மாநாடு’ படத்தை விட ட்விஸ்ட்.. ‘மன்மத லீலை’ கில்மா படமா.?.. முத்தத்தால் ஹீரோயின்ஸ்க்கு பாதிப்பில்ல..; பிரஸ்மீட் சுவாரஸ்யங்கள்

மாநாடு’ படத்தை விட ட்விஸ்ட்.. ‘மன்மத லீலை’ கில்மா படமா.?.. முத்தத்தால் ஹீரோயின்ஸ்க்கு பாதிப்பில்ல..; பிரஸ்மீட் சுவாரஸ்யங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rockfort Entertainment சார்பில் T.முருகானந்தம் தயாரிக்க, இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், அசோக் செல்வன் நடிப்பில், நவீன இளைஞனின் வாழ்வில் நடக்கும் லீலைகளை சொல்லும் ஒரு அருமையான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள படம் தான், “மன்மதலீலை”. இப்படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார்.

2022 ஏப்ரல் 1 உலகமெங்கும் இப்படம் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்து கொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

Rockfort Entertainment சார்பாக கிரியேடிவ் புரொடுயுசர் K.B.ஶ்ரீராம் அனைவரையும் வரவேற்றார்.

இந்நிகழ்வினில் Rockfort Entertainment சார்பாக நடிகர் சங்க துணைத் தலைவர் பூச்சி முருகனிடம், நடிகர் சங்க வளர்ச்சி நிதியாக ரூபாய் 5 லட்சத்திற்கான காசோலை அளிக்கப்பட்டது.

தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் T சிவா பேசியதாவது…

நிச்சயமாக இது ஆபாசமான படமல்ல. இயக்குநர் பாலசந்தர் இருந்து அவர் எடுத்திருந்தால் பாலச்சந்தரின் மன்மதலீலை என்று சொல்லக்கூடிய தகுதி கொண்ட படம். குழந்தைகளுடன் குடும்பங்களுடன் பார்க்க தகுதியுள்ள படம். ‘மாநாடு’ படத்தை விட அதிகமான டிவிஸ்ட்டுடன் இந்தப் படம் உங்களை ஆச்சரியப்படுத்தும், வெங்கட் பிரபு மிக அட்டகாசமாக இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

இந்த காலத்தின் ஜெமினி கணேசன் அசோக் செல்வன் தான். இந்தப் படம் மிக ஜாலியான படம். படம் மிக பெரிய வெற்றி பெறும் வாழ்த்துக்கள்

நடிகை ரியா சுமன் பேசியதாவது…

என்னுடைய முந்தைய படங்களை விட இப்படம் மிக வித்தியாசமான படம், வெங்கட் பிரபு படத்தில் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை. அவர் எனக்கு லீலா பாத்திரத்தை தந்ததற்கு நன்றி.

அசோக் செல்வனுடன் வேலை பார்த்தது மிக ஜாலியாக சந்தோஷமாக இருந்தது. இந்தப் படத்தை நீங்கள் சந்தோஷமாக பார்த்து ரசிக்கலாம். எல்லோருக்கும் நன்றி.

ஒளிப்பதிவாளர் தமிழ் A அழகன் பேசியதாவது…

இப்பட வாய்ப்பு தந்ததற்கு வெங்கட் பிரபு சாருக்கு நன்றி. அசோக் என் காலேஜ் சீனியர் அவருடன் வேலை பார்த்தது நல்ல அனுபவம். நான் வேலை பார்த்த தெலுங்கு படத்திலும் சம்யுக்தா ஹெக்டே தான் நாயகி. இதிலும் அவருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. படம் நன்றாக வந்துள்ளது எல்லோருக்கும் நன்றி.

நாயகி சம்யுக்தா ஹெக்டே பேசியதாவது..

எல்லோருக்கும் மிக்க நன்றி. இந்த படத்தில் வேலை செய்தது மிக மிக சந்தோஷமாக இருந்தது. ஏப்ரல் 1 தியேட்டரில் வருகிறது எல்லோரும் வந்து பாருங்கள். படம் உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாக பிடிக்கும் நன்றி.

