ஓலைச்சுவடி பின்னணியில் உருவாகியுள்ள படம் “ கள்ளத்தனம் “

ஓலைச்சுவடி பின்னணியில் உருவாகியுள்ள படம் “ கள்ளத்தனம் “

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (9)கண்ணன் கிரியேசன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக K.தங்கவேலு தயாரித்திருக்கும் படம் “ கள்ளத்தனம் “இந்த படத்தின் யுகன், வினோ இருவரும் கதாநாயகர்களாக நடித்திருக்கிறார்கள்.கதாநாயகிகளாக சொப்னா நகினா இருவரும் நடித்துள்ளனர். மற்றும் மணிகண்ணன், முல்லை, அம்மு மார்டின்,அல்வாவாசு, கோவைசெந்தில், கிச்சி மார்டின் இவர்களுடன் ஏராளமான கூத்துப்பட்டறை நடிகர்களும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – எடிசன் M.S. அமர்நாத்

இசை – ரவிகிரண்

எடிட்டிங் – லட்சுமணன்

நடனம் – ராஜு

தயாரிப்பு – K.தங்கவேலு

இணை தயாரிப்பு – T.R.கார்த்திக் தங்கவேலு

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் – C.தண்டபாணி

படம் பற்றி இயக்குனர் C.தண்டபாணி கூறியது..

ஹீரோ கிராமத்தில் வேளாண்மை படிப்பு படித்துவிட்டு அங்குள்ள விவசாய மக்களுக்கு மண் ஆராய்ச்சி செய்து உதவி வருகிறார். அந்த சமயத்தில் ஊரில் வில்லன் பல வகையில் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறான். எதிர்பாரா விதமாக ஹீரோ வீட்டில் புதையல் சம்மந்தமாக ஒரு ஓலைச் சுவடி இருப்பதும் அதில் பல ரகசியங்கள் அடங்கி இருப்பதை எப்படியோ தெரிந்துகொண்டு வில்லன் அந்த ஓலைச் சுவடியை கைப்பற்ற நினைக்கிறான். இதனால் நாயகனுக்கும் வில்லன் கும்பலுக்கும் சண்டை நடக்கிறது. இறுதியில் ஓலைச்சுவடியை வில்லன் கைபற்றினானா இல்லை நாயகன் அதை தடுத்தாரா புதையல் யாருக்கு கிடைத்தது என்பதை காமெடி கலந்து கமர்ஷியலாக சொல்லுகிறோம்.

படப்பிடிப்பு செங்கம் சாத்தனூர், செஞ்சி, வேலூர் போன்ற இடங்களில் நடைபெற்றது. விரைவில் படம் திரைக்கு வர உள்ளது என்றார் இயக்குனர் C.தண்டபாணி.

முன்னாள் மிஸ் இந்தியாவை கரம் பிடிக்கவுள்ளார் நடிகர் மஹத்

முன்னாள் மிஸ் இந்தியாவை கரம் பிடிக்கவுள்ளார் நடிகர் மஹத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (3)சிம்புவின் நண்பரும் நடிகருமான மகத் திருமணம் செய்யவுள்ளார்.

இவர் அஜித்துடன் மங்காத்தாவில் நடித்திருந்தார்.

அதன் பிறகு பிரியாணி, வடகறி, சென்னை 28, அன்பானவன் அடங்காதன் அசராதவன் படங்களில் நடித்திருந்தார்.

தற்போது வந்தா ராஜாவாத்தான் வருவேன், யாகன், கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

இந்நிலையில் 2012ம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டம் வென்ற பிராச்சி மிஸ்ராவை காதலித்துள்ளார்.

விரைவில் இவர்கள் திருமணம் செய்யவுள்ளனர்.

அடிக்கடி அரசியல் பேசும் சிம்பு ஏன் ஓட்டு போடவில்லை தெரியுமா..?

அடிக்கடி அரசியல் பேசும் சிம்பு ஏன் ஓட்டு போடவில்லை தெரியுமா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)நாடாளுமன்றத் தேர்தல் தமிழக வாக்குப்பதிவு இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது.

இதில் நடிகர்கள் ரஜினி, கமல், சூர்யா, விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன், தனுஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் ஆர்வமாக வாக்களித்தனர்.

