ஆண் பெண் உறவை பேசாத பக்கங்கள்.: ‘ஹாட் ஸ்பாட்’ ட்ரைலரை பார்த்துட்டு திட்டினாங்க.. – கலையரசன்

ஆண் பெண் உறவை பேசாத பக்கங்கள்.: ‘ஹாட் ஸ்பாட்’ ட்ரைலரை பார்த்துட்டு திட்டினாங்க.. – கலையரசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆண் பெண் உறவை பேசாத பக்கங்கள்.: ‘ஹாட் ஸ்பாட்’ ட்ரைலரை பார்த்துட்டு திட்டினாங்க.. – கலையரசன்

ஹாட் ஸ்பாட் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு

கே ஜே பி டாக்கீஸ் மற்றும் 7 வாரியார் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் சார்பில் கே ஜே பாலமணி மார்பன் மற்றும் சுரேஷ்குமார் இணைந்து தயாரிக்க, இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், ஆண் பெண் உறவின் பேசாத பக்கங்களைப் பேசும் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் ஹாட் ஸ்பாட். வரும் மார்ச் 29 ஆம் தேதி இப்படம் திரைக்குவரவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இவ்விழாவினில்…

தயாரிப்பாளர் கே ஜே பாலமணி மார்பன் பேசியதாவது…

ஹாட் ஸ்பாட் எங்களுடைய முதல் தயாரிப்பு. விக்னேஷ் நாலு வருடமாக பழக்கம். லாக்டவுன் டைமில் ஒரு ஷார்ட் ஃபிலிம் செய்தோம். திட்டம் இரண்டு படம் செய்த போதே இப்படத்தின் கதை சொன்னார். எனக்குப் பிடித்திருந்தது.

டிரெய்லர் மிகப்பெரிய அலையை ஏற்படுத்தியுள்ளது. படம் பற்றி நிறையக் கருத்துக்கள் வருகிறது. படம் பாருங்கள் பிடிக்கும். அதன் பிறகு கருத்துச் சொல்லுங்கள். இப்படம் முடித்து விட்ட பிறகு சிக்ஸர் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் பெரிய ஆதரவாக வந்தார்கள் அவர்களுக்கு என் நன்றிகள். மார்ச் 29 திரையரங்குகளில் வெளியாகிறது. படம் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.

சிக்ஸர் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் தினேஷ் கண்ணன் பேசியதாவது…

ஹாட் ஸ்பாட், விக்னேஷுடன் திட்டம் இரண்டு படம் நாங்கள் தயாரித்தோம். ஒரு போல்டான கருத்தை பொறுப்புடன் கையாள்வார். படத்தின் டிரெய்லர் பார்த்து எதுவும் நினைக்க வேண்டாம், படம் பாருங்கள் எல்லோருக்கும் பிடிக்கும். எல்லா நடிகர்களும் மிகத் தைரியமாக நடித்துள்ளார்கள். படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.

ஒளிப்பதிவாளர் கோகுல் பினாய் பேசியதாவது…

படத்தில் வேலை பார்த்த அனைவரும் மிகவும் அர்ப்பணிப்போடு உழைத்துள்ளனர். படத்தின் வெற்றி விழாவில் இன்னும் நிறையப் பகிர்ந்து கொள்கிறேன் அனைவருக்கும் நன்றி.

எடிட்டர் முத்தையா பேசியதாவது…

இப்படத்தின் டிரெய்லர் உங்களுக்குள் பல கேள்விகளை எழுப்பியிருக்கும், அந்த கேள்விகளுக்குப் பதில், மார்ச் 29 ல் கிடைக்கும். இப்படத்தில் வாய்ப்பு தந்த விக்னேஷ் அண்ணாவிற்கு நன்றி. இந்தப்படம் மிக போல்டான படம், படம் பாருங்கள் உங்களுக்குக் கண்டிப்பாகப் பிடிக்கும்.

இசையமைப்பாளர் வான் பேசியதாவது…

இது என் முதல் மேடை. விக்னேஷ் அண்ணாவிற்கு நன்றி. இந்தப்படம் மிக போல்டான கதை, இதை செய்வது மிக கடினம். விக்னேஷ் மிகத் தைரியமாக இயக்கியுள்ளார். படம் பாருங்கள் உங்களுக்குப் பிடிக்கும் நன்றி.

கலை இயக்குனர் சிவ சங்கரன் பேசியதாவது…

படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி. எல்லோரும் மிக அர்ப்பணிப்போடு உழைத்துள்ளனர். மிக நல்ல படம் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி

நடிகை சோபியா பேசியதாவது…

என் அப்பா அம்மாவிற்கு நன்றி. விக்னேஷ் சார் தந்த கதாபாத்திரத்தை நன்றாகச் செய்துள்ளேன் என்று நினைக்கிறேன். படத்தைத் திரையரங்கில் பார்த்து ஆதரவு தாருங்கள். நன்றி

