காணாமல் போன மாணவன் கதையை சொல்லும் ‘மயூரன்’

காணாமல் போன மாணவன் கதையை சொல்லும் ‘மயூரன்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mayuran movie deals with Missing Engineering StudentPFS ஃபினாகில் பிலிம் ஸ்டுடியோ என்ற பட நிறுவனம் சார்பில் K.அசோக்குமார்P.ராமன், G.சந்திரசேகரன், M. P. கார்த்திக் ஆகிய நால்வரும் இணைந்து தயாரித்திருக்கும் படம் “மயூரன்“.

மயூரன் என்றால் விரைந்து உன்னை காக்க வருபவன், வெற்றி புனைபவன் என்று பொருள்.

வேலாராமமூர்த்தி, ஆனந்த்சாமி (லென்ஸ்), அமுதவாணன் (தாரை தப்பட்டை), அஸ்மிதா (மிஸ் பெமினா வின்னர்) மற்றும் கைலாஷ், சாஷி, பாலாஜிராதாகிருஷ்ணன், ரமேஷ்குமார், கலை, சிவா ஆகியோர் நடித்துள்ளனர். குணச்சித்திர நடிகர்கள் அனைவரும் கூத்துப்பட்டறையைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒளிப்பதிவு – பரமேஷ்வர் (இவர் சந்தோஷ்சிவனிடம் உதவியாளராக பணியாற்றியவர்)

இசை – ஜுபின் (பழையவண்ணாரப்பேட்டை) மற்றும் ஜெரார்ட் இருவரும்.
பாடல்கள் – குகை மா.புகழேந்தி / எடிட்டிங் – அஸ்வின்
கலை – M.பிரகாஷ் / ஸ்டன்ட் – டான்அசோக்
நடனம் – ஜாய்மதி
தயாரிப்பு – K.அசோக்குமார், P.ராமன், G.சந்திரசேகரன், M. P. கார்த்திக்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – நந்தன் சுப்பராயன் (இவர் இயக்குனர் பாலாவின் நந்தா, பிதாமகன் போன்ற படங்களில் உதவியாளராக பணியாற்றியவர்)

படம் பற்றி இயக்குனர் நந்தன் சுப்பராயன் கூறியது…

சாதாரண குடும்பத்தின் கனவுகளை சுமந்துகொண்டு விடுதியில் தங்கி பொறியியல் உயர்கல்வி படிக்க வரும் மாணவன், ஒரு நள்ளிரவில் காணாமல் போனால் என்னவாகும் என்பதே கதை.

மொத்த குடும்பத்தின் ஒற்றை ஆதாரமான அவனைத் தேடிச் செல்கையில் காணாமல் போனதின் மர்ம முடிச்சுகள் மேலும்,

மேலும் இறுகி, அது சிக்கல்களையும், பிரச்சனைகளையும் உருவாக்குகின்றது. கல்லூரி விடுதிகள் என்பது வெறும் தங்கி போகும் வாடகை சத்திரம் அல்ல அது வாழ்க்கையை செதுக்கும் பட்டறை களம்.

அவர்களது எதிர்காலத்தை நல்ல விதமாகவோ மோசமானதாகவோமாற்றும் ரசவாதக் கூடம்.

நட்பு, அன்பு, நெகிழ்வு, குற்றப் பின்னணி, குரூர மனம், எனும் பல்வேறு மனித இழைகளால் நெய்யப்பட்ட உலகம்தான் கல்லூரி விடுதிகள்.

சாதாரண கூழாங்கற்கள், வைரக்கற்களாகவும் வைரக்கற்கள் கண்ணிமைக்கும் வினாடிகளில் காணாமல் போகவும் வாய்ப்பு உள்ள இடம். அங்கு ஏற்படும் பிரச்சனைகள் ஒரு தனி மனித வாழ்வை எவ்வாறு தலைகுப்புற கவிழ்த்து போடுகிறது என்பதை பற்றி பேசும்

படம் தான் மயூரன். ஒரு அருமையான கதை களத்தை விறுவிறுப்பான திரைக்கதை தேன் தடவி உருவாக்கியிருக்கிறோம்.

