ஜிமிக்கி கம்மல் நடன புகழ் ஷெரிலுக்கு நிச்சயத்தார்த்தம்

ஜிமிக்கி கம்மல் நடன புகழ் ஷெரிலுக்கு நிச்சயத்தார்த்தம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மோகன்லால் நடித்து வெளியான படம் “வெளிப்பாடிண்டே புஸ்தகம்”.

இந்தப் படத்தில் இடம்பெற்ற “எண்டமடே ஜிமிக்கி கம்மல்” என்ற பாடலுக்கு நடனமாடி வீடியோவை அனுப்பினால் நல்ல நடனத்திற்கு சன்மானம் வழங்கப்படும் என படக்குழு அறிவித்தது.

அதன்படி பலரும் வீடியோக்களை பகிர ஷெரில் என்ற பெண் ஆடிய நடனம் மாநில எல்லைகளை தாண்டி பிரபலம் ஆனது.

இதனையடுத்து சூர்யாவின் சொடக்கு பாடல் புரோமோ பாடலுக்கு கூட அவர் சொடுக்கி விட்டு போனார்.

விரைவில் அவர் சினிமாவில் நடிப்பார் எனவும் கூறப்பட்டது.

தற்போது ஷெரிலுக்கு திருமணம் நிச்சயமாகிவிட்டது என்ற செய்தி வெளியாகியுள்ளது.

ஆம், ஷெரிலே தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பிரபுஃல் டோமி என்பவருடன் விரைவில் திருமணம். தற்போது நிச்சயமாகிவிட்டது என்ற தகவலை தெரிவித்துள்ளார்.

Jimikki Kammal Sheril has engaged to Praful Tomy Amamthuruthil

jimikki-kammal-sheril-has-engaged-to-praful-tomy-amamthuruthil

 

Jimikki Kammal Sheril has engaged to Praful Tomy Amamthuruthil

கன்னடர்கள் தாக்கியது ரஜினிக்கு வன்முறையா தெரியலையா? : பாரதிராஜா

கன்னடர்கள் தாக்கியது ரஜினிக்கு வன்முறையா தெரியலையா? : பாரதிராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Why Rajini not giving voice when Kannadians attacking Tamilans asks Bharathiraraசென்னையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்கு எதிராக சிலர் போராட்டம் நடத்தியபோது போலீசார் தாக்குதல் நடத்தினர்.

இதனையடுத்து போராட்டகாரர்களும் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர்.

போலீசார் மீது கை வைத்தவர்களை தண்டிக்க கடுமையான சட்டம் வேண்டும் என ரஜினிகாந்த் ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.

இதற்கு கடுமையான கண்டனங்களை இன்று காலை முதலே தெரிவித்து வருகின்றனர்.

சிலர் ரஜினியை தரக்குறைவாகவும் பேசி வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பாதுகாப்பு குழு அமைப்பின் சார்பில் பாரதிராஜா, சீமான், தனியரசு, தமீமுன் அன்சாரி, கருணாஸ், அமீர், வெற்றிமாறன், கவுதமன் செய்தியாளர்களை சந்தித்தனர்.

இச்சந்திப்பின் போது போராட்டக்காரர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

அப்போது பாரதிராஜா பேசினார்.

‘போராட்டக்காரர்கள் தங்கள் பணியை சரியாக செய்தார்கள். போலீஸாரால் தாக்கப்பட்டார்கள். அதை காணும் போது எனக்கு வருத்தமாக இருந்தது.

போலீஸார் பெண்களை பிடித்து தள்ளினர். அதை ஒரு இளைஞர் தடுத்தார். அந்த இளைஞரின் கையில் அடித்தனர்.

அதற்கு எதிர்வினையாக அந்த இளைஞர் போலீஸாரை தள்ளினார். இதனை என்னவென்று ஊடகங்கள் கூற வேண்டும். எதிர்வினையை மட்டும் கூறக்கூடாது” என்றார்.

பின்னர் ரஜினியின் கருத்துக்கும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதை, ஏன் போராட்டக்காரர்கள் தாக்கப்பட்டதை அவர் ஏன் கண்டிக்கவில்லை?

