பிரஸ் மீட்டில் நெகட்டிவ்… பிரஸ் ஷோவில் பாசிட்டிவ்… ஹாட்ஸ்பாட் 2 கன்ஃபார்ம்.. – விக்னேஷ் கார்த்திக்

பிரஸ் மீட்டில் நெகட்டிவ்… பிரஸ் ஷோவில் பாசிட்டிவ்… ஹாட்ஸ்பாட் 2 கன்ஃபார்ம்.. – விக்னேஷ் கார்த்திக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

*ஹாட் ஸ்பாட் திரைப்பட வெற்றி விழாக் கொண்டாட்டம் மற்றும் நன்றி தெரிவிக்கும் விழா !!!*

இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஆண் பெண் உறவின் பேசாத பக்கங்களைப் பேசும் திரைப்படமாக உருவாகியிருந்த திரைப்படம் ஹாட் ஸ்பாட். மார்ச் 29 ஆம் தேதி வெளியான இப்படம் திரையரங்குகளில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் இப்படத்தின் வெற்றிவிழா, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இவ்விழாவினில்..

எடிட்டர் முத்தையா பேசியதாவது…
அப்பா அம்மா நண்பர்களுக்கு நன்றி. அடியே படத்திற்கு முன்பே கிடைத்த வாய்ப்பு இது. இந்தப்படத்திற்காக நிறையச் சண்டை போட்டிருக்கிறோம் ஆனால் படம் நன்றாக வந்தது. சோஷியல் அவேர்னஸ் உள்ள படம். நல்ல வரவேற்பு தந்ததற்கு நன்றி. தொடர்ந்து இது போல் நல்ல படம் செய்ய முயற்சிக்கிறோம். நன்றி.

இசையமைப்பாளர் வான் பேசியதாவது..
விக்னேஷ் கார்த்தி அண்ணாவிற்கு முதல் நன்றி. ஒரு ஷார்ட் ஃபிலிம் பார்த்து என்னால் இது முடியும் என நம்பி, என்னை அழைத்து வாய்ப்பு தந்ததற்கு நன்றி. என் டீம் எல்லோரும் நன்றாக வேலை செய்திருந்தார்கள். தயாரிப்பாளர்களுக்கு நன்றி. படத்தைப் பாராட்டிய அனைவருக்கும் நன்றி.

நடிகர் திண்டுக்கல் சரவணன் பேசியதாவது..
பிரஸ் பீபிள் படம் பார்த்து என்னை போன் செய்து பாராட்டினார்கள் ரொம்ப சந்தோஷமாக இருந்தது. “டோண்ட் ஜட்ஜ் த புக் பை இட்ஸ் கவர்” என்பது விக்கிக்கு தான் பொருந்தும், அவர் மிகச்சிறந்த மிமிக்ரி ஆர்டிஸ்ட். தன் பாதையை மாற்றி இயக்குநராக ஆகி, நல்ல படம் தந்துள்ளார். என்னை எப்படி இந்தப்படத்திற்கு செலக்ட் செய்தார் என்று தெரியவில்லை. அடுத்த படம் எடுக்கத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார். அதிலும் வாய்ப்பு தாருங்கள். நாங்கள் எல்லாம் சினிமாவை நம்பி தான் இருக்கிறோம், எங்களையெல்லாம் ஞாபகம் வைத்து, கூப்பிட்டு நடிக்க வைக்கும் விக்கிக்கு நன்றி. பாராட்டிய பத்திரிக்கை நண்பர்களுக்கு நன்றி.

நடிகர் அமர் பேசியதாவது…
2020 ல் இந்தப்படம் செய்தேன் அதுக்கப்புறம் இந்தப்படம் செய்ததையே மறந்துவிட்டேன். ரிலீஸ் போஸ்டர் பார்த்து தான் இதில் நடித்திருக்கிறோம் எனச் சந்தோசப்பட்டேன். ஏ சர்டிபிகேட் என்பதால் குடும்பத்தோடு போகாமல் தனியாகப் போனேன், ஆனால் பலர் குடும்பத்தோடு படத்தை ரசிக்க வந்தார்கள். ரொம்ப சந்தோசமாக இருந்தது. அடுத்த படத்திலும் வாய்ப்பு தாருங்கள் நன்றி.

KJB டாக்கீஸ் நிறுவனத்தின் சார்பில் பாலமணிமார்பண் பேசியதாவது..
பிரஸ் மீட்டில் நிறையக் கேள்விகள் பயத்தைத் தந்தது ஆனால் பிரஸ் ஷோவிற்கு பிறகு நிறைய பாராட்டுக்களும் வந்தது. இன்றைய அளவில் மக்கள் இந்தப்படத்தைப் பற்றிப் பேசுகிறார்கள், பாராட்டுகிறார்கள் என்றால் அதற்குக் காரணம் பத்திரிக்கையாளர்கள் தான். உங்களுக்கு நன்றி. விக்னேஷ் ஷார்ட்ஃபிலிம் எடுக்கும் காலத்திலிருந்து தெரியும். அப்போதே படம் செய்யப் பேசிக்கொண்டிருந்தோம். அவர் புரடியூசர் ஃப்ரண்ட்லி. தயாரிப்பாளர்களுக்காகப் பார்த்துப் பார்த்து செய்வார். இடையில் விக்னேஷுக்கு அடியே படம் கிடைத்தது, அதனால் தான் இந்தப்படம் லேட் ஆனது. விக்னேஷை சுற்றி வேலை பார்க்கும் அனைவரும் மிக அர்ப்பணிப்போடு வேலை பார்ப்பார்கள். அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இப்போது படம் நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது. தியேட்டர்களில் ஷோ ஃபுல்லாக போய்க்கொண்டிருக்கிறது அதற்குக் காரணம் நீங்கள் தான், உங்கள் எல்லோருக்கும் நன்றி.

