லாரன்ஸ் – கதிரேசன் இணையும் ‘ருத்ரன்’ பட ஃபர்ஸ்ட் லுக் அப்டேட்

லாரன்ஸ் – கதிரேசன் இணையும் ‘ருத்ரன்’ பட ஃபர்ஸ்ட் லுக் அப்டேட்

சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘ஜிகிர்தண்டா’ உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர்  கதிரேசன்.
இவரை பைவ் ஸ்டார் கதிரேசன் என்று அழைத்தால் மட்டுமே பலருக்கு தெரியும்.
பிரபல தயாரிப்பாளரான இவர் தற்போது இயக்குனராக அவதாரம் எடுக்கிறார். இவர் இயக்குநராக அறிமுகமாகும் படம் ’ருத்ரன்’.
இதில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்க முக்கிய வேடங்களில் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா உட்பட பலர் நடிக்கின்றனர்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க  ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.
இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் அடுத்த வாரம் தொடங்குகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தியில் இப்படம் உருவாகுகிறது.
 இங்கு ராகவா லாரன்ஸ், சரத்குமார் மோதும் சண்டைக் காட்சி 10 நாட்கள் படமாக்கப்படுகிறது.
இப்படத்தின் சண்டைக் காட்சியை ஸ்டன்ட்  சிவா அமைக்கிறார். இதற்காக ரூ.1 கோடி செலவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளதாம்.
இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகிறது.
பழையபடி கேப்டனாக விஜயகாந்த் கர்ஜிக்க வேண்டும்.; இறைவனிடம் ரஜினி வேண்டுதல்

பழையபடி கேப்டனாக விஜயகாந்த் கர்ஜிக்க வேண்டும்.; இறைவனிடம் ரஜினி வேண்டுதல்

தமிழ் சினிமாவில் கேப்டன் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் விஜயகாந்த்.
இவரது படங்களில் பஞ்ச் வசனங்களும் ஆக்சன் காட்சிகளும் அனல்பறக்கும்.
ஒருகட்டத்தில் சினிமாவை விட்டு விலகி தீவிர அரசியலில் ஈடுபட்டார்.
தேமுதிக என்ற கட்சியை நிறுவி அதன் தலைவராக பதவி வகித்து வருகிறார் விஜயகாந்த்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் அரசியலில் முழுமையாக ஈடுபட முடியாமல் தவித்து வந்தார்.
கடந்த 14-ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இன்று இது தொடர்பாக தேமுதிக வெளியிட்ட அறிக்கையில்…
“நீண்ட வருடங்களாக இருக்கும் நீரழிவு பிரச்சினை காரணமாக விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால், டாக்டர்கள் ஆலோசனைப்படி நேற்று விரல் அகற்றப்பட்டது.
டாக்டர்கள் கண்காணிப்பில் தற்போது அவர் நலமுடன் உள்ளார். டாக்டர்கள் ஆலோசனைப்படி தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிகிச்சை முடிந்து ஓரிரு நாளில் விஜயகாந்த் வீடு திரும்புவார். அவரது உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியான கருத்துகளை நம்ப வேண்டாம்.”
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.
இந்த செய்தியை நம் filmistreet தளத்தில் பார்த்தோம்.
இந்த நிலையில் விஜயகாந்த உடல் நலம் குறித்து ரஜினிகாந்த் தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது…
என் அருமை நண்பர் விஜயகாந்த் அவர்கள் விரைவில் குணமடைந்து பழையபடி கேப்டனாக கர்ஜிக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்….
எனப் பதிவிட்டுள்ளார் ரஜினிகாந்த்.
சூர்யாவுக்கு 1.. பஹத்துக்கு 1 கார்த்திக்கு 1.; விக்ரம் படத்தை பிரித்து மேயும் லோகேஷ்

சூர்யாவுக்கு 1.. பஹத்துக்கு 1 கார்த்திக்கு 1.; விக்ரம் படத்தை பிரித்து மேயும் லோகேஷ்

கமல்ஹாசன் தயாரிப்பில் உருவான திரைப்படம் ‘விக்ரம்’.

லோகேஷ் இயக்கிய இந்தப் படத்தில் கமல்ஹாசன் பகத்பாசில், விஜய் சேதுபதி சூர்யா, காளிதாஸ், நரேன், ஷிவானி, மைனா, காயத்ரி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

அனிருத் இசையமைத்திருந்த இந்தப் படம் ஜூன் 3ம் தேதி வெளியானது.

இப்படம் வெளியான முதல்நாள் முதலே படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்தது.

படம் வெளியாகி மூன்று வாரங்கள் கடந்து விட்ட போதிலும் இன்றும் பல திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்தப் படத்தின் மொத்த வசூல் மட்டும் இதுவரை ரூ.350 கோடியைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதில் சூர்யா நடித்த ரோலஸ் கேரக்டர் பெரும் வரவேற்பை பெற்றது.

