ஜெயலலிதாவாக நடிக்க கங்கனா ரணாவத்துக்கு இத்தனை கோடியா.?

ஜெயலலிதாவாக நடிக்க கங்கனா ரணாவத்துக்கு இத்தனை கோடியா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (4)மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கையை பலரும் படமாக்க உள்ளனர் என்பதை பலமுறை பார்த்துவிட்டோம்.

மிஷ்கினின் உதவி பெண் இயக்குனர் பிரியதர்ஷினி ஐயர்ன் லேடி என்ற பெயரில் படத்தை இயக்குவதாக அறிவித்துள்ளார். இதில் ஜெயலலிதா கேரக்டரில் நித்யா மேனன் நடிக்கிறார்.

சசிகலா கேரக்டரில் வரலட்சுமி நடிப்பார் என கூறப்படுகிறது.

மேலும் இயக்குனர்கள், பாரதிராஜா, விஜய், லிங்குசாமி ஆகியோரும் ஜெயலலிதா படத்தை இயக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் கவுதம் மேனன் ஜெயலலிதா வாழ்க்கையை இணைய தொடராக இயக்கி வருகிறார்.

இதில் இயக்குனர் விஜய் இயக்கும் படத்திற்கு ‘தலைவி’ என தலைப்பு வைத்து பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர்.

ஜெயலலிதா வேடத்தில் நடிக்க கங்கனா ரணாவத் நடிக்கிறார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நடிக்க கங்கனா ரணாவத்துக்கு ரூ.24 கோடி சம்பளம் பேசி இருப்பதாக கூறப்படுகிறது.

தலைவி படப்பிடிப்பு ஏப்ரலில் துவங்கவுள்ளது.

மக்கள் செல்வனை சங்கத் தமிழனாக மாற்றும் விஜய்சந்தர்

மக்கள் செல்வனை சங்கத் தமிழனாக மாற்றும் விஜய்சந்தர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (3)நம் கை மற்றும் கால் விரல்களை சேர்த்தால் கூட விஜய்சேதுபதி நடிக்க ஒப்புக் கொண்ட படங்களை எண்ணிவிட முடியாது.

தினம் ஒரு இயக்குனரிடம் கதை கேட்டும் சில இயக்குனர்களிடம் ஒப்புக் கொண்டும் வருகிறார்.

தற்போது வாலு, ஸ்கெட்ச் படங்களை இயக்கிய விஜய் சந்தர் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

விஜயா புரொடக்க்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரிக்கும் இந்த படத்திற்கு சங்கத்தமிழன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இதில் நாயகிகளாக ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் ஆகிய இருவரும் நடிக்க, சூரி, நாசர், அசுதோஷ் ராணா, ரவி கிஷான், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய், ஸ்ரீமான் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

விவேக்-மெர்வின் இருவரும் இசையமைக்க வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

எம்.பிரபாகரன் கலையை கவனிக்க பிரவீன்.கே.எல். படத்தொகுப்பையும் கவனித்து வருகிறர்.

ன்றனர்.

முதல்கட்ட சூட்டிங்கை முடித்த படக்குழுவினர் விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பை துவங்கவுள்ளனர்.

சூர்யா 38 படம் குறித்த தகவல்களை வெளியிட்ட ஜிவி. பிரகாஷ்

சூர்யா 38 படம் குறித்த தகவல்களை வெளியிட்ட ஜிவி. பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள `என்ஜிகே’ வருகிற மே 31ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது-

தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் ‘காப்பான்’ படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.

இதனை தொடர்ந்து விரைவில் `இறுதிச்சுற்று’ பட இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தை சூர்யாவே தன் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பாக தயாரிக்கிறார்.

சூர்யாவின் 38-வது படமாக உருவாகும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். பாடலாசிரியர் விவேக் பாடல்களை எழுதுகிறார்.

இந்நிலையில் இப்படம் குறித்த தகவலை ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

ஆடியோ இறுதி வேலைகள் நடந்து வருவதாகவும், விரைவில் சூட்டிங் தொடங்க இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.

மேலும் இப்படம் ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகும் 70-வது படமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘கீதா கோவிந்தம்’ நாயகி ராஷ்மிகா

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘கீதா கோவிந்தம்’ நாயகி ராஷ்மிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyanராஜேஷ் இயக்கத்தில் மிஸ்டர் லோக்கல் என்ற ஒரு படம், ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படம், மித்ரன் இயக்கத்தில் ஹீரோ, பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படம் என மளமளவென படங்களை ஒப்புக் கொண்டு நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இதற்கு அடுத்து லைகா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ள பட அறிவிப்பையும் அண்மையில் அறிவித்தனர்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சூட்டிங்கை இந்தாண்டு ஜூலையில் தொடங்கவுள்ளனர்.

தற்போது முதற்கட்டப் பணிகள் நடந்து வரும் நிலையில் தெலுங்கில் ஹிட்டான கீதா கோவிந்தம் பட நாயகி ராஷ்மிகா மந்தனாவை நாயகியாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

ஏற்கெனவே பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்திலும் ராஷ்மிகா தான் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் விரைவில் இணைய உள்ளதாக செய்தி வந்தது. படக்குழுவோ திரைக்கதை பணிகள் இன்னும் முடியவில்லை.

தென்சென்னையை மீண்டும் தன் வசமாக்கும் Dr ஜெ.ஜெயவர்தன் MP?