சிக்ஸர் எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் சார்பில் தினேஷ் கண்ணன் பேசியதாவது…
இது தேங்ஸ் மீட், மக்களிடம் இந்தப்படம் பேசப்படக் காரணமே பத்திரிக்கையாளர்கள் தான். நன்றி. எங்கள் படம் 11 படங்களுடன் வெளியானது. அது மிகப்பெரிய பிரஷரைத் தந்தது, ஆனால் மக்கள் எங்கள் படத்தை அரவணைத்துக் கொண்டார்கள், இது போன்ற சின்ன படங்களுக்கு நல்ல ஆதரவைத் தந்தால், எங்களை மாதிரி நிறையப் பேர் படம் எடுப்பார்கள். இந்தப்படத்தின் நடிகர்களுக்கு நிறையத் தைரியம் இருக்க வேண்டும். இப்படி கதாபாத்திரங்கள் தமிழ் சினிமாவில் வந்ததில்லை. விக்னேஷ் எப்படி நடிகர்களை ஒத்துக்கொள்ள வைத்தார் எனத் தெரியவில்லை, இப்படம் டிரெய்லர் வந்த போது பரபரப்பைக் கிளப்பியது. ஆனால் படம் வந்த பிறகு அனைவரும் பாராட்டினார்கள். நீங்கள் இன்னும் கொஞ்சம் பாராட்டினால் இந்த வாரமும் இந்தப்படம் ஓடும் நன்றி. எங்கள் படத்தை ஆதரித்துப் பாராட்டியதற்கு நன்றி.

செவன் வாரியர்ஸ் சுரேஷ்குமார் பேசியதாவது…
இந்தப்படம் வெற்றிபெறக்காரணம் பிரஸ் மீடியா தான். பிரஸ் மீட்டில் கேட்ட கேள்விகள் பார்த்து மிகவும் நொந்துபோய் விட்டேன் ஆனால் படம் பார்த்த பிறகு நீங்கள் தந்த ஆதரவு மிக மகிழ்ச்சியாக இருந்தது. விக்னேஷ் என் தம்பி மாதிரி, ஷார்ட்ஃபிலிம் காலத்திலிருந்து தெரியும். தினேஷ் மற்றும் பாலாவிற்கு நன்றி. ஒரு படத்தின் நெகட்டிவ் மட்டுமே காட்டி டிரெய்லர் வெளியிட்ட ஒரே டீம் நாங்க தான். ஆனால் படம் பார்த்த பிறகு மக்கள் தந்த ஆதரவு மகிழ்ச்சி. என்னிடம் நாலு கதை சொன்னார் விக்னேஷ், அதில் ஏன் இரண்டு கதை எடுக்கவில்லை, படத்தின் பேர் மாற்றினார் அதையும் என்னிடம் கேட்கவில்லை, இப்போது அவரிடம் கேட்காமல் ஒன்று சொல்கிறேன் எனக் கூறிய தயாரிப்பாளர்….
விக்னேஷ் கார்த்திக்கு அடுத்த படத்திற்கான அட்வான்ஸ் செக்கைத் தந்து அசத்தினார்.

நடிகர் சுபாஷ் பேசியதாவது…
பிரஸ் ஷோவில் நீங்கள் தந்த ஆதரவு தான் இந்த வெற்றிக்குக் காரணம், உங்கள் அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்திற்கு என்னைத் தேர்ந்தெடுத்த விக்னேஷுக்கு நன்றி. தயாரிப்பாளர்கள் பாலா சார், தினேஷ் சார், சுரேஷ் சார் மூவருக்கும் நன்றி. திட்டம் இரண்டு படத்திற்குப் பிறகு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு, இதில் நடித்த அனைவரும் சூப்பராக நடித்திருந்தனர். அமர், சரவணன் இருவரும் கலக்கியிருந்தார்கள். என் நடிப்பை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.

நடிகை சோபியா பேசியதாவது…
டிரெய்லர் லாஞ்சில் நடந்த நெகட்டிவ் கமெண்டால் நிறையப் பயந்தேன் ஆனால் இயக்குநர், டீம் எப்படி இருப்பார்கள் என்று நினைத்து, என்னைத் தேற்றிக்கொண்டேன். எங்கள் டீம் எந்த இடத்திலும் படத்தை விட்டுக்கொடுக்கவில்லை, படத்திற்கு நீங்கள் தந்த ரிவ்யூ தான் படத்தை வெற்றிபெறச் செய்தது. என்னையும் குழுவையும் பாராட்டிய அனைவருக்கும் நன்றி, என் குழுவினர் அனைவருக்கும் நன்றி.

