தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழில் தயாரிக்கப்படும் படங்களில் பாதி பட்ஜெட் ஹீரோவின் சம்பளத்திற்கே ஒதுக்கப்படுவதாக வெகுநாட்களாக தயாரிப்பாளர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என மதுரை-ராமநாதபுரம் விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக இதன் சங்கத் தலைவர் செல்வின்ராஜ் தலைமை நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்…
- சமீபகாலமாக வெளியாகும் பெரிய படங்கள் விநியோகஸ்தர்களுக்கு லாபத்தை தரவில்லை.
- எங்களை போன்று தியேட்டர் உரிமையாளர்களுக்கு பெரும் நஷ்டம். எனவே அதிக சம்பளம் வாங்கும் நடிகர், நடிகைகள், தொழில் நுட்பகலைஞர்கள் அவர்களின் சம்பளத்தை குறைக்க வேண்டும்.
- ரூ.50 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் கலைஞர்களின் சம்பளத்தில் 25 சதவீதத்தை, தயாரிப்பாளர்கள் நிறுத்தி வைக்க வேண்டும். படம் வெற்றியடைந்து லாபம் கிடைத்தால் அதை அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.
- ஒருவேளை நஷ்டமடைந்தால், அந்த பணத்தை விநியோகஸ்தர்கள் தியேட்டர் உரிமையாளர்களுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டும்.
உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.