தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சிவா நடித்த தமிழ்ப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் திஷா பாண்டே.
அதன்பின்னர் மயங்கினேன் தயங்கினேன், கீரிப்புள்ள சில தமிழ் படங்களில் நடித்திருந்தார்.
அண்மையில் வெளியான தமிழ்ப்படம் 2வில் சிறிய ரோலில் நடித்திருந்தார்.
இப்போது காமெடி ஹீரோ லொள்ளுசபா ஜீவாவுடன் கொம்பு படத்தில் நடிக்கிறார்.
இவர்களுடன் பாண்டியராஜன், கஞ்சா கருப்பு, காயத்ரி, அஷ்மிதா உள்பட பலர் நடிக்கிறார்கள். தேவ்குரு இசை அமைக்கிறார், சுதீப் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்ராஹிம் இயக்குகிறார் ஸ்ரீசாய் ஸ்ரீனிவாசா நிறுவனத்தின் சார்பில் எம்.பன்னீர் செல்வம், பி.வானதி தயாரிக்கிறார்கள்.
படம் பற்றி இயக்குனர் இப்ராஹிம் கூறியதாவது:
இது ஒரு காமெடி திகில் படம். வழக்கமான திகில் படங்களிலிருந்து மாறுபட்டு படமாக்கப்பட்டுள்ளது.
ஒரு ஹீரோவுக்கான தகுதி அனைத்தும் உடையவர் ஜீவா. அவரை சரியாக இதில் பயன்படுத்தியிருக்கிறோம்.
திஷா பாண்டே அழகும், திறமையும் இருந்தும் அதை பயன்படுத்த வாய்ப்பு அமையவில்லை. அதை இந்த கொம்பு படத்தில் அமைத்து கொடுத்திருக்கிறோம்” என்றார்.
Disha Pandey to romance with Jeeva in Kombu