கொரோனா 2 அலர்ட்..: ஜனவரி 2 வரை இரவில் மட்டும் ஊரடங்கு அமல்..!

கொரோனா 2 அலர்ட்..: ஜனவரி 2 வரை இரவில் மட்டும் ஊரடங்கு அமல்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

night curfew in karnatakaஇன்று டிசம்பர் 23ம் தேதி முதல் ஜனவரி 2ம் தேதி வரை கர்நாடகா முழுவதும் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது.

இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இந்த ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

உருமாற்றம் கொண்ட கொரோனா (2) வைரஸ் வேகமாக பரவக் கூடியது என்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாம்.

அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறி, மருந்துகள், கொண்டு செல்லக்கூடிய வாகனங்களுக்கு கெடுபிடிகள் கிடையாது.

டூ வீலர், கார் உள்ளிட்ட தனியார் வாகனங்களுக்கு இரவில் அனுமதியில்லை.

மருந்தகங்கள், மருத்துவமனைகள் போன்ற அவசரகால பணிகளுக்கு அனுமதி உண்டு.

Fresh covid-19 lockdown in karnataka

எம்ஜிஆர் என்ன நல்லாட்சியா கொடுத்தார்.?.; ரஜினி கமலை அடிக்கிற அடியில விஜய் உள்ளிட்ட எந்த நடிகருக்கும் அரசியல் ஆசை வராது.. – சீமான்

எம்ஜிஆர் என்ன நல்லாட்சியா கொடுத்தார்.?.; ரஜினி கமலை அடிக்கிற அடியில விஜய் உள்ளிட்ட எந்த நடிகருக்கும் அரசியல் ஆசை வராது.. – சீமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

seemanதமிழக மீனவர்களை சிங்கள கடற்படை தாக்கினால் தமிழகத்தில் படிக்கும் சிங்கள மாணவர்களை தாக்குவோம் என்று 2010ல் பேசினார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.

எனவே அவர் மீது தேச துரோக வழக்கு பாய்ந்தது.

அந்த வழக்கு விசாரணைக்காக இன்று பெரு நகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சீமான் ஆஜரானார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் சீமான்.

அவர்… “ரஜினி, கமலை அடிக்கிற அடியில் விஜய் மட்டும் அல்ல இனி எந்த நடிகருக்கும் அரசியலுக்கு வரும் எண்ணம் வராது.

நடிகன் என்ற ஒரே தகுதியை வைத்து நாடாள நினைக்க கூடாது.

நல்லக்கண்ணு அய்யா ஒருவருக்குத் தான் அந்த தகுதி் உள்ளது. ஆனால் அவரை பற்றி யாரும் பேசுவதில்லை.

நானும் நடிகன் தான். ஆனால் நான் ரசிகர்களை சந்திக்கவில்லை. மக்களை சந்தித்தேன்..

எம்.ஜி.ஆர். பிரபாகரன் மீது மதிப்பு வைத்திருந்தார். அதனால் அவரை மதிக்கிறோம்.

மற்றபடி எம்.ஜி.ஆர். என்ன நல்லாட்சி கொடுத்தார்.?

கல்வியையும் மருத்துவத்தையும் தனியாருக்கு கொடுத்தது எம்.ஜி.ஆர். தான்.

முல்லை பெரியாறு உரிமையை கேரளாவிற்கு கொடுத்ததும் எம்.ஜி.ஆர். தான்.”

இவ்வாறு சீமான் பேசினார்.

NTK leaderSeeman slams Rajinikanth , Kamalhaasan and Vijay

அண்ணாத்த’ ஸ்பாட் 4 பேருக்கு கொரோனா..; ரஜினி தனிமை.. சூட்டிங் கேன்சல்

அண்ணாத்த’ ஸ்பாட் 4 பேருக்கு கொரோனா..; ரஜினி தனிமை.. சூட்டிங் கேன்சல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Annaattheரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கி வரும் படம் ‘அண்ணாத்த’.

இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

வெற்றி ஒளிப்பதிவு செய்ய டி.இமான் இசையமைக்கிறார்.

கொரோனா அச்சுறுத்தலால் இப்பட சூட்டிங் மார்ச் மாத இறுதியில் நிறுத்தப்பட்டது.

தற்போது டிசம்பர் 14-ம் தேதி முதல் சூட்டிங் மீண்டும் தொடங்கியது.

இதில் பங்கேற்க சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றார் ரஜினி.

கடந்த ஒருவார காலத்துக்கும் மேலாக ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.

ரஜினி கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக கமல்..? ரஜினி ரசிகர்கள் கமலுக்கு ஓகே சொல்வார்களா?

