தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொடைக்கானலில் உள்ள பேரிஜம் ஏரிக்கு கடந்த 15-ம் தேதி நடிகர்கள் விமல் சூரி உள்ளிட்டோர் சென்றுள்ளனர். அவர்களின் புகைப்படம் இணையத்தில் வெளியானது.
இதனால் அவர்களுக்கு இபாஸ் கிடைத்தது எப்படி? வனத்துறையினர் எப்படி வனப்பகுதியில் அனுமதித்தனர் உள்ளிட்ட கேள்விகள் எழுந்தன.
அந்த பகுதியில் அனுமதியில்லாமல் விமல் சூரி இருவரும் மீன் பிடித்ததால் ரூ. 2000 அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் விமல் சூரி அங்கிருந்த போது பணியில் இருந்த வனக்காவலர்கள் இருவர் மற்றும் வனக்காப்பாளர் ஒருவரை பணியிட மாற்றம் செய்துள்ளதாக மாவட்ட வன அலுவலர் தேஜஸ்வி தெரிவித்துள்ளார்.