முதன்முறையாக பேய்க்கு ப்ளாஸ்பேக் இல்லாத படம் ஆறாம் திணை

முதன்முறையாக பேய்க்கு ப்ளாஸ்பேக் இல்லாத படம் ஆறாம் திணை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

First time Ghost movie without Flashback Aaram ThinaiMRKVS சினி மீடியா சார்பாக ஆர். முத்துக்கிருஷ்ணன் மற்றும் எம். வேல்மணி இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஆறாம் திணை’. அருண்.சி என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதையின் நாயகியாக விஜய் டிவி வைஷாலினி நடித்துள்ளார்.

முக்கியமான கதாபாத்திரங்களில் மொட்ட ராஜேந்திரன், ரவிமரியா, லாவண்யா மற்றும் விஜய் டிவி குரேஷி ஆகியோர் நடித்துள்ளனர்.

மலையும் மலை சார்ந்த இடமும், கடலும் கடல் சார்ந்த இடமும் என இலக்கியங்களில் ஐந்திணைகள் பற்றி சொல்லப்படுவது உண்டு. ஆனால் ‘பேயும் பேய்சார்ந்த இடமும்’ ஆக இந்த ‘ஆறாம் திணை’ உருவாகியுள்ளது.

பொதுவாக பேய்ப்படங்களில் முக்கியமான அம்சமே பேய்களுக்கென இடம்பெறும் பிளாஸ்பேக் தான். ஆனால் அந்த மரபை உடைத்து, ஒவ்வொரு காரியங்களுக்கான காரணங்களையும் படம் பார்க்கும் பார்வையாளர்கள் தாங்களாகவே உணர்ந்து கொள்ளும் விதமாக புதிய பாணியில் திரைக்கதை வடிவமைக்கப்படுள்ளது.

இது ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும்.

எப்போதும் பாசிடிவான எண்ணங்கள் தான் நல்ல விளைவுகளை கொடுக்கும் என்கிற கருத்தை முன்னிறுத்தி இந்தப்படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் பேயை தாறுமாறாக விரட்டி விரட்டி காதலிக்கும் மொட்ட ராஜேந்திரனின் கதாபாத்திரம் புதியதாகவும் கலகலப்புக்கு உத்தரவாதம் தருவதாகவும் இருக்கும் அதுமட்டுமல்ல நடிகர் ரவிமரியாவுக்கும் இது பேர்சொல்லும் படமாக இருக்கும் என்கிறார் இயக்குனர் அருண்.சி.

மொட்ட ராஜேந்திரனுடன் விஜய் டிவி கலக்கப்போவது யாரு டைட்டில் வின்னர் குரேஷியும் காமெடியில் கலக்கியுள்ளார்.

இப்படத்திற்கு ராஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராஜ் கே.சோழன் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பு – திருமலை.

கன்னியாகுமரி, மார்த்தாண்டம் பகுதியில் கடும் மழையில் கூட இந்தப்படத்தின் படப்பிடிப்பை நடத்தியுள்ளார்கள். இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை டிச-27ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

First time Ghost movie without Flashback Aaram Thinai

பைரசிக்கு தடா; சங்குசக்கரம் பட குழந்தையால் திருந்திய பெற்றோர்

பைரசிக்கு தடா; சங்குசக்கரம் பட குழந்தையால் திருந்திய பெற்றோர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sangu Chakkaram kid advice his parents to stop watching movies in Computerமாரிசன் இயக்கத்தில் சினிமாவாலா பிக்சர்ஸ் சார்பாக சதீஷ் மற்றும் லியோ விஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் சங்கு சக்கரம்.

இப்படத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன், மலேசியா ஆர்.ஜே. நடிகை கீதா மற்றும் 10க்கும் மேற்ப்பட்ட குழந்தைகள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் சென்னை 2 சிங்கப்பூர் படத்தயாரிப்பாளர் பேசினார்.

அப்போது தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையத்தளங்களால் நஷ்டம் ஏற்படுவதாக குறிப்பிட்டார்.