வேலாராமமூர்த்தி மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அவரை சுற்றிதான் கதை நகர்கிறது.

தயாரிப்பாளர் H.முரளி படத்தை தமிழகமெங்கும் ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியிடுகிறார்.

Mayuran movie deals with Missing Engineering Student

தனஞ்செயன் தயாரிப்பில் இணையும் சத்யராஜ் & சிபிராஜ்

தனஞ்செயன் தயாரிப்பில் இணையும் சத்யராஜ் & சிபிராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sathya team is back with Sathyaraj Sibiraj comboசிபிராஜ் தனது சினிமா பயணத்தை வெகு கவனமாக தேர்ந்தெடுத்து வெற்றி பெற்று வருகிறார். இந்நிலையில், வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் தனது அடுத்த படத்தினை அறிவித்துள்ளார்.

தமிழின் முன்னணி நடிகரான சத்யராஜ் தன் மகன் நடிகர் சிபிராஜுடன் இணைந்து ‘ஜாக்சன் துரை’ வெற்றிப்படத்தில் நடித்திருந்தார்.

இப்போது இந்தக் கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளது.

கடந்தாண்டின் கவனிக்கதக்க படைப்பான “சத்யா” படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தியும், நடிகர் சிபிராஜும் புதிய கதைக்களம் கொண்ட ஒரு திரைப்படத்தில் இணைகிறார்கள்.

முற்றிலும் புதுவித திரைக்கதை கொண்ட இப்படத்தினை தயாரிப்பாளர்கள் தனஞ்செயன் மற்றும் லலிதா தனஞ்செயன் தயாரிக்கிறார்.

இப்படத்தில் நடிகர்கள் சிபிராஜ், சத்யராஜ், நாசர் மற்றும் பலர் நடிக்க உள்ளார்கள். சைமன் கே.கிங் இசையமைக்க உள்ளார்.

படத்தின் மற்ற தொழில்நுட்பக்குழு உறுப்பினர்கள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

இப்படம் படப்பிடிப்பு வரும் நவம்பரில் தொடங்கப்பட்டு ஒரே கட்டமாக ஜனவரியில் முடிக்கப்பட உள்ளது.

கிரியேட்டிவ் எண்டர்டெய்னர் சார்பில் தனஞ்செயன் மற்றும் லலிதா தனஞ்செயன் இப்படத்தினை தயாரிக்க உள்ளார்கள்.

Sathya team is back with Sathyaraj Sibiraj combo

படக்குழு விவரம் :

வகைமை : சஸ்பென்ஸ் திரில்லர்
நடிகர்கள் : சிபிராஜ், சத்யராஜ், நாசர் மற்றும் பலர்.
தயாரிப்பு நிர்வாகம் : சரவணன்.எஸ்.
தயாரிப்பு மேற்பார்வை : CA ஜி.கோகுல்
இசை : சைமன் கே.கிங்
இயக்கம் : பிரதீப் கிருஷ்ணமூர்த்தி
தயாரிப்பாளர்கள் : Dr. ஜி.தனஞ்செயன் மற்றும் லலிதா தனஞ்செயன்
தயாரிப்பு நிறுவனம் : கிரியேட்டிவ் எண்டர்டெயினர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்.

மக்கள் தொடர்பு : தர்மதுரை.N & ரேகா

ரஜினி பட டைட்டிலுக்காக மோதும் தனுஷ் & ஜிவி. பிரகாஷ்; இதுக்கு என்டே இல்லையா?

ரஜினி பட டைட்டிலுக்காக மோதும் தனுஷ் & ஜிவி. பிரகாஷ்; இதுக்கு என்டே இல்லையா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

War between Dhanush and GV Prakash for Rajini movie titlesசூப்பர் ஸ்டார் ரஜினியின் சூப்பர் ஹிட் படத்தலைப்புகளை தங்கள் படங்களுக்கு வைப்பதை கோலிவுட் ஹீரோக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.