நடிகை ஜனனி பேசியதாவது…
ஒரு படம் பெரிய படமா?, சின்னப் படமா? என பாரபட்சம் காட்டாமல், படம் நன்றாக இருந்தால் பாராட்டி, அதை ஜெயிக்க வைக்க உங்கள் ஆதரவைத் தருகிறீர்கள், உங்களுக்கு நன்றி. இயக்குநர் விக்னேஷுக்கு நன்றி. கதை கேட்டதிலிருந்து ஷூட்டிங் வரை, அவரை நிறைய டார்ச்சர் செய்துள்ளேன் ஆனால் பொறுமையாக இருந்து, என்னை நம்புங்கள் என ஆதரவு தந்து, இந்தப்படத்தை எடுத்தார். இந்தப்படத்தில் எல்லோரும் அட்டகாசமாக நடித்துள்ளனர். இந்தப்படத்தை நல்லமுறையில் எடுத்துச் சென்ற தயாரிப்பாளர்களுக்கு நன்றி. அனைவருக்கும் நன்றி.

இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் பேசியதாவது…
இந்தப்படம் இந்த நிலையில் இருக்க மிக முக்கிய காரணம் நீங்கள் தான். பிரஸ் மீட்டில் அவ்வளவு நெகட்டிவிடி பரவிய பிறகு, பிரஸ் ஷோவின் போது, மிகப்பதட்டமாக இருந்தேன். ஆனால் நீங்கள் கைதட்டிப் பாராட்டியது உண்மையிலேயே மிக சந்தோசமாக இருந்தது. நல்ல படம் என்றால் நீங்கள் ஆதரவு தருவீர்கள் என்பது இதன் மூலம் நிரூபணமானது. இன்னொரு வேண்டுகோள், திரையரங்கில் இப்போது படம் நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் வீக் டெஸில் தியேட்டரில் ஹவுஸ்ஃபுல் ஆனால் தான் அடுத்த வாரம் ஷோ தருகிறார்கள், ஆனால் வார நாட்களில் பெரிய ஹீரோக்ளுக்கே கூட்டம் வராது. இந்த நிலை மாற வேண்டும். நீங்கள் ஆதரவு தந்தால் அடுத்த வாரமும் படம் ஓடும். எல்லோருக்கும் நன்றி. அடுத்த வருடம் ஹாட் ஸ்பாட் 2 வோடு, எங்கள் குழுவோடு உங்களைச் சந்திக்கிறோம் நன்றி.

படக்குழுவினர் இதே தயாரிப்பில் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஹாட்ஸ்பாட் 2 உருவாகவுள்ளதை இந்த வெற்றி விழாவில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இப்படத்தில் கலையரசன், ஆதித்யா பாஸ்கர், மற்றும் கௌரி கிஷன், சாண்டி மாஸ்டர், அம்மு அபிராமி, ஜனனி ஐயர், திட்டம் இரண்டு பட ஹீரோ சுபாஷ், சோபியா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சதீஷ் ரகுநாதன்-  வான் ஆகியோர் இசையமைத்துள்ளனர். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்துள்ளார், முத்தையன் எடிட்டிங் செய்துள்ளார்.

மார்ச் 29 ஆம் தேதி உலகமெங்கும் வெளியான இப்படம் இப்போது வரைக்கும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

Hot spot 2 confirmed Vignesh Karthik got advance payment

‘வல்லவன் வகுத்ததடா’ தனித்துவமான படம்.. புதியவர்களின் முயற்சி.. – தனஞ்செயன்

‘வல்லவன் வகுத்ததடா’ தனித்துவமான படம்.. புதியவர்களின் முயற்சி.. – தனஞ்செயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

“வல்லவன் வகுத்ததடா” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

Focus Studios சார்பில் விநாயக் துரை தயாரித்து, இயக்க, ஹைப்பர்லிங் திரைக்கதையில், க்ரைம் டிராமா படமாக உருவாகியிருக்கும் திரைப்படம் “வல்லவன் வகுத்ததடா”. வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்வு, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ளப் பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வினில்…

இயக்குநர் விநாயக் துரை பேசியதாவது…
வாழ்த்த வந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி. எங்களின் 2 வருட போராட்டம் தான் இந்தப்படம். இந்தப்படத்தின் மீது வெளிச்சம் விழக்காரணம் தனஞ்செயன் சார் தான் அவருக்கு நன்றி. தனஞ்செயன் சார் படம் பார்த்து விட்டு படம் பிடித்திருக்கிறது என்று சொன்னபோது, அவர் தான் கால் பண்ணிப்பேசுகிறாரா ? என ஆச்சரியமாக இருந்தது. எங்களை வெகுவாக பாராட்டி அவர் பேனரையும் தந்துள்ளார். பீட்சா படம் வந்த போது CV குமார் சாரைப் பார்த்துள்ளேன், அவர் எங்கள் படத்தை வாழ்த்த வந்தது மகிழ்ச்சி. கேபிள் சங்கர் சார் இப்படத்திற்கு மிகவும் உறுதுணையாக இருந்தார். தனஞ்செயன் சாரை அணுக காரணமாக இருந்த கேபிள் சங்கர் சாருக்கு நன்றி. இது ஹைபர் லிங் கதைக்களம். ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்லி எல்லாம் ஓகே ஆகியிருந்த நிலையில், அவர் எனக்கு செக் சைன் பண்ணும்போது பாம்பு வந்தது, அந்த தயாரிப்பாளர் அப்படியே போய் விட்டார். அப்போது என் அப்பா வந்தார். அவரிடம் அப்பா ஃபிரண்டோடு பிஸினஸ் செய்யப்போகிறேன் என சொல்லி அவரிடம் காசு வாங்கித் தான் இந்தப்படம் எடுத்தேன். 3 நாட்கள் முன்பு வரை அவருக்கு இந்த விசயம் தெரியாது. அவர் வேறு யாரோ தயாரிப்பாளர் என்று தான் நினைத்துக்கொண்டிருந்தார், இப்போது தான் சொன்னேன். அவர் என்னை நம்பவே இல்லை. தனஞ்செயன் சார் நம் படத்தை பாராட்டி விட்டார் என்றேன் அவரை எப்படி ஏமாற்றினாய் அவரைப்பார்த்தால் ஏமாறுகிற மாதிரி தெரியலையே என்றார். இன்று இந்த பிரஸ் மீட்டைக் காட்டி அவர்களை நம்பவைப்பேன். தகுதியுள்ளவை தப்பிப் பிழைக்கும் என்பது தான் வல்லவன் வகுத்ததடா படத்தின் மையம். பணம் 5 பேர் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்பது தான் படம். படத்தில் நடித்துள்ள ராஜேஷ் அண்ணா எப்போதும் எனக்குத் துணையாக இருந்துள்ளார். ஹைனா மாதிரியான மேனரிசத்தில் அட்டகாசமாக நடித்துள்ளார். சுவாதி நடிக்கக் கேட்ட போது அவர் வீட்டில் கூப்பிட்டு இண்டர்வியூ மாதிரி வைத்துத் தான் அனுப்பி வைத்தார்கள். அவரும் நன்றாக நடித்துள்ளார். அருள் ஜோதி அண்ணா எனக்காக மட்டும் நடித்துத் தந்தார். மியூசிக் டைர்க்டர் அட்டகாசமாக மியூசிக் செய்துள்ளார். இப்படத்தின் எடிட்டர், ஒளிப்பதிவாளர் எல்லோருக்கும் நன்றி. படம் நன்றாக வந்துள்ளது ஏப்ரல் 11 படம் வருகிறது படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.