மேலும் படம் ரிலீஸ் ஆகி 1 மாதம் கழித்து இதுபோல் திருட்டுத்தனமாக வெளியிட அவர் வேண்டுக்கோள் விடுத்து கண்ணீர் விட்டு அழுதார்.

இதனை அங்குள்ள சங்கு சக்கரம் படக்குழந்தைகள் பார்த்துக் கொண்டிருந்தனர்.

இதன் விளைவாக அதில் உள்ள ஒரு குழந்தை, தன் பெற்றோர் கம்ப்யூட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்ததை கண்டித்துள்ளார்.

குழந்தையின் முடிவால் மனம் மாறிய பெற்றோர் இனி கம்ப்யூட்டரில் படம் பார்ப்பதில்லை. தியேட்டரில் மட்டும்தான் படம் பார்ப்பேன்” என முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Sangu Chakkaram kid advice his parents to stop watching movies in Computer

வழக்கம்போல நயன்தாராவுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய விக்னேஷ்சிவன்

வழக்கம்போல நயன்தாராவுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய விக்னேஷ்சிவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nayanthara celebrated Christmas with Director Vignesh Shivanநானும் ரௌடிதான் படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன், நயன்தாரா காதல் இன்னும் நெருக்கமானது.

இருவரும் சினிமா நிகழ்ச்சிகள் மற்றும் பொது இடங்களிலும் ஒன்றாக வலம் வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒன்றாக கொண்டாடியுள்ளனர்.

அந்த படத்தை விக்னேஷ்சிவன் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இது வழக்கமான ஒன்றுதானே என்று சிலர் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

Nayanthara celebrated Christmas with Director Vignesh Shivan

விக்ரமின் சாமி ஸ்கொயர் படத்தில் பாபி சிம்ஹா கேரக்டர் அப்டேட்ஸ்

விக்ரமின் சாமி ஸ்கொயர் படத்தில் பாபி சிம்ஹா கேரக்டர் அப்டேட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bobby Simha character updates from Vikrams Saamy Squareஹரி இயக்கத்தில் விக்ரம், த்ரிஷா, விவேக், மனோரமா, ரமேஷ் கண்ணா, உள்ளிட்டோர் நடித்த சாமி படம் மாபெரும் வெற்றிப் பெற்றது.

தற்போது இதன் இரண்டாம் பாகத்தையும் ஹரி இயக்க விக்ரம் நடித்து வருகிறார்.

இப்படத்திற்கு சாமி2 என பெயரிடாமல் சாமி ஸ்கொயர் என பெயரிட்டுள்ளனர்.

த்ரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் நாயகிகளாக நடித்து வந்தனர்.

ஆனால் இந்த 2ஆம் பாகத்தில் த்ரிஷா நடிக்க ஒப்புக் கொண்டு பின்பு தன் கேரக்டர் வலுவில்லை என தெரிவித்து விலகினார்.

இப்படத்தில் வில்லனாக பாபி சிம்ஹா நடித்து வருகிறார்.

இவரின் கேரக்டர் குறித்த தகவல்கள்கள் வெளிவந்துள்ளன.

முதல் பாகத்தில் கோட்டா சீனிவாச ராவ் (பெருமாள் பிச்சை) கேரக்டர் இருந்தது. தற்போது அவரின் மகனாக ராவண பிச்சை என்பவராக பாபி சிம்ஹா நடிக்கிறார்.

தற்போது அந்த படங்கள் இணையங்களில் வைரலாகி வருகிறது.

Bobby Simha character updates from Vikrams Saamy Square

ரசிகர்கள் சந்திப்பில் ரஜினி பற்றி கலைஞானம்-மகேந்திரன்

ரசிகர்கள் சந்திப்பில் ரஜினி பற்றி கலைஞானம்-மகேந்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth fans meet photos (5)ஓரிரு தினங்களுக்கு முன் ஆர்.கே. நகர் தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் ஜனநாயகம் தோற்றது. பணநாயகம் வென்றது என பல்வேறு தரப்பினர்கள் தேர்தல் ஆணையத்தை குறை கூறி வருகின்றனர்.