இதில் முக்கியமாக தனுஷ் மற்றும் ஜிவி. பிரகாஷ் இருவருக்குள்ளே போட்டியே நடக்கிறது எனலாம்.

மாப்பிள்ளை, பொல்லாதவன், தங்கமகன், படிக்காதவன் உள்ளிட்ட பல படத்தலைப்புகளை வைத்துக் கொண்டார் தனுஷ்.

எனக்கு இன்னொரு பேர் இருக்கு (பாட்ஷா பன்ச்), குப்பத்து ராஜா உள்ளிட்ட படத்தலைப்புகளை வைத்துக் கொண்டார் ஜிவி. பிரகாஷ்.

தற்போது எழில் இயக்கத்தில் இவர் நடித்து வரும் படத்திற்கு ஆயிரம் ஜென்மங்கள் என்ற படத்தலைப்பை வைத்துள்ளனர்.

இதுவும் ரஜினி படத்தலைப்பு தான் என்று நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை.

War between Dhanush and GV Prakash for Rajini movie titles

தீராத திருட்டுக் கதை பிரச்சினைகள்; சர்கார்ரை அடுத்து பிகிலும் சிக்கியது.!

தீராத திருட்டுக் கதை பிரச்சினைகள்; சர்கார்ரை அடுத்து பிகிலும் சிக்கியது.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Story theft case against Atlee for Bigilவிஜய் நடிப்பில் வெளியான சர்கார் திரைப்படத்தை முருகதாஸ் இயக்கியிருந்தார். இப்படத்தின் கதை திருட்டு வெட்ட வெளிச்சமாக பின்னர் ஒப்புக் கொண்டு படத்தின் தலைப்பை கதாசிரியர் பெயரை போட்டனர்.

தற்போது விஜய் நடித்து வரும் பிகில் படமும் திருட்டுக் கதை பிரச்சினையில் சிக்கிக் கொண்டுள்ளது.

அட்லீ இயக்கத்தில், ஏஆர். ரஹ்மான் இசையில் விஜய், நயன்தாரா, கதிர், இந்துஜா உள்ளிட்டோர் நடித்து வரும் படம் ‘பிகில்’.

இப்படத்தின் கதை தன்னுடையது என கே.பி. செல்வா என்பவர் வழக்கு தொடர்ந்தள்ளார்.

மேலும் படத்திற்கு தடையும் கேட்டிருந்தார்.

அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டதாக படத் தயாரிப்பு நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இதனையடுத்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப் போவதாக கே.பி. செல்வா அவருடைய முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில்…

“அஞ்சு மாசமா சிட்டி சிவில் கோர்ட்ல கேஸ் நடந்துட்டு இருக்கு, நெறய வாக்குவாதம் அதுல பிகில் கதை வேற என்னோட கதை வேறன்னு அவங்க சொல்லல, என்ன மீட் பண்ணலன்னு அவங்க சொல்லல !!

அவங்க சொன்னதெல்லாம் ‘காப்பிரைட்’ கேஸ் ஐகோர்ட்ல தான் நடக்கணும், அதனால இந்த கேஸ சிட்டி சிவில் கோர்ட்ல டிஸ்மிஸ் பண்ணுங்க” அப்டின்னுதான் மட்டும்தான் கடந்த அஞ்சு மாசமா அவங்க வக்கீல் வாதாடுனாங்க, செரி நேரமும் ரொம்ப போயிட்டே இருக்கு ,

அவங்களும் இவ்ளோ பேசுறாங்கன்னு நான் தான் நாமளும் ஐகோர்ட்ல கேஸ பாத்துக்கலாம்ன்னு, சிட்டி சிவில் கோர்ட்ல திரும்ப பெறும் மனு தாக்கல் பண்ண !! அதுக்கு நீதிபதி அத ஏற்றுக்கொண்டு பண்ணி கேஸ டிஸ்மிஸ் பண்ணாங்க !!

