தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழில் டாப் ஹீரோக்களின் முதல் சாய்ஸ் ஆக மாறிவிட்டார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
மலையாள சினிமாவில் இருந்து இவர் வந்தாலும் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளிலும் இவருக்கு பெரிய மார்க்கெட் உருவாகியுள்ளது.
கிட்டதட்ட ரூ. 2 முதல் 2.5 கோடி ரூபாய் வரை சம்பளம் கொடுக்க தயாராக உள்ளனர்.
இந்நிலையில் மலையாளத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் கீர்த்தி.
இப்படத்தை பிரியதர்ஷன் இயக்கவுள்ளார். இந்த கூட்டணி பல முறை இணைந்துள்ளது.
இப்படத்திற்கு மராக்கர்: அரபிக்கடலிண்டே சிம்ஹம் என தலைப்பிட்டுள்ளனர்.
இதில் மோகன் லாலின் இளவயது கதாபாத்திரத்தில் அவரது மகன் பிரணவ் மோகன்லால் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பிரியதர்ஷனின் மகளான கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்.
கீர்த்தி சுரேஷ் மலையாளத்தில் அறிமுகமானதே பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடித்த கீதாஞ்சலி படத்தில்தான் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.