குழந்தைகள் முதல் குடும்பங்கள் வரை அனைவரையும் மகிழ்விக்கும் படம் கொரில்லா

குழந்தைகள் முதல் குடும்பங்கள் வரை அனைவரையும் மகிழ்விக்கும் படம் கொரில்லா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectகுழந்தைகளை கவரும் வகையில் வெளிவரும் படைப்பு எதுவாக இருந்தாலும் நிச்சயம் அது குடும்பங்களையும் கவரும். அப்படி குழந்தைகள் முதல் குடும்ப உறுப்பினர்கள் வரை அனைவரையும் திருப்தி படுத்தும் விதமாக உருவாகி இருக்கிறது ஜீவா நடித்து, டான் சாண்டி இயக்கியுள்ள கொரில்லா திரைப்படம். பேப்பரில் இருக்கும் கதையை அப்படியே ஸ்கிரீனில் கொண்டு வருவதற்கு அசாத்தியமான கலை விரும்பி ஒருவர் தயாரிப்பாளராக இருக்க வேண்டும். கொரில்லாவின் தயாரிப்பாளர் ஆல் இன் பிக்சர்ஸ் விஜய் ராகவேந்திரா அத்தகையவர் தான். அது படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழாவில் தெரிந்தது.

சென்னையில் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற இவ்விழாவில் படக்குழு உள்பட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இயக்குநர் ராஜேஷ்செல்வா பேசியாதாவது,

“இந்தப்படத்தில் சம்பந்தப்பட்டவர்கள் என் படத்திலும் வொர்க் பண்ணி இருக்கிறார்கள். அதனால் இந்தப்ப்படத்தைப் பற்றி எனக்குத் தெரியும். மிக நன்றாக வந்திருக்கிறது படம். ஜீவா சாரோடு படம் பண்ண வேண்டும் என்பது என் ஆசை. கொரில்லா டீமுக்கு வாழ்த்துகள்” என்றார்

இயக்குநர் கண்ணன் பேசியதாவது,

” இந்தப்படம் மீது எல்லோருக்குமே எதிர்பார்ப்பு இருக்கிறது. ஜீவா என் இயக்கத்தில் வந்தான் வென்றான் படத்தில் நடித்த போது சந்தானம் சாருக்கு நிறைய ஸ்கோப் கொடுத்திருந்தார். அந்த நல்லமனது அவருக்கு உண்டு. ஒரு அனிமலை வைத்து படமெடுப்பது பெரிய கஷ்டம். அதைச் சிறப்பாகச் செய்திருப்பதற்கு பெரிய வாழ்த்துகள். நிச்சயம் இந்தப்படம் பெரிய வெற்றி அடையும்” என்றார்

நடிகர் ராதாரவி பேசியதாவது,

“என்னை அன்பாக அழைத்த இயக்குநர் சாண்டி அவர்களுக்கும் கதாநாயகன் ஜீவா அவர்களுக்கும் நன்றி. அவர் அப்பா கொடுத்த பணத்தில் தான் நாங்கள் வாழ்ந்திருக்கோம். இப்போது போடப்பட்ட பாடல் நன்றாக இருந்தது. இசை அமைப்பாளரைப் பாராட்டுகிறேன். ஜீவாவிற்கு யாரும் காம்படிஷனே கிடையாது. அது அவரது பெரியபலம். அவர் அற்புதமான நடிகர். அவரை முதல் படத்தில் இருந்தே பார்த்து வருகிறேன். மனிதர்களை வைத்தே படமெடுப்பது பெரிய கஷ்டம். இவர்கள் மிருகத்தை வைத்து மிக அழகாக எடுத்திருக்கிறார்கள். நான் சில காட்சிகளைப் பார்த்தேன் நன்றாக இருக்கிறது. எனக்கும் ஒரு நல்ல கேரக்டர் தந்திருக்கிறார்கள். படத்தில் ஒரு வசனம் எனக்குப் பிடிக்காமல் பேசி இருக்கிறேன் யோகிபாபு நெகட்டிவ் விசயங்களை பாஸிட்டிவாக எடுத்துக் கொள்ளும் நடிகன். இந்தப்படத்தில் அவரையும் மிகச்சிறப்பாக பயன்படுத்தி இருக்கிறார்கள். தயவுசெய்து தியேட்டர்காரர்கள், விநியோகஸ்தர்கள், பொதுமக்கள் அனைவரும் இந்தப்படத்தை ஆதரிக்க வேண்டும்” என்றார்.

அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா பேசியதாவது,

“கொரில்லா என் நண்பர் ஒருவர் பார்த்துவிட்டு மிகவும் நல்லாருக்கு என்று சொன்னார். படம் நல்ல வியாபாரம் ஆகி இருப்பதாகவும் கேள்விப்பட்டேன். ஜீவா தயாரிப்பாளர்களுக்கான நடிகர். அவர் நினைத்தால் வருசத்திற்கு நான்கு படம் நடித்துவிட்டு ப்.போகலாம். ஆனால் ஆண்டுக்கு நான்கு தயாரிப்பாளர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறார். இயக்குநருக்கு வாழ்த்துகள். புதிய கான்செப்டில் குழந்தைகளுக்கு பிடித்து மாதிரி படம் எடுத்து இருக்கிறார்கள். சரியான நேரத்தில் படம் வெளிவருகிறது” என்றார்

இயக்குநர் விஜய் பேசியதாவது,

“கொரில்லா டீம் புதிய எனர்ஜியோடு வந்திருக்கிறார்கள். கண்டிப்பா பெரிய அளவில் ரீச் பண்ணுவாங்க என்று நம்புறேன். ஜீவா கிரேட் ஆக்டர். ரொம்ப நேச்சுலர் ஆக்டர். படக்குழு அனைவருக்கும் வாழ்த்துகள். சாம்.ஜி எஸ் என்ன கேட்டாலும் எந்த நேரத்தில் கேட்டாலும் எனர்ஜியாக பேசுவார். சதிஷ் இந்தப்படத்தில் கலக்கி இருக்கிறார். அவர் தவிர்க்க முடியாத நடிகராக மாறி வருகிறார்” என்றார்

ஆர்.பி செளத்ரி பேசியதாவது,

“ட்ரைலர் பார்த்தேன் ரொம்ப நல்லாருந்தது. இந்தப்படத்தின் தயாரிப்பாளர் பெரிய லக்கி. படத்தை இப்போதே விற்பனை செய்துவிட்டார். கண்டிப்பா இந்தப்படம் பெரிய வெற்றிப்படமாக இருக்கும். பாடல்கள் விஷுவல்ஸ் இரண்டும் நன்றாக இருந்தது. ஜீவாவிற்கு இப்படம் திருப்புமுனையாக அமையும்” என்றார்

இயக்குநர் ராஜு முருகன் பேசியதாவது,

“பர்ஸ்ட் ஜீவா சார். ஜீவா சாருக்கு ஜிப்ஸி படத்தில் பெரிய டாஸ்க். அதையெல்லாம் எதிர்பார்த்ததை விட இரண்டு மடங்கு அதிகமாகச் செய்திருந்தார். ஜீவா மாதிரி ஒரு ஆர்டிஸ்ட் இல்லை என்றால் ஜிப்ஸி எடுத்திருக்க முடியாது. கொரில்லா படம் டோட்டல் கான்ட்ரஸ்ட். அதிலும் கலக்கி இருக்கிறார். இந்த எலெக்‌சன் டென்சன் எல்லாத்தையும் இந்தப்படத்தின் ட்ரைலர் பாடல்களும் போக்கி விடுகிறது. சாம் சி எஸ் தற்போது அவர் ஏற்கும் படங்களுக்கு உயிர் கொடுத்து வருகிறார்” நன்றி

இயக்குநர் கார்த்தி பேசியதாவது,

“டான் சாண்டி இந்தப்படத்தில் சோசியல் கண்டெண்ட் ஒன்று வைத்திருக்கிறார். எல்லா ஜானர்லயும் படம் செய்யும் ஒரு நடிகர் ஜீவா. ரொம்ப ரேரான நடிகர் அவர். மொத்த குழுவிற்கும் நன்றி” என்றார்

ராகுல் தாத்தா பேசியதாவது,.