விக்ரம் படத்தின் அடுத்த பாகத்தில் ரோலஸ் கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என நடிகர் கமல்ஹாசனே தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் பகத் பாசில் நடித்த அமர் என்ற கேரக்டரையும் மெருகேற்றி ஒரு புதிய கதையை உருவாக்க போகிறாராம் லோகேஷ்.

கமலின் ‘விக்ரம்’ கேரக்டர் சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டர் பகத்தின் அமர் கேரக்டர் என ஒவ்வொரு கேரக்டருக்கும் தனித்தனியாக கதைகளை அமைத்து மூன்றையும் ஒன்றாக இணைக்க திட்டமிட்டிருக்கிறாராம் லோகேஷ்.

இதில் அமர் கேரக்டரின் முந்தைய காலகட்டம் சொல்லப்படும் என தெரியவந்துள்ளது.

மேலும் விக்ரம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கார்த்தி நடித்த கைதி படத்தின் காட்சிகள் இடம் பெற்றது. எனவே கார்த்தியின் டெல்லி கேரக்டரும் அடுத்த பாகத்தில் இடம் பெறும் என நம்பலாம்.

எனவே கைதி மற்றும் விக்ரம் படங்களின் தொடர்புள்ள காட்சிகளும் அடுத்த பாகத்தில் இடம்பெற இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

Lokesh Kanagaraj talks about his upcoming films

மீனவ இளைஞனும் மார்வாடி பெண்ணும்.; மகனை ஹீரோவாக்கி படமெடுக்கும் சரண்ராஜ்

மீனவ இளைஞனும் மார்வாடி பெண்ணும்.; மகனை ஹீரோவாக்கி படமெடுக்கும் சரண்ராஜ்

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரியா, பெங்காலி உட்பட பல 9 மொழிகளில் 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் நடிகர் சரண்ராஜ்.

நாயகன், குணசித்திரம், வில்லன் என எந்த கதா பாத்திரத்திலும் தனி முத்திரை பதித்து, மக்களின் மனதில் தனித்த இடம் பிடித்தவர். ஒரு சிறு இடைவேளைக்கு பிறகு மீண்டும் இப்படம் மூலம் இயக்குநராக கால் பதிக்கிறார்.

இந்த புதிய திரைப்படத்திற்கு “குப்பன்” என பெயர் வைத்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம் அவரே எழுதுகிறார்.

35 வருஷமா பாலவாக்கத்தில இருக்கேன். தினமும் நாயை கூட்டிட்டு கடற்கரை வழியா வாக்கிங் போவதுண்டு. அப்போ பல பேர் பழக்க மாகி அங்கு அரட்டை அடிச்சிட்டு தான் வீட்டுக்கு வருவேன்.

அப்படிதான் குப்பன் என்ற ஃபிஷர்மேன் பழக்கமாச்சி. அப்போ தான் தோணிச்சு.. ஒரு ஃபிஷர்மேன் கதையை நாம ஏன் எழுத கூடாதுன்னு. கதை எழுதி முடிச்சதும் நண்பர் பெயரையே தலைப்பாக வெச்சுட்டேன். அதுதான் “குப்பன்”. அவரும் இதில் சின்ன கேரக்டரில் நடித்துள்ளார்.

பைலட்டாக இருந்து, நடிப்பு கல்லூரியில் சிறப்பு பயிற்சி எடுத்து கொண்ட சரண்ராஜின் இரண்டாவது மகன் தேவ் சரண்ராஜ் நாயகனாக அறிமுகமாகிறார்.

இன்னொரு நாயகனாக ஆதி தேவ் அறிமுகமாகிறார். இவர்களுடன் சுஷ்மிதா சுரேஷ், பிரியதர்ஷினி அருணாசலம் நாயகிகளாக அறிமுகமாகுகிறார்கள்.

மேலும் சரண்ராஜும் நீண்ட நாள்களுக்கு பின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மகன் தேவ் சரண்ராஜின் மாமனாக சரண்ராஜ் நடித்து வருகிறார்.

ஒரு குப்பத்து மீனவ இளைஞனுக்கும் மார்வாடி பெண்ணுக்கும் நடக்கும் காதல் கதை தான் இந்தப்படம்.

ஒளிப்பதிவு : ஜனார்தன்,
இணை இயக்கம், பாடல்கள் : K.சுரேஷ் குமார்

இப்படத்தின் படப்பிடிப்பு, சென்னை பாலவாக்கத்தில் ஆரம்பமாகி விசாகப்பட்டினம், ஐதராபாத் போன்ற இடங்களில் தொடர்ந்து நடந்து வருகிறது.