நடிகர் சுபாஷ் பேசியதாவது…

இந்தப்படம், எனக்குத் திட்டம் இரண்டு படத்திற்குப் பிறகு மிக முக்கியமான படமாக இருக்கும். விக்னேஷ் பிரதருக்கு நன்றி. டிரெய்லர் பார்த்து நிறையக் கேள்விகள் தோன்றும். ஆனால் படம் வந்த பிறகு அது எல்லாம் புரிந்து விடும். எல்லா நடிகர்களும் நன்றாக நடித்துள்ளனர். படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

நடிகை அம்மு அபிராமி பேசியதாவது…

என்னை இந்தப்பாத்திரத்திற்குத் தேர்ந்தெடுத்த விக்னேஷ் அவர்களுக்கு நன்றி. முதலில் கதை சொன்ன போது பயந்தேன், திட்டம் இரண்டு பார்த்த பிறகு தான் அவரின் கதை சொல்லும் முறை புரிந்தது. என்னோட கதாபாத்திரம் மிக நன்றாக வந்துள்ளது. மற்ற கதைகள் எனக்குத் தெரியாது ஆனால் விக்னேஷ் மீது நம்பிக்கை இருக்கிறது. படத்தைப்பார்த்தால் உங்களுக்குப் புரியும், படத்தை மக்களிடம் கொண்டு சேருங்கள் அனைவருக்கும் என் நன்றிகள்

நடிகர் ஆதித்யா பாஸ்கர் பேசியதாவது…

1 1/2 வருஷம் முன்னாடி இந்த ஸ்கிரிப்ட் தந்தார்கள். எப்போது இது நடக்கும் என ஆவலாக இருந்தேன். என்னை இப்படத்தில் தேர்ந்தெடுத்த இயக்குநருக்கு நன்றி. இந்தப்படம் மிக போல்டான கதை, இந்தப்படத்தைப் பத்திரிக்கையாளர்கள் புரிந்துகொண்டு ஆதரவு தர வேண்டும், படத்தில் எங்கும் உங்கள் முகம் சுழிக்கும்படி எதுவும் இருக்காது.

கலையரசன் ரசிகன் நான் அவருடன் நடித்தது மகிழ்ச்சி. இப்படம் பார்த்தபிறகு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள் நன்றி.

நடிகர் கலையரசன் பேசியதாவது…

இந்தப்படத்தின் டிரெய்லர் வெளியான போதே திரையுலகிலிருந்து, பலர் போன் செய்து திட்டினார்கள். ஆனால் முழுப்படமும் பார்த்தால் உங்களுக்கு இதன் அர்த்தம் புரியும். விக்னேஷ் கதை சொல்லும் விதம் மாறுபட்டு இருக்கலாம், ஆனால் அது சென்று சேரும் இடம் சரியாக இருக்கும். என் கதை மட்டும் தான் எனக்கு தெரியும்.

ஆனால் விக்னேஷ் பிரதர் மீது நம்பிக்கை இருக்கிறது. யுவர்ஸ் ஷேம்ஃபுலி எனத் தொடர் எடுத்தார். அதுவும் இந்த மாதிரி, அலைகளை ஏற்படுத்தியது ஆனால் அது முடியும் போது மிக அழகாக நம்மைச் சிந்திக்கும்படி செய்யும். அதே போல் இந்தப்படமும் இருக்கும், படம் பாருங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி.

இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் பேசியதாவது…

ஹாட் ஸ்பாட் படத்தை என் நண்பர்கள் தான் தயாரித்துள்ளனர், என் மீதான நம்பிக்கை மட்டும் தான் காரணம் அவர்களுக்கு நன்றி. நிறைய நடிகர்கள் நடித்துள்ளனர், எல்லோரும் கதையை நம்பி மட்டுமே வந்துள்ளனர். எல்லோரும் அருமையாக நடித்துள்ளனர்.

யுவர்ஸ் ஷேம்ஃபுலி எனத் தொடர் எடுத்தேன் அது ஏற்படுத்திய எதிர்வினைகளைத் தான் இந்தப்படமும் ஏற்படுத்தும் என நம்புகிறேன். தப்பான கருத்தைச் சொல்லிவிடக்கூடாது என்பதில் மிகக் கவனமுடன் வேலை பார்த்துள்ளோம். உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும் நன்றி.

இப்படத்தில் கலையரசன், 96 பட ஆதித்யா பாஸ்கர், மற்றும் கௌரி கிஷன், சாண்டி மாஸ்டர், அம்மு அபிராமி, ஜனனி ஐயர், திட்டம் இரண்டு பட ஹீரோ சுபாஷ், சோபியா முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

சதீஷ் ரகுநாதன்-  வான் ஆகியோர் இசையமைக்கிறார்கள். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்கிறார் முத்தையன் எடிட்டிங் பணியை மேற்கொண்டு இருக்கிறார்.

மார்ச் 29 ஆம் தேதி இப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. சிக்ஸர் எண்டெர்டைன்மெண்ட் சார்பில் தயாரிப்பாளர் தினேஷ் கண்ணன் அவர்கள் வெளியீடுகிறார்.

