லேடி விஜய்சேதுபதியாக மாறும் ஹன்சிகா மோத்வானி

லேடி விஜய்சேதுபதியாக மாறும் ஹன்சிகா மோத்வானி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ஹன்சிகா மோத்வானி.

விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் தமிழ் படங்களில் நடித்திருக்கிறார்.

சிம்பு உடன் மீண்டும் இணைந்த மகா திரைப்படம் இன்னும் ரிலீசாகவில்லை.

இது ஹன்சிகாவின் 100வது படமாகும்.

இந்த நிலையில் தற்போது 2022ல் பிசியாகி விட்டார் ஹன்சிகா.

பார்ட்னர், ரவுடி பேபி, மை நேம் இஸ் ஸ்ருதி, 105 மினிட்ஸ் ஆகிய படங்களில் நடிக்கிறார் ஹன்சிகா.

ஒரு கல் ஒரு கண்ணாடிக்குப் பிறகு மீண்டும் இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இத்துடன் வாலு புகழ் இயக்குனர் விஜய் சந்தருடன் ஒரு படம், ஆர் கண்ணன் இயக்கத்தில் ஒரு படம் என கைவசம் உள்ளன.

நடிகைகளில் ஹன்சிகாவை போல நடிகர்களில் விஜய்சேதுபதிக்கும் நிறைய படங்கள் உள்ளன.

கூடுதல் தகவல்கள்…

கடந்த சில மாதங்களில் மட்டும் விஜய்சேதுபதியின் லாபம், துக்ளக் தர்பார், அனபெல் சேதுபதி, முகிழ் ஆகிய படங்கள் ரிலீசானது.

தற்போது கடைசி விவசாயி படம் ரீலீசுக்கு தயாராகியுள்ளது.

அதுபோல் மாமனிதன் படமும் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த படத்தை சீனு ராமசாமி இயக்கியுள்ளார்.

கைவசம் உள்ள படங்கள்….

காத்து வாக்குல ரெண்டு காதல், கமலுடன் விக்ரம்.. இடம் பொருள் ஏவல், சங்குதேவன், மைக்கேல், ஒபாமா உங்களுக்காக, யாதும் ஊரே யாவரும் கேளிர், மும்பை கார், மெரி கிறிஸ்துமஸ், விடுதலை, காந்தி டாக்ஸ், 19 (1) ஆகிய படங்கள் உள்ளன.

Hansika follows Vijay Sethupathi strategy

தமிழச்சிகளின் வீரத்தை உலகுக்கு சொல்ல ‘வேலு நாச்சியார்’ கதையை படமாக்கும் சுசி கணேசன்

தமிழச்சிகளின் வீரத்தை உலகுக்கு சொல்ல ‘வேலு நாச்சியார்’ கதையை படமாக்கும் சுசி கணேசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடி வீர மரணம் அடைந்தவர் வேலு நாச்சியார்.

ஆங்கிலேயர்களின் சதியால் கணவனை இழந்தவர். இதன்பின்னர் தனி ஆளாக தைரியமாக நின்று படை திரட்டி கொரில்லா போர் மூலம் ஆங்கிலேயர்களை விரட்டி அடித்தவர்.

நேற்று ஜனவரி 3ல் வேலு நாச்சியாரின் 292வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

இந்த நிலையில் வேலு நாச்சியாரின் வாழ்க்கையை சினிமாவாக இயக்கப்போவதாக சுசி.கணேசன் அறிவித்துள்ளார்.

இவர் கந்தசாமி, திருட்டுபயலே உள்ளிட்ட படங்களை இயக்கியவர்.

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:

தமிழக பெண்களின் வீரத்தை இந்த உலகிற்கு எடுத்துக்காட்டிய வீர மகா ராணி வேலுநாச்சியரின் வீர வாழ்க்கை வரலாற்றை திரை வடிவமாக கொண்டுவரும் முயற்சியை இந்நாளில் பெருமையோடு அறிவிக்கிறேன்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி வேலு நாச்சியார் அம்மையாரை நினைவுகூர்ந்து வாழ்த்தியதில் படைப்பாளியான என் பேனா முனைக்கு மேலும் ஆக்கமும் ஊக்கமும் அளித்துள்ளது.

இந்த திரைப்படத்தின் மூலம் ஆங்கிலேயர்களோடு போரிட்டு, வென்ற முதலும் கடைசியுமான வீர தமிழச்சியின் மாவீரம் எத்தகையது என்பதை இன்றைய தலைமுறைக்கும் கொண்டுபோய் சேர்ப்பதோடு , உலகமே கொண்டாட வைத்துவிடலாம். என்கிறார்.

Velu Nachiyar biopic to be directed by Susi Ganesan

‘மாஸ்டர்’ ப்ராப்ளத்தை சந்திக்கும் ‘வலிமை’..; விஜய் வழியில் அஜித்

‘மாஸ்டர்’ ப்ராப்ளத்தை சந்திக்கும் ‘வலிமை’..; விஜய் வழியில் அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடித்துள்ள ‘வலிமை’ படம் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜனவலி 13ல் ரிலீஸ் ஆகிறது.

தற்போது கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால் தமிழகம் & பல மாநிலங்களில் சினிமா தியேட்டர்களில் 50% இருக்கைக்கு மட்டுமே அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனால் வலிமை பட ரிலீஸ் ஆர்ஆர்ஆர் படம் போல தள்ளிப்போகுமா? என்ற கேள்வி எழுந்தது.

இந்தநிலையில் வலிமை தயாரிப்பாளர் போனி கபூர் ஜனவரி 13மல் படத்தை வெளியிடுவதில் உறுதியாக உள்ளார்.

