றிமாறன் இருவரும் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்கள்.

இதில் அமீர் தற்போது நிறைய படங்களில் நடித்து வருவதால் இப்போது படங்கள் இயக்குவது இல்லை.

வெற்றிமாறன் படங்களை இயக்குவதுடன் தரமான படங்களை தயாரித்தும் வருகிறார்.

இந்த நிலையில் இருவரும் தற்போது இணைந்து பணியாற்ற உள்ளனர்.

இதுகுறித்து இயக்குநர் அமீர் வெளியிட்டுள்ளதாவது…

“எனது அடுத்த பயணம் தொடங்குகிறது. திரைப்படமென்பது ஒருவரின் தனிப்பட்ட பார்வைதான். அது அழகாக மாறுவதென்பது, இன்னொருவருடன் கைக்கோர்க்கும் போதுதான். அது இன்று (02.02.2022) நடைபெறுகின்றது” என வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கிய ‘வடசென்னை’ படத்தில் தனுஷுடன் இணைந்து அமீர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

விரைவில் ‘வடசென்னை’ படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகவுள்ளது.

Vetrimaaran and Ameer joins for a new film

மணிரத்னம் சங்கர் மகாதேவன் உள்ளிட்டோருக்கு பாரத் அஷ்மிதா தேசிய விருது

மணிரத்னம் சங்கர் மகாதேவன் உள்ளிட்டோருக்கு பாரத் அஷ்மிதா தேசிய விருது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒவ்வொரு வருடமும், புனேவில் அமைந்துள்ள இந்தியாவின் உயரிய கல்வி நிறுவனமான எம் ஐ டி உலக அமைதி பல்கலைகழகம், (MIT World Peace University), இந்தியாவின் ஒவ்வொரு துறைகளிலும் சிறந்து விளங்கும் ஆளுமைகளை தேர்வு செய்து அதில் ஐவருக்கு விருது வழங்கி வருகிறது.

அந்த வகையில் 18 வருடங்களாக நிகழந்து வரும் இந்த விருது விழா சார்பில், இந்த வருடம் திரைத்துறையில் சிறந்த பங்களிப்பை நிகழ்த்தியதற்காக இயக்குநர் மணிரத்னம் அவர்களுக்கு விருது வழங்குகிறது. இவ்விருது விழா 2022 பிப்ரவரி 3 ஆம் தேதி இணைய வழியில் நடைபெறுகிறது.

18வது ஆண்டுகளாக எம்ஐடி குழுமம் நாட்டிற்கு முக்கியப் பங்காற்றிய மற்றும் இந்திய திருநாட்டிற்கு பெருமை சேர்த்த நபர்களை கவுரவித்து வருகிறது.

இந்த விருது சாதித்த ஆளுமைகளை கவுரவிப்பதற்காகவும், இளைஞர்களை ஊக்குவித்து, ஆளுமைகளின் கருத்துக்களை முன்னெடுத்துச் செல்லவும், இந்த விருது ராகுல் V.காரத் என்பவரால் உருவாக்கப்பட்டது.

இந்த விருது, பாராட்டுச் சான்றிதழ், நினைவுப் பரிசு மற்றும் தலா ரூ. ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரம் ஆகியவற்றை உள்ளடக்கியது.

இந்த ஆண்டு விருது பெற்றவர்களை பாரத் அஸ்மிதா விருதுகள் தேர்வுக் குழுவின் தலைவர் டாக்டர் ரகுநாத் மஷேல்கர் – உலகப் புகழ்பெற்ற மூத்த விஞ்ஞானி, டாக்டர் விஜய் பட்கர் – உலகப் புகழ்பெற்ற கணினி விஞ்ஞானி மற்றும் நாலந்தா பல்கலைக்கழகத்தின் வேந்தர், டாக்டர் விஸ்வநாத் D காரட் – UNSECO தலைவர் ஹோல்டர் ஆகியோர் தலைமையில் கௌரவிக்கப்படவுள்ளார்கள்.

