தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கன்னட திரையுலகில் பிரபல நடிகராக திகழ்பவர் நிதின் கோபி.
நடிகர் நிதின் கோபி திரையுலகில் பிரபலமான புல்லாங்குழல் வாசிப்பாளரான கோபியின் மகன்.
இவர் விஷ்ணுவர்தன் நடித்த ‘ஹலோ டாடி’ என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானார்.
இவர் கேரளித கேசரி, முத்தினந்த ஹெண்டதி, நிஷ்யப்தா, சிரபாந்தவ்யா என 30-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
நிதின் கோபி வெள்ளித்திரை படங்களில் மட்டுமல்லாமல் பல சின்னத்திரை தொடர்களில் நடித்ததுடன் இயக்கவும் செய்துள்ளார்.
இவர் பெங்களூர், இட்டமடுவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தன் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்றைய தினம் நிதின் கோபி வீட்டில் உள்ளபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
அவரை மருத்துவமனையில் கொண்டு சென்ற போது, வரும் வழியிலயே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
39 வயதான நிதினின் திடீர் மரணம் திரையுலகினர் மத்தியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவரின் மறைவிற்கு திரையுலகை சார்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
kannada actor nithin gopi passes away at the age of 39