‘வீரப்பன் படத்துக்காக டைம், மணி வேஸ்ட் பண்ணாதீங்க…’ முத்துலட்சுமி

‘வீரப்பன் படத்துக்காக டைம், மணி வேஸ்ட் பண்ணாதீங்க…’ முத்துலட்சுமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

killing veerappan movie stillsபிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா கில்லிங் வீரப்பன் என்ற படத்தை கன்னடத்தில் எடுத்தார்.

அப்படத்தின் தமிழ் பதிப்பு ‛வில்லாதி வில்லன் வீரப்பன்’ என்ற பெயரில் தமிழகத்தில் நேற்று வெளியானது.

இப்படம் தொடர்பாக சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி. அப்போது அவர் பேசியதாவது…

“வீரப்பன் படத்தில் வரும் கதைகள் முற்றிலும் தவறானது. என்னைப் பற்றியும், எனது கணவர் பற்றியும் தவறாக சித்தரித்துள்ளார் இயக்குனர்.

இப்படத்தை யாரும் பார்க்க வேண்டாம். உங்கள் பணத்தையும் நேரத்தையும் செலவழித்து வீணாக்காதீர்கள்.

என் கணவர் பற்றிய உண்மை சம்பவங்களை நானே விரைவில் படமாக எடுக்கிறேன்.

அப்போதுதான் பல உண்மையான விஷயங்கள் தெரிய வரும். விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுக்கும், என் கணவருக்கும் எவ்விதமான தொடர்பு கிடையாது.” என்றார்.

மேலும் ராம் கோபால் வர்மா மீது கர்நாடக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார் முத்துலட்சுமி. தமிழகத்திலும் விரைவில் வழக்கு தொடர உள்ளதாக குறிப்பிட்டார்.

அஜித்துக்கும் அவரது ரசிகர்களுக்கும் நன்றி…’ – அருண் விஜய் நெகிழ்ச்சி..!

அஜித்துக்கும் அவரது ரசிகர்களுக்கும் நன்றி…’ – அருண் விஜய் நெகிழ்ச்சி..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

arun vijay stillsசென்ற வருடத்தின் சிறந்த படங்கள் மற்றும் கலைஞர்களுக்கான சைமா விருதுகள் நேற்று நடந்த SIIMA விருது விழாவில் வழங்கப்பட்டது. அப்போது சிறந்த வில்லன் விருது நடிகர் அருண் விஜய்க்கு கொடுக்கப்பட்டது.

என்னை அறிந்தால் படத்தில் அருமையாக மிரட்டி நடித்திருந்தார் இவர்.

விருது பெறுவதற்காக மேடையேறிய அருண்விஜய் உணர்ச்சி வசப்பட்டு பேசினார்.

அப்போது…. ‘ரொம்ப சந்தோஷம். நிச்சயமாக இது கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றிதான்.

என்னை அறிந்தால் படத்தில் நடிக்கும்போது ஒரு சகோதரனாகவும் ஒரு நண்பனாகவும் என்னை ஊக்கப்படுத்தியவர் அஜித் சார்.

அவருக்கு இப்போது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதே சமயத்தில் எனக்கு பேராதரவு அளித்த அவரது ரசிகர்களுக்கும் நன்றி’ என்றார்.

இவ்விழாவில் சிவகார்த்திகேயனின் ரெமோ பட செஞ்சிட்டாளே சிங்கிள் ட்ராக் பாடலும் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு மெகா விருந்து..!

தனுஷ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு மெகா விருந்து..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Dhanushஇயக்குனர் பிரபுசாலமன் மற்றும் தனுஷ் இணைந்துள்ள ‘தொடரி’ விரைவில் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘கொடி’ படமும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

தற்போது இப்படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. எனவே இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை விரைவில் வெளியிட இருக்கிறார்களாம்.

தனுஷின் பிறந்த நாளான ஜூலை 28ஆம் தேதி வெளியிட்டால் ரசிகர்களுக்கு மெகா விருந்தாக இருக்கும் என்பதால் அன்றைய தினத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இப்படத்தில் தனுஷ் உடன் த்ரிஷா மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளனர். இசை சந்தோஷ் நாராயணன்.

‘கபாலி விநியோகஸ்தரே கவலைப்படாதீங்க…’ உறுதியளித்த கவர்னர்-முதல்வர்..!

‘கபாலி விநியோகஸ்தரே கவலைப்படாதீங்க…’ உறுதியளித்த கவர்னர்-முதல்வர்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kabali Distributor with Kiran bediமுன்பெல்லாம் படம் தயாரிப்பதுதான் கடினம். அதை ஈசியாக ரிலீஸ் செய்து விடுவார்கள். ஆனால் தற்போது மெகா பட்ஜெட் படங்களை கூட எளிதாக எடுத்து விடுகின்றனர். அதை ரிலீஸ் செய்வதற்குள் படாத பாடு பட்டு வருகின்றனர்.

தியேட்டர்கள் கிடைப்பதே அரிதாக இருக்கும் நிலையில், படம் ரிலீஸ் ஆகி இரண்டு நாள்களில் திருட்டு டிவிடியும் வந்து விடுகிறது.