நான் கைது செய்யப்பட்ட போது கூட பேசவில்லையே. காவிரி பிரச்னையில் தமிழ்நாடு வாகனங்களையும், ஓட்டுநர்களையும் கர்நாடக எல்லை சுங்கச்சாவடிகளில் தாக்கியுள்ளனர்.

அப்போது ரஜினி என்ன செய்தார். KPN என்ற நிறுவனத்திற்கு சொந்தமான 200 பஸ்கள் எரிக்கப்பட்டபோது அவர் என்ன சொன்னார்? அதெல்லாம் அவருக்கு வன்முறையாக தெரியவில்லையா?

இதுவரை பெட்டிக்குள் பூ தான் இருந்தது என்று நினைத்தோம். ஆனால் இப்பத்தான் தெரிகிறது பூவுக்குள் பூநாகம் என்று.

ஐபிஎல் மைதானத்திற்குள் கொடியுடன் போராடியவர்களை அவர் பாராட்டி இருக்க வேண்டாமா?

தற்போது மட்டும் ரஜினி வாய் திறப்பது, லிப் மூமெண்ட் மட்டும் தான் அவருடையது, டப்பிங் யாரோ பேசுகின்றார்கள்” என்று விமர்சித்தார்.

Why Rajini not giving voice when Kannadians attacking Tamilans asks Bharathirara

அரசியலுக்கு விஜய் வந்தால் அது காமெடிதான்; அட அவரே சொல்லிட்டாரா.?

அரசியலுக்கு விஜய் வந்தால் அது காமெடிதான்; அட அவரே சொல்லிட்டாரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

If Vijay enters in politics it will be comedy says his father SACதமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களான ரஜினியும் கமலும் அரசியலுக்கு வந்து விட்டனர்.

இவர்களைத் தொடர்ந்து விஷால், விஜய் உள்ளிட்டவர்கள் அரசியலுக்கு வரக்கூடும் எனத் தெரிகிறது.

இந்நிலையில் விஜய் அரசியலுக்கு வருவது பற்றி அவரது தந்தை எஸ்.ஏ.சி பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது…

“இப்போதுதான் சீனியர்களான ரஜினி, கமல் அரசியலுக்கு வந்துள்ளனர்.

விஜய்யும் அவர் அரசியலில் குதிக்கவேண்டும் என நான் நினைத்தேன், ஆனால் அதற்கு இது சரியான நேரமல்ல. இப்போது வந்தால் அது காமெடியாகிவிடும்.

எந்த ஒரு முடிவையும் தெளிவாக யோசித்து எடுக்க கூடியவர் விஜய். ஆனால் அவர் என்ன முடிவெடுப்பார் என்பது எனக்கு தெரியாது” என எஸ்.ஏ.சி பேசியுள்ளார்.

விஜய்யின் தந்தையே இப்படி சொல்லிவிட்டதால், இந்த சூழ்நிலையில் விஜய் அரசியலுக்கு வரமாட்டார் என்பதை நம்புவோம்.

If Vijay enters in politics it will be comedy says his father SAC

ஜல்லிக்கட்டு படத்த போட்டு ஐபிஎல்ன்னு சொன்ன எச்.ராஜா.: சௌந்தராஜா கிண்டல்

ஜல்லிக்கட்டு படத்த போட்டு ஐபிஎல்ன்னு சொன்ன எச்.ராஜா.: சௌந்தராஜா கிண்டல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

soundhar raja and H Rajaகாவிரி மேலாண்மை வாரியம் கோரி தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருவதால், ஐபிஎல் போட்டியை சென்னையில் நடத்த கூடாது என பெரும்பாலான தமிழர்கள் வலியுறுத்தினர்.

அதையும் மீறி சென்னையில் போட்டி நடைபெற்றதால், நிறைய அமைப்புகள் போராட்டம் நடத்தினர்.

அப்போது சிலர் மீது போலீஸ் தடியடி நடத்தினர்.

இதற்கு முன் நடிகர் சங்க போராட்டத்தின் போது மத்திய அரசு ரானுவத்தை அனுப்பினால் கூட அஞ்சமாட்டோம். காவிரிக்காக மானத் தமிழன் போராடுவான் என சத்யராஜ் ஆவேசமாக பேசியிருந்தார்.

