தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் நடித்த ‘தமிழன்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி. இமான்.
இதுவரை 100 படங்களுக்கு மேல் இசையமைத்து முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராகி இருக்கிறார் இமான்.
இவருக்கும் மோனிகா என்பவருக்கும் கடந்த 2008ல் திருமணம் நடந்தது.
இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு தனது மனைவியை சட்டப்படி விவாகரத்து செய்துவிட்டதாக 2021 இறுதியில் அறிவித்தார் இமான்.
அதன்பிறகு இமான் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன.
அதன்படி இன்று 2022 மே 15ல் இமான் இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டார்.
தமிழ் சினிமாவில் பிரபலமான கலை இயக்குனர் உபால்டு என்பவரின் மகள் அமலியை திருமணம் செய்துக் கொண்டார்.
சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் திருமணம் நடைபெற்றது.
இரு வீட்டாரது சம்மதத்துடன் இத்திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணத்தில் நடிகை குட்டி பத்மினி, பாடகர் க்ரிஷ் மற்றும் அவரது மனைவி நடிகை சங்கீதா கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இமான் – அமலி திருமண புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Famous Music Director Imman gets married again