நாயகன் அசோக் செல்வன் பேசியதாவது…

காலேஜ் முடிந்த காலத்தில் நண்பர்களுடன் சென்னை 28 பார்த்தோம், இப்போது வெங்கட் பிரபு அண்ணாவுடன் வேலை பார்த்தது வரம், கொரோனா டைம்ல பரிசோதனை முயற்சியாக இதை பண்ணலாம் என்றார். நடுவில் எனக்கு கொரோனா எல்லாம் வந்து போனது, அந்த நேரத்தில் எடுத்தது தான் இந்த முத்த காட்சிகள் எல்லாம். ஆனாலும் ஹீரோயின்கள் யாரும் பாதிப்பிற்கு உள்ளாகவில்லை. பலர் இந்தப் படம் ஏன் செய்தீர்கள் என கேட்டார்கள், இந்த படத்தில் எந்த கெட்ட விசயமும் இல்லை என எனக்கு தெரிந்தது. என்னை நான் ஒரு நடிகனாக மட்டுமே அடையாளப்படுத்தி கொள்ள விரும்புகிறேன். இந்தப் படம் மிக மிக நல்ல படம். எனக்கு வாய்ப்பு தந்த அனைவருக்கும் நன்றி.

ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன் பேசியதாவது…

கேமராமேன் தமிழ் A அழகன் என் உதவியாளர் தான். மிக நல்ல பையன். அவரது லீலைகளையே ஒரு படமாக எடுக்கலாம். வெங்கட் பிரபு ஒளிப்பதிவாளரை ஈஸியாக வைத்து கொள்வார். இசை நன்றாக இருக்கிறது. படமும் அழகாக வந்துள்ளது அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

தயாரிப்பாளர் சிங்காரவேலன் பேசியதாவது….

திரைக்கதையில் அசத்தகூடியவர்களில் சமீப காலத்தில் வெங்கட் பிரபுவை மிஞ்சும் வேறொருவர் இல்லை. மாநாடு படத்தில் அந்தளவு அசத்தியிருப்பார் அதே போல் இந்தப்படத்திலும் மிக வித்தியாசமாக அசத்தியுள்ளார். இந்தப் படத்திற்கு பிறகு அனைவரும் திரைக்கதைக்காக வெங்கட் பிரபுவை பாராட்டுவார்கள். எல்லோருக்கும் லாபம் தந்த படம் மாநாடு, அதே போல் இந்த படமும் வெற்றி பெறும் நன்றி.

நடிகர் நிதின் சத்யா பேசியதாவது…

இந்தப்படம் நான் பார்த்து விட்டேன் இது அடல்ட் படம் கிடையாது. இது வெங்கட் பிரபுவின் விருந்தாக இருக்கும். அசோக் செல்வனை பார்த்து பொறாமையாக உள்ளது. இந்தப் படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றி பெறும்.

இசையமைப்பாளர் பிரேம்ஜி பேசியாதாவது…

அண்ணன் படத்திற்கு நான் இசையமைத்து படம் ரிலீஸாவது மகிழ்ச்சி. கல்யாணமான அனைவரும் பார்க்க வேண்டிய படம், 2010 லும் 2020 லும் நடக்க கூடிய கதை. படத்தில் பெண்களை உஷார் செய்வது எப்படி என அசோக் சொல்லி தருவார்.

எல்லோரும் பார்க்கக்கூடிய படம். எங்க அண்ணனுக்கு பயங்கரமான மூளை. ஒவ்வொரு படமும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். இந்த படத்தில் நிறைய க்ளாப்ஸ் கிடைக்கும். படத்தை தியேட்டரில் பார்த்து ரசியுங்கள் நன்றி.

நடிகர் சங்க துணை தலைவர் பூச்சி முருகன் பேசியதாவது…

இந்தப்படத்திற்கு என்னை அழைத்த போது நான் பொதுவாக சினிமா விழாக்களுக்கு வருவதில்லை என மறுத்தேன், நடிகர் சங்கத்திற்கு நிதி அளிப்பதாக சொன்னார்கள் நடந்தே வருகிறேன் என்றேன். இந்தப்படம் எல்லோரும் நன்றாக இருப்பதாக சொல்கிறார்கள் இது அடல்ட் படம் அல்ல, வெங்கட் பிரபு மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அவர் தம்பியுடன் இணைந்து நல்ல படங்கள் தந்து வருகிறார். இந்தப் படம் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன் அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

இயக்குநர் வெங்கட் பிரபு பேசியதாவது…

என்னுடைய உதவியாளர் மணிவண்ணனின் கதை தான் இது. கொரோனா காலத்தில் வித்தியாசமாக ஏதாவது செய்யலாம் என்ற பொது இந்தக் கதை வந்தது, அருமையான கதை. மணிவண்ணன் பெரிய இடத்திற்கு செல்வார். அசோக்கை கொரோனா நேரத்தில் சந்தித்து இந்தக் கதை சொன்னேன் உடனே செய்யலாம் என்றார்.

