தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பாடலாசிரியரான கபிலன் அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனியில் உள்ள திருப்பூர் குமரன் தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இவரது மூத்த மகள் தூரிகை (28) MBA படிப்பு முடித்துவிட்டு ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றில் பணியாற்றி வந்தார்.
இவர் மேலும், பியூட்டீஷியன், பேஷன் டிசைனிங் உள்ளிட்ட துறைகளிலும் ஆர்வம் காட்டி வந்தார்.
பேஷன் ஷோக்களிலும் பங்கு பெற்றுள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு பெண்களுக்கான மேகசின் ஒன்றையும் இவர் தொடங்கி நடத்தி வந்தார்.
பாடலாசிரியர் கபிலன் மகள் தூரிகை தற்கொலை செய்துள்ளார்.
தூரிகை கபிலன் தனது அறையில் உள்ள ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக அவர் வீட்டிலேயே இருந்ததாகவும், மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
தூரிகையின் போனை பறிமுதல் செய்துள்ள அரும்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக அரும்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் கவிஞர் கபிலனிடம் இது குறித்து விசாரித்தார். அவருக்கு ஆறுதல் கூறினார்.
கவிஞர் கபிலன் அவர்களுடைய மகள் செல்வி தூரிகை நேற்று மரணித்தார்.
நல்லடக்கம் இன்று மாலை 3 மணியிலிருந்து 4மணிக்குள் நடைபெற்றது.
கீழுள்ள முகவரியில் தூரிகையின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
H-92,M M D A Colony
Arumbakkam,Chennai-106.
Near Vallavan Hotel Back Side,