சினிமா படிக்கனுமா? மத்திய-மாநில அரசுகள் நடத்தும் இலவச பயிற்சி இதோ.

சினிமா படிக்கனுமா? மத்திய-மாநில அரசுகள் நடத்தும் இலவச பயிற்சி இதோ.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (10)தமிழ் சினிமாவில் சாதிக்க வேண்டும் என ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தினம் தினம் சென்னை வருகின்றனர்.

இதில் ஒரு சிலர் குறும்படங்களை இயக்குகிறார்கள்.

பலர் தனியார் திரைப்பட கல்லூரிகளில் சேர்ந்து லட்சக்கணக்கில் செலவு செய்து படிக்கின்றனர்.

இந்த நிலையில் தமிழக அரசின் திறன் மேம்பாட்டு கழகமும், மத்திய அரசின் தேசிய திரைப்பட வளர்ச்சி கழகமும் இணைந்து ஒரு மாத கால இலவச பயிற்சி அளித்து வருகிறது.

இந்த பயிற்சியில் டிஜிட்டல் வீடியோ கிராபி, மல்டி மீடியா, அனிமேஷன், ஆடியோ என்ஜினீயரிங், ஆவிட் எடிட்டிங், பைனல் கட் ஆகிய பிரிவுகளில் இந்த பயிற்சியை அளிக்கிறது.

கல்வி தகுதி குறைந்த பட்சம் 10ம் வகுப்பு வரை வேண்டும்.

இதில் 18 வயது முதல், 45 வரையிலானவர்கள் கலந்து கொள்ளலாம்.

மேலும் விபரங்களுக்கு 044-2819 1203 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.

விரைவில் லண்டன் பறக்கும் தனுஷ் & கார்த்திக் சுப்பராஜ்

விரைவில் லண்டன் பறக்கும் தனுஷ் & கார்த்திக் சுப்பராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (9)வெற்றி மாறன் இயக்கும் அசுரன் படத்தை அடுத்து துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ்.

இப்படத்திற்கு பிறகு பேட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தில் ஹாலிவுட் நடிகர் அல் பசினோ நடிப்பதாக கூறப்பட்டது. பின்னர் அது உண்மையில்லை என தெரிய வந்துள்ளது.

இப்படத்தை ஒய்நாட் ஸ்டுடியோஸ் தயாரிக்கவுள்ளது.

இதன் சூட்டிங் முழுக்க லண்டனில் நடைபெற இருப்பதால் இந்த வருட இறுதியில் லண்டன் செல்லவுள்ளனர் படக்குழு.

வேறு வழியில்லாமல் தானே தயாரித்து நடிக்கும் சிவகார்த்திகேயன்

வேறு வழியில்லாமல் தானே தயாரித்து நடிக்கும் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (8)சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க ‘ரெமோ, வேலைக்காரன், சீமராஜா’ ஆகிய படங்களை அவரின் நெருங்கிய நண்பர் 24ஏஎம் ஸ்டூடீயோஸ் நிறுவனம் சார்பாக தயாரித்தார் ஆர்.டி.ராஜா.

ரெமோ படம் நல்ல வசூலை அள்ளியது.

மற்ற இரு படங்கள் பரபரப்பாக பேசப்பட்டாலும் போதிய லாபத்தை தரவில்லை என கூறப்படுகிறது.

இதனையடுத்து நிவின் பாலியுடன் ஒரு படம், அருவி பட இயக்குனருடன் ஒரு படம் என அறிவித்தார் ஆர். டி. ராஜா.

மேலும் ‘இன்று நேற்று நாளை’ பட இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடிக்க, ஏஆர்.ரகுமான் இசையில் ஒரு சயின்ஸ் பிக்ஷன் படத்தை தயாரிப்பதாகவும் அறிவித்தனர்.

ஆனால் தயாரிப்பாளர் ராஜா கடும் நிதி நெருக்கடிக்கு ஆளாகியதால் படம் அப்படியே நிறுத்தப்பட்டது.

