கொரோனா 2வது அலை..: ஏப்ரல் 10 முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள்..; கூடுதல் தகவல்கள்..

கடந்தாண்டை 2020 என்று சொல்வதை விட கொரோனா ஆண்டு என்றே சொல்லலாம்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கிட்டத்தட்ட 6-7 மாதங்களாக ஊரடங்கு அமலில் இருந்தது. அதன்பின்னர் சில தளர்வுகள் இருந்தாலும் ஊரடங்கு நீடிக்கப்பட்டது.

தற்போது 2021லும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அதனை தடுக்க தமிழகத்தில் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

*தமிழக அரசின் கொரோனா ஊரடங்கு புதிய கட்டுப்பாடுகள் இதோ…*

திருவிழா , மதம் சார்ந்த கூட்டங்களுக்கு ஏப்.10 ஆம் தேதி முதல் தடை விதிக்கப்படுகிறது – தமிழக அரசு.

திருமண விழாக்களில் 100 பேருக்கு மிகாமல் மட்டுமே பங்கேற்க வேண்டும் –

அனைத்து திரையரங்குகளும் 50% இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி செயல்பட அனுமதி –

பேருந்துகளில் இருக்கைகளில் அமர்ந்து செல்லும் பயணிகளுக்கு மட்டுமே அனுமதி.

ஹாப்பிங் மால்கள், பெரிய கடைகளில் 50% வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

மரண இறுதி ஊர்வலங்களில் 50 பேருக்கு மிகாமல் கலந்து கொள்ள அனுமதி.

ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர 2 பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதி.

ஏப்ரல் 10ஆம் தேதியில் இருந்து கோயம்பேட்டில் சில்லரை வியாபாரத்திற்கு தடை விதிப்பு.

*கொரோனா கூடுதல் தகவல்கள்…*

இந்தியாவில் இன்று ஒரே நாளில் 1,26,789 பேருக்கு கொரோனா.

கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டுக் கொண்ட பிறகும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று.

கொரோனா ஆண்களை அதிகம் தாக்குகிறது 30 முதல் 39 வயதினரே கொரோனாவால் அதிகளவில் பாதிப்பு – சென்னை மாநகராட்சி.

இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்றுக்கு 16,68,62 பேர் உயிரிழந்துள்ளனர் – மத்திய சுகாதாரத்துறை

கொரோனாவிலிருந்து மேலும் 59,258 பேர் குணமடைந்துள்ள நிலையில் 9,10,319 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நடிகை நக்மாவுக்கு கொரோனா.

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் உடன் தொடர்பில் இருந்த முக.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று இல்லை.

கொரோனா பரவல் எதிரொலி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் மட்டும் ரத்து. ரூ 300 ஆன்லைன் முன்பதிவு உண்டு – திருப்பதி தேவஸ்தானம்.

மதுரையில் கொரோனா தொற்று உறுதியானவர்கள் வசிக்கும் தெருக்கள் இன்று முதல் மூடப்படும் – மாநகராட்சி ஆணையர்.

கொரோன தொற்று அதிகரிப்பு எதிரொலியாக இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு ஏப்ரல் 11ஆம் தேதி முதல் ஏப்ரல் 28ஆம் தேதி வரை தற்காலிக தடை – நியூசிலாந்து அரசு அறிவிப்பு

கொரோனாவை வீழ்த்த நம்மிடம் இருக்கும் சில வழிகளில் தடுப்பூசியும் ஒன்று – பிரதமர் மோடி

கொரோனா தொற்று காரணமாக இயக்குநர் எஸ்பி.முத்துராமன் மருத்துவமனையில் அனுமதி.

பெங்களூருவுக்கு தமிழக அரசு பேருந்துகள் 2வது நாளாக இயக்கப்படவில்லை.

பிரதமர் மோடிக்கு இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

புதுச்சேரியில் மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட கொரோனா வரி நீக்கம்.

மத்தியப் பிரதேசத்தில் முகக்கவசம் அணியாத 258 பேர் சிறையில் அடைப்பு.

வடகொரியாவில் இதுவரை ஒருவருக்கு கூட கொரோனா தொற்று ஏற்படவில்லை – அதிபர் கிம் ஜாங் உன்.

Here’s everything about TN Lockdown 2021

Overall Rating : Not available

Latest Post