“இந்தப்படத்துல நான் ஒரு சாதாரண கேரக்டர் பண்ணிருக்கேன். கொரில்லாட்ட அடி வாங்காத ஆட்களே கிடையாது. அற்புதமா படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர். எனக்கு அற்புதமான கேரக்டர் கொடுத்திருக்கிறார்கள். எனக்கு என்ன தேவையோ அனைத்தையும் செய்து கொடுத்தார் தயாரிப்பாளர். இந்தப்படம் ஓகோன்னு ஓடணும். இந்தக்காலத்தில் கொரில்லாவை வைத்து படமெடுப்பது ரொம்ப கஷ்டம். நிறைய செலவு செய்திருக்கிறார்கள். படத்தைப் பார்த்த விநியோகஸ்தர்கள் அனைவரும் ஹிந்தி, தெலுங்கு, என ஒவ்வொன்றையும் வாங்கி கொண்டுப் போய்விட்டார்கள். இந்த இயக்குநர் டான் கிடையாது டானுக்கு எல்லாம் டான். சாம் சி எஸ் பிரம்மாதமாக வேலை செய்திருக்கிறார். இந்தப்படத்திற்குப் பின் இப்படக்குழு அனைவரும் வேறு லெவலுக்கு செல்வார்கள்” என்றார்

இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார் பேசியதாவது,

“படத்திற்கு என்ன தேவையோ அதையெல்லாம் தயாரிப்பாளர் செய்து கொடுத்திருக்கிறார். ஜீவா சார் மிக அற்புதமான நடிகர். இந்தப்படம் பெரிய வெற்றியடைய வாழ்த்துகள்” என்றார்

பாடலாசிரியர் யுகபாரதி பேசியதாவது,

“ஆர்.பி செளத்ரி தமிழ்சினிமாவில் 22 பாடலாசியர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார். 56 இயக்குநர்களை அறிமுகப் படுத்தி இருக்கிறார். ஆனால் அவர் அறிமுகப்படுத்தியதிலே மிகச்சிறப்பானவர் ஜீவா. சாம் சி எஸ் நல்ல பாடல்கள் எழுதக்கூடிய இசை அமைப்பாளர். அவரை நான் மனதார வாழ்த்துகிறேன். இயக்குநர் டான் சாண்டி 20 வருடங்களாக எனக்குத் தெரிந்த தம்பி. தொடர்ச்சியாக கதையோடும் வாழ்க்கையோடும் போராடிக் கொண்டிருந்தார். இந்தப்படம் அவருக்கு பெரிய வெற்றியை ஏற்படுத்திக் கொடுக்கும்” என்றார்

இயக்குநர் டான் சாண்டி பேசியதாவது,

“தயாரிப்பாளருக்கு வாய்ப்பு கொடுத்ததிற்காக நன்றி. இசை அமைப்பாளர் எனக்கு மிக நெருக்கமான நண்பர். யுகபாரதி மிக முக்கியமானவர் எனக்கு. மற்றபடி கேமராமேன், எடிட்டர், அவர்களுக்கும் நன்றி. காஸ்ட்யூமர் பூர்த்தி ரொம்ப சிரமப்பட்டிருக்கிறார். கொரில்லா டீசரின் பார்த்துவிட்டு சிம்பஸி வைத்து என்னை ஏமாத்துறீயான்னு கேட்டாங்க. ஜீவா சாரை நான் கற்றது தமிழில் இருந்து பார்த்து வருகிறேன். அவர் இல்லை என்றால் இந்தப்படம் இல்லை. இந்தப்படத்தில் அவர் நிறைய உதவி பண்ணி இருக்கிறார். இந்தக்குரங்கு எங்களை அவ்வளவு அடித்திருக்கிறது. தாய்லாந்து சென்று மஜாச் செய்யாமல் வந்த டீம் நாங்கள். எங்களின் இந்த நேர்மையைப் பாராட்டி படத்தை வெற்றியடைய வேண்டும்” என்றார்