இந்த நிலையில் படத்தில் பணியாற்றிய 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாம்.

இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

ரஜினிக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது.

ஆனாலும் அவர் ஹைதராபாத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

விரைவில் ரஜினிகாந்த் சென்னை திரும்புவார் என சொல்லப்படுகிறது.

Annaatthe shoot has been temporarily stopped as 4 members of the crew test positive for Covid19.

விஜய் இடத்தில் சிவகார்த்திகேயன்..; பக்கா ப்ளான் போடும் ‘தர்பார்’ டைரக்டர்.?

விஜய் இடத்தில் சிவகார்த்திகேயன்..; பக்கா ப்ளான் போடும் ‘தர்பார்’ டைரக்டர்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி, நயன்தாரா நடித்த ‘தர்பார்’ படம் 2020 பொங்கலுக்கு வெளியானது.

அதன்பின் விஜய்யின் 65 படத்தை இயக்குவதாக இருந்தார் ஏஆர். முருகதாஸ்.

ஆனால் அது நடைபெறாமல்போனது.் விஜய்யின் 65-வது படத்தை இயக்க நெல்சன் ஒப்பந்தமானார்.

எனவே முருகதாஸின் அடுத்த பட ஹீரோ யார்.? என்ற எதிர்பார்ப்பு கோலிவுட்டில் நிலவியது.

‘தி லயன் கிங்’ பாணியில் ஏஆர். முருகதாஸின் அடுத்த படம்

இந்நிலையில் சமீபத்தில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் & நடிகர் சிவகார்த்திகேயன் இருவரும் சந்தித்து கதை விவாதத்தில் ஈடுப்பட்டதாக கூறப்படுகிறது.

இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் விஜய்க்கு சொன்ன கதையை தான் சிவகார்த்திகேயனிடம் முருகதாஸ் சொன்னதாகவும் தெரிய வந்துள்ளது.

sivakarthikeyan ar murugadoss

Siakarthikeyan replaces Vijay in ARM’s next film ?

ஹாலிவுட் தரத்தில் ‘டிஸ்டண்ட்’ பட டீசர்..; அஜித் & சிம்பு பட இயக்குனர் தயாரிப்பாளரானார்..!

ஹாலிவுட் தரத்தில் ‘டிஸ்டண்ட்’ பட டீசர்..; அஜித் & சிம்பு பட இயக்குனர் தயாரிப்பாளரானார்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜி.கே இயக்கத்தில் சுரேஷ் நல்லுசாமி கதாநாயகனாக நடித்துள்ள டிஸ்டண்ட் திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

முகவரி, தொட்டி ஜெயா, இருட்டு உள்ளிட்ட படங்களை இயக்கிய வி.இசட்.துரை டாய்னா பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ‘டிஸ்டண்ட்’ எனும் புதிய படத்தை தயாரித்துள்ளார்.

இதில் சுரேஷ் நல்லுசாமி கதாநாயகனாகவும், சவுந்தர்யா நஞ்சுந்தன் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.

திரில்லருடன் கலந்த சைன்ஸ் பிக்ஷன் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை ஜிகே என்பவர் இயக்கியுள்ளார்.

இவர் பல விருதுகளை பெற்ற அசரீரி எனும் குறும்படத்தை இயக்கியவர்.

மேலும் இவரது ‘காதலின் தீபம் ஒன்று’ குறும்படம் யூடியூப்பில் மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலானது.

இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாகவுள்ளது.

விஜய் சித்தார்த் இதற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Teaser Link : https://youtu.be/RfmebiZa-K4

நடிகர்கள் : சுரேஷ் நல்லுசாமி, சௌந்தர்யா நஞ்சுதன், பிக் பிரிண்ட் கார்த்திக், ராதாகிருஷ்ணன், முத்துபாண்டியன்

இயக்கம் : ஜி.கே
இசை : விஜய் சித்தார்த்தா
ஒளிப்பதிவு: பிரவீன் குமார்
பாடல்கள்: ஆதி
படத்தொகுப்பு: இளையராஜா
கலை: தேவா
ஸ்டண்ட்: சுதேஷ்
VFX: முத்துகுமரன்
மாடல் மேக்கர்: அருண்
பாடியவர்: சில்வி சரோன்
PRO: KSK செல்வா

தயாரிப்பு: சுரேஷ் நல்லுசாமி | முருகன் நல்லுசாமி

vz durai

VZ Durai turns producer with Distant

உலகளவில் காவல்துறையின் காட்டு மிராண்டித்தனம்..; ஒருமைப்பாட்டை விதைக்க ஜிவி. பிரகாஷ் வாய்ஸ்