இன்னும் ஒரு வாரத்துல ஐகோர்ட்ல கேஸ் தாக்கல் பண்ண போற, ஆனா இதுக்கு நடுவுல ஏஜிஎஸ் தரப்பு பிரஸ் ரிலீஸ் ஒன்னு ரிலீஸ் பண்ணிருக்காங்க , அதுல உண்மையாவே எனக்கு என்ன புரியலன்னா நான் திரும்ப பெறும் மனு பண்ணி கேஸ் டிஸ்மிஸ் ஆனத, அவங்க என்னமோ வாதாடி ஜெயிச்சி கோர்ட்ல டிஸ்மிஸ் வாங்கினா மாதிரி எதுக்கு சொல்றாங்க !! நீங்க உண்மையா ஜெயிச்சீங்களா இல்லையான்னு உங்க மனசாட்சிக்கு தெரியும் !!

நான் கொஞ்சம் நாளா இத பத்தி பேச வேணா அப்டி பேசினா கதையை வெளிய சொல்லவேண்டிய சூழ்நிலை வரும்ன்னு அமைதியா இருந்த, இனிமேலும் அமைதியாதான் இருப்ப, ஆனா இப்ப நீங்கதான் என்ன வெச்சி சீப் பப்லிசிட்டி பண்ணிட்டு இருக்கீங்கன்றத மறந்துடாதீங்க !!,” எனப் பதிவிட்டுள்ளார்.

Story theft case against Atlee for Bigil

‘அசுரன்’ ஆடியோ வெளியீட்டை பிரம்மாண்டமாக நடத்த தாணு திட்டம்

‘அசுரன்’ ஆடியோ வெளியீட்டை பிரம்மாண்டமாக நடத்த தாணு திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Asuran audio launch grand function updatesபொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை படங்களை தொடர்ந்து 4வது முறையாக வெற்றிமாறன் மற்றும் தனுஷ் இணைந்துள்ள படம் அசுரன்.

இப்படத்தில் தனுஷ் 3 கெட் அப்புகளில் நடித்து வருகிறார்.

வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி தாணு தயாரித்து வரும் இப்படத்திற்கு ஜிவி. பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

மலையாள நடிகை மஞ்சு வாரியார் நாயகியாக நடிக்க பசுபதி, பாலாஜிசக்திவேல், சுப்ரமணியம் சிவா, ஆடுகளம் நரேன், பவன், அம்மு அபிராமி, கென் கருணாஸ் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் போஸ்டர்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு இருக்கிறார்களாம்.

கலைப்புலி தாணு என்றாலே பிரம்மாண்டம்தானே…

Asuran audio launch grand function updates

சூட்டிங் முடியும் முன்பே வியாபாரத்தில் கலக்கும் ‘காக்கி’

சூட்டிங் முடியும் முன்பே வியாபாரத்தில் கலக்கும் ‘காக்கி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Antonys Khaki movie trade updatesதிமிரு பிடிச்சவன் மற்றும் கொலைக்காரன் படங்களை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில், உருவாகி வரும் படம் காக்கி.

ஏ. செந்தில்குமார் இயக்கி வரும் இப்படத்தில் சத்யராஜ், ஸ்ரீகாந்த், இந்துஜா, ஈஸ்வரி ராவ், ஜான் விஜய், ரவி மரியா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

மனோஜ் பரமஹம்ச ஒளிப்பதிவு செய்ய அவ்கத் இசையமைத்துள்ளார்.

ஜீன் மாதம் இதன் முதற்கட்ட சூட்டிங் தொடங்கியது.

அக்டோபர் மாதத்திற்குள் படத்தின் ஒட்டு மொத்த சூட்டிங்கும் நிறைவு பெறும் எனத் தெரிகிறது.

இந்த நிலையில் இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் குழு எடிட் செய்த பதிப்பினைப் பார்வையிட்டு இப்பட உரிமைகளை வாங்கியுள்ளது.

அடுத்த ஆண்டு 2020 ஜனவரியில் படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர்.

Vijay Antonys Khaki movie trade updates

More Articles
Follows