ஃபிரண்ட்ஷிப் காமெடி எனும் ஜானரில் முதன் முறையாக B.E. BAR

ஃபிரண்ட்ஷிப் காமெடி எனும் ஜானரில் முதன் முறையாக B.E. BAR

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காவல் துறை உங்கள் நண்பன் திரைப்படம் அதன் தீவிரமான கருத்து, ஈர்க்கும் கதை அமைப்பு மற்றும் நடிகர்களின் அற்புத நடிப்பிற்காக அனைவராலும் பெருமளவில் பாராட்டப்பட்டது. இந்த திறமைமிகுந்த திரைக்குழுவினர், “பி.ஈ. பார்” (B.E. BAR) என்ற தலைப்பில் தங்கள் இரண்டாவது திரைப்பட பயணத்தை தற்போது துவக்கியுள்ளனர் இந்த குழுவின் முந்தைய திரைப்படம் நமது மனதை உலுக்கும் ஒரு பரபரப்பான கதைக்களத்தை கொண்டிருந்தது.

ஆனால் இந்த இரண்டாவது படைப்பு , முழுக்க முழுக்க காமெடி சரவெடியாக “ஃபிரண்ட்ஷிப் காமெடி” ( FRI-COM ) எனும் புது ஜானரில் உருவாகவுள்ளது.

இக்கதையின் மையம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் தங்கள் அரியரை கிளியர் செய்ய படும்பாடுகளை சுற்றியே அமைக்கப்பட்டுள்ளது.

மோ மற்றும் காவல்துறை உங்கள் நண்பன் ஆகிய படங்களில் தனது சிறப்பான நடிப்பால் பார்வையாளர்களையும், விமர்சகர்களையும் கவர்ந்த சுரேஷ் ரவி இப்படத்தில் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார்.

கதாநாயகியாக சதுரங்க வேட்டை புகழ் இஷாரா நாயர் நடிக்கிறார். தம்பி ராமையா, லிவிங்ஸ்டன், கல்லூரி வினோத், மது, ரேணுகா மற்றும் பல முன்னணி நட்சத்திர நடிகர்கள் இப்படத்தில் இணைந்து நடிக்கிறார்கள்.

காவல்துறை உங்கள் நண்பன் படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் RDM இப்படத்தை இயக்குகிறார்.

தொழில்நுட்பக் குழுவில் விஷ்ணு ஸ்ரீ K.S., ஆதித்யா & சூர்யா (இசை), வடிவேல் & விமல்ராஜ் (எடிட்டிங்), சிவராஜ் (கலை), கல்லூரி வினோத் (வசனம்), ஞானகரவேல் & கானா பிரபா (பாடல் வரிகள்) ஆகியோர் பணிபுரிகின்றனர்.

“பி.ஈ. பார்” (B.E. BAR) படத்தினை Absolute Pictures நிறுவனம் சார்பில் மால்கம், BR Talkies Corporation மற்றும் White Moon Talkies உடன் இணைந்து தயாரிக்கிறார்.

B. பாஸ்கரன், P. ராஜபாண்டியன், மற்றும் சுரேஷ் ரவி ஆகியோர் இப்படத்தை இணைந்து தயாரிக்கின்றனர்.

தற்போது, படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

KUN fame Suresh Ravi and Ishara Nair joins for BE Bar

‘ஜெய்பீம்’ ராசாக்கண்ணு நடிகர் இயக்கத்தில் ‘நரை எழுதும் சுயசரிதம்’

‘ஜெய்பீம்’ ராசாக்கண்ணு நடிகர் இயக்கத்தில் ‘நரை எழுதும் சுயசரிதம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமீபத்தில் வெளியான ‘ஜெய்பீம்’ (கேரக்டர் பெயர் ராசாக்கண்ணு) படத்தின் மூலம் பெரும் கவனம் ஈர்த்த நடிகரும், திரை எழுத்தாளருமான மணிகண்டன் இயக்கத்தில் உருவான முதல் திரைப்படமான ‘நரை எழுதும் சுயசரிதம்’ சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

ஜி&கே வாஹினி புரொடக்‌ஷன்ஸ் சார்பாக ஷஷாங்க் வெண்ணெலகண்டி இப்படத்தை தயாரித்துள்ளார்.

