விஜே மணிமேகலை வீட்டில் விசேஷமா.?வாழ்த்துக்களை பகிரும் ரசிகர்கள்

விஜே மணிமேகலை வீட்டில் விசேஷமா.?வாழ்த்துக்களை பகிரும் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சின்னத்திரை டிவி சீரியல் நடிகைகளை போல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர்களும் ரசிகர்கள் மத்தியில் படு பிரபலம் ஆகி வருகின்றனர்.

இவர்களில் விஜே மணிமேகலை மிக முக்கியமானவர். இவருக்கென்று ஒரு ரசிகர் வட்டாரமும் சின்னத்திரை மத்தியில் உள்ளது.

மேலும் இவர் ‘குக் வித் கோமாளியில் பங்கேற்ற பின்னர் ரசிகர்களிடையே படுபிரபலம் பிரபலமானார் இவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பார்.

மணிமேகலையும் இவரது கணவர் உசைன் என்பவரும் தங்கள் குடும்பம் தொடர்பான வீடியோக்களை இணையங்களில் பதிவேற்றி வருகின்றனர்.

இவர்களுக்கென ஒரு youtube சேனலும் உள்ளது.

இந்த நிலையில் மணிமேகலையின் சமீபத்திய வீடியோக்களில் அவர் தளர்வான உடைகளை அணிந்து வந்தார்.

இதனையடுத்து ஒருவேளை மணிமேகலை கர்ப்பமாக இருக்கிறாரோ என ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Fans sharing greetings to VJ Mani Megalai. Anything special?

ஒட்டு மொத்த மனித சமூகத்தின் அவலம்.; தமிழக முதல்வருக்கு பா ரஞ்சித் கண்டனம்

ஒட்டு மொத்த மனித சமூகத்தின் அவலம்.; தமிழக முதல்வருக்கு பா ரஞ்சித் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறியப்பட்டவர் பா ரஞ்சித். தற்போது தயாரிப்பாளராகவும் உருவெடுத்திருக்கிறார்.

இவரது கம்பெனி பேனரில் தயாரிக்கப்படும் படங்கள் சமூகம் சார்ந்த படைப்புகளாக உருவாக்கி வருகின்றன.

அதுபோல ரஞ்சித் படங்களிலும் சமூக சார்ந்த கருத்துகளும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலும் எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

இந்த நிலையில் இன்று மே 18ஆம் தேதி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் மலக்குழி மரணங்கள் குறித்து அவர் பதிவிட்டுள்ளார்.

அதில்…

“தொடரும் மலக்குழி மரணங்கள்! தமிழ் நாட்டில் கடந்த மூன்று வாரங்களில் மட்டும் ஒன்பது உயிர்களை பலி கொடுத்திருக்கிறோம்.

இக் கொடுமையான சமூக அவலத்தை தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டிருக்கும் தமிழக மக்களுக்கும், தமிழக அரசிற்க்கும் கடும் கண்டனங்கள்.

மலக்குழி மரணங்களை குறிப்பிட்ட சமூக மக்களின் பிரச்சனையாக மட்டும் கருதி கடந்து போகாமல் ஒட்டு மொத்த மனித சமூகத்தின் அவலமாக கருதி, சட்டங்களை இன்னும் கடுமையாக்கி, மக்களிடையே சரியான விழிப்புணர்வை உண்டாக்கி, உடனே தடுத்திட முனைவோம்.

தமிழக அரசே மலக்குழி மரணங்களை உடனே தடுத்திடு!!!
@CMOTamilnadu

என தமிழக முதல்வருக்கு தன் கோரிக்கையை விடுத்து தன்னுடைய கண்டனங்களையும் பதிவு செய்துள்ளார் இயக்குனர் பா ரஞ்சித்.

Pa Ranjith condemns the Chief Minister of Tamil Nadu

ஒரு கிராம் தங்கத்தை வைத்து ‘எறும்பு’ கதை சொல்லும் இயக்குநர் சுரேஷ்

ஒரு கிராம் தங்கத்தை வைத்து ‘எறும்பு’ கதை சொல்லும் இயக்குநர் சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தயாரிப்பாளரும், இயக்குநருமான சுரேஷ் பேசுகையில்…

‘ எறும்பு திரைப்படத்தில் பணியாற்றிய எங்களுக்கு, படம் திருப்தியளித்திருக்கிறது. வெற்றி பெறும் என நம்பிக்கையும் இருக்கிறது. தயாரிப்பாளராக வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறேன்.