ஒளிப்பதிவாளர் கார்த்திக் நல்லமுத்து பேசியதாவது…
விநாயக் அவருடைய அப்பாவை மட்டுமில்லை, எங்கள் எல்லோரையும் ஏமாற்றித் தான் படம் பண்ணினார். விநாயக் படம் செய்யலாம் எனச் சொன்னபோது தயாரிப்பாளர் வரட்டும் என்றேன், அதெல்லாம் ரெடி படம் பண்ணலாம்னா எனக் கூறினார். கதை சொன்ன போது, எனக்குப் பிடித்துப்போகவே உடனே ஆரம்பிக்கலாம் என்றேன். இந்தப்படம் பணத்தால் எங்கேயும் நிற்கவில்லை. விநாயக் எல்லாவற்றையும் சரியாக ஒருங்கிணைத்தார். படத்திற்கு முன்னால் எல்லோரையும் வைத்து ரிகர்சல் செய்தோம், அது படப்பிடிப்பில் மிகப்பெரிய உதவியாக இருந்தது. படம் முடிந்து பிஸினஸ் செய்வதில் நிறையப் பிரச்சனைகள் இருந்தது, அவ்வப்போது கேட்பேன், அப்போது தான் விநாயக் தனஞ்செயன் சார் படம் பார்த்து பிடிதிருக்குது என சொன்னதாகச் சொன்னார். அங்கிருந்து இப்போது உங்களிடம் கொண்டு வந்துள்ளோம். உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

நடிகை ஸ்வாதி பேசியதாவது…
ஆக்டிங் ஸ்கூல் படிக்கும்போதே நடிக்கும் ஆர்வம் இருந்தது ஆனால் அது முடியவில்லை. ஆனால் நடிப்பின் மீதான ஆர்வத்தில் சின்ன சின்ன போட்டோஷூட், மாடலிங் எல்லாம் செய்தேன். ஆனால் முதல் பட வாய்ப்பே, மெயின் லீடாக கிடைக்கும் என நினைக்கவில்லை. கார்த்திக் சாருக்கு நன்றி. இந்தப்படத்தில், இந்த டீமிடம் நிறையக் கற்றுக்கொண்டேன். எல்லோரும் கடினமாக உழைத்துத் தான் இந்தப்படத்தை உருவாக்கியுள்ளோம். எல்லோருக்கும் இந்தப்படம் கண்டிப்பாகப் பிடிக்கும். இந்தப்படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் இந்தப்படம் வெற்றியைத் தர வேண்டுகிறேன். தனஞ்செயன் சாருக்கு என் நன்றிகள். படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.

கேபிள் சங்கர் பேசியதாவது
சின்னப்படங்களை கொண்டு சேர்ப்பது பயங்கர கஷ்டம். அதிலும் நல்ல படங்களைப் பார்த்துத் தேர்ந்தெடுப்பது இன்னும் கஷ்டம். ஆனால் ஒரு நல்ல படமென்றால் யாராவது அதைப்பார்த்து விட்டீர்களா?, அதைப்பார்த்து விட்டீர்களா? எனக் கேட்டு விடுவார்கள். அப்படி தான் இந்தப்படத்தின் அறிமுகம் கிடைத்தது அதன் பிறகு தான் தனஞ்செயன் சாரிடம் அறிமுகப்படுத்தினேன். ஒரு நல்ல படம் அதன் வியாபாரத்தை அதுவே தீர்மானித்துவிடும் என்பதை நான் நம்புகிறேன். இந்தப்படத்தை அப்பாவை ஏமாற்றி எடுத்தேன் என்றார் இயக்குநர், இந்தப்படம் கண்டிப்பாக உங்களுக்குச் சம்பாதித்துத் தரும். சின்னப்படம் அதிலும், பணத்தின் பின்னால் அலையும் மனிதர்கள் கான்செப்ட் எப்போதும் சுவாரஸ்யமானது தான் சூது கவ்வும் படத்திற்குப் பின்னர், அந்த
கான்செப்டில் நிறையப் படம் வந்தது. இந்தப்படம் அந்த வகையில் ஒரு அட்டகாசமான படமாக வந்துள்ளது. படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