இந்த பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில் இன்று தன் ரசிகர்களை சந்தித்து வருகிறார் ரஜினிகாந்த்.

தன்னுடைய அரசியல் அறிவிப்பை இந்த சந்திப்பில் அவர் வெளியிடுவார் என பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இதில் ரஜினியுடன் தயாரிப்பாளர் கலைஞானம் (இவர்தான் ரஜினியை பைரவி படத்தில் நாயகனாக அறிமுகப்படுத்தியவர்) மற்றும் இயக்குனர் மகேந்திரன் இருவரும் கலந்துக் கொண்டனர்.

அவர்கள் பேசியதாவது…

“ரஜினிகாந்த் வீட்டில் இப்போது சுக்ரன் உட்கார்ந்து இருக்கிறார். அருணாச்சலம் படத்தில் என்னையும் ஒரு தயாரிப்பாளராக்கி அழகு பார்த்தவர். அவ்வளவு நல்ல மனிதர்.

அதிர்ஷ்டம் வரும்போது யாரும் குறுக்கே நிற்க முடியாது” என்று வாழ்த்திப் பேசினார் கலைஞானம்.

இயக்குநர் மகேந்திரன் பேசியதாவது..

“சோ ஒரு தீர்க்கதரிசி. அவர் சொன்னது… யாருக்கும் இல்லாத ஈர்ப்பு ரஜினியிடம் இருக்கு. யாருக்கும் துன்பம் தரும்படி ரஜினி நடந்துகொள்ள மாட்டார்.

ஒரு நல்ல தலைவருக்கு தேவையான அனைத்து தகுதிகளும் ரஜினியிடம் உள்ளது என அடிக்கடி மறைந்த சோ என்னிடம் சொல்வார்.

தமிழ்நாட்டுக்கு தற்போது தலைமை என்று யாராவது இருக்கிறார்களா?

சில பேர் பேருக்கு எளிமையாக இருப்பார்கள். உண்மையான எளிமையானவர் ரஜினிகாந்த்.

எதிலும் நிதானமாக இருப்பவர்களால்தான் வெற்றி பெற்று சாதனை படைக்க முடியும். அந்த நிதானம் ரஜினியிடம் அதிகமுண்டு” என்றார்.

பைரசிக்கு எங்க வீட்டில் தடா; சங்குசக்கரம் பட குழந்தையால் பெற்றோர் முடிவு

பைரசிக்கு எங்க வீட்டில் தடா; சங்குசக்கரம் பட குழந்தையால் பெற்றோர் முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sangu chakkaramமாரிசன் இயக்கத்தில் சினிமாவாலா பிக்சர்ஸ் சார்பாக சதீஷ் மற்றும் லியோ விஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் சங்கு சக்கரம்.

இப்படத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன், மலேசியா ஆர்.ஜே. நடிகை கீதா மற்றும் 10க்கும் மேற்ப்பட்ட குழந்தைகள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் சென்னை 2 சிங்கப்பூர் படத்தயாரிப்பாளர் பேசினார். அப்போது தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையத்தளங்களால் நஷ்டம் ஏற்படுவதாக குறிப்பிட்டார்.

மேலும் படம் ரிலீஸ் ஆகி 1 மாதம் கழித்து இதுபோல் திருட்டுத்தனமாக வெளியிட அவர் வேண்டுக்கோள் விடுத்து கண்ணீர் விட்டு அழுதார்.

இதனை அங்குள்ள சங்கு சக்கரம் படக்குழந்தைகள் பார்த்துக் கொண்டிருந்தனர்.

இதன் விளைவாக அதில் உள்ள ஒரு குழந்தை, தன் பெற்றோர் கம்ப்யூட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்ததை கண்டித்துள்ளார்.

குழந்தையின் முடிவால் மனம் மாறிய பெற்றோர் இனி கம்ப்யூட்டரில் படம் பார்ப்பதில்லை. தியேட்டரில் மட்டும்தான் படம் பார்ப்பேன்” என முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

More Articles
Follows