சூர்யாவின் சொடக்கு பாடலுக்கு ஜிமிக்கி கம்மல் ஷெரில் டான்ஸ்

சூர்யாவின் சொடக்கு பாடலுக்கு ஜிமிக்கி கம்மல் ஷெரில் டான்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jimmi kammal sherlie in suriya movieவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், செந்தில், ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள படம் தானா சேர்ந்த கூட்டம்.

ஞானவேல்ராஜா தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள சொடக்கு என்ற 2வது சிங்கிள் பாடலின் டீசரை அனிருத்தின் பிறந்தநாளான இன்று சற்றுமுன் வெளியிட்டுள்ளனர்.

இதில் பொதுமக்கள் நிறைய பேர் உள்ளனர். மேலும் கமல், சரவணா ஸ்டோர் ஓனர் போஸ்டர்கள் உள்ளனர்.

அண்மையில் ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனமாடி தமிழக ரசிகர்களை கவர்ந்த ஷெரில் இதில் நடனமாடியுள்ளார். அவருடன் அவரது தோழியும் உள்ளார்.

Jimikki Kammal Sheril dance in Suriyas Thaana Serndha Kootam

பாடலின் வீடியோ இதோ…

 

https://www.youtube.com/watch?v=xxZ62tTveeE&feature=youtu.be

முதல்வர் எடப்பாடியை விஜய் சந்திக்க மெர்சல் ரிலீஸ் காரணம்..?

முதல்வர் எடப்பாடியை விஜய் சந்திக்க மெர்சல் ரிலீஸ் காரணம்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thalapathy Vijay meets Tamilnadu CM Edappadi Palaniswamyநடிகர் விஜய் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினார்.

அதன் விவரம் வருமாறு…

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று நடிகர் விஜய் சந்தித்து பேசினார்.

அப்போது தியேட்டர் கட்டண உயர்வுக்கு அனுமதி அளித்ததற்க்கும், கேளிக்கை வரியை 8% குறைத்ததற்கும் முதல்வருக்கு விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவும் உடன் இருந்தார்.

மேலும் மெர்சல் பட இயக்குனர் அட்லியும் உடன் இருந்ததாக கூறப்படுகிறது.

மெர்சல் படத்திற்கு விலங்குகள் நல வாரியத்தில் தடை நீடித்து வருவதால் அவர்கள் இது தொடர்பாக சந்தித்து பேசியுள்ளார் எனவும் சொல்லப்படுகிறது.

விஜய் நடித்த மெர்சல் படம் தீபாவளிக்கு ரிலீசாக உள்ள நிலையில், அவர் இன்று முதல்வரை சந்தித்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Thalapathy Vijay meets Tamilnadu CM Edappadi Palaniswamy

100 பாடல்களை பாடி சினிமாவில் செஞ்சுரி அடித்தார் சிம்பு

100 பாடல்களை பாடி சினிமாவில் செஞ்சுரி அடித்தார் சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Simbu aka STR crooned 100 songs in Cinemaகுழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் சிம்பு.

பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர், காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் ஹீரோ ஆனார்.

இவரது தந்தை டி.ராஜேந்தர் இப்படத்தை இயக்கியிருந்தார்.

வெறும் நடிப்பு மட்டுமில்லாமல், பாடல் எழுதுவது, பாடுவது, படங்களை இயக்குவது என தன் திறமையை வளர்த்துக் கொண்டார்.

மற்ற ஹீரோக்களின் படங்களிலும் பல பாடல்களை பாடி ஹிட் கொடுத்துள்ளார்.

தற்போது சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள சக்க போடு போடு ராஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் உயர்ந்துள்ளார்.

இந்நிலையில் இதுவரை சிம்பு பாடிய பாடல்கள் 100ஐ கடந்துள்ளதால், அதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Actor Simbu aka STR crooned 100 songs in Cinema

சகோதரி நயன்தாராவுக்கு பாராட்டுக்கள்… சிலிர்க்கும் சீனுராமசாமி

சகோதரி நயன்தாராவுக்கு பாராட்டுக்கள்… சிலிர்க்கும் சீனுராமசாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nayantharaகோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா முக்கிய கேரக்டரில் நடித்துள்ள படம் அறம்.

இதில் நயன்தாரா கலெக்டராக நடித்துள்ளார்.