இந்த வருடம் பாரத் அஷ்மிதா தேசிய விருதினை

நிர்வாகத்தில் சிறந்த ஆசிரியர்: பேராசிரியர் காவில் ராமச்சந்திரன்

வெகுஜன ஊடகம்/என்ஜிஓவின் சிறந்த பயன்பாடு: ஷெரீன் பான்

சிறந்த நடிப்பை பயன்படுத்தியவர் / திரை இயக்கம்: மணிரத்னம்

பாடல்/இசை/பாடலின் சிறந்த பயன்பாடு: சங்கர் மகாதேவன்

கண்டுபிடிப்பு மூலம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் சிறந்த பயன்பாடு: டாக்டர் கிருஷ்ணா எல்லா

பாராளுமன்ற நடைமுறைகளின் சிறந்த இளம் பிரதிநிதி: கௌரவ் கோகோய்

ஆகியோருக்கு அவரவர் துறையின் சிறந்த பங்களிப்பிற்காக இவ்விருது வழங்கப்படுகிறது.

இந்த விருது விழா பொது ஊரடங்கு காரணமாக, வரும் 2022 பிப்ரவரி 3 ஆம் தேதி இணையம் வழியாக நடத்தப்படவுள்ளது.

Director Mani ratnam and Shankar Mahadevan wins Bharat Ashmitha award

மரண மாஸ் காட்டும் ‘மகான்’.; இணையத்தை தெறிக்க விடும் விக்ரம் – துருவ்

மரண மாஸ் காட்டும் ‘மகான்’.; இணையத்தை தெறிக்க விடும் விக்ரம் – துருவ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிப்ரவரி 10 ஆம் தேதி வெளிவரவிருக்கும் ‘சீயான்’ விக்ரமின் 60 ஆவது திரைபடமான –‘மகான்’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு, முன்னரே, அதிகம் எதிர்பார்க்கபட்ட சண்டைக்காட்சிகள் நிறைந்த இந்த திரைப்படத்தின் டீசரை ப்ரைம் வீடியோ சற்று முன்பு வெளியிட்டது.

பரபரப்பான இந்த டீசர் பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தும். மனதைக் கவரும் கதைக்களத்தோடு அதிரடிச் சம்பவங்கள் நிறைந்த “மகான்’ உலகத்தின் ஒரு பார்வையை அறிமுகப்படுத்துகிறது.

நட்பு, போட்டி ,மற்றும் விதியின் விளையாட்டின் சம்பவங்கள் பின்னிப்பிணைந்த ஒரு விறுவிறுப்பான கதை விவரிப்பை இந்த டீசர் மூலம் எதிர்பார்க்கலாம்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க, தயாரிப்பாளர் லலித்குமார் தயாரித்திருக்கும் இந்தத் திரைப்படம் ஒரு சாதாரண மனிதனையும், அவனைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகள்… அவனை மட்டுமல்லாமல் அவனைச் சுற்றியுள்ள மக்களையும் மாற்றுவதை விறுவிறுப்பாகக் காட்சிப்படுத்துகிறது.

வாழ்வில் உண்மையான தந்தை = மகன் உறவை கொண்ட ஜோடியான விக்ரம் மற்றும் துருவ் ஆகிய இருவரும் முதல் முறையாக ‘மகான்’ படத்தில் இணைந்து தோன்றுகிறார்கள்.

அவர்களுடன் முக்கியமான பாத்திரத்தில் பாபி சிம்ஹா மற்றும் சிம்ரன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

இந்த திரைப்படம் உலகம் முழுவதும் பிப்ரவரி 10 ஆம் தேதியன்று ப்ரைம் வீடியோவில் பிரத்யேகமாக வெளியிடப்படும்.

தமிழில் மட்டுமல்லாமல் மற்றும் இது மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் வெளியாகிறது. கன்னட மொழியில் இந்தத் திரைப்படம் “மகா புருஷா” என்று பெயரிடப்பட்டிருக்கிறது

Prime Video Unveils the Teaser of Upcoming Action Thriller ‘Mahaan’

More Articles
Follows