மேலும் மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘ஹீரோ’ படத்தையும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்திடம் மாற்றிவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்த படத்தை சிவகார்த்திகேயனே தயாரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

கனா மற்றும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா ஆகிய இரு படங்களை தயாரித்திருந்தார் சிவகார்த்திகேயன். இதில் கனா படத்தில் சின்ன வேடத்தில் நடித்திருந்தார். அந்தப்படம் வெற்றி பெற்றது.

தற்போது தான் ஹீரோவாக நடிக்கும் படத்தை சிவாவே தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகளை போற்ற ரூ. 1.5 லட்சத்துடன் உழவன் விருதுகள்.. – கார்த்தி

விவசாயிகளை போற்ற ரூ. 1.5 லட்சத்துடன் உழவன் விருதுகள்.. – கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (7)நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் சினிமாவை தவிர சமூகத்திற்கு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.

கல்விக்காக அகரம் பவுண்டேஷன் என்ற அறக்கட்டளையை நிர்வகித்து வருகிறார் சூர்யா.

உழவன் பவுண்டேஷன் என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார் கார்த்தி.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பல உதவிகளை செய்திருந்தார் கார்த்தி.

இந்த நிலையில் விவசாயத்தை மையப்படுத்தி புதிய கருவிகளை கண்டுபிடிப்பவர்களுக்கு போட்டிகளை அறிவித்துள்ளார் கார்த்தி.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது…

“விவசாயிகளை பாராட்டும் பொருட்டு இந்த அமைப்பின் மூலம் உழவன் விருதுகள் வழங்கப்படும். மேலும் உழவு செய்வதை எளிமையாக்கும் புதிய கருவிகளை கண்டுபிடிப்பவர்களுக்கு போட்டிகளை அறிவித்துள்ளோம்.

நவீன வேளாண் கருவிகளை கண்டு பிடிப்பவர்களைத் தேர்ந்தெடுத்து முதல் மூன்று சிறந்த கருவிகளுக்கு மொத்தம் ரூ1.5 லட்சம் பரிசு வழங்கப்படும்” என்று கூறியுள்ளார் கார்த்தி.

பிகில் படத்தில் விஜய் வெறித்தனம்..; அட்லி ஆனந்தம்

பிகில் படத்தில் விஜய் வெறித்தனம்..; அட்லி ஆனந்தம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (6)அட்லி இயக்கும் பிகில் படத்தில் இரு வேடங்களில் நடித்து வருகிறார் விஜய்,

ஏஆர். ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தில் முதல் பாடலான வெறித்தனம் என்ற பாடலை நடிகர் விஜய் பாடுகிறார். பாடல் வரிகளை பாடலாசிரியர் விவேக் எழுதுகிறார்.

இதுகுறித்து ட்வீட் செய்திருக்கும் படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, ரசிகர்களின் விருப்பத்துக்கு ஏற்ப நடிகர் விஜய் வெறித்தனம் பாடலை பாடியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

யுவன் சங்கர் ராஜாவுடன் இனியா அமைத்த இசை கூட்டணி..!

யுவன் சங்கர் ராஜாவுடன் இனியா அமைத்த இசை கூட்டணி..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress iniyaதமிழில் தேசிய விருது பெற்ற ‘வாகை சூடவா’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை இனியா. தற்போது தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் என மூன்று மொழிகளிலும் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார் இனியா.

அந்த வகையில் தற்போது தமிழில் ‘காபி’, மலையாளத்தில் மம்முட்டியுடன் வரலாற்று படமான ‘மாமாங்கம்’, பிரித்விராஜின் சகோதரர் இந்திரஜித்துடன் ‘தாக்கோல்’ மற்றும் கன்னடத்தில் சிவராஜ்குமாருடன் ‘துரோணா’ ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார் இனியா. இந்த படங்கள் அடுத்தடுத்து விரைவில் வெளியாக இருக்கின்றன.