2018 ஆம் ஆண்டில் ‘போதை’ எனும் திரைப்படத்தை தயாரித்து, இயக்கியிருந்தேன். இந்தத் திரைப்படம் எனக்கு நிறைய அனுபவத்தை கற்றுக் கொடுத்தது.

அதன் பிறகு நடிகர் சார்லியை சந்தித்து கதையை சொல்லி குறும்படம் ஒன்றை இயக்க திட்டமிட்டிருந்தேன். கொரோனா காரணமாக அது நிறைவேறவில்லை. அந்த தருணத்தில் தோன்றிய கரு தான் எறும்பு. இந்த கதை எனக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியது.

அவரது இயற்பெயர் தர்மலிங்கம். அவரது பெயரை பிரபலப்படுத்த வேண்டும் என்பதற்காகவே அவரது பெயரில் பட நிறுவனத்தை தொடங்கி படத்தை தயாரித்திருக்கிறேன்.

சினிமாவை நம்பி உண்மையாக பணியாற்றுபவர்களை.. சினிமா ஒருபோதும் கைவிடாது என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதனால் இந்த திரைப்படம் நிச்சயமாக வெற்றி பெறும்.

ஃபீல் குட் மூவிக்கும்.. எமோஷனல் எனும் உணர்விற்கும்.. தனி சக்தி உண்டு. அது வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

என்னுடைய தயாரிப்பில் வெளியான ‘போதை’ படத்தை வெளியிடுவதற்கு ரமணி ராமச்சந்திரன் உதவி செய்தார். இந்தப் படத்திற்கும் அவர் உதவி செய்திருக்கிறார். அவர் இல்லையேல் நான் இல்லை.

நமக்கு பொருளாதார ரீதியாக உதவி செய்வது தங்கம். அதிலும் ஒரே ஒரு கிராம் தங்கத்தை மையப்படுத்தி தான் இப்படத்தின் கதை உருவாகி இருக்கிறது.

ஒரு கிராம் தங்கத்தை வைத்து அக்கா -தம்பி பாசம்… அப்பா -மகன் உறவு… என பல விசயங்களை இணைத்திருக்கிறேன். நாம் சிறிய வயதில் ஏதேனும் ஒரு பொருளை தொலைத்திருப்போம். அதனை எப்படி பெற்றோர்களிடத்தில் சொல்வது என அச்சம் கொண்டிருப்போம்.

ஒரு கிராம் மோதிரம் தொலைந்து விட்டது. அப்பா, அம்மா வெளியூரில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வருவதற்குள் இதனை தேடி கண்டுபிடிக்க அக்காவும், தம்பியும் முயல்கிறார்கள். அவர்கள் வருவதற்குள் இவர்கள் என்ன முயற்சி எடுத்தார்கள். இதுதான் கதை. ” என்றார்.

Director Suresh tells the story of ‘Erumbu’ with a gram of gold

நான் எப்படி இயக்க விரும்பினேனோ அதுபோன்ற படமே ‘எறும்பு’ – மித்ரன் ஆர். ஜவஹர்

நான் எப்படி இயக்க விரும்பினேனோ அதுபோன்ற படமே ‘எறும்பு’ – மித்ரன் ஆர். ஜவஹர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுரேஷ் குணசேகரன் இயக்கத்தில் தயாரான ‘எறும்பு’ படத்தில் சார்லி, எம். எஸ். பாஸ்கர், ஜார்ஜ் மரியான், பேபி மோனிகா, மாஸ்டர் சக்தி ரித்விக், சூசன் ஜார்ஜ், ஜெகன், பரவை சுந்தராம்பாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

கே. எஸ். காளிதாஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அருண்ராஜ் இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் மித்ரன் ஆர். ஜவஹர் பேசுகையில்…

‘ இந்தப் படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், இயக்குநர் என அனைவரும் எனது நண்பர்கள். நண்பர்கள் வெற்றி பெற வேண்டும் என பிரார்த்திக்கிறேன். இயக்குநர் சுரேஷிடமிருந்து நான் கற்றுக்கொள்ள விரும்பும் விசயம் அவரது துணிச்சல். சுரேஷின் தைரியத்திற்காகவே இந்த படம் வெற்றி பெறும்.

நான் எந்த மாதிரியான படங்களை இயக்க வேண்டும் என்று விரும்பினேனோ… அதுபோன்ற ஒரு படம் தான் ‘எறும்பு’.