என் உடன் பணிபுரிந்த கலைஞர்களின் உதவியாளர்கள் மூன்று பேருடன் இப்படம் செய்துள்ளேன். யுவனின் உதவியாளர் தான் பிரேம்ஜி. இப்படம் கில்மா படம் கிடையாது. எனக்கும் பெண் குழந்தைகள் இருக்கிறார்கள், நான் அப்படி படம் எடுக்க மாட்டேன்.

இந்தப் படம் கண்டிப்பாக அனைவரும் இணைந்து ரசிக்கும் படியான படமாக இருக்கும் உங்களுக்கு பிடிக்கும். இப்படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி.

Manmatha Leelai Press Meet highlights

தமன் இசையில் சிவகார்த்திகேயன் ஜோடியாக உக்ரேனியன் நடிகை ஒப்பந்தம்

தமன் இசையில் சிவகார்த்திகேயன் ஜோடியாக உக்ரேனியன் நடிகை ஒப்பந்தம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘SK 20’ படத்தின் படப்பிடிப்பு, மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் நடிக்கும் பிரபல நடிகர் நடிகைகள் குறித்த தகவல்கள் ரசிகர்களிடம் ஏற்கனவே ஆவலை குவித்த நிலையில், அடுத்த அதிரடியாக படத்தின் நாயகி குறித்து அற்புதமான தகவல்கள் வெளியாகியுள்ளது.

உக்ரேனியன் நடிகை மரியா ரியாபோஷப்கா இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படத்திற்கு அவரது பங்களிப்பு மிகப்பெரும் பலமாக அமையும் என ஒட்டுமொத்த படக்குழுவினரும் நம்புகிறார்கள்.

சர்வதேசத் திரைப்படங்களில் தனது சிறப்பான நடிப்பிற்காக விமர்சன ரீதியாக பெரும் பாராட்டுக்களை குவித்தவர் அவர். இப்படத்திற்காக பல கலைஞர்களை பரிசீலித்த பிறகு, தயாரிப்பாளர்கள் மரியா ரியாபோஷப்கா படத்தின் பாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமானவர் என்று கருதி அவரை தேர்ந்தெடுத்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பில் அவர் ஏற்கனவே பங்குகொண்டு நடித்து வருகிறார்.

இப்படத்தை சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமான ‘ஜதி ரத்னதாலு’ படம் மூலம் புகழ் பெற்ற அனுதீப் KV இயக்குகிறார்.

நாராயண்தாஸ் நரங், சுரேஷ் பாபு, மற்றும் புஸ்கூர் ராம் மோகன் ராவ் இணைந்து தயாரிக்க, அருண் விஷ்வா இப்படத்தில் இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கப்பட்டது.

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயனுடன் இணைந்து திரையுலகில் இணையும் இந்தப் படத்தில் சத்யராஜ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தின் முக்கிய பகுதிகள் காரைக்குடி மற்றும் பாண்டிச்சேரியின் கவர்ச்சிகரமான இடங்களிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் படமாக்கப்படுகிறது.

இந்த படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைப்பது மிகப்பெரிய சிறப்பம்சமாகும். தமன் தொடர்ந்து சார்ட்பஸ்டர் ஆல்பங்களை வழங்கி வருவதால், சிவகார்த்திகேயனுடன் அவரது கூட்டணி ரசிகர்களுக்கு பெரு விருந்தாக இருக்கும்.

Ukraine actress is on board for Sivakarthikeyan’s next

‘பீஸ்ட்’ ரிலீஸ் தேதியில் மாற்றம்.; அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி

‘பீஸ்ட்’ ரிலீஸ் தேதியில் மாற்றம்.; அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பீஸ்ட்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

இவர்களுடன் யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்து சிவகார்த்திகேயன் எழுதிய ‘அரபிக்குத்து’ பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் யூடியூப்பில் பல சாதனைகளையும் படைத்தது .

இதன் பின்னர் அனிருத் இசையில் விஜய் பாடியிருக்கும் ‘ஜாலியோ ஜிம்கானா’ பாடல் வெளியானது. இந்த பாடலும் சாதனைகளை படைத்து வருகிறது.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 20ல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கொரோனா சூழ்நிலை காரணமாக நடைபெறவில்லை.

எனவே ‘பீஸ்ட்’ படம் ரிலீசை விஜய் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்தனர்.

ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என கூறப்பட்டதால் அந்த அறிவிப்பை ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருந்த நிலையில் பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ம் தேதி (ஒரு நாள் முன்னதாக) திரையரங்கில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் இன்று அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு நிச்சயம் விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக தான் இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

Here’s Vijay’s Beast official release date

ரஜினி வரிசையில் புரொமோசன் பெற்ற நடிகர் லிங்கேஷ்..; ரஞ்சித் பாராட்டு

ரஜினி வரிசையில் புரொமோசன் பெற்ற நடிகர் லிங்கேஷ்..; ரஞ்சித் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினியுடன் கபாலி, கஜினிகாந்த், குண்டு, மெட்ராஸ், வி1, பரியேறும்பெருமாள் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்தவர் லிங்கேஷ்.

தற்போது இரண்டு படங்களில் கதாநாயகனாக நடித்துவருகிறார்.

(ரஜினி, சத்யராஜ், சரத்குமார் உள்ளிட்ட பல நடிகர்கள் வில்லனாக நடித்து பின்னரே ஹீரோவாக புரோமோசன் அடைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.)

மாணவர்களின் கல்விக்கடன் அதன் பின்னால் இருக்கும் அரசியல், சமூக பிரச்சினைகள் பற்றி திரில்லர் காமெடி கலந்த கதையமைப்போடு ‘காலேஜ்ரோடு’ படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

M P Entertainment தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஜெய் அமர்சிங் இயக்கியிருக்கிறார். ஆப்ரோ இசையமைப்பில் கதைநாயகனாக லிங்கேஷ் நடித்திருக்கிறார்.
படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது.விரைவில் திரைக்கு வரும் இந்தப்படத்தில் இசையமைப்பாளராக பா.இரஞ்சித்தின் கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் குழுவில் பணியாற்றிய ஆப்ரோ இசையமைத்திருக்கிறார்

இந்தபடத்தை சமீபத்தில் பார்த்த பா.இரஞ்சித் லிங்கேஷை பாராட்டியிருக்கிறார்.

மாணவர்களின் கல்விக்கடன் குறித்த அரசியல் பேசினாலும் கமர்சியலாக இருக்கிறது , மாணவர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்று கூறி குழுவினருக்கு வாழ்த்துக்கள் சொல்லியிருக்கிறார்

மகிழ்ச்சியான காலேஜ்ரோடு குழுவினர் வெளியீட்டுக்கு தயாராகின்றனர். சமூகத்தின் அழுத்தத்தால் மனிதனின் இயல்பான காதலும், அதன் பொருட்டு நடக்கும் சிக்கல்களையும் உணர்வுப்பூர்வமாக பேசும் ‘காயல்’ என்கிறபடத்திலும் நாயகனாக நடித்து வருகிறார்.

நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் காயத்ரி , பாடகர் ஸ்வாகதா க்ரிஷ்ணன் , அனுமோல் நடித்துள்ளார்கள்.

இயக்குனர் தமயமந்தி இயக்கத்தில் ‘காயல்’ படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று இறுதிக்கட்ட பணிகள் நடைபெருகிறது.

கதையின் நாயகனாக நடிக்க ஆரம்பித்துவிட்டீர்கள் இனி நாயகனாக மட்டுமே நடிப்பீர்களா என்கிற கேள்விக்கு….

நான் நடிகன் நடிக்க வந்திருக்கிறேன் .இதில் எந்த வேடம் கொடுத்தாலும் நடிப்பதுதான் நடிகனின் கடமை. இரண்டு படங்களில் கதா நாயகனாக நடிக்க வாய்ப்பு வந்தது நடித்தேன். வில்லன் வேடம் வந்தாலும் நடிப்பேன். கதைதான் கதாபாத்திரங்களை தீர்மானிக்கிறது, அந்த கதாபாத்திரங்களில் நமக்கு எது பொருத்தமாக இருக்கிறதோ அதைதான் இயக்குனர்கள் நமக்கு கொடுக்கப்போகிறார்கள்.

நமக்கு பொருத்தமானதாக இருக்கும்பட்சத்தில் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் நடிப்பேன். மொத்ததில் நல்ல நடிகனாக இருக்கவேண்டும் அவ்வளவுதான் ‘இயக்குனர்களின் நடிகனாகவே இருக்க ஆசைப்படுகிறேன்” என்கிறார் லிங்கேஷ்.

Actor Lingesh movie College Road news updates

மோகனை ஆக்சன் களத்தில் இறக்கிய விஜய்ஸ்ரீ..; ‘ஹரா’ இனி வேற லெவல்

மோகனை ஆக்சன் களத்தில் இறக்கிய விஜய்ஸ்ரீ..; ‘ஹரா’ இனி வேற லெவல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1980களில் ரஜினி கமல் உச்சத்தில் இருந்தபோதே அவர்களுக்கு இணையாக ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட நடிகர் மோகன்.