இசை அமைப்பாளர் சாம் சி எஸ் பேசியதாவது,

“முன்னாடியே ரிலீஸ் ஆகியிருக்க வேண்டிய படம் இது. நான் ரொம்ப கஷ்டப்பட்டு இசை அமைத்தப் படம் இது. ஒரு படம் பார்க்கும் போது இசை மனசுக்குள் ஓடும். இந்தப்படத்தைப் பார்த்தால் நிறைய பதட்டம் இருந்தது. ஏனென்றால் நிறைய வசனங்கள் இருந்தது. அவை நன்றாகவும் இருந்தது. இந்தப்படம் எனக்கு மிக புதுமையாக இருந்தது. பாடலாசியர்கள் யுகபாரதி, லோகன் இருவரும் நன்றாக பாடல் எழுதி இருக்கிறார்கள். இந்த ஆல்பம் ரொம்ப நல்லா வந்திருப்பதாக நினைக்கிறேன். என்னுடைய மியூசிக் டீம் அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்லிக்கொள்கிறேன். இந்தப்படத்தில் நிறைய அரசியல் நய்யாண்டிகள் இருக்கிறது. இது குடும்பத்தோடு பார்க்க வேண்டிய ஒரு படம்” என்றார்

நடிகர் சதிஷ் பேசியதாவது,

“இந்தப்படத்தில் பெண் குரங்கு நடித்திருக்கிறது. ஆனால் அதுகூட என்னிடம் ஒட்டவில்லை. மனிதரோடு நடிப்பது சுலபம். குரங்கோடு நடித்தது மிகவும் சிரமம். இது எல்லோரையும் கடித்திருக்கிறது. ஒவ்வொருத்தரும் படத்தை என்சாய் பண்ணி நடித்திருக்கோம். இயக்குநர் டான் சாண்டி அவர் சொன்னதைச் செய்தாலே போதும். அவருக்கு காமெடி அப்படி வரும்.” என்றார்

நடிகர் ஜீவா பேசியதாவது,

” கொரில்லா படம் ஒரு எக்ஸ்டானரி எக்ஸ்பீரியன்ஸ். ஏன் இந்தப்படத்தை தாய்லாந்தில் எடுத்தோம் என்றால் இந்தக் குரங்கு ஒரு ஆங்கிலப்படத்தில் நடித்த குரங்கு அதனால் தான். இந்தக் குரங்கு நல்ல ப்ரண்ட்லியா ஆகிவிட்டது. தயாரிப்பாளர் விஜய் ராகவேந்திராவிற்கு முதலில் நன்றி சொல்லிக்கிறேன். கொரில்லா மாதிரி ஒருபடம் பண்ணுவேன் என்று நினைத்துப் பார்க்கவே இல்லை. இப்படி ஜாலியாக ஒரு படம் பண்ணி ரொம்ப நாட்களாகி விட்டது. இந்தமாதிரி ஒரு படம் கொடுத்த தயாரிப்பாளருக்கு மறுபடியும் ஒரு நன்றி. டான் சாண்டி இந்தக்கதையை என்னிடம் சொல்லும் போது ரொம்ப என்சாய் பண்ணிக்கேட்டேன். படத்தையும் என்சாய் பண்ணி நடித்தேன். பக்கா காமெடி மசாலா தாண்டி ஒரு நல்ல மெசேஜும் இருக்கும். யுகபாரதி சாருக்கு நன்றி. அவர் எனக்கு நல்லநல்ல பாடல்களை எழுதிக் கொடுத்திருக்கிறார். ரொம்ப ஜாலியான ஒரு படத்தை எடுத்திருக்கோம்.” என்றார்

தயாரிப்பாளர் விஜய் ராகவேந்திரா,

“இந்தப்டத்தை பண்ணும் போது குரங்கை வைத்து பண்ணாமல் சிம்பான்ஸியை வைத்து எடு என்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சொன்னார். சாண்டி சிறப்பாக படத்தை எடுத்து இருக்கிறார். படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. படத்தை தியேட்டரில் சென்று பாருங்கள்” என்றார்

இந்த விழாவில் அழிந்து வரும் உயிரினமான சிம்பான்ஸி இரண்டை திரைப்படக்குழு தத்தெடுத்தது. படம் வரும் ஜுன் மாதம் 21-ம் தேதி வெளியாக இருக்கிறது

அதிக ஓட்டுக்கள் பெற்ற வில்லன் யார்.. பிரகாஷ் ராஜ்-மன்சூர் அலிகான்.?