தயாரிப்பாளர் CV குமார் பேசியதாவது…
படத்தின் 8 நிமிட கட் அட்டகாசமாக இருந்தது, எனக்கு இந்த மாதிரி இண்டிபெண்டண்ட் படங்கள் ரொம்பப் பிடிக்கும். பெரிய பெரிய ஜாம்பவான்கள் அப்படி வந்தவர்கள் தான். ஆனால் அதை எப்படி பிரசண்ட் செய்கிறோம் என்பது தான் முக்கியம். இப்பபடத்தின் பிரசண்ட் எல்லாம் நன்றாக உள்ளது. தயாரிப்பாளரின் அப்பா அவரிடம், தனஞ்செயன் சாரை ஏமாற்றி விட்டாயா எனக் கேட்டதாகச் சொன்னார். தனஞ்செயன் சார் ஏமாற மாட்டார் அவருக்கு திரைத்துறை அறிவு அதிகம். இப்படம் கண்டிப்பாக ஜெயிக்கும். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள், படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது…
சிறு தயாரிப்பு படங்களை எப்போதும் ஆதரிக்க வேண்டுமென்பதே என் நோக்கம் என்னால் முடிந்தவரைத் தினமும் படங்கள் பார்த்து வருகிறேன் பல படங்களை எங்கள் நிறுவனம் மூலம் ஓடிடியில் விற்றுத் தந்தோம். எறும்பு முதலாகப் பல படங்கள் ஓடிடியில் வெற்றி பெற்றுள்ளது. அந்த வகையில் தான் கேபிள் சங்கர் சொல்லி இந்தப்படம் பார்த்தேன். பிரமாதமாக இருந்தது. விநாயக் துரை மிக அழகாகத் திரைக்கதை எழுதியுள்ளார்.

இதில் நடித்துள்ள ராஜேஷ் ஹைனாவின் வித்தியாசமான குணங்களோடு நடித்திருந்தார், ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் வித்தியாசமாக உருவாக்கியுள்ளார்கள். நாயகி தமிழில் பேசி நடித்திருப்பது அருமை. வல்லவன் வகுத்ததடா தனித்துவமான படம். இது புதியவர்களின் முயற்சி, ஊடகங்களின் ஆதரவு வேண்டும் அது இருந்தால் தான் ஓடிடி பிஸினஸ் செய்ய முடியும். எங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் இப்படத்திற்குச் செய்து வருகிறோம். உங்கள் கடமையாக நினைத்து இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.

5 கதாபாத்திரங்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை, பரபரப்பான திருப்பங்களுடன் ஹைப்பர்லிங் திரைக்கதையில் சொல்லும், க்ரைம் டிரமாவாக இப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தில் தேஜ் சரண்ராஜ் நாயகனாக நடித்துள்ளார். ராஜேஷ், பாலச்சந்திரன், அனன்யா மணி, ஸ்வாதி மீனாக்‌ஷி, விக்ரம் ஆதித்யா, ரெஜின் ரோஸ் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Focus Studios சார்பில் விநாயக் துரை இப்படத்தை தயாரித்துள்ளதுடன், இப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.

தொழில் நுட்ப குழு
தயாரிப்பு நிறுவனம் : Focus Studios
தயாரிப்பாளர்: விநாயக் துரை
இயக்குநர்: விநாயக் துரை
ஒளிப்பதிவு : கார்த்திக் நல்லமுத்து
இசை: சகிஷ்னா சேவியர்
எடிட்டர்: அஜய்
சண்டைக்காட்சி: மகேஷ் மேத்யூ
மக்கள் தொடர்பு : சதீஷ்-சிவா (AIM)

இத்திரைப்படம் ஏப்ரல் 11 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

. Vallavan Vaguthadhada movie is unique says Dhananjayan

பத்து எபிசோட்.. பரபரப்பான திகில் ட்ராமா.. ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’யை கொண்டாடும் ரசிகர்கள்

பத்து எபிசோட்.. பரபரப்பான திகில் ட்ராமா.. ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’யை கொண்டாடும் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பத்து எபிசோட்.. பரபரப்பான திகில் ட்ராமா.. ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’யை கொண்டாடும் ரசிகர்கள்

இன்ஸ்பெக்டர் ரிஷி திகில் டிராமாவின் வெற்றியை ரசிகர்களுடன் படக்குழுவினர் கொண்டாடுகிறார்கள்.

தமிழ் ஒரிஜினல் தொடரான இன்ஸ்பெக்டர் ரிஷி இறுதியாக ப்ரைம் வீடியோவில் வெளியிடப்பட்ட தருணத்தில் ஒரு நீண்ட காத்திருப்பு முடிவுக்கு வந்தது.

பார்வையாளர்கள் மத்தியில் உற்சாகத்தை கரை புரண்டோடச் செய்து, அவர்களின் உற்சாகத்தை வெளியிடச்செய்யும் வகையில், பிரைம் வீடியோ, மனதை ஒன்றிப்போகச்செய்யும் இந்தத் தொடர் நிகழ்ச்சியின் விளம்பர போஸ்டர்களை சென்னை முழுவதும் நிறுவியது.