நான் இந்த படத்தை பார்த்து விட்டேன். யதார்த்தமாகவும், அழகியலுடன் படம் இருக்கும். இந்தப் படம் பார்த்த பிறகு மனதில் ஒரு நிறைவு உண்டாகும்.

இந்த படத்திற்கு நடிகர்கள் பக்க பலம். குறிப்பாக எம். எஸ். பாஸ்கர், சார்லி, ஜார்ஜ் மரியான் ஆகிய மூவரின் கதாபாத்திரங்களும் தனித்துவமாக இருக்கும். இவர்களுடன் அக்கா – தம்பி கதாபாத்திரத்தில் நடித்த மோனிகா மற்றும் சக்தி ரித்விக்கின் நடிப்பும் அற்புதம்.

நடிகர்கள் மட்டுமல்லாமல் தொழில்நுட்ப கலைஞர்களும் தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்கி இருக்கிறார்கள் இதற்காக இந்த படம் நிச்சயம் வெற்றி பெற வேண்டும்.” என்றார்.

‘Erumbu’ is the kind of film I wanted to direct – Mithran R. Jawahar

உலக அரங்கில் முதல் தமிழ் சினிமா ‘எறும்பு’ தான்.; சந்தோஷத்தில் சார்லி

உலக அரங்கில் முதல் தமிழ் சினிமா ‘எறும்பு’ தான்.; சந்தோஷத்தில் சார்லி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுரேஷ் குணசேகரன் இயக்கத்தில் தயாரான ‘எறும்பு’ படத்தில் சார்லி, எம். எஸ். பாஸ்கர், ஜார்ஜ் மரியான், பேபி மோனிகா, மாஸ்டர் சக்தி ரித்விக், சூசன் ஜார்ஜ், ஜெகன், பரவை சுந்தராம்பாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

கே. எஸ். காளிதாஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அருண்ராஜ் இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் சார்லி பேசுகையில்…

” 2019 ஆம் ஆண்டில் இயக்குநர் சுரேஷ் என்னை சந்தித்து, ‘உங்களுக்காக ஒரு கதையை எழுதி இருக்கிறேன். ஒரே ஒரு நாள் மட்டும் வந்து நடித்துக் கொடுக்க வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டார்.

அப்போது நான் அவருக்கு தற்போது ஒரு திரைப்படத்தை ஓ டி டி யில் இரண்டு மாதம் வரை பார்க்கிறார்கள் என்றேன். அதன் பிறகு தான் நான் இயக்குவது குறும்படம் என விளக்கம் அளித்தார். அதன் பிறகு படப்பிடிப்பு தளம் எங்கே? எனக் கேட்க, சிதம்பரம் அருகே உள்ள அறந்தாங்கி எனும் சிறிய கிராமம் என்றார்.

என்னுடன் குழந்தை நட்சத்திரமான சக்தி ரித்விக்கும் நடித்தார். எங்களைப் பொறுத்தவரை இயக்குநர் சுரேஷ் இயக்கத்தில் நாங்கள் நடிக்கும் இரண்டாவது திரைப்படம் ‘ எறும்பு’. படப்பிடிப்பின் போது ஒட்டுமொத்த கிராமமும் இயக்குநர் சுரேஷுக்கு உதவி செய்தது.

இந்தப் படத்தின் கதையை முழுவதுமாக கேட்ட பிறகு இயக்குநர் சுரேஷிடம் இந்த படத்தில் நடிக்கும் கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவரும் மற்றவர்களால் பாராட்டப்படுவார்கள் என்றேன்.

இந்தத் திரைப்படத்தை பொருத்தவரை சுரேஷ் தான் உண்மையான எறும்பு. அந்த எறும்பு தான்.. எங்களை எல்லாம் எறும்பாக மாற்றியது.

படத்தின் படப்பிடிப்பு 2021ல் நடைபெற்ற போது கொரோனா பிடியில் சிக்கி இருந்தது. படப்பிடிப்பு தளத்தில் குழந்தை நட்சத்திரமான சக்தி ரித்விக் ஆன்லைனில் பாடத்தை கற்றுக் கொண்டே நடித்தார்.

இந்தத் திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைவரும் மற்றவரின் பாதிப்பு இல்லாமல் தனித்துவமாக நடித்திருக்கிறார்கள். இதுதான் இதன் சிறப்பு. எறும்பு வழக்கமான படம் அல்ல உலக அரங்கில் முதல் தமிழ் சினிமா இதுதான்.