தி.நகர் பகுதி வாக்குச் சாவடியில் தான் சிம்புவும் ஓட்டு போடுவார் என செய்தியாளர்கள் காத்திருந்தனர். ஆனால் அவர் வரவில்லை.

இதற்கு அவர் தந்தையும், நடிகரும், அரசியல் தலைவருமான டி.ராஜேந்தர் விளக்கம் அளித்துள்ளார்.

சிம்பு எப்போதும் வாக்களிக்க தவறியதில்லை. ஆனால், தற்போது அவர் லண்டனில் இருக்கிறார். அவரால் வர முடியாத சூழ்நிலை. என தெரிவித்துள்ளார்.

ஓட்டு போடுங்க… ஸ்டார் ஹோட்டல்ல செமயாய் சாப்பிடுங்க..!

ஓட்டு போடுங்க… ஸ்டார் ஹோட்டல்ல செமயாய் சாப்பிடுங்க..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Poll your vote and get offer in Clarion President hotelகுடிமக்களாகிய நாம் அனைவரும் தவறாமல் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் 50 சதவீத தள்ளுபடியில் உணவருந்தும் ஒரு வாய்ப்பு.

ஏதோ பல காரணங்களைக் காட்டி தேர்தலில் நாம் வாக்களிக்க பலரும் முன்வருவதில்லை. ஒரு நாட்டினுடைய வளர்ச்சி என்பது அந்தத் தேர்தலில் மக்களின் பங்களிப்பை ஒட்டியே இருக்கும்.

இந்தியாவைப் பொறுத்தமட்டில் ஒட்டுமொத்தமாக தேர்தல் வாக்குப்பதிவு என்பது 65 முதல் 75 சதவீதம் வரை மட்டுமே உள்ளது.

ஆனால் வெளிநாடுகளில் வாக்குப்பதிவு சதவீதம் 90 ஐ தாண்டுகிறது. எனவே உண்மையான ஜனநாயகம் மலர அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டியது அவசியம் என்கிறார் சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள Clarion President ஹோட்டல் உரிமையாளர் அபூபக்கர்/

18 ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை 50 சதவீத தள்ளுபடி விலையில் தரமான உணவுகள் இங்கு கொடுக்கப்படுகிறது.

வாக்களித்ததன் அடையாளமாக ஆட்காட்டி விரலின் மையை காட்டினால் போதும்.18 முதல் 21ம் தேதி வரை ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் ஹோட்டலுக்கு வரலாம் ஒவ்வொரு முறை உணவு அருந்தும் போதும் 50 சதவீத தள்ளுபடி வழங்கப்படும்.

மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வாக்களிப்பது என்பது நம் மிக முக்கியமான கடமை என்பதை உணரும் நோக்கமாக இந்த முயற்சியை முன்னெடுத்திருக்கிறது கிளாரியன் பிரசிடெண்ட் ஹோட்டல் நிர்வாகம்.

Poll your vote and get offer in Clarion President hotel

Poll your vote and get offer in Clarion President hotel

20 நாட்களில் ‘பெருநாளி’ சூட்டிங் ஓவர்; இயக்குநர் ‘சிட்டிசன்’ மணி அசத்தல்

20 நாட்களில் ‘பெருநாளி’ சூட்டிங் ஓவர்; இயக்குநர் ‘சிட்டிசன்’ மணி அசத்தல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Citizen movie fame Mani became director in Perunaazhi movieஅஜித்தின் ‘சிட்டிசன்’ படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து காமெடி வேடங்களில் நடித்து வரும் ‘சிட்டிசன்’ மணி, இதுவரை சுமார் 150 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பதோடு, அஜித், விஜய், ரஜினி, சூர்யா, விக்ரம் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து வருபவர், வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் காமெடியில் கலக்கியவர், தற்போது இயக்குநராக கலக்க ஆரம்பித்துவிட்டார்.

நடிகர்கள் பலர் இயக்குநர் அவதாரம் எடுத்தாலும், காமெடி நடிகர்கள் படம் இயக்குவது அறிதான ஒன்று தான்.

அந்த வகையில், ‘பெருநாளி’ படம் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் ‘சிட்டிசன்’ மணி, கடந்த மாதத்தின் தொடக்கத்தில் தனது படக்குழுவினருடன் நாகர்கோவிலில் முகாமிட்டவர், தொடர்ந்து 20 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி முழு படப்பிடிப்பையும் முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார்.