ஒரு வலைப் பின்னலில் இருந்து ‘வனராட்சி’ AKA ‘ராட்சி’ என்ற ஒரு கொடிய புராணகால வன மோகினி மற்றும் பழங்குடியினருக்கான வன தெய்வம், வெளிவரும் இதயத்தைத் பிழியும் காட்சிகளை இந்த விளம்பரக் காட்சிகள் எடுத்துக் எடுத்துக்காட்டுகின்றன.

விளம்பரப் பலகைகளின் ஓரங்களில் தொங்கிக் கொண்டிருக்கும் சிலந்தி வலை தமிழ்நாட்டின் தென்காடு என்ற சிறிய கிராமத்தில் நடக்கும் தொடர் கொலைகளின் முக்கிய ஆதாரங்களில் ஒன்றாக செயல்படுகிறது.

சென்னையில் பல்வேறு இடங்களில் நிறுவப்பட்ட இந்த விளம்பர போர்டுகள் பார்வையாளர்கள் மத்தியில் இந்த திகில்-கிரைம்-டிராமா தொடரை பார்க்கும் ஆர்வத்தை தூண்டுகின்றன.

சமீபத்தில் இந்தத் தொடரின் குழுவினர், இந்த ஹோர்டிங்குகளை வெளியிடுவதோடு, நிகழ்ச்சியின் வெற்றியை பார்வையாளர்களுடன் சேர்ந்து கொண்டாடும் நோக்கத்தில் சென்னை மெரினா கடற்கரைக்கும் சென்றிருந்தார்கள்.

நிகழ்ச்சிக்கு பார்வையாளர்களிடமிருந்து கிடைத்த நேர்மறையான விமர்சனங்கள் குறித்து பேசிய தொடரின் கதாநாயகனான நடிகர் நவீன் சந்திரா, கூறினார் “இன்ஸ்பெக்டர் ரிஷி தொடருக்கு பார்வையாளர்கள் அளித்த அற்புதமான விமர்சனங்களுக்காக அவர்களுக்கு நன்றி சொல்ல இந்த வாய்ப்பை நான் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்..

அனைவரின் பாராட்டும் ஆதரவும் எங்களை திக்குமுக்காடச் செய்துவிட்டதோடு இந்த நிகழ்ச்சி தொடர்பாக எங்கள் மீது அனைவராலும் காட்டப்படும் அன்பும் ஆதரவும் என்னை மிகவும் பணிவாக உணரச்செய்து மகிழ்ச்சியளித்தது.

உலகம் முழுவதிலுமிருந்தும் பார்வையாளர் களிடமிருந்து வரும் இத்தகைய பாராட்டுகள் மேலும் சிறப்பாக செயல் படுவதற்கான மன எழுச்சியை என்னுள் தூண்டி, மனதைக் கொள்ளை கொள்ளும் மற்றும் மகிழ்விக்கும் கதைகளைக் வழங்கும் ஆர்வத்தையும் எனக்கு அளிக்கிறது.

இன்ஸ்பெக்டர் ரிஷி எங்கள் அனைவரது கடின உழைப்பு மற்றும் ஆர்வத்தின் பலனாக விளைந்தது. மக்கள் இந்த நிகழ்ச்சியை பெருமளவு விரும்பு வதைக் கண்டு நாங்கள் நன்றியோடு மன நிறைவாக உணர்கிறோம்.”

இந்தத் தொடர் இயற்கைக்கு மாறான அல்லது வழக்கத்தை மீறிய சம்பவங்கள் நிறைந்த ஒரு புதிரான மற்றும் மூளையை கசக்கிப் பிழியும் ஒரு வழக்கின் விசாரணையை எதையும் சந்தேகத்தோடு ஒற்றைக் கண் பார்வையில் காணும் குற்றப் பிரிவு ஆய்வாளர் ரிஷி நந்தன் தனது நம்பிக்கைக்குரிய இரண்டு துணை ஆய்வாளர்கள் அய்யனார் மற்றும் சித்ரா ஆகியோரின் உதவியோடு, மேற்கொள்வது குறித்து பேசுகிறது.

தனிப்பட்ட முறையில் தான் எதிர்கொள்ளும் தடைகளைத் தாண்டி மர்மமான கொலைகளுக்குப் பின்னால் உள்ள உண்மையை வெளிக்கொண்டுவர அவர் இடைவிடாத முயற்சியில் ஈடுபடுகிறார்.

நந்தினி ஜே.எஸ் உருவாக்கி எழுதிய இன்ஸ்பெக்டர் ரிஷி தொடரை, சுக்தேவ் லஹிரி தயாரித்துள்ளார்.