இவரது படங்களும் சரி பாடல்களும் சரி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. இவருடைய படங்கள் பெரும்பாலும் வெள்ளி விழா படங்களே. எனவே இவரை வெள்ளி விழா நாயகன் என்று அழைப்போரும் உண்டு.

இவரது படங்களில் இடம்பெற்ற பாடல்களுக்கு என்றே தனி ரசிகர்கள் ரசிகைகள் பட்டாளமும் உண்டு.

90கள் வரை நடித்து வந்த இவர் ஏனோ சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். ஓரிரு படங்களில் பின்னர் நடித்தாலும் அவை எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இதன்பின்னர் பிரபல தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் என பலர் இவரை நடிக்க அழைத்தாலும் ஏனோ வரவில்லை.

ஆனால்…. என்ன மாயம் மந்திரம் செய்தாரோ-? நடிகர் மோகனை கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு பிறகு அதே ஹீரோவாகவே நடிக்க அழைக்க வந்துவிட்டார் இயக்குனர் விஜய்ஸ்ரீ.

இவர்கள் இணையும் படத்தின் அறிவிப்பை 2022 புத்தாண்டு பிறந்த தினத்தில் வெளியிட்டனர்.

‘ஹரா’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்தில் நாயகியாக குஷ்பூ நடிக்கிறார். மோகனுடன் குஷ்பூ இணையும் முதல் தமிழ் படம் இதுவாகும். தயாரிப்பாளர் எஸ்.பி.மோகன்ராஜ் இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.

இந்த நிலையில் ‘ஹரா’ படத்தின் முதற்கட்ட சூட்டிங்கை சென்னையில் ஓரிரு தினங்களுக்கு முன் தொடங்கிவிட்டார் விஜய்ஸ்ரீ.

அனல் பறக்கும் ஆக்சன் காட்சிகளில் மோகனை நடிக்க வைத்து படமாக்கியிருக்கிறார்.

80களில் மோகன் நடித்தபோது பெரும்பாலும் ரொமான்டிக் படங்களில் மட்டுமே நடித்து வந்தார். தற்போது அவரை ஆக்சன் ஹீரோவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் இயக்குனர்.

இது தொடர்பான போஸ்டர்களில் டெரர் லுக்கில் தாடியுடன் காணப்படுகிறார் மோகன்.

ஹராவின் கதைப்படி சட்ட நுனுக்களை சாமானியனும் தெரிந்துக் கொள்ள வேண்டும் என கதைக்களம் அமைத்திருக்கிறாராம் விஜய்ஸ்ரீ.

‘ஹரா’ படத்தின் 2ஆம் கட்ட படப்பிடிப்பை கோவை உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மாதம் நடத்தவிருக்கிறார்களாம்.

ம்…ம்… அப்படின்னா ‘ஹரா’…. வேற லெவல் தான்…

Vijay Sri kick starts his Haraa with Mohan in Action mode

தியேட்டரில் ஓடாத ‘வலிமை’-யை ஓடிடியில் வெளியிட பிரம்மாண்ட ஏற்பாடு

தியேட்டரில் ஓடாத ‘வலிமை’-யை ஓடிடியில் வெளியிட பிரம்மாண்ட ஏற்பாடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவான ‘வலிமை’ படம் கடந்த் பிப்ரவரி 24ல் தியேட்டர்களில் 4 மொழிகளில் வெளியானது.

இந்த படத்தை உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்தார் தயாரிப்பாளர் போனிகபூர்.

மோசமான விமர்சனங்கள் படத்திற்கு கிடைத்துவிட்டதால் ஓரிரு தினங்களுக்கு பிறகு ஓப்பனிங் கிடைக்கவில்லை.

தற்போது ரிலீசாகி 25 நாட்களை கடந்து விட்ட நிலையில் ஜீ5 ஓடிடி தளத்தில் மார்ச் 25ல் வலிமையை ஒளிப்பரப்ப செய்யவுள்ளனர்.

இதற்கான அறிவிப்பை சென்னை YMCA மைதானத்தில் 10,000 சதுர அடி பிரம்மாண்ட போஸ்டர் மூலம் அறிவித்தது ஜீ5 நிறுவனம்.

இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Ajiths Valimai on Zee 5 OTT announced with a 10000 sq ft poster

More Articles
Follows