குடிதண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத ஒரு கிராமத்துக்கு தண்ணீர் வசதி செய்து கொடுக்கிறாராம்.

பெரும்பாலும் எந்த படங்களின் புரோமோஷன்களிலும் கலந்து கொள்ளாத நயன்தாரா இந்த பட புரமோஷன்களில் பங்கேற்று வருகிறார்.

இப்படத்திற்கு தெலுங்கில் கார்த்தவ்யம் என்ற பெயரிட்டுள்ளனர்.

இப்படத்தை நவம்பர் 3-ந் தேதி வெளியிட உள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தை பார்த்த இயக்குநர் சீனுராமசாமி அவர்கள் நயன்தாராவின் நடிப்பை புகழ்ந்து தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Seenu Ramasamy praises Nayanthara acting in Aramm movie

Seenu Ramasamy‏Verified account @seenuramasamy 3m3 minutes ago
பதைபதைபோடும் நெகிழ்ச்சியோடும் தத்துவபலத்துடன் நான் பார்த்த இயக்குநர் கோபிநயினாரின் நேர்மையான படம் அறம் சகோதரி நயந்தாராவுக்கு ஸ்பெஷல் சல்யூட்
0 replies 2 retweets 8 likes

சட்டமன்றம் ஏங்குகிறது; மக்களை மெர்சலாக்கும் மெர்சல் போஸ்டர்

சட்டமன்றம் ஏங்குகிறது; மக்களை மெர்சலாக்கும் மெர்சல் போஸ்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay fans Mersal poster in Madurai Cityவிஜய் நடித்துள்ள மெர்சல் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பல தடைகளைத் தாண்டி இப்படம் தீபாவளிக்கு (2017) வெளியாகவிருப்பதால் ரசிகர்கள் இதை எப்போதும் இல்லாத அளவிற்கு கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்.

தமிழகம் மற்றும் கேரளாவில் கட்அவுட், பேனர்கள் என அதகளம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், மதுரையைச் சேர்ந்த ரசிகர்கள், பரபரப்பான மெர்சல் போஸ்டரை அடித்து ஒட்டியுள்ளனர்.

அதில் சட்டமன்றம் ஏங்குகிறது, பாராளுமன்றம் பதறுகிறது என்று அதிரடி வாசகங்களை டிசைன் செய்து பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளனர்.

Vijay fans Mersal poster in Madurai City

Vijay fans Mersal poster in Madurai City

சிம்பு என் காட்பாதர்… சக்க போடு போடு ராஜா விழாவில் சந்தானம் பேச்சு

சிம்பு என் காட்பாதர்… சக்க போடு போடு ராஜா விழாவில் சந்தானம் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu and santhanamசிம்பு இசையமைப்பில் சேதுராமன் இயக்கத்தில் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள படம் சக்க போடு போடு ராஜா.

இதன் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் சந்தானம் பேசும்போது…

சிம்பு இல்லையென்றால் நான் இங்கில்லை. அவர்தான் என் காட்பாதர்.

இந்த படத்திற்கு இசையமைக்க சிம்பு ஒத்துக் கொள்ள மாட்டார் என்று விடிவி கணேஷ் அவரிடம் சொன்னேன். ஆனால் அவர் எனக்காக ஒப்புக் கொண்டார்.

ஆர்யா என் நண்பர். அவர் சைக்கிளிங் செய்வதற்கு ஒதுக்கும் நேரத்தை சினிமாவுக்கு ஒதுக்கலாம். அவ்வளவு நேரம் தினமும் சைக்கிளிங் செய்கிறார்.

அதை விட்டால் இந்தியளவில் அவர் பெரிய நடிகராக வருவார்.

விடிவி கணேஷ் ஹீரோவை ரிலாக்ஸ் ஆக வைத்திருப்பார். அவர் ஒரு நல்ல தயாரிப்பாளர்.

மாஸ் நடிகருக்குதான் ரசிகர்கள் இருப்பார்கள். ஆனால் தமாசு நடிகரான எனக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியாக உள்ளது.

அவர்கள்தான் என் மேல் நம்பிக்கை வைத்து ஹீரோவாக நடிக்கச் சொன்னார்கள்.” என்று பேசினார் சந்தானம்.

More Articles
Follows