இதில் பன்முக திறமை கொண்ட நடிகர் நவீன் சந்திரா முன்னணி வேடத்தில் நடிக்க அவரோடு இணைந்து, சுனைனா, கண்ணா ரவி, மாலினி ஜீவரத்தினம், ஸ்ரீகிருஷ்ண தயாள் மற்றும் குமரவேல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

பத்து எபிசோடுகள் கொண்ட இந்தத் தொடர் தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் தற்போது பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

Inspector Rishi makes good critics at OTT

கமல் – அமிதாப் – பிரபாஸ் இணைந்த ‘கல்கி 2898 AD’ அனிமேஷன் இன்ட்ரோ வீடியோ

கமல் – அமிதாப் – பிரபாஸ் இணைந்த ‘கல்கி 2898 AD’ அனிமேஷன் இன்ட்ரோ வீடியோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல் – அமிதாப் – பிரபாஸ் இணைந்த ‘கல்கி 2898 AD’ அனிமேஷன் இன்ட்ரோ வீடியோ

சயின்ஸ் பிக்சன் பிரம்மாண்டமான ‘கல்கி 2898 AD’ படத்திலிருந்து, அனிமேஷன் அறிமுக வீடியோ வெளியாகவுள்ளது

பிரபல இயக்குநர் நாக் அஸ்வினின் சயின்ஸ் பிக்சன் பிரம்மாண்டமான ‘கல்கி 2898 AD’ படத்தின், பிரமாண்ட வெளியீட்டிற்காக பார்வையாளர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிக்கின்றனர்.

அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், மற்றும் திஷா பதானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தப் படம், பார்வையாளர்களை காலத்தின் மீது ஒரு பரபரப்பான பயணத்திற்கு அழைத்துச் செல்லும். இப்படத்தின் மீது நாடு முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்த நிலையில், தற்போது இந்த பிரமாண்ட படைப்பிலிருந்து, ஒரு அற்புதமான அப்டேட்டை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். ‘கல்கி 2898 AD’ உலகத்தைப் பற்றிய ஒரு பார்வையை அறிமுகப்படுத்தும் வகையில், இப்படத்தின் அனிமேஷன் அறிமுக வீடியோ OTT இல் திரையிடப்பட உள்ளது, இந்த வீடியோவிற்கு நடிகர் பிரபாஸ் டப்பிங் செய்துள்ளார்.

பொழுதுபோக்கு செய்தி நிறுவனமான பிங்க்வில்லா தளத்தில் கூறியுள்ள தகவலின் படி…, வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில், இயக்குநர் நாக் அஷ்வின் இயக்கத்தில் ‘கல்கி 2898 AD.’ படத்தின் சிறப்பு அனிமேஷன் அறிமுக வீடியோவை வெளியிடவுள்ளனர்.

இந்த அறிமுக வீடியோவின் டிஜிட்டல் பிரீமியரில், ‘கல்கி 2898 AD’ படத்தில் நட்சத்திர நடிகர்கள் பங்குபெறும் கதாபாத்திரங்களையும் இந்த வீடியோ அறிமுகப்படுத்தும்.

‘கல்கி 2898 AD’ கடந்த ஆண்டு சான் டியாகோ காமிக்-கானில் அதன் அற்புதமான அறிமுகத்திற்குப் பிறகு, பெரும் அலைகளை உருவாக்கியதுடன், உலகளாவிய வகையில் பெரும் பாராட்டுகளைப் பெற்றது.

நாக் அஷ்வின் இயக்கத்தில், வைஜெயந்தி மூவீஸ் தயாரிக்கும் ‘கல்கி 2898 AD’ ஒரு பன்மொழித் திரைப்படமாகும், இது புராணக்கதைகளின் அடிப்படையில் எதிர்காலத்தில் நடக்கும் சயின்ஸ் பிக்சன் திரைப்படமாகும்.

Kalki 2898AD animation intro video updates

‘இன்று நேற்று நாளை 2’ : இயக்குனர் ரவிக்குமார் இல்ல.. பரத் மோகன் இயக்குகிறார்

‘இன்று நேற்று நாளை 2’ : இயக்குனர் ரவிக்குமார் இல்ல.. பரத் மோகன் இயக்குகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘இன்று நேற்று நாளை பார்ட் 2’ : இயக்குனர் ரவிக்குமாருக்கு பதிலாக பரத் மோகன்

தங்கம் சினிமாஸ் எஸ் தங்கராஜ் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சி வி குமார் தயாரிப்பில் பரத் மோகன் இயக்கத்தில் ‘இன்று நேற்று நாளை 2’*

இன்று நேற்று நாளை’ மற்றும் ‘அயலான்’ இயக்குநர் ரவிக்குமார் எழுத்தில் உருவாகும் புத்தம் புதிய, சுவாரசிய காலப்பயணக் கதை..

திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் பேனரில் சி வி குமார் தயாரிப்பில் 2015ம் ஆண்டு வெளிவந்த ‘இன்று நேற்று நாளை’ அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற திரைப்படம் ஆகும்.

இதன் இயக்குநர் ரவிக்குமார், சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘அயலான்’ வெற்றி படத்தையும் இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் ஒன்பது வருடங்களுக்கு பிறகு ‘இன்று நேற்று நாளை’ இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு தற்போது தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தங்கம் சினிமாஸ் எஸ் தங்கராஜ் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சி வி குமார் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘இன்று நேற்று நாளை 2’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

ரவிக்குமார் எழுத்தில் உருவாகும் இந்த புத்தம் புதிய, சுவாரசிய காலப்பயணத் திரைப்படத்தை பரத் மோகன் இயக்குகிறார். சி வி குமாரிடம் ‘மாயவன்’ திரைப்படத்தில் இணை இயக்குநராக பணியாற்றிய இவர், ‘இக்லூ’ மற்றும் ‘இப்படிக்கு காதல்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

‘கஜினிகாந்த்’, ‘இப்படிக்கு காதல்’, ‘பொய்க்கால் குதிரை’ உள்ளிட்ட திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பல்லு ‘இன்று நேற்று நாளை 2’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

நடிகர்‍கள் மற்றும் இதர தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் பரத் மோகன்…

“ஒரு புதிய கதைக்கருவோடு 2015ல் வெளியான ‘இன்று நேற்று நாளை’ மக்களை கவர்ந்து பெரிதும் பேசப்பட்டது. அதன் இரண்டாம் பாகத்தை, அதுவும் அத்திரைப்படத்தை தயாரித்த சி வி குமார் அவர்கள் தயாரிப்பிலும், இயக்குநர் ரவிக்குமார் எழுத்திலும் இயக்குவது பெரும் மகிழ்ச்சி.