தற்போது, படத்தின் பின்னணி வேலைகளில் பிஸியாக இருப்பவரிடம், படம் குறித்து கேட்கையில், தாய்மாமன் – மருமகள் செண்டிமெண்ட் தான் படம். குடும்ப உறவுகளின் செண்டிமெண்ட்டை பற்றி படம் பேசினாலும், காதல், ஆக்‌ஷன், காமெடி என அனைத்துவிதமான அம்சங்கள் நிறைந்த முழுமையான கமர்ஷியல் படமாக இருக்கும்.

சுமார் 30 ஆண்டுகளாக சினிமாவில் பல துறைகளில் பணியாற்றியிருக்கிறேன். அதில் கிடைத்த அனுபவங்களை வைத்து, சரியான முறையில் திட்டமிட்டு இப்படத்தை குறுகிய காலத்தில் முடித்திருக்கிறேன்.

விரைவில் படத்தின் பாடல்களை வெளியிட திட்டமிட்டுள்ளோம். அதன் பிறகு படத்தை ரிலீஸ் செய்யும் பணியில் இறங்க இருக்கிறேன்.” என்றார்.

தஷி இசையமைப்பில் 6 பாடல்கள் இடம்பெற்றிருக்கும் இப்படத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் கொண்டாட்ட பாடல் ஒன்றும் இடம்பெற்றிருக்கிறதாம்.

கானா உலகநாதன் பாடியிருக்கும் இந்த பாடல், இதுவரை இல்லாத அளவுக்கு ஜெயலலிதாவின் புகழை இப்பாடலில் சொல்லியிருக்கிறார்களாம்.

ஆர்.குமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு பவர் சிவா நடனம் அமைத்திருக்கிறார்.

தீப்பொறி நித்யா சண்டைப்பயிற்சியை கவனித்துள்ளார். படத்தொகுப்பை பன்னீர் கவனிக்கிறார்.

மேலும், இப்படத்தில் காமெடி நடிகர் கிரேன் மனோகர், சிறந்த குணச்சித்திர நடிகராக பலரது பாராட்டுக்களை பெரும் விதத்தில் முக்கிய கதாபத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறாராம்.

இதுவரை பார்க்காத ஒரு கிரேன் மனோகர் இதில் பார்க்கலாமாம். அதேபோல், படத்தின் ஹீரோயின் மதுனிக்கா கொடுத்த ஒத்துழைப்பும் படப்பிடிப்பு விரைவாக முடிய ஒரு காரணமாம்.

சிசர் மனோகர், கார்த்திக், ஆனந்த் உள்ளிட்ட பலர் நடிக்க, ஏராளமான காமெடி நடிகர்களும் நடித்திருக்கும் இப்படத்தை ரோஷினி கிரியேஷன்ஸ் சார்பில் மார்கிரேட் அந்தோணி தயாரிக்கிறார்.

Citizen movie fame Mani became director in Perunaazhi movie

Citizen movie fame Mani became director in Perunaazhi movie

விஜய்யின் சர்கார் காட்சி சம்பவமானது; 49 பி விதிப்படி வாக்களித்த நபர்

விஜய்யின் சர்கார் காட்சி சம்பவமானது; 49 பி விதிப்படி வாக்களித்த நபர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectதளபதி விஜய் நடிப்பில் A .R முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த சர்கார் திரைப்படம் மாபெரும் வெற்றியையும் , வசூல் சாதனையும் படைத்த படம். இந்த படத்தில் ஒருவர் ஓட்டை மற்றொருவர் கள்ள ஒட்டு போட்டுவிட்டால் , 49 P தேர்தல் விதிப்படி தேர்தல் அலுவரின் உத்தரவின் பேரில் வாக்களிக்கலாம் என்ற நல்ல செய்தி மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கப்பட்டது.

இந்த நிகழ்வு தற்போது நெல்லை மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.
நெல்லை மாவட்டம் பணகுடி வாக்கு சாவடி எண் 48 ல் மணிகண்டன் என்பவர் ஓட்டை மற்றறொருவர் கள்ள ஒட்டு போட்டதை தொடர்ந்து ,மணிகண்டனுக்கு 49 P தேத்தல் விதிப்படி வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.இது இப்படத்திற்கு கிடைத்த உண்மையான வெற்றி என்று சொல்லலாம்.

More Articles
Follows