இதனை கிண்டலடிக்கும் வகையில் போலீஸ்காரர்களால் சிலர் தாக்கப்படும் போது நடிகர் சௌந்தர ராஜா உள்ளிட்டவர்கள் கெஞ்சுவது போன்று ஒரு படத்தை பாஜக. வை சேர்ந்த எச். ராஜா ட்விட்டரில் ஒரு படத்தை போட்டுள்ளார்.

அதை போட்டுவிட்டு… இராணுவத்தை எதிர்கொள்ள தயங்காத கூட்டம். (படத்தை பார்க்கவும்) என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

அதாவது ரானுவத்திற்கே அஞ்சமாட்டோம் என கூறும் தமிழர் கூட்டம் எப்படி போலீசுக்கு பயப்படுகிறது? என்பதை பார்த்தீர்களா? என நக்கலாக பதிவிட்டுள்ளார்.

ஆனால் அந்த போட்டோ 2017ல் ஜல்லிக்கட்டு போராட்ட சமயத்தில் எடுக்கப்பட்ட போட்டோ என அதில் இருக்கும் நடிகர் சவுந்தர ராஜாவே கூறியுள்ளார்.

Soundara Raja Actor‏ @soundar4uall 9m9 minutes ago

Replying to @HRajaBJP

என்ன சொல்ல ….இது மெரினா போராட்ட களத்தில் எடுத்த புகைப்படம் ..உங்க திறமை கண்டு வியக்கிறேன்…. வாழ்க ஜனநாயகம்

விவசாயம் விளையாட்டா போச்சா.? வெங்கட்பிரபுக்கு பாண்டிராஜ் கேள்வி

விவசாயம் விளையாட்டா போச்சா.? வெங்கட்பிரபுக்கு பாண்டிராஜ் கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Agriculture is not a game like Cricket says Pandiraj to Venkat Prabuகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டங்கள் கடந்த ஒரு மாதமாக நடந்து வருகிறது.

இதனிடையில் சென்னையில் ஐபிஎல் போட்டி நேற்று நடைபெற்றதால் இதற்கு பல்வேறு அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது காவல் துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. உடனே போலீஸார் தடியடி நடத்தினர்.

இந்நிலையில் நேற்று நடந்த போராட்டம் குறித்து இயக்குநர் பாண்டிராஜ் அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.

அதில், “நேற்று நடந்தப் போராட்டங்களில் நிறைய பேர்களிடன் பொதுநலமின்றி சுயநலமே தெரிந்தது. அரிசியிலும் அரசியல் பண்ணாதீர்கள் ப்ளீஸ்.. வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடுபவன் விவசாயி.” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் டைரக்டர் வெங்கட்பிரபுவை டேக் செய்து “வெங்கட் பிரபு சார் சிஎஸ்கேவை ரசிங்க, அது உங்க உரிமை. விவசாயிகளை காமெடி பண்ணாதீங்க ப்ளீஸ்” எனவும் பதிவிட்டுள்ளார்.

இவரின் கருத்துக்கு பலர் ஆதரவாகவும் சிலர் எதிராகவும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Agriculture is not a game like Cricket says Pandiraj to Venkat Prabu

நடிகர் சௌந்தரராஜா படத்தை போட்டு சத்யராஜை கலாய்த்த எச்.ராஜா

நடிகர் சௌந்தரராஜா படத்தை போட்டு சத்யராஜை கலாய்த்த எச்.ராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

soundhar rajaகாவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என நடிகர் சத்யராஜ் நடிகர் சங்க போராட்டத்தின் போது பேசியிருந்தார்.

அப்போது இராணுவத்தை அனுப்பி தமிழர்களை கட்டுப்படுத்த நினைத்தாலும் போராட தயங்க மாட்டோம் என ஆவேசமாக பேசினார்.

சத்யராஜின் இந்த பேச்சை கலாய்க்கும் வகையில் பாஜக. வைச் சேர்ந்த எச் ராஜா அவர்கள் நடிகர் சவுந்தர ராஜா போலீசிடம் அடி வாங்கும் நிஜ போட்டோவை போட்டு… இராணுவத்தை எதிர்கொள்ள தயங்காத கூட்டம். இதுதானா? என கிண்டலடித்துள்ளார்.

(படத்தை பார்க்கவும்)

More Articles
Follows