தாத்தா- தந்தை- தாய் ஆகியோரின் பெயரை.‌..பட தயாரிப்பு நிறுவனத்திற்கு சூட்டியிருக்கிறார் இயக்குநர்.

தலைமுறையை மறக்காத படைப்பாளியான சுரேஷ், தன் மண்ணில் பெற்ற அனுபவத்தை எறும்பாக உருவாக்கி இருக்கிறார். இந்த படம் நிச்சயமாக வெற்றி பெறும் என்று கவிஞர்கள், பாடலாசிரியர்கள் இங்கு வாழ்த்தியிருக்கிறார்கள். இவர்களின் வார்த்தைகளை ரசிகர்களும் முன்மொழிந்து, இப்படத்தை வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

விநியோகஸ்தர் யுவராஜ் பேசுகையில்…

‘ நாங்கள் எங்களுடைய நிறுவனம் சார்பாக வெளியிடும் முதல் திரைப்படம் ‘கருங்காப்பியம்’. இதனைத் தொடர்ந்து வெளியிடுவதற்காக காத்திருந்தபோது, இப்பட குழுவினர் அழைப்பு விடுத்தனர். நானும், என்னுடைய நண்பரும் விருப்பமின்றி இப்படத்தைப் பார்க்க தொடங்கினோம். படத்தை பார்த்துக் கொண்டிருக்கும்போது எனக்குத் தெரியாமல் அவரும்.. அவருக்குத் தெரியாமல் நான் நானும் அழுது கொண்டிருக்கிறோம்.

அந்த அளவிற்கு படத்தில் கலைஞர்கள் திறமையாக நடித்திருக்கிறார்கள். இந்த எறும்பு திரைப்படத்தை ஊடகவியலாளர்கள் மலையளவிற்கு பெரிது படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

அதற்கான தகுதி இந்த படைப்பில் இருக்கிறது. இந்தத் திரைப்படத்தை நாங்கள் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறோம். இது ஒரு ஃபீல் குட் மூவி. ” என்றார்.

‘Erumbu’ is the first Tamil movie on the world stage. Charlie is happy

BREAKING 150 படங்களில் நடித்த ‘பருத்திவீரன்’ செவ்வாழை ராசு மரணம்.; வாழ்க்கை குறிப்பு

BREAKING 150 படங்களில் நடித்த ‘பருத்திவீரன்’ செவ்வாழை ராசு மரணம்.; வாழ்க்கை குறிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் நடிகர் செவ்வாழை ராசு. இவரது இயற்பெயர் ராசு என்றாலும் இவரது நிறம் காரணமாக செவ்வாழை என்ற பெயர் இவருடன் ஓட்டிக்கொண்டது.

இவர் இதுவரை 150 க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

அவருக்கு வயது 67.

‘பருத்திவீரன்’ படம் இவருக்கு சினிமா ரசிகர்களிடையே பெரும் புகழை பெற்றுத் தந்தது.

கார்த்தி மற்றும் சரவணன் உடன் இவர் நடித்த ஒரு காட்சி அப்போதே பரவலாக பேசப்பட்டது. விஜய்யுடன் இவர் நடித்திருந்த வேலாயுதம் படம் இவருக்கு 100வது படமாக அமைந்தது.

மேலும் இவர் வல்லமை தாராயோ, மைனா கந்தசாமி, உளவுத்துறை, கருத்தம்மா, மலைக்கோட்டை உள்ளிட்ட பல படங்கள் இவருக்கு பெரும் பெயரை பெற்று தந்தது

பாரதிராஜா இயக்கிய கிழக்குச் சீமையிலே என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். மேலும் கஸ்தூரிராஜா இயக்கிய ‘தாய் மனசு’ என்ற படத்திலும் இவர் நடித்துள்ளார்.

பாரதிராஜா மற்றும் கஸ்தூரிராஜா ஆகியோரது இயக்கங்களில் கிட்டத்தட்ட 20 படங்களில் இவர் நடித்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன் இவர் அளித்த பேட்டியில்.. “நெகட்டிவான கேரக்டர்களின் நடிக்க மாட்டேன் என்றும் கடவுள் மறுப்பு நாத்திகர் வேடத்தில் நடிக்க மாட்டேன் எனவும் இவர் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உடல்நலக்குறைவு காரணமாக மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார் செவ்வாழை ராசு.. உடல் சொந்த ஊரான தேனி மாவட்டம் வருசநாடு அருகே கோரையூத்து கிராமத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.

Paruthi Veeran actor Sevvazhai Rasu passed away

More Articles
Follows