பல்வேறு சர்வதேச திரைப்பட திருவிழாக்களில் விருதுகளை அள்ளிய ‘நரை எழுதும் சுயசரிதம்’ திரையுலகினர் உள்ளிட்ட தரப்பினரின் பாராட்டுகளை ஏற்கனவே பெற்றுள்ளது.

தற்போது ரசிகர்களின் பார்வைக்காக சோனி லிவ்வில் வெளியிடப்பட்டுள்ளது.

டெல்லி கணேஷ், மணிகண்டன், மிர்ச்சி விஜய், ஆதவன், ஆர்ஜே சிவச்சங்கரி, ராகெண்டு மவுலி, பிரவீன் ராஜா மற்றும் ஷோபனா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம், வாழ்வின் அழகிய மற்றும் உணர்ச்சிப்பூர்வமான கணங்களின் கோர்வையாக அமைந்துள்ளது.

பணியில் இருந்து ஓய்வை நோக்கித் தள்ளப்படும் ஒருவரின் வாழ்வில் வேலையில்லாத இளைஞர் ஒருவரை சந்தித்தவுடன் பெரும் மாற்றம் ஏற்படுகிறது. பின்னர் என்ன நடக்கிறது என்பதே ‘நரை எழுதும் சுயசரிதம்’.

சமீபத்தில் வெளியான ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ திரைப்படத்தின் விஷால் வெங்கட் இப்படத்தின் இயக்குநர் குழுவில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தயாரிப்பாளர் ஷஷாங்க் வெண்ணெலகண்டி தெலுங்கு திரையுலகில் பிரபல எழுத்தாளர் ஆவார்.

‘நரை எழுதும் சுயசரிதம்’ திரைப்படத்தின் ஒளிப்பதிவை ஆர் வசந்த குமார் கையாள, ரதன் மற்றும் பவன் இசையமைத்துள்ளனர். ராஜேஷ் ராமகிருஷ்ணன் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.

ஜி&கே வாஹினி புரொடக்‌ஷன்ஸ் சார்பாக ஷஷாங்க் வெண்ணெலகண்டி தயாரித்து, நடிகர் மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘நரை எழுதும் சுயசரிதம்’ சோனி லிவ்வில் வெளியிடப்பட்டுள்ளது.

Jai Bhim Mani Kandan’s directorial debut is titled Narai Ezhuthum Suyasarithai

விஜய்தேவர கொண்டாவுடன் ஜோடி போடும் ‘வலிமை’ புரொடியூசரின் மகள்.?

விஜய்தேவர கொண்டாவுடன் ஜோடி போடும் ‘வலிமை’ புரொடியூசரின் மகள்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் விஜய்தேவர கொண்டா. இவருக்கு தமிழகத்திலும் ரசிகர்கள் உள்ளனர்.

இவர் தற்போது தெலுங்கில் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் “லைகர்” என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படம் பான் இந்தியா படமாக தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் உருவாகி வருகிறது.

இதில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக தற்போது அனன்யா பாண்டே நடித்து வருகிறார்.

இந்த படத்தில் முதலில் நாயகியாக நடிக்க மறைந்த ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூரை தான் அணுகினார்களாம். ஆனால் அவரால் அப்போது கால்ஷீட் தர முடியாது என மறுத்துவிட்டாராம்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா ஒரு படத்தில் நடிக்கிறாராம்.

அந்த புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூருடன் பேச்சுவார்த்தை தொடங்கியதாகவும் அவரும் ஓகே சொல்லிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இது உறுதியாகும் பட்சத்தில் இந்த படம் மூலம் நடிகை ஜான்வி கபூர் தெலுங்கு சினிமாவில் நுழையவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜான்வி கபூரின் அப்பா தான் அஜித் நடிக்கும் வலிமை படத்தை தயாரித்து வருகிறார் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

Vijay Devarakonda and Janhvi Kapoor joins for a new film

Dear.. Who killed my husband..? விரைவில் ரிலீசாகும் 2D இணையத் தொடர்

Dear.. Who killed my husband..? விரைவில் ரிலீசாகும் 2D இணையத் தொடர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழில் சோகம், தாகம், பகை, காதல் என பல உணர்வுகளை உள்ளடக்கி பல சினிமாக்கள், பல இணையத் தொடர்கள் வந்தாலும், அது பார்க்கும் ரசிகர்களை எதுவரை தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தரும் கதைகளில் தான் உள்ளது.