எனவே ஒரு புரொமோ வெளியிட்டு ‛வலிமை’ படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் 13ல் தியேட்டர்களில் ரிலீஸாகும் என தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு 2021 பொங்கலுக்கு விஜய் & விஜய்சேதுபதி நடித்த ‘மாஸ்டர்’ & ஈஸ்வரன் படமும் இதே போல 50% இருக்கைகள் அனுமதியுடன் ரிலீசாகி வசூலை அள்ளியது குறிப்பிடத்தக்கது.

Ajith follows Vijay idea for his Valimai release

ரஜினிகிட்டேயே மோதியாச்சு..; அடுத்து அஜித்துடன் மோதும் விஷால்

ரஜினிகிட்டேயே மோதியாச்சு..; அடுத்து அஜித்துடன் மோதும் விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் தியேட்டர்களில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல மாநிலங்களில் 10 மணி முதல் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது.

இதனையடுத்து ஜனவரி 7ஆம் தேதி வெளியாகவிருந்த ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் பட ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் ஜனவரி 13ல் ரிலீசாகவுள்ளது.

இந்த நிலையில் ஜனவரி 14ல் தன் படத்தை இறக்கவுள்ளார் நடிகர் விஷால்.

தற்போது விஷாலின் வீரமே வாகை சூடும் படமும் பொங்கல் பண்டிகை ரிலீஸாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பொங்கலுக்கு பிறகு தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வீரமே வாகை சூடும் படம் ஜன-26ல் ரிலீஸாகும் என சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டு இருந்தது என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

ஏற்கெனவே 2021ல் தீபாவளியன்று ரஜினியுடன் அண்ணாத்த படத்துடன் எனிமி (படத்துடன்) மோதினார் விஷால் என்பது குறிப்பிடத்தக்கது.

Vishal to clash with Ajith in this pongal

உதயநிதி கீர்த்திசுரேஷ் வடிவேலு கூட்டணி; சினிமாவுக்கு முழுக்குபோடும் MLA.?

உதயநிதி கீர்த்திசுரேஷ் வடிவேலு கூட்டணி; சினிமாவுக்கு முழுக்குபோடும் MLA.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘வலிமை’ புரொடியூசர் போனி கபூர் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கும் ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தில் நடித்து வருகிறார் உதயநிதி.

இந்த படத்தை முடித்துவிட்டு கர்ணன் பட இயக்குன மாரி செல்வராஜ் இயக்கவுள்ள படத்தல் நடிக்கவுள்ளார் உதயநிதி என்ற தகவலை நம் தளத்தில் பல மாதங்களுக்கு முன்பே பார்த்தோம்.

இதில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இந்த ஜோடியுடன் வடிவேலு, பகத் பாசில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்திற்கு ஏ .ஆர் .ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்த படங்களுக்கு பிறகு சினிமாவில் நடிப்பதை குறைத்துவிட்டு அரசியலில் கவனம் செலுத்த உள்ளாராம் உதயதிதி எம்எல்ஏ.

Keerthy Suresh to romance Udhayanidhi for her next

இப்படித்தான் வாழனும் Vs எப்படியும் வாழலாம்.; ப்ரஜின்-வனிதா விஜயகுமார் கூட்டணி

இப்படித்தான் வாழனும் Vs எப்படியும் வாழலாம்.; ப்ரஜின்-வனிதா விஜயகுமார் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ப்ரஜின் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் தொடக்கவிழா சென்னை வளசரவாக்கத்தில் நடந்தது. இவ்விழா புத்தாண்டின் நல்ல தொடக்கமாக, சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தப் பெயரிடப்படாத புதிய படத்தை ‘பொதுநலன் கருதி’ படத்தை இயக்கிய சீயோன் இயக்குகிறார். பொதுநலன் கருதி என்ற வித்தியாசமான பெயரில் தனது முதல் படத்திலேயே பரவலாகப் பேசப்பட்டவர் இவர், இயக்கும் இரண்டாவது படம் இது.

இந்த படத்தில் ப்ரஜின் நாயகனாகவும், குஹாசினி நாயகியாகவும் நடிக்கவுள்ளார்கள். இவர்களுடன் வனிதா விஜயகுமார், தயாரிப்பாளர் கே. ராஜன், கஞ்சா கருப்பு, நாஞ்சில் சம்பத், முத்துராமன், பாவனா ,சிவான்யா ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இப்படத்தை மாபின்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சாலமன் சைமன் தயாரிக்கிறார். இப்படத்திற்கு ஒளிப்பதிவு விசுவாசம் படத்தில் பணியாற்றிய ஜிஜு, உடன்பிறப்பே படத்தில் பணியாற்றிய முஜிபுர் கலை இயக்கத்தைக் கவனிக்கிறார்.

இப்படித்தான் வாழ வேண்டும் என்றிருக்கும் ஒருவனுக்கும் எப்படியும் வாழலாம் என்று இருக்கும் இன்னொருவனுக்கும் என இரு துருவ குணச்சத்திரங்களுக்கும் இடையில் சுழலும் சம்பவங்கள்தான் கதை.

“இப் படம் அரசியல் நகைச்சுவை காதல் சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த கலவையாக இருக்கும். நாட்டின் நடப்பு அரசியலைத் தோலுரித்துக் காட்டும் காட்சிகள் பரபரப்பாக இருக்கும் என்கிறார் இயக்குநர் சீயோன்

The all-time heartthrob and talented Prajin kick-starts the shooting of the new film

More Articles
Follows