Hot Spot trailer made controversy in kollywood

என் சம்பளத்தை ஏழைக்கு கொடுங்க..; சொன்னதை செய்து கேப்டன் மகனுடன் இணைந்த லாரன்ஸ்

என் சம்பளத்தை ஏழைக்கு கொடுங்க..; சொன்னதை செய்து கேப்டன் மகனுடன் இணைந்த லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

என் சம்பளத்தை ஏழைக்கு கொடுங்க..; சொன்னதை செய்த லாரன்ஸ்.; கேப்டன் மகனுடன் இணைந்தார்

படைத்தலைவனுக்கு பக்க பலமாகும் ராகவா லாரன்ஸ்

புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்கள் மறைவுக்குப் பிறகு, ராகவா லாரன்ஸ் மாஸ்டர் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார்.

அதில் சண்முக பாண்டியன் நடிக்கும் படை தலைவன் படத்தில், சிறப்பு தோற்றத்தில் நான் நடிக்க ரெடியாக உள்ளேன் என்று தெரிவித்து இருந்தார்.

இந்த வீடியோ பார்த்து இயக்குனராகிய நான் மாஸ்டரை எப்படியாவது இந்த படத்தில் கொண்டு வர வேண்டும் என்று விரும்பினேன். படத்தில் முக்கியமான இடத்தில் 5 நிமிட காட்சிக்கு மட்டுமே இடம் இருந்தது.

இதை மிகுந்த தயக்கத்துடன் ராகவா லாரன்ஸ் மாஸ்டர் அவர்களிடம் கூறினேன். ஆனால் அவர் எந்த யோசனைக்கும் இடம் தராமல், நான் நடித்து தருகிறேன். எவ்வளவு நிமிடம் நான் வருகிறேன் என்பது முக்கியம் அல்ல. தம்பி சண்முக பாண்டியன் படத்தில் நான் இருப்பது மகிழ்ச்சி என்றார்.

இதை கேட்டதும் இயக்குனராக எனக்கு மிகுந்த சந்தோஷம்.கேப்டன் அவர்கள் மேல் வைத்த மரியாதைக்கும், அவர் சொன்ன வார்த்தையை காப்பாற்றும் வகையிலும் எந்த நிபந்தனையும் இன்றி உடனே ராகவா லாரன்ஸ் மாஸ்டர் அவர்கள் ஒத்துக் கொண்டது அவரின் பெருந்தன்மையை காட்டுகிறது.

மேலும் தயாரிப்பாளர், மாஸ்டர் சம்பளம் பற்றி பேசியபோது…

எந்த சம்பளமும் எனக்கு வேண்டாம், 4, ஏழ்மை நிலையில் இருக்கும் குடும்பங்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்தால் போதும் என்றார்.

ராகவா லாரன்ஸ் மாஸ்டர் அவர்களின் இந்த அணுகுமுறை படை தலைவனுக்கு மேலும் வலு சேர்த்தது போல இருந்தது.

இந்த மகிழ்வான செய்தியை ஊடகங்களுக்கு தெரிய படுத்துவதில், படக் குழுவினர் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்.

U. அன்பு
படை தலைவன் இயக்குனர்
22.03.2024

Lawrence joins with Vijayakanth son in Padaithalaivan

டான்சர்களை ஊக்கப்படுத்திய ரஹ்மானுடன் 25 வருடங்களுக்குப் பிறகு இணைகிறேன்… – பிரபுதேவா

டான்சர்களை ஊக்கப்படுத்திய ரஹ்மானுடன் 25 வருடங்களுக்குப் பிறகு இணைகிறேன்… – பிரபுதேவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டான்சர்களை ஊக்கப்படுத்திய ரஹ்மானுடன் 25 வருடங்களுக்குப் பிறகு இணைகிறேன்… – பிரபுதேவா

Behindwoods தனது அடுத்த முயற்சியாக திரைப்பட தயாரிப்பில் களமிறங்குகிறது. எங்களது முதல் தயாரிப்பில் பிரபு தேவா கதாநாயகனாக நடிக்க, ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைக்கிறார்.

இந்த பெரும் நட்சத்திரங்கள் இணையும் படத்தை, Behindwoods நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அலுவலருமான (CEO) மனோஜ் NS இத்திரைப்படத்தை தயாரித்து, இயக்குகிறார்.

இந்திய திரையிசை மற்றும் நடனத் துறையில் பேராற்றல் மிக்கவர்களான இருபெரும் ஜாம்பவான்களின் கூட்டணி ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்த திரைப்படம் மூலம் மீண்டும் இணைத்துள்ளோம்.

இசை, நடனம், பாடல்கள், நகைச்சுவை என முற்றிலும் பொமுதுபோக்கு அம்சங்களுடன் உருவாக இருக்கும் படம் வெகுஜன மக்களை நிச்சயம் ஈர்க்கும்.

இத்திரைப்படத்தில் ரத்தமோ, வன்முறையோ, முகம் சுழிக்க வைக்கும் காட்சிகளோ எந்த வடிவத்திலும் இருக்காது. இந்திய சினிமா வரலாற்றில் இது ஒரு மிக முக்கிய திரைப்படமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இப்படத்தில் பங்காற்றுவது குறித்து பேசிய இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான்…

“சில நல்ல யோசனை நம் மனதுக்கு வரும், அதை இப்போ செய்யலாம் பிறகு செய்யலாம் என வருடங்கள் ஓடிவிடும், இந்த திரைப்படம் அதை மீண்டும் கண்டுபிடித்து என் கவனத்தை ஈர்த்தது” என்கிறார்.