காலப்பயண கதையான ‘இன்று நேற்று நாளை 2’ திரைப்படமும் ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடிக்கும்,” என்று கூறினார்.

தங்கம் சினிமாஸ் எஸ் தங்கராஜ் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சி வி குமார் தயாரிப்பில் இயக்குநர் ரவிக்குமார் எழுத்தில் பரத் மோகன் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘இன்று நேற்று நாளை 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்கவுள்ளது.

Indru Netru Naalai 2 directed by Bharath Mohan

அபிஹாசன் நடிப்பில் ‘வேட்டையன்’ பட உதவி இயக்குனர் இயக்கும் ‘பீட்சா 4’

அபிஹாசன் நடிப்பில் ‘வேட்டையன்’ பட உதவி இயக்குனர் இயக்கும் ‘பீட்சா 4’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அபிஹாசன் நடிப்பில் ‘வேட்டையன்’ பட உதவி இயக்குனர் இயக்கும் ‘பீட்சா 4’

எஸ் தங்கராஜின் தங்கம் சினிமாஸ் மற்றும் சி வி குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் K A ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் அபி ஹாசன், தெலுங்கு பிக் பாஸ் புகழ் ரத்திகா முதன்மை வேடங்களில் நடிக்கும் ‘பீட்சா 4’*

தமிழ் திரையுலகில் திகில் திரைப்படங்களுக்கான புதிய டிரெண்டை ஏற்படுத்தி தக்க வைத்துள்ள ‘பீட்சா’ வரிசையின் முதல் 3 பாகங்களின் ஹாட்ரிக் வெற்றியை தொடர்ந்து அதன் நான்காம் பாகமான ‘பீட்சா 4’ -ஐ K A ஆண்ட்ரூஸ் இயக்குகிறார்.

எஸ். தங்கராஜின் தங்கம் சினிமாஸ் மற்றும் சி.வி. குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படத்தில் பிரபல நடிகர் நாசரின் மகனும் ‘கடாரம் கொண்டான்’ மற்றும் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவருமான அபிஹாசன் முதன்மை வேடத்தில் நடிக்கிறார். தெலுங்கு பிக் பாஸ் புகழ் ரத்திகா நாயகி ஆவார்.

‘எல் கே ஜி’, ‘மூக்குத்தி அம்மன்’, ‘கொரில்லா’, ‘களத்தில் சந்திப்போம்’, ‘அயலி’, ‘சூது கவ்வும் 2’, ‘யங் மங் சங்’, ‘ஃபிளாஷ்பேக்’, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘வேட்டையன்’ உள்ளிட்ட படங்களில் இணை மற்றும் துணை இயக்குநராக பணியாற்றியுள்ள K A ஆண்ட்ரூஸ், ‘பீட்சா 4’ திரைப்படத்தை இயக்குவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

“எத்தனையோ திறமையான இயக்குநர்களையும் இதர கலைஞர்களையும் உலகுக்கு அடையாளம் காட்டியுள்ள தயாரிப்பாளர் சி வி குமார் அவர்களின் திருக்குமரன் என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் மற்றும் தங்கம் சினிமாஸ் தயாரிப்பில், ‘பீட்சா’ வெற்றி வரிசையின் நான்காம் பாகத்தை இயக்குவது மிகவும் பெருமையாக உள்ளது.

முதல் பாகத்திற்கும் நான்காம் பாகத்திற்கும் நேரடி தொடர்பு இருக்கும். அது என்ன என்பது சஸ்பென்ஸ்,” என்று இயக்குநர் ஆண்ட்ரூஸ் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்…

“‘ராட்சசன்’, ‘மார்க் ஆண்டனி’ உள்ளிட்ட படங்களின் திரைக்கதையில் பணியாற்றிய எஸ் ஜே அர்ஜுன் ‘பீட்சா 4’ திரைப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை எழுதியுள்ளார். வலுவான குழு இப்படத்திற்காக இணைந்துள்ளது. திரில் மற்றும் திகில் கலந்து ரசிகர்களை பரபரப்பின் உச்சிக்கே கொண்டு செல்லும் வகையில் ‘பீட்சா 4’ அமையும்,” என்று தெரிவித்தார்.

‘பீட்சா 4’ குழுவினரின் விவரம் வருமாறு..

ஒளிப்பதிவாளர்: ஸ்ரீராம், சண்டை பயிற்சி: ராம்குமார், மேலாளர்: விஜயன் சி வி, கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்: வெங்கி, உடைகள் வடிவமைப்பு: ஸ்வேதா தங்கராஜ், இசை: ஹரி, கலை இயக்குநர்: சிவா, காஸ்டியூமர்: செல்வம், ஒப்பபனை: வினோத், படத்தொகுப்பு: ராதாகிருஷ்ணன்.

Pizza 4 will be an adrenaline pumping horror thriller ride informs the team

More Articles
Follows