இங்கு இரு இயக்குனர்கள் உணர்ச்சி மற்றும் சோகம் என இரு உணர்வுகளையும் மையப்படுத்தி ஒரு இணையத் தொடரை இயக்கியிருக்கின்றனர்.

Dear என வைக்கப்பட்டுள்ள கதை உணர்ச்சியை மையப்படுத்தியும், Who killed my husband என வைக்கப்பட்டுள்ள கதை சோகத்தை மையப்படுத்தியும் உருவாகியுள்ளது.

இந்த இரு உணர்வுகளையும் கொண்டு “2D” இணையத் தொடரை உருவாக்கியுள்ளனர் இரு இயக்குனர்களான DJ மற்றும் கணே ரமேஷ்.

முதல் கதையான “Dear”ல்

16 வயது நிரம்பிய காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத இளம்பெண் காணாமல் போகிறாள். அந்த பெண் தொலைந்து போனாளா.? அல்லது கடத்தப்பட்டாளா.? என்பதை உணர்ச்சிமிக்க ஒரு கதையாக உருவாகியுள்ளதுதான் “Dear”

இரண்டாவது கதையான Who killed my husband ல்

நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தில், குடும்பத் தலைவன் சிலரால் கொலை செய்யப்படுகிறார். யார் அந்த கொலையை செய்தது என்ற தேடுதல் வேட்டையில் மனைவி களம் இறங்குகிறார். சோகம் கலந்த கதையாக உருவாகியுள்ளது தான் இந்த “Who killed my husband” தொடர்.

இத்தொடரின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. பலராலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த ட்ரெய்லர் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

80 நிமிடங்கள் கொண்ட இத்தொடர் , 4 பாகங்களாக வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Dear தொடரை இயக்குனர் DJ இயக்கியிருக்கிறார். Who killed my husband இயக்குனர் கணே ரமேஷ் இயக்கியிருக்கிறார்.

இத்தொடரில் ப்ரியதர்ஷினி, யாசர், திடியன், அனு, செளமியா, கேயன், சரோ ராஜ்குமார், சித்ரா, மோகன், வேத்ய, கார்த்திக் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

இசையை ஆதித்யா மற்றும் சரவணன் தீபன் கவனித்திருக்கிறார்கள்.

மகேஷ் ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

படத்தொகுப்பு கணே ரமேஷ், நடன இயக்குனராக அருண், பாடலாசிரியராக ஹரிஹரன் உள்ளனர்.

TORTOISE MOVIES நிறுவனம் சார்பில் இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இன்னும் சில தினங்களில் இத்தொடர் வெளியாகும் தேதி அறிவிக்கப்படும் என கூறியுள்ளனர் படக்குழுவினர்.

Directors DJ and Ramesh joins for 2d web series

‘எத்தன நமக்கு கஷ்டமடி..’… டயலாக்கை பாடல் என கூறிய ‘மகான்’ டீம்

‘எத்தன நமக்கு கஷ்டமடி..’… டயலாக்கை பாடல் என கூறிய ‘மகான்’ டீம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் ‘மகான்’. சீயான் விக்ரம் நடிப்பில் வெளியாகும் அறுபதாவது திரைப்படமான இதிலிருந்து இரண்டாவது பாடல் வெளியாகி இருக்கிறது.

‘எவன்டா எனக்கு கஸ்டடி..’ எனத் தொடங்கும் இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியிருக்க, பாடலுக்கு இசை அமைத்து, சந்தோஷ் நாராயணன் பாடியிருக்கிறார்.

இந்தப் பாடல் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கில் ‘யெவ்வர்ரா மனகி கஸ்டடி..’ என்றும், மலையாளத்தில் ‘இனி ஈ லைப்ஃபில்..’ என்றும், கன்னடத்தில் ‘யவனோ நமகே கஸ்டடி..’ என்றும் வெளியாகியிருக்கிறது.

இது பாடல் என்பதை விட டயலாக் கோர்வை என்றே சொல்லலாம். சமீப காலமாக சந்தோஷ் நாராயணன் இசையில் இது போல டயலாக் பாடல்கள் நிறைய வருகிறது. (கேட்டால் இதற்கு ட்ரெண்ட்டி ராப் சாங் என்பார்கள் என்பது வேறுகதை..)