நடனப்புயல் பிரபு தேவா கூறியபோது…

“நடன இயக்குனர்களை ஊக்கப்படுத்திய இசைப்புயல் ரஹ்மானுடன் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார்.

மனோஜ் NS கூறுகையில்…

“இந்தத் திரைப்படம் இந்தியாவின் இரண்டு மாபெரும் கலைஞர்களான ஏ.ஆர் ரஹ்மான், பிரபு தேவா இருவரையும் கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.

காமெடி நடிப்பில் உச்சம் தோட்ட யோகி பாபு ஒரு வித்யாசமான, மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மலையாள சினிமாவில் பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ள அஜ்ஜு வர்கீஸ் மற்றும் அர்ஜுன் அசோகன் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.”

இன்னும் பெயரிடப்படாத படத்திற்கு சில மாதங்களில் தலைப்பை வெளியிடுவோம். தமிழில் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் பிரபுதேவா அவர்களின் 6-வது கூட்டணியைப் குறிக்கும் வகையில் #arrpd6 என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதம் தொடங்குகிறது. 2025 ஆம் ஆண்டு பான் – இந்தியா படமாக திரைக்கு வர திட்டமிட்டு உள்ளோம்.” என்றார்..

After 25 years AR Rahman and Prabudeva joins again

நேற்று இந்த நேரம்.. காணாமல் போன நண்பர்களை தேடும் ‘பிக்பாஸ்’ ஷாரிக்ஹாசன்

நேற்று இந்த நேரம்.. காணாமல் போன நண்பர்களை தேடும் ‘பிக்பாஸ்’ ஷாரிக்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று இந்த நேரம்.. காணாமல் போன நண்பர்களை தேடும் ‘பிக்பாஸ்’ ஷாரிக்ஹாசன்

மார்ச் 29 ஆம் தேதி வெளியாகும் நேற்று இந்த நேரம், மார்ச் 29 ஆம் தேதி வெளியாகும் பிக்பாஸ் ஷாரிக் ஹாசனின் நேற்று இந்த நேரம், காணாமல் போகும் நண்பர்களும், பின்னணி சம்பவங்களும் நேற்று இந்த நேரம்,

கிளாப்-இன் ஃபில்மோடெயின்மென்ட் சார்பில் நவீன் குமார் தயாரிப்பில், சாய் ரோஷன் கே.ஆர். எழுதி, இயக்கி இருக்கும் திரில்லர் திரைப்படம் “நேற்று இந்த நேரம்”.

பிக்பாஸ் புகழ் ஷாரிக் ஹாசன் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் ஹரிதா மற்றும் மோனிகா ரமேஷ் என இரண்டு பேர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

இந்த படத்தின் கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை நித்தின் ஆதித்யா மற்றும் சாய் ரோஷன் கே.ஆர். இணைந்து எழுதியுள்ளனர்.

மர்மமான முறையில் காணாமல் போன நண்பர்களும், அதன் பின்னணியில் நடக்கும் திடுக்கிடும் சம்பவங்களும் கதையாக உருவாக்கி இருக்கிறார்கள். கிரைம் திரில்லர் பாணியில் சுவாரஸ்யமாக திரைக்கதை அமைத்து இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஊட்டி மற்றும் சென்னையில் நடைபெற்றுள்ளது.

கெவின் என் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஷால் மணிவண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை கோவிந்த் மேற்கொண்டுள்ளனர்.

நேற்று இந்த நேரம் படத்தின் இசை உரிமத்தை ஜீ மியூசிக் சவுத் வாங்கியுள்ளது. படத்தின் பாடல்களை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், அறிவு, ஆதித்யா ஆர்.கே., ரவி ஜி ஆகியோர் பாடியுள்ளனர்.

இப்படத்தின் பின்னணி வேலைகள் அனைத்தும் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது. மார்ச் 29 ஆம் தேதி உலகமெங்கும் திரையிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்து உள்ளனர்.

Biggboss Sharikhassan starring Netru Indha Neram

ரஜினி-பிரபு அப்படி.. பொற்காலத்தில் படமெடுத்தோம்.; ‘இடி மின்னல் காதல்’ விழாவில் பி.வாசு பேச்சு

ரஜினி-பிரபு அப்படி.. பொற்காலத்தில் படமெடுத்தோம்.; ‘இடி மின்னல் காதல்’ விழாவில் பி.வாசு பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி – பிரபு அப்படி.. பொற்காலத்தில் படமெடுத்தோம்.; ‘இடி மின்னல் காதல்’ விழாவில் பி.வாசு பேச்சு

இடி மின்னல் காதல் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா

Pavaki Entertainment Pvt Ltd சார்பில் ஜெயச்சந்தர் பின்னாம்னேனி, பாலாஜி மாதவன் தயாரிப்பில், இயக்குநர் பாலாஜி மாதவன் எழுத்து இயக்கத்தில், நடிகர் சிபி, பவ்யா த்ரிகா, யாஸ்மின் பொன்னப்பா நடிப்பில் உருவான படம் ‘இடி மின்னல் மழை ’.