கடந்த வருடம் மலையாளத்தில் ‘பரோல்’ மற்றும் ‘பெண்களில்ல’ ஆகிய படங்களில் நடித்ததற்காக இரண்டாவது சிறந்த நடிகையாக 2018ஆம் வருடத்திற்கான ‘கேரளா ஃபிலிம் கிரிட்டிக்’ விருதைப் பெற்றுள்ளார் இனியா. அதுமட்டுமல்ல பரோல் படத்தில் நடித்ததற்காக 2018 ஆம் வருடத்திற்கான சிறந்த நடிகைக்கான ‘பிரேம் நசீர் பவுண்டேஷன்’ விருதையும் பெற்றுள்ளார்.. 2018 ஆம் வருடம் தனக்கு மகிழ்ச்சிகரமான ஒரு ஆண்டாக அமைந்து விட்டதாக கூறும் இனியா, 2019ஆம் வருடமும் இதேபோல மிக சிறந்ததாக இருக்கும் என நம்புகிறார்.

நடிப்பு ஒருபக்கம் இவரை மொழி பாகுபாடில்லாமல் துரத்திக் கொண்டிருக்க இனியாவோ, தனக்கு ஆத்மார்த்த திருப்தி தரும் இசையையும் நடனத்தையும் துரத்திக் கொண்டு இருக்கிறார். ஆம்.. இசை மற்றும் நடனம் மீது தீராத காதல் கொண்டவர் இனியா. இதனாலேயே நடிகைகளில் எவரும் இதுவரை செய்திராத ஒரு விஷயத்தை கையில் எடுத்திருக்கிறார் இனியா. ‘மியா’ என்கிற வீடியோ இசை ஆல்பத்தை ‘அமையா என்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனத்தின் மூலம் தானே சொந்தமாக தயாரித்துள்ளார் இனியா.. இந்த பாடலை டீம் மியா குழுவினர் உருவாக்கியுள்ளனர்.

‘Lets dance’ என்கிற சர்வதேச நடனப்போட்டியில் கலந்து கொள்ளவதற்கு திறமை இருந்தும் தயங்கி நிற்கும் ஒரு பெண்ணிற்கு, எதிர்பாராமல் ஒரு இளைஞன் நடன குருவாக வந்து முறையாக நடனத்தைக் கற்றுக் கொடுத்து அவரை வெற்றிபெற செய்கிறான்.. இதுதான் இந்த வீடியோ ஆல்பத்தின் கான்செப்ட். நடனம் கற்றுக் கொள்ளும் மியா என்கிற பெண்ணாக இனியா நடித்துள்ளார். இந்த இசை ஆல்பத்தை பிரபல இசை வெளியீட்டு நிறுவனமான Divo மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் U1 ரெக்கார்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து வெளியிட்டுள்ளார் இனியா..

இதுபற்றி இனியா கூறும்போது, “நான் ஒரு டான்சர் என்றாலும் இதுவரை நிறைய மேடைகளில் தான் ஆடியிருக்கிறேன்.. ஆனால் முதன்முறையாக பாட்டையும் நடனத்தையும் ஒன்றிணைத்து அதை மியூசிக் வீடியோவாக வெளியிட்டுள்ளேன். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த ஆல்பத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிய ‘டீம் மியா’வுக்கு மிகப்பெரிய வளர்ச்சி இருக்கும் என்றும் உறுதியாக கூறுகிறேன்.. மியா டீமில் பணியாற்றிய தொழில்நுட்ப குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். இதை வெளியிட்டுள்ள பிரபல இசை வெளியீட்டு நிறுவனமான Divo மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் U1 ரெக்கார்ட்ஸ் நிறுவனத்திற்கும் மற்றும் beyond frames நிறுவனத்திற்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

அதுமட்டுமல்ல, விரைவிலேயே தனது நிறுவனம் மூலம் திரைப்படம் ஒன்றை தயாரிக்க இருப்பதாகவும் கூறியுள்ளார் இனியா.. ஒரு பக்கம் நடிப்பு, இன்னொரு பக்கம் வீடியோ ஆல்பம் மற்றும் படத்தயாரிப்பு என இனியா தனது எல்லைகளை விரிவாக்கி இருப்பது அவரை மற்ற நடிகைகளில் இருந்து வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது.

More Articles
Follows