வளர்ந்து வரும் நாளை தலைமுறையினர்.. ஓ.. பாடல் என்றால் இப்படித்தான் இருக்கும் என நினைப்பார்கள் போல..

ஒரே வார்த்தையில் சிம்பிளாக சொன்னால் ‘எவன்டா எனக்கு கஸ்டடி.’ என்ற அவர்கள் வெளியிட்ட பாடலை கேட்டால் ‘எத்தன நமக்கு கஷ்டமடி..’… என்றே சொல்ல தோன்றுகிறது..

சீயான் விக்ரம் நடித்த ‘மகான்’ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருக்கிறார். இதனை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லலித்குமார் தயாரித்திருக்கிறார்.

இந்தப்படத்தில் சீயான் விக்ரமுடன் அவரது மகன் துருவ், பாபி சிம்ஹா, சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக உலகம் முழுவதும் வெளியிடப்படுகிறது.

தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் ‘மகான்’ வெளியாகிறது. கன்னடத்தில் இந்த படத்திற்கு ‘மகா புருஷா’ என பெயரிடப்பட்டிருக்கிறது.

மகான் என்பது, தனக்கென சில இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டு தனிமனித சுதந்திரத்துடன் லட்சிய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இதன்போது அவரது குடும்பத்தை விட்டு அவர் வெளியேற வேண்டிய சூழல் உருவாகிறது. கோடீஸ்வரனாக வேண்டும் என்ற தனது கனவு நனவான பிறகு, தன்னுடைய சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ள வாரிசு இல்லையே..! என்ற இழப்பை உணர்கிறார். அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கிறது.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி நல்லதொரு தந்தையாக வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் தொடர்ந்தாரா.. என்பதை பரபரப்பான அதிரடி மிகுந்த படைப்பாக ‘மகான்’ உருவாகியிருக்கிறது. எதிர்பாராத தொடர் நிகழ்வுகளின் வழியாக நாயகனது வாழ்க்கை எப்படி பயணிக்கிறது என்பதை ஆக்சன் திரில்லருடன் விவரிக்கிறது ‘மகான்’ படத்தின் திரைக்கதை.

தமிழில் வெளியாகியிருக்கும் ‘எவன்டா எனக்கு கஸ்டடி..’ எனத் தொடங்கும் பாடலின் லிங்க்…

Chiyaan Vikram’s Mahaan new single Evanda Enakku Custody released

விஜய்யை அவர் இவர் என அழைக்கமுடியாது..; ரசிகர்களை டென்ஷனாக்கிய வனிதா

விஜய்யை அவர் இவர் என அழைக்கமுடியாது..; ரசிகர்களை டென்ஷனாக்கிய வனிதா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை வனிதா விஜயகுமார்… இந்த பேர கேட்டாலே ச்சும்மா அதிருதுல்ல என்ற ரஜினி வசனத்திற்கு ஏற்ப சோஷியல் மீடியாக்களை அதிர வைத்து வருபவர் இவர்.

இவர் கலந்துக் கொள்ளும் நிகழ்ச்சிகளில் ஏதாவது பேசி சர்ச்சையை ஏற்படுத்திவிடுவார்.

சில மாதங்களுக்கு முன் 3வது திருமணம் செய்து பின்னர் சில நாட்களிலேயே பீட்டர் பாலை வெறுப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள இருக்கிறார்.

மற்றொரு புறம் பவர் ஸ்டார் சீனிவாசன் ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார் வனிதா. இவையில்லாமல் சில படங்களிலும் கமிட்டாகி உள்ளார்.

இந்த நிலையில் நடிகர் விஜய் குறித்து ஒரு பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.

அதில்… ‘விஜய்யுடன் நான் நடித்தபோது அவரிடம் எப்படி பேசி பழகினேனோ அப்படிதான் இன்றைக்கும் பேசுவேன். நான் திமிராக ஏதோ மரியாதை குறைவாக பேசுவதாக பலருக்கு தோன்றலாம். விஜய்யை அவர் இவர் என திடீரென மரியாதையாக மாற்ற முடியாது.” என பேசியுள்ளார் வனிதா.

‘சந்திரலேகா’ என்ற படத்தில் விஜய்க்கு ஜோடியாக வனிதா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vanitha Vijayakumar talks about Thalapathy Vijay

More Articles
Follows