வரும் மார்ச் 29 ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இவ்விழாவினில் தயாரிப்பாளர் இயக்குநர் பாலாஜி மாதவன் பேசியதாவது…

பி.வாசு அங்கிள் குடும்பத்திலிருந்து மூன்றாவது தலைமுறையாக சினிமாவில் வந்துள்ளோம். சினிமாவுக்குள் அறிமுகமாக வேண்டும் என நினைத்த போது, மிஷ்கின் சாரிடமிருந்தது தான் என் திரைப்பயணம் ஆரம்பமானது. அவரிடம் அஸிஸ்டெண்டாக வேலை பார்த்தேன்.

பின்பு மாதவன் சாரிடம். அவரை நடிகராகத் தான் அணுகினேன், ராக்கெட்டரி ஸ்கிரிப்ட் தந்தார். அப்போது அவர் இயக்குநர் என்பதே தெரியாது. ஆனால் பிறகு அந்தப்படத்தில் இணைந்தேன். அந்தப்படம் என்னை மாற்றியது. அவர் இயக்குநராகப் பிரமிப்பைத் தந்தார். அந்தப்படம் மிகப்பெரிய அனுபவம்.

மிஷ்கின் சாரிடமும், மாதவன் சாரிடமும் முழுமையாக முழுப்படத்திலும் வேலை பார்த்தேன். பின் என் திரைக்கதையை எழுத ஆரம்பித்த போது, என் நண்பன் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒளிப்பதிவாளர் பெரும் துணையாக இருந்தார். அவர் தான் நாமே பண்ணலாம் என சொன்னார் அங்கிருந்துதான் எங்கள் பாவகி கம்பெனி உதயமானது. அந்த ரெண்டு பேருக்கும் இந்நேரத்தில் நான் நன்றி கூறிக்கொள்கிறேன். அந்த நிலையிலிருந்து பலரும் எங்களுக்கு உதவினார்கள். யாருமே உங்களால் முடியுமா? எனக் கேட்கவில்லை முழு ஆதரவு தந்தார்கள்.

ராதாரவி சார், பாலாஜி சக்திவேல் சார், ஆண்டனி சார் எல்லோரும் முழு ஆதரவைத் தந்தார்கள். இந்தப்படத்தின் கதை முடிந்த போது, சிபியை அணுகினேன். அவர் கதை மட்டுமல்ல, திரைக்கதையும் கொடுங்கள் படிக்கிறேன் என்றார். அங்கிருந்தே அவரை எனக்குப் பிடிக்க ஆரம்பித்துவிட்டது.

இசையமைப்பாளர் சாம். மாதவன் சாருக்கு செய்த கதைக்கும் சாம் தான் மியூசிக் என்று இருந்தது. இப்போதும் அவர் அந்தப்படத்தை நாம் கண்டிப்பாகச் செய்கிறோம் என்று சொல்வார். இந்தப்படத்தில் அசத்தலாக மியூசிக் தந்துள்ளார். நாங்கள் எடுத்துக் குடுத்த விஷுவலுக்கு மியூசிக் போட்டு அசத்தினார்.

ஒரு பாடல் எழுத மிஷ்கின் சாரை அணுகினேன், ஆனால் அவர் கபிலன் தான் இதற்கு சரியாக வருவார் என்றார். கபிலன் சாருக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப்படத்தில் எல்லோரும் படத்தை நம்பி படத்திற்காக வேலை பார்த்தார்கள். படத்தில் நிறைய செட் இருக்கிறது, பாலசுப்பிரமணியம் படத்தின் புரடக்சன் டிசைனை மிக அருமையாகச் செய்து தந்தார். அவருக்கு நன்றி.

காக்கா முட்டை வசனகர்த்தா ஆனந்த முருகேசன் ராக்கெட்ரியில் பழக்கம். அவர் தான் இப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். அவரை நடிக்கவும் வைத்துள்ளேன் அவருக்கு நன்றி. முழுப்படமும் பார்த்தாகிவிட்டது எல்லோருமே அற்புதமாக நடித்துள்ளார்கள். எல்லோருக்கும் என் நன்றிகள். என் மாமா இயக்குநர் வாசு எப்போதும் ஆதரவாக இருந்துள்ளார். ஒரு நல்ல படம் தந்துள்ளோம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

தயாரிப்பாளர் ஜெயச்சந்தர் பேசியதாவது…

பாலாஜியே எல்லாம் பேசி விட்டார். இது எங்கள் கனவு. இந்தப்படத்திற்காக எல்லோரும் முழு ஆதரவைத் தந்தார்கள். எங்கள் குடும்பம் எங்கள் கூடவே இருந்தது. மிக முக்கியமாக ட்ரீம் வாரியர்ஸ் படம் பார்த்ததிலிருந்து எங்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்கள்.