உலகளவில் காவல்துறையின் காட்டு மிராண்டித்தனம்..; ஒருமைப்பாட்டை விதைக்க ஜிவி. பிரகாஷ் வாய்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

GV Prakashகைபா ஃபில்ம்ஸ் தயாரிக்கும் ட்ராப் சிட்டி என்கிற படத்துக்கு, தயாரிப்பாளர், படைப்பாளி, இசையமைப்பாளர் எல்லாவற்றையும் தாண்டி தொலைநோக்கு பார்வை கொண்ட இளைஞர் என்ற அடையாளம் கொண்ட தி ஏடிஜி (அஸ்வின் கணேஷ்) இசையமைத்துள்ளார்.

இந்தப் பாடல்களை சோனி மியூசிக்கின் தி ஆர்சர்ட் நிறுவனம் உலகமெங்கும் வெளியிடுகிறது.

இந்தப் படத்தில் முதன்மைத் தனிப்பாடலான, ‘பேரனாய்ட்’ (அச்ச உணர்வு) பாடலில் அட்லான்டாவைச் சேர்ந்த ராப் இசைப் பாடகி சா-ராக், ஆஸ்கர் விருது வென்ற நடிகர் க்யூபா குட்டிங்கின் சகோதரர் ஒமர் குட்டிங், இந்தியாவிலிருந்து இசையமைப்பாளர், பாடகர் ஜி.வி.பிரகாஷ் குமார் என மூன்று கலைஞர்கள் இணைந்துள்ளனர்.

கிட்டத்தட்ட 6.30 நிமிடங்கள் ஒலிக்கும் பேரனாய்ட் பாடல், ட்ராப் சிட்டி படத்தின் முக்கியப் பாடல். ட்ராப் சிட்டி திரைப்படத்தின் டீஸரும் அண்மையில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படம், கறுப்பின இளைஞர் ஜார்ஜ் ஃப்ளாய்டுக்கு எதிரான போலீஸ் அராஜகத்தை எடுத்துரைக்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது.

பேரனாய்ட் என்ற தலைப்பு மிகவும் முக்கியமானது. அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடந்து முடிந்த வேளையில் மக்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வு தொற்றிக் கொண்டுள்ளது.

ஒருபுறம் ப்ளாக் லைவ்ஸ் மேட்டர்ஸ் என்கிற கோஷங்கள் உலகம் முழுவதும் பல்வேறு தளங்களில் ஒலித்துக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் இப்பாடலை வெளியிடுவது மிகவும் பொறுத்தமானதாக அமைந்துள்ளது.

உணர்வுப்பூர்வமான இந்தப் பாடல் வெற்றிகளையும், இழப்புகளையும், வாழ்க்கையின் போராட்டங்களையும் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

பாடலுக்கு அதன் வரிகள் வலிமை சேர்த்துள்ளது . முதன்முறையாக மேற்கத்திய பாடலில் தமிழில் வரிகள் அமைந்துள்ளன.

ஜி.வி.பிரகாஷ்… கண்ணே கண்ணே.. எனப் பாடலில் கசிந்துருகும் போது அமெரிக்காவின் கறுப்பின மக்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்த வேண்டும் என்கிற வலியுறுத்தல், அவரது குரல் மூலம் வலுவாகப் பதிவாகிறது.

அமெரிக்காவில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே ஆங்காங்கே காவல்துறையின் அடக்குமுறை எல்லை மீறிக்கொண்டிருக்கும் தருணத்தில் இந்தப் பாடலின் கருவும் அதன் வரிகளும் அப்படியே பொருந்திப் போகின்றன.

அமெரிக்காவின் ப்ளாய்டுக்கு நேர்ந்தது போல் தென் தமிழகத்திலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

இந்தப் பாடல் உலகம் முழுவதும் இவ்வாறாக பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுக்கிறது.

பேரனாய்ட் உருவாக்கம் குறித்து ஏடிஜி பேசுகையில்,

“நான் ஜெர்மன் இசைக்கலைஞர் ஹான்ஸ் ஸிம்மரின் இசையால் ஈர்க்கப்பட்டு இப்பாடலை உருவாக்கியுள்ளேன். இசைக்கருவிகளுக்கு எவ்வளவு முக்கியத்துவமோ, அதே அளவுக்கு குரல்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

உலகம் வியக்கும் 3 இசைக் கலைஞர்களும் தங்களின் பணியை மிகவும் நேர்த்தியாகச் செய்துள்ளனர்” என்று கூறியுள்ளார்.
.
ஏடிஜியின் ‘பேரனாய்ட்’ பாடல் 2020-ம் ஆண்டுக்கான மிக முக்கியமான அறிவுரையை முன்வைக்கிறது. வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை உரக்கச் சொல்கிறது.