விரைவில் இதன் ஃபர்ஸ்ட் லுக் வெளிவரும்.

Soni sri productions “KUPPAN”

Dev charanraj (hero)
Adhi (2 nd hero)
Sushmitha (heroine)
Priya (2nd heroine)
And Charanraj

Story, Screenplay, Dialogue & Direction : Charanraj.NY
Camera : Janarthan
Editor : S P.Ahammed
Music : S.G.Elai
Stunt : Ohmkar
Dance : Dayana
Production exquitive : Thangaraj
PRO : Johnson
Lyrics & Co.direction :
K.Sureshkumar

Produced By Soni Sri Production

Actor Saran Raj turns hero for his son

விஜய் 66 படத்திற்கு ‘வாரிசு’ என தலைப்பிட்டு பர்ஸ்ட் லுக் வெளியானது

விஜய் 66 படத்திற்கு ‘வாரிசு’ என தலைப்பிட்டு பர்ஸ்ட் லுக் வெளியானது

தளபதி விஜய் நடிக்கும் புதிய படத்திற்கு வாரிசு என பெயரிடப்பட்டுள்ளது .

நெல்சன் இயக்கிய ‘பீஸ்ட்’ படத்தைத் தொடர்ந்து தற்போது தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்குவதால் இது விஜய் நடிப்பில் உருவாகும் முதல் தெலுங்கு படம் என்றும் கூறலாம்.

கார்த்தியை வைத்து தோழா, மகேஷ் பாபுவை வைத்து மஹரிஷி போன்ற ஹிட் படங்களை கொடுத்துள்ளார் வம்சி.

இந்த படத்தை தில் ராஜூ தயாரிக்கும் இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

இதில் விஜய்யுடன் ராஷ்மிகா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது.

விஜய்-அஜித் இணைந்து நடிக்கும் பான் இந்தியா படம்.; இயக்குனர் இவரா.?

‘விஜய் 66’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

(வரும் ஜூன் 22-ம் தேதி நடிகர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு ஒரு நாள் முன்னதாக ஜூன் 21-ம் தேதி மாலை 6.01 மணிக்கு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.) இந்த செய்தியை நம் தளத்தில் பதிவிட்டு இருந்தோம்.

அதன்படி இன்று ஜூன் 21ஆம் தேதி மாலை 6 மணிக்கு ‘வாரிசு’ என தலைப்பிட்டு இப்பட பர்ஸ்ட் லுக்கை அறிவித்துள்ளனர்.

இந்த போஸ்டரில்… நடிகர் விஜய் கேஸ்சூவலாக சேர் மீது கோர்ட் சூட் போட்டு அமர்ந்து இருப்பது போல் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

விஜய் நடித்த பூவே உனக்காக… காதலுக்கு மரியாதை… பட பாணியில் குடும்ப சென்டிமென்ட் ஆக இந்த படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

வாரிசு

Thalapathy 66 is titled Varisu . First look poster is out

JUST IN விஜயகாந்தின் கால் விரல்கள் அகற்றம்.; ஆஸ்பத்திரி அதிர்ச்சி அறிக்கை

JUST IN விஜயகாந்தின் கால் விரல்கள் அகற்றம்.; ஆஸ்பத்திரி அதிர்ச்சி அறிக்கை

தமிழ் சினிமாவில் கேப்டன் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் விஜயகாந்த்.

இவரது படங்களில் பஞ்ச் வசனங்களும் ஆக்சன் காட்சிகளும் அனல்பறக்கும்.

ஒருகட்டத்தில் சினிமாவை விட்டு விலகி தீவிர அரசியலில் ஈடுபட்டார்.

தேமுதிக என்ற கட்சியை நிறுவி அதன் தலைவராக பதவி வகித்து வருகிறார் விஜயகாந்த்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் அரசியலில் முழுமையாக ஈடுபட முடியாமல் தவித்து வந்தார்.

கடந்த 14-ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இது தொடர்பாக தேமுதிக வெளியிட்ட அறிக்கையில்…

“நீண்ட வருடங்களாக இருக்கும் நீரழிவு பிரச்சினை காரணமாக விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால், டாக்டர்கள் ஆலோசனைப்படி நேற்று விரல் அகற்றப்பட்டது.

டாக்டர்கள் கண்காணிப்பில் தற்போது அவர் நலமுடன் உள்ளார். டாக்டர்கள் ஆலோசனைப்படி தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிகிச்சை முடிந்து ஓரிரு நாளில் விஜயகாந்த் வீடு திரும்புவார். அவரது உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியான கருத்துகளை நம்ப வேண்டாம்.”

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

DMDK leader Vijayakanth’s latest health update

More Articles
Follows