பத்திரிக்கை ஊடக நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள். இப்படம் கதையை நம்பி எடுத்த படம். மார்ச் 29ம் தேதி படம் வெளியாகிறது. படத்திற்கு உங்கள் ஆரவைத் தாருங்கள் நன்றி.

நடிகை யாஸ்மின் பேசியதாவது…

பாலாஜி மற்றும் ஜெயச்சந்தர் இருவருக்கும் என் நன்றி. படத்தில் ரோல் பத்தி சொல்ல மாட்டேன் நீங்களே படம் பார்த்து சொல்லுங்கள். ஆரண்ய காண்டம் படத்திற்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளேன். படத்திற்கு உங்கள் ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகர் வின்சென்ட் நகுல் பேசியதாவது…

என் சினிமா கனவுக்கு விதை போட்ட பிரபு சாலமன் சாருக்கு முதல் நன்றி. இயக்குநர் பாலாஜி கதை சொன்னார். மிகப்பெரிய நடிகர்கள் நடிப்பதாக இருந்தது என சொன்னார். நான் உங்களுக்கு என் மீது நம்பிக்கை இருக்கா என்றேன். இருக்கு என்றார். படம் முடித்த பின் எந்த பாத்திரம் என்றாலும் நடிக்கலாம் என என் மீதே நம்பிக்கை வந்துள்ளது. நல்ல படம் அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் பேசியதாவது…

இயக்குநர் பாலாஜியை மிஷ்கின் சாரிடம் வேலை பார்த்த காலத்திலிருந்து தெரியும். மிஷ்கின் சார் எனக்கு இரண்டு கிஃப்ட் கொடுத்துள்ளார். அதில் ஒன்று தான் பாலாஜி. படம் நன்றாக வந்துள்ளது. அனைவருக்கும் நன்றி.

நடிகை பவ்யா பேசியதாவது…

இடி மின்னல் காதல் பெயரிலேயே மிக பெரிய அர்த்தம் இருக்கிறது. படம் வந்தபிறகு உங்களுக்கும் அந்த அர்த்தம் புரியும். பாலாஜி, பாலசுப்ரமணியம் இருவரும் எப்போதும் கூலாக இருப்பார்கள், எவ்வளவு பிரஷர் இருந்தாலும் காட்டிக்கொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு நன்றி. நடிகர் சிபி சூப்பர் கோ ஸ்டார். மிக ஆதரவாக இருந்தார். யாஸ்மின் மிக அழகாக நடித்துள்ளார்.

ஜெகன் எனக்கு ஒர்க்‌ஷாப் எல்லாம் எடுத்தார், அவர் ரொம்ப புரபஷனல். அவரால் எனக்கு நிறைய கான்ஃபிடண்ட் வந்துள்ளது. படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி. படம் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகர் ஜெகன் பேசியதாவது…

இந்த விழாவிற்கான மெனக்கெடலே மிகவும் அருமையாக உள்ளது. கடந்த ஒரு வாரமாக மீடியா தரும் ஆதரவிற்கு நன்றி. பாலாஜி தேர்ந்த அரசியல்வாதி அளவு, மிக தேர்ச்சிபெற்ற பேச்சாளர் போலப் பேசி விட்டார். ஒரு படத்தை எப்படி விளம்பரப்படுத்த வேண்டுமென பாலாஜியிடம் கற்றுக்கொள்ளலாம். அவ்வளவு மெனக்கெடுகிறார்.

தமிழ் சினிமாவின் இரண்டு ஆளுமைகள், பி வாசு சார், இயக்குநர் உதயகுமார் அவர்கள், வாழ்த்த வந்துள்ளனர் அவர்களுக்கு நன்றி. படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. படம் உங்களுக்குப் பிடித்தால் ஆதரவு தாருங்கள் நன்றி.

இசையமைப்பாளர் சாம் சி.எஸ் பேசியதாவது…

பாலாஜி வேறொரு கதை தான் முதலில் சொன்னார். அப்புறம் தான் இந்தப்படம் வந்தது. ராக்கெட்ரி படத்திலிருந்தே அவரைத் தெரியும். அதில் நடித்திருப்பார். இவர் எப்படி படம் இயக்குவார் என நினைத்தேன், ஆனால் முதலில் அவர் இயக்குநர் தான் என்பது பின் தான் தெரிந்தது. அவர் இப்படத்தை எப்படி செய்துள்ளார், என்பது இங்கு பேசியவர்களை வைத்தே தெரிந்துகொள்ளலாம்.

எல்லோரும் இவ்வளவு கான்ஃபிடண்டாக பேசுகிறார்கள் என்றால் கதை அவ்வளவு சிறப்பாக வந்துள்ளது. எல்லோருமே அவ்வளவு அர்ப்பணிப்போடு உழைத்துள்ளார்கள். இயக்குநர் பாலாஜிக்கும் எனக்கும் சண்டை வந்து கொண்டே இருக்கும். போகப்போக, அவர் என்னைப் புரிந்து கொண்டார். பாலாஜி கதைகள் நிறைய வைத்துள்ளார் எல்லாமே அருமையாக இருக்கும்.