அதிக ஓட்டுக்கள் பெற்ற வில்லன் யார்.. பிரகாஷ் ராஜ்-மன்சூர் அலிகான்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (5)தமிழ் சினிமாவின் முக்கியமான வில்லன்களில் இருவர் பிரகாஷ் ராஜ் மற்றும் மன்சூர் அலிகான். இவர்கள் இருவரும் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டனர். அவர்களில் யார் அதிகம் வாக்குகள் பெற்றார் என்று பார்ப்போம்…

பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை சம்பவத்தை அடுத்து பாஜகவையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்தார் நடிகர் பிரகாஷ் ராஜ்.

இதனையடுத்து அவர் திடீரென மக்களை தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார்.

மத்திய பெங்களூர் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் 28,906 ஓட்டுக்கள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவியுள்ளார் பிரகாஷ் ராஜ்.

இவரைப்போல் நாம் தமிழர் கட்சியின் சார்பில் திண்டுக்கல் தொகுதியில் விவசாயி சின்னத்தில் போட்டியிட்டார் நடிகர் மன்சூரலிகான்.

இவரின் பிரச்சாரம் வித்தியாசமாக இருந்தது. தேர்தல் பிரச்சாரத்தின்போது மீன் வெட்டுவது, ஓட்டலில் டீ போடுவது, பரோட்டா போடுவது என மக்களை கவர்ந்து வாக்குகளை சேகரித்தார்.

அதன்படி தேர்தலில் நான்காவது இடம் பெற்ற மன்சூரலிகான், 54,957 ஓட்டுகள் பெற்றுள்ளார்.

அந்த வகையில் பிரகாஷ்ராஜை விட அதிகப்படியான ஓட்டுகளை பெற்றுள்ளார் மன்சூரலிகான் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி-அஜித் பட பாணியில் விஜய்யின் அடுத்த படம்

ரஜினி-அஜித் பட பாணியில் விஜய்யின் அடுத்த படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (4)ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

அட்லி இயக்கும் இப்படத்தில் கால்பந்தாட்ட விளையாட்டு முக்கியத்துவத்தை பெறுகிறது.

இதில் விஜய்யுடன் நயன்தாரா, இந்துஜா, கதிர், வர்ஷா பொல்லம்மா உள்ளிட்ட பலரும் நடிக்க ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தை 2019ஆம் ஆண்டு தீபாவளிக்கு திரையிட உள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பது உறுதியாகியுள்ளது.

இப்படம் ஒரு கேங்ஸ்டர் கதையாக உருவாகவுள்ளதாம்.

ரஜினியின் பாட்ஷா, கபாலி, அஜித்தின் பில்லா உள்ளிட்ட படங்கள் டான் கேரக்டரை மையப்படுத்தி எடுக்கப்பட்டது.

இது முழுக்க முழக்க விஜய் ரசிகர்களை கவரும் ஆக்சன் படம் என கூறப்படுகிறது.

BREAKING தமிழகத்தில் வெற்றிடமில்லை – கமல்; ரஜினியை சீண்டுகிறாரா?

BREAKING தமிழகத்தில் வெற்றிடமில்லை – கமல்; ரஜினியை சீண்டுகிறாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (3)மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி 14 மாதங்களில் 17வது மக்களவை தேர்தலில் போட்டியிட்டார் நடிகர் கமல்ஹாசன்.

எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிட்ட போதிலும் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளார் அவர்.

கோவையில் மட்டும் அதிகபட்சமா ஒன்றரை லட்சம் வாக்குகளை அவரது வேட்பாளர் பெற்றுள்ளார்.

இந்நிலையில் இன்று சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது…

பணப் புயலுக்கு நடுவில் இந்த இலக்கை தொட்டதே சாதனை தான், நேர்மைக்கு நாங்கள் தான் “ஏ” டீம் – எதிர்ப்பார்த்ததை விட அதிகமான வாக்குகளை மக்கள் எங்களுக்கு அளித்துள்ளனர், வாக்களித்த மக்களுக்கு நன்றி –

மக்களுக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், தொடர்ந்து செயலாற்றுவோம், நல்ல வழியில் தான் நாங்கள் போய்க்கொண்டிருக்கிறோம் –

*தலைவர்கள் மரணத்தால் அரசியலில் ஒருபோதும் வெற்றிடம் உருவாகாது, வெற்றிடம் உருவாக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்* –

தமிழகத்தின் எழுச்சி தான் எங்கள் இலக்கு என கமல்ஹாசன் கூறினார்.

கருணாநிதி மற்றும் ஜெயலலிதா மரணத்தால் தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதால் தான் விரைவில் அரசியல் இறங்கவுள்ளதாக ரஜினி அறிவித்திருந்தார்.

தற்போது கமல் இப்படி பேசியுள்ளதால் இது அரசியல் உலகில் பரபரப்பாக பேசப்படும் என எதிர்பார்க்கலாம்.

இந்திய தேர்தல் முடிவுகள்; மோடி-ஸ்டாலினுக்கு ரஜினி வாழ்த்து

இந்திய தேர்தல் முடிவுகள்; மோடி-ஸ்டாலினுக்கு ரஜினி வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth17-ஆவது மக்களவை தேர்தலில் பாஜ கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு 350 இடங்களை பெற்றுள்ளது.

எனவே வருகிற மே 26ஆம் தேதி மீண்டும் மோடி அவர்கள் பிரதமராக பதவி ஏற்பார் என தெரிய வந்துள்ளது.

காங்கிரஸ் கட்சி எதிர்கட்சி தேவையான இடங்களை கூட பெறவில்லை.

தமிழகத்தில் அதிமுக பாஜக கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

பாஜகவின் மெகா வெற்றியை தொண்டர்கள் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் தன் ட்விட்டரில்… மரியாதைக்குரிய மோடி அவர்களே மக்களவை தேர்தலில் சாதித்துவிட்டீர்கள். மனப்பூர்வமான வாழ்த்துகள். கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என குறிப்பிட்டுள்ளார்.

அதுபோல் மக்களை தேர்தலில் தமிழகத்தில் 38 தொகுதிகளில் 37 வெற்றி பெற்ற திமுக கூட்டணிக்கும் அதன் தலைவர் முக. ஸ்டாலினுக்கும் ரஜினிகாந்த் ட்விட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்த வாழ்த்துக்கு முன்னதாக தேர்தல் நிலவரம் குறித்து ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ராஜூ மகாலிங்கத்துடன் ஆலோசனை செய்தார் ரஜினிகாந்த என்பது குறிப்பிடத்தக்கது.

சசிகுமாரின் ராஜவம்சத்தில் இணையும் நிக்கி கல்ராணி

சசிகுமாரின் ராஜவம்சத்தில் இணையும் நிக்கி கல்ராணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (1)சசிகுமார் நடிப்பில் `நாடோடிகள் 2′, கொம்புவச்ச சிங்கம்டா, கென்னடி கிளப் உள்ளிட்ட படங்கள் திரைக்கு வருகிறது.

தற்போது கே.வி.கதிர்வேலு இயக்கத்திலும், என்.வி.நிர்மல்குமார் இயக்கத்திலும் நடித்து வருகிறார் சசிகுமார்.

இதில் கே.வி.கதிர்வேலு இயக்கும் படத்திற்கு ராஜ வம்சம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

நாயகியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார்.

இவர்களுடன் சதீஷ், யோகி பாபு, ராதாரவி, தம்பி ராமையா, விஜயகுமார் மற்றும் சிங்கம்புலி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

More Articles
Follows