பாடலின் மேற்கத்திய பின்புலத்துக்கு ஒமர் குட்டிங் உயிர் சேர்த்துள்ளார். சா-ராக் பாடலின் கருத்துருவுக்கு வலு சேர்த்துள்ளார், ஜி.வி.பிரகாஷ் உணர்வுப்பூர்வமான வரிகளால் உருகி பாடலோடு நம்மை அரவணைக்கிறார். ரிக்கி ப்ரூச்செல்லுடன் ஜி.வி.யின் வார்த்தைகளும் மனதை பிசைய வைக்கின்றன.

“நான் இந்த உலகைப் பார்க்கிறேன்.. அது என் மீது சுமத்தப்பட்ட அடையாளத்தைக் காட்டி மிரட்டுகிறது.. எனக்கு எங்கெங்கும் அவல ஒலி கேட்கிறது.. அந்த ஒலி என்னை அச்சப்படச் செய்கிறது.. “என்ற பாடலின் வரிகள் மிக ஆழமானதாக அமைந்துள்ளது.

உலகமே அச்சத்திலும் பதற்றத்திலும் சிக்கியிருக்கும் வேளையில் இந்த பேரனாய்ட் பாடல் ஒரு மந்திரமாக ஒலிக்கும். அந்த மந்திரம் நம்பிக்கையை விதைக்கும். புதிய நம்பிக்கை ஒருமைப்பாட்டுக்கு வழிவகுக்கும்.

பாடலில் பங்காற்றியது குறித்து கூறிய ஒமர் குட்டிங்…

“முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு நாம் ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டிய தருணம் இது. அதை எளிதில் செய்யலாம். உங்கள் வாக்கை செலுத்தி உங்கள் குரலை ஒலிக்கச் செய்யுங்கள்.

மாற்றத்திற்கான உங்களின் பங்களிப்பை நல்குங்கள். அதன்மூலம் வெறுப்பை, அச்சத்தைப் போக்குங்கள்.. நானும், என்னைப் போன்ற கலைஞர்களும் எங்கள் தளங்களை உண்மையான மாற்றத்தை உருவாக்கப் பயன்படுத்த வேண்டும் முயற்சியில் இந்தப் பாடல் என்பது ஒரு பகுதியே” எனக் கூறியுள்ளார்.

ராப் பாடகி சா-ராக் பேசும்போது…

“திறன்வாய்ந்த பன்முகத்தன்மை கொண்ட கலைஞர்களான ஒமர் குட்டிங், ஜி.வி.பிரகாஷ், தி ஏடிஜி ஆகியோருடன் இணைந்து பேரனாய்ட் ஆல்பத்தில் பணியாற்றியது ஒரு உச்சக்கட்ட அனுபவம்.

சமூகத்தை அழுத்திக் கொண்டிருக்கும் ஒரு தீவிர பிரச்சினையை தனித்துவத்துடன் புத்துணர்வு பொங்கும் வகையில் எடுத்துரைக்கும் பணியில் இணைந்து செயல்பட்டதை நன்றியுடன் நினைவுகூர்கிறேன்” என நெகிழ்ந்தார்.

ஜி.வி.பிரகாஷ் குமார் கூறுகையில்..,

“ஒமர் குட்டிங், சா-ராக், ரிக்கி புர்செல் மற்றும் ஏடிஜி என உலகின் ஆகச்சிறந்த கலைஞர்களுடன் இணைந்து அமைதியின், சர்வதேச ஒற்றுமையின் குரலாக ஒலிப்பதில் மகிழ்ச்சியும், பெருமிதமும் கொள்கிறேன்.

இதுபோன்ற கலை வடிவங்கள் மூலம் அமைதி, அன்பு மற்றும் ஒருமைப்பாட்டை விதைப்பதில் வியத்தகு மாற்றத்தை ஏற்படுத்த இயலும் என உறுதியாக நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பாடல் உலக மக்கள் அனைவருக்கும் ஒரு அறைகூவல். கரோனா காலத்தில் ஏற்பட்டுள்ள அச்சத்தை நீக்கி நம்பிக்கையை விதைக்க, அமைதியை நிலைநாட்ட எல்லோரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைக்கிறது.. ” என்றார்.

Actor GV Prakash to make Hollywood debut with Trap City

More Articles
Follows