தமிழில் சிறப்பான கதைகள் இருக்கிறது ஆனால் ஒரு ஹீரோ இருந்தால் தான் வாய்ப்பு கிடைக்கிறது. மற்ற மாநிலங்களில் அப்படி இல்லை. இங்கு கடந்த வருடம் ஜெயித்த படங்கள் எல்லாம் கண்டண்ட் நன்றாக இருந்த படங்கள் தான். இப்படம் மிக அருமையாக வந்துள்ளது. படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள்

நடிகர் சிபி பேசியதாவது…

இந்தப்படத்தின் கதை கேட்டபோது எனக்கு முக்கியமாகப் பட்டது. மெண்டல் ஹெல்த். நமக்கு மெண்டல் ஹெல்த் எவ்வளவு முக்கியம் என்பது எனக்குத் தெரியும். அதைப்பற்றி இப்படம் அழுத்தமாகப் பேசுகிறது. பிக்பாஸ் முடித்து வெளியில் வந்தவுடன் மூன்று மாதம் தான் அந்த பிரபலம் இருக்கும் என எனக்கு முன்னமே தெரியும். அதன் பிறகு நம் உழைப்பு தான் பேசும். பிக்பாஸ் வந்தபிறகு பல கதைகள் வந்தது, ஆனால் நாம் ஒரு படத்திற்குள் போகிறோம் என்றால் அது கண்டிப்பாக ஒரு சிறந்த படைப்பாக இருக்க வேண்டும்.

நமக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். பாலாஜி அந்தளவு உண்மையான மனுஷன். அவர் எத்தனை வலிகளை அனுபவித்து வருகிறார் என்று தெரியும். எல்லோருமே உண்மையாக நேர்மையாக நம்பிக்கையுடன் உழைத்துள்ளோம். எல்லோரும் இன்னும் நிறையப் படம் செய்ய வேண்டும். வெற்றி பெற வேண்டும் கண்டிப்பாக எல்லோரும் படம் பாருங்கள் பிடிக்கும் நன்றி.

இயக்குநர் பேரரசு பேசியதாவது…

ஹீரோ மிகத்தெளிவாகப் பேசினார். பிக்பாஸ் பற்றி அவர் சொல்லியது உண்மை. இசையமைப்பாளர் சாம் அற்புதமாக இசையமைத்துள்ளார். இயக்குநர் பாலாஜி எல்லோரையும் பற்றி மிக அன்போடு குறிப்பிட்டுப் பேசினார். படம் டிரெய்லர் மிக நன்றாக வந்துள்ளது. படம் கண்டிப்பாக ஜெயிக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

இயக்குநர் ஆர் வி உதயகுமார்
இயக்குநர் வாசுவிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே இயக்குநரின் திறமை புரிந்தது. அத்தனைப் புகழ்ந்தார். டிரெய்லர் பார்த்தவுடன் அவரது திறமையின் மேல் நம்பிக்கை வந்தது.

நான்கைந்து பாத்திரங்களை வைத்து நல்ல திரைக்கதை அமைத்துள்ளார். இப்படத்தில் இணைத் தயாரிப்பாளர்கள் என்று 11 பெயர் வந்தது. இயக்குநருக்கு ஆதரவாக இருந்த அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். சாம் சிஎஸ் இசை மிக அருமையாக உள்ளது. படத்தில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

இயக்குநர் வாசு பேசியதாவது…

பாலாஜி என்னிடம் கதையே சொல்லவில்லை ஆனால் சைக்கலாஜிகலாக இருக்குமென்பது, இங்கு பேசியவர்களை வைத்துத் தெரிகிறது. ஒரு நல்ல கதையை எடுத்துள்ளனர். இங்கு எல்லோருமே இப்படத்தின் அனுபவம் பற்றி அதன் கஷ்டம் பற்றிப் பேசினார்கள்.

இதைக்கேட்ட பிறகு தான் பல படங்கள் எடுத்த எங்கள் அனுபவங்கள் பிரமிப்பு தருகிறது. இசையமைப்பாளர் சாம் மிக அருமையாகப் பேசினார். பல விசயங்கள் குறித்துத் தெளிவாகப் பேசினார். யார் ஹிரோ எனக்கேட்காமல் என்ன கதை எனக்கேட்க வேண்டும் எனச் சொன்ன போது, எனக்குக் கைதட்டத் தோன்றியது.

நாங்கள் ஒரு பொற்காலத்தில் படம் எடுத்தோம்.. சின்னத்தம்பி படத்தில் பிரபுவிற்குக் கதையே தெரியாது. ரஜினி சாரும் அப்படித்தான் ஒரு முறை கதை கேட்டால் அதன் பிறகு எதுவும் கேட்க மாட்டார். இன்று நிலைமை மாறிவிட்டது.

