டி.ஆர். பாணியில் காதலால் ரசிகர்களை உருக வைக்க வருகிறது ‘உதிர்’

டி.ஆர். பாணியில் காதலால் ரசிகர்களை உருக வைக்க வருகிறது ‘உதிர்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Gnana Arokiya samyகாலங்கள் மாறினாலும் சரி, மனிதர்களின் வாழ்க்கை முறை மாறினாலும் சரி, காதல் என்ற ஒன்று மட்டும் எப்போதும்
மாறாது. