தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
உலகமெங்கும் கொரோனா வைரஸ் தன் கோரதாண்டவத்தை காட்டி வருகிறது. இதனால் பல உயிர்கள் தினம் தினம் செத்து மடிகிறது.
இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 1 வாரம் ஆகி விட்டநிலையில் மக்கள் வெளியே சென்றுவருவதால் இதன் பாதிப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு நோயாளிகளின் எண்ணிக்கை 50ஐ கடந்துவிட்டது.
ஒரு பக்கம் மருத்துவர்கள் இந்த கொரோனாவை கட்டுப்படுத்த போராடி கொண்டிருக்க மற்றொரு பக்கம் வெட்டியாக வெளியே திரியும் மக்களை கட்டுப்படுத்த காவல்துறை போராடி வருகிறது.
துப்புரவு தொழிலாளர்களும் பத்திரிகையாளர்களும் கொரோனா பீதியிலும் தங்கள் உயிரை பணயம் வைத்து போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமங்லஹாசன் தன் ட்விட்டரில் சற்றுமுன் கூறியுள்ளதாவது…
Kamal Haasan
போருக்கு ஆயுதம் இன்றி வீரர்களை அனுப்புவது நியாயமா? முறையான பாதுகாப்பு உபகரணங்கள் கேட்கும் மருத்துவ ஊழியர்களின் குரலுக்கு செவி மடுக்க வேண்டும். அரசின் உடனடி கவனம் தேவைப்படும் அந்த கோரிக்கை, போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்பட வேண்டும்.
என அரசுக்கு வேண்டுகோள் விடுத்து தன் கருத்தை பதிவிட்டுள்ளார்.
Kamal request to Govt regarding Medical equipment for Doctors