பாலாஜி என்ன கஷ்டப்பட்டாலும் கண்டிப்பாக சினிமாவை விட்டுப் போக மாட்டார் அவரிடம் திறமை இருக்கிறது. என் மகன் இந்தப்படம் பார்த்து அழுதுவிட்டேன் எனச் சொன்னான். மாமாவாக பாலாஜியை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். சிபி பேசியது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. படக்குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். ஒரு நல்ல கதைக்கு மீடியா எப்போதும் முழு ஆதரவைத் தரும். எல்லோரும் இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள். நன்றி

இப்படம் வரும் மார்ச் 29 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது..

Our Periods Golden P Vasu speech at Idi Minnal Kadhal event

ரஜினியாக நடிக்க ஆசை.. கர்வமா இருக்கு.; இளையராஜா பட விழாவில் கமல் முன்னிலையில் தனுஷ் பேச்சு

ரஜினியாக நடிக்க ஆசை.. கர்வமா இருக்கு.; இளையராஜா பட விழாவில் கமல் முன்னிலையில் தனுஷ் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினியாக நடிக்க ஆசை.. கர்வமா இருக்கு.; இளையராஜா பட விழாவில் கமல் முன்னிலையில் தனுஷ் பேச்சு

இந்திய திரை உலகில் இசை சாம்ராஜ்யத்தை கடந்த 50 ஆண்டுகளாக நடத்திக் கொண்டிருப்பவர் இசைஞானி இளையராஜா.

‘அன்னக்கிளி’ படம் முதல் தொடங்கி இன்று வரை ஒரு தன்னிகரற்ற இசை கலைஞராக இந்திய சினிமாவில் இசை ராஜாங்கம் நடத்தி வருகிறார்..

நாம் எந்த மனநிலையில் இருந்தாலும் சந்தோஷமாக இருந்தாலும் துக்கமாக இருந்தாலும் இளையராஜா பாட்டு தான் நமக்கு துணை.

இளையராஜாவின் இசைக்காகவே பாடலுக்காகவே வெள்ளிவிழா கண்ட படங்கள் பல உண்டு..

ரசிகர்களின் உயிரோடு இசையாக கலந்து விட்ட இளையராஜாவை போற்றவும் பாராட்டவும் வார்த்தைகள் இல்லை எனலாம்.

இதுவரை 1500 படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ள இளையராஜாவின் வாழ்க்கையை தற்போது திரைப்படமாக உருவாக்க முன்வந்துள்ளனர்.

இந்தப் படத்தை Sriram Bakthisaran
C.K.Padma Kumar
Varun Mathur
Ilamparithy Gajendran
Saurabh மிஸ்ரா ஆகியோர் தயாரிக்கின்றனர்

இந்தப் படத்தில் இளையராஜாவாக கதையின் நாயகனாக நடிக்கிறார் தனுஷ். இந்த படத்தின் தொடக்க விழா இன்று சென்னை லீலா பேலஸில் நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் கலந்து கொண்டார்.

இவர்களுடன் வெற்றிமாறன், சுகாசினி, பாரதி பாஸ்கர், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட பலரும் இளையராஜாவுடன் பங்கேற்றனர்.

அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்த படத்திற்கு இளையராஜா என்று தலைப்பிட்டுள்ளனர்.. சமீபத்தில் வெளியான ‘கேப்டன் மில்லர்’ படத்தை இயக்கியவர் அருள் மாதேஸ்வரன் என்பது தங்களுக்கு நினைவு இருக்கலாம்.

ஒளிப்பதிவை நீரவ்ஷா மேற்கொள்ள கலைப் பணிகளை முத்துராஜ் கவனிக்கிறார்.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டார்.

நடிகர் தனுஷ் மேடையில் பேசும்போது..

நான் என்னுடைய சினிமா வாழ்க்கையில் இருவரின் வாழ்க்கை படத்தில் நடிக்க ஆசைப்பட்டேன். ஒருவர் இசைஞானி இளையராஜா. மற்றொருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

தற்போது ஒரு ஆசை நிறைவேறி இருக்கிறது.. இளையராஜாவின் பயோபிக் வாழ்க்கை படத்தில் நடிப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

இந்த இடத்திற்கு நான் வந்துள்ளது நினைக்கும் போது கொஞ்சம் கர்வமாகவும் இருக்கிறது. இளையராஜாவை பற்றி நிறைய பேச இருக்கிறது.

இது தற்போது படத்தின் தொடக்க விழா என்பதால் குறைவாக பேசிக்கொள்கிறேன். நிறைய பேச வேண்டும். இனி வரும் காலங்களில் இந்த பட விழாக்களில் நிறைய பேசலாம்.

இந்த விழாவிற்கு வந்து பெருமை சேர்த்த கமல்ஹாசன் வெற்றிமாறன் ஆகியோருக்கு நன்றி” என்று பேசினார் தனுஷ்..

I wish to act in Rajini and ilaiyaraja bipoic says Dhanush

Connekkt Media
PK Prime Production
& Mercuri Movies

DHANUSH
As
ILAIYARAAJA

Directed by :
Arun Matheswaran
DOP : Nirav Shah
Production Designer : Muthuraj

Produced by :
Sriram Bakthisaran
C.K.Padma Kumar
Varun Mathur
Ilamparithy Gajendran
Saurabh Mishra

More Articles
Follows