இந்நிலையில் ரஜினியின் ‘கபாலி’ பட புதுச்சேரி ரிலீஸ் உரிமையை பெற்ற லெஜண்ட்ஸ் மீடியா ஜி.பி.செல்வகுமார், புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி மற்றும் முதல்வர் நாராயணசாமி ஆகியோர்களை நேரில் சந்தித்துத்துள்ளார்.

அப்போது சினிமாவுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் திருட்டு டிவிடியை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டினார்.

மனுவை பெற்றுக் கொண்ட கவர்னரும் முதல்வரும் திருட்டு டிவிடியை ஒழிக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்

சைமா (SIIMA 2016) விருதுகள் பெற்ற கலைஞர்கள்: முழு விவரம்..!

சைமா (SIIMA 2016) விருதுகள் பெற்ற கலைஞர்கள்: முழு விவரம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jayam Ravi and Nithya Menonதென்னிந்திய சினிமா கலைஞர்களை ஒன்றினைக்கும் வகையிலும், அவர்களை கௌரவிக்கும் வகையிலும் வருடந்தோறும் சைமா விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டிற்கான விருதுகள் சிங்கப்பூரில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் வழங்கப்பட்டன.

விருதை வென்றவர்களின் விவரங்கள் இதோ…

  • சிறந்த நடிகர்: விக்ரம் (ஐ)
  • சிறந்த நடிகை : நயன்தாரா (நானும் ரவுடிதான்)
  • சிறந்த விமர்சக நடிகர்: ஜெயம் ரவி (தனி ஒருவன்)
  • சிறந்த விமர்சக நடிகை: நித்யா மேனன் (ஓகே கண்மணி)
  • சிறந்த வில்லன் நடிகர்: அருண் விஜய் (என்னை அறிந்தால்)
  • சிறந்த காமெடி நடிகர் : ஆர் ஜே பாலாஜி (நானும் ரௌடிதான்)
  • சிறந்த துணை நடிகர்: பிரகாஷ் ராஜ் (ஓகே கண்மணி)
  • சிறந்த துணை நடிகை: ராதிகா (தங்கமகன்)
  • சிறந்த அறிமுக நடிகர்: ஜி.வி.பிரகாஷ் (டார்லிங்)
  • சிறந்த அறிமுக நடிகை: கீர்த்தி சுரேஷ் (இது என்ன மாயம்)
  • சிறந்த இயக்குனர்: விக்னேஷ் சிவன் (நானும் ரௌடி தான்)
  • சிறந்த இசையமைப்பாளர்: அனிருத் (நானும் ரௌடி தான்)
  • சிறந்த பாடகர்: அனிருத் (தங்கமே பாடல் – நானும் ரௌடி தான்)
  • சிறந்த பாடகி: ஸ்வேதா மோகன் (என்ன சொல்ல – தங்கமகன்)
  • சிறந்த பாடலாசிரியர்: வைரமுத்து (ஓகே கண்மணி)
  • தென்னிந்தியாவின் யூத் ஐகான் விருது : சமந்தா.
  • வாழ்நாள் சாதனையாளர் விருது: பாடகி எஸ். ஜானகி மற்றும் பஞ்சு அருணாச்சலம்
  • அதிக முறை ரசிகர்களால் கேட்கப்பட்ட பாடல்: ஏண்டி ஏண்டி (புலி – விஜய்-ஸ்ருதி)
‘நல்லெண்ணத் தூதராக ரஜினியை நியமிக்க வேண்டும்.’ – கிரண்பேடி.

‘நல்லெண்ணத் தூதராக ரஜினியை நியமிக்க வேண்டும்.’ – கிரண்பேடி.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kabaliஅண்மையில் புதுச்சேரி மாநிலத்தின் ஆளுனராக கிரண்பேடி பதவியேற்றார்.

இந்நிலையில் தன்னுடைய ட்விட்டரில்… “தங்கள் வீடுகளில் கழிவறை கட்ட முன்வரும் குடும்பத்தினரை ஊக்கப்படுத்தும் வகையில் ரஜினியின் ‘கபாலி’ பட டிக்கெட்டுகளை பரிசாக வழங்க மாவட்ட ஆட்சியர் திட்டமிட்டிருக்கிறார்” என குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு அரசியல் பிரமுகர்களும் சமூக ஆர்வலர்களும் விமர்சனங்களை பதிவிட்டிருந்தனர்.

அதற்கு பதிலளிக்கும் வகையில், ”சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை புதுச்சேரியின் வளர்ச்சிக்கு நல்லெண்ணத் தூதராக நியமிக்க வேண்டும்.

அதுபோல், தூய்மை இந்தியா பிரசாரத்துக்காகவும், திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவதற்கு எதிரான விழிப்புணர்வு தூதராகவும் அவரை நியமிக்க வேண்டும்.

அப்படி செய்தால், புதுச்சேரியை ஒரு முன்மாதிரி மாநிலமாக முன்னேற்றலாம்” என தெரிவித்துள்ளார்.

இதனையறிந்த ரஜினி ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

More Articles
Follows