தென்சென்னையை மீண்டும் தன் வசமாக்கும் Dr ஜெ.ஜெயவர்தன் MP?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Current MP Dr J Jayavardhan and South Chennai constituency news updatesவருகிற ஏப்ரல் 18ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது.

மேலும் 18 தொகுதிகளுக்கு சட்டமன்ற இடைத்தேர்தலும் நடைபெறவுள்ளது.

தமிழகத்தின் சிறந்த ஆளுமைகளாக விளங்கிய கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவரின் மறைவுக்கு பின்னர் நடக்கும் முதல் தேர்தல் இது என்பதால் தமிழகத்தை இந்திய அரசியலே உற்று கவனித்து வருகிறது.

இந்நிலையில் தென் சென்னை தொகுதி மற்றும் அதன் வேட்பாளர் டாக்டர் ஜெ. ஜெயவர்தன் குறித்து காண்போம்.

கடந்த 2008-ல் மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுவரையறையின்படி தென்சென்னை தொகுதியில் விருகம்பாக்கம், தியாகராயநகர், சைதாப்பேட்டை, மயிலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இணைக்கப்பட்டன.

இந்த தொகுதியில் 2009-ல் நடைபெற்ற தேர்தலில் திரு சி ராஜேந்திரன் அஇஅதிமுக வேட்பாளராக போட்டியிட்டு 3,08,567 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இது மொத்த வாக்குகளில் 42.38 விழுக்காடு என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு பின்னர் கடந்த 2014-ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது.

அப்போது தமிழத்தில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி நடைபெற்று கொண்டிருந்தது.

அச்சமயம் டாக்டர் ஜெயவர்தன் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டார். இவர் இந்த தொகுதியில் வசித்து வருகிறார்.

இவர் 4,34,540 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இது மொத்த வாக்குகளில் 41.34 விழுக்காடாகும்.

தற்போது இந்த 2019 தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தன் மீண்டும் அதே வெற்றி உற்சாகத்துடனும் களம் காண்கிறார்.

தென் சென்னை தொகுதி மக்களிடம் எந்த கெட்ட பெயரும் வாங்காமல் நல்ல திட்டங்களை நிறைவேற்றி மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளவர் இவர்.

இவரை எதிர்த்து திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிடுகிறார்.

இளம் வேட்பாளரும் அடிப்படையில் மருத்துவருமான Dr. ஜெ.ஜெயவர்தன் M.P அவர்களுக்கா? அல்லது தொகுதிக்கு அறிமுகமே இல்லாத தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களுக்கா? என்பதை சில நாட்கள் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகமுள்ளது என கள ஆய்வு செய்யும் நிபுணரிடம் கேட்டபோது…

“தென்சென்னையில் இம்முறை தேர்தல் களம் பரபரப்பாக உள்ளது. இரண்டு மாபெரும் தலைவர்களும் இல்லாமல் தமிழகத்தின் பிரதான இருபெரும் கட்சிகள் தேர்தலை சந்திக்கின்றன.

தென்சென்னையை பொறுத்தவரை தொகுதியில் சிறப்பாக பணியாற்றி கெட்டபெயர் எதுவும் எடுக்காமல் தொகுதிக்கு அறிமுகமான Dr. ஜெ. ஜெயவர்தனுக்கு அறிமுகம் ஏதும் தேவையில்லை.

ஆனால் திமுகவை பொறுத்தவரை அவர்களுது வேட்பாளருக்கே முதலில் அறிமுகம் தேவை.” என்றனர்.

1977 மற்றும் 1980-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இத்தொகுதியிலிருந்து போட்டியிட்ட திரு ஆர் வெங்கட்ராமன் வெற்றி பெற்று மத்திய அமைச்சராக பணியாற்றியதுடன் பின்னர் துணை குடியரசுத் தலைவராகவும், குடியரசுத்தலைவராகவும் (1910-2009) பணியாற்றினார் என்பது கூடுதல் தகவல்..

Current MP Dr J Jayavardhan and South Chennai constituency news updates

Current MP Dr J Jayavardhan with TN CM EPS

விமலுக்கு வில்லனாக பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் ?

விமலுக்கு வில்லனாக பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் ?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Public Star Durai Sudhakar as baddie in Kalavani 2விமல் மற்றும் ஓவியா நடிப்பில் இயக்குனர் சற்குணம் இயக்கிய முதல் படம் களவாணி.

இப்படம் அனைத்து சென்டர்களிலும் நல்ல வரவேற்பை பெற்று ஓடியது.

தற்போது களவாணி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் சற்குணம்.

முதல் பாகத்தில் நடித்த பலரும் இந்த பாகத்திலும் நடித்து வருகின்றனர்.

இவர்களுடன் மயில்சாமி, பப்ளிக் ஸ்டார் துரை சுதாகரும் இணைந்துள்ளனர்.

இதில் துரை சுதாகர் வில்லன் வேடம் ஏற்றுள்ளதாகவும், அவரின் வில்லன் கேரக்டர் முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் இடம்பெற்ற ஓட்டு கேக்க வந்தாய்ங்களா… பாடல் அனைவரையும் கவர்ந்துள்ளது.

தற்போது இறுதிகட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் வருகிற மே மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Public Star Durai Sudhakar as baddie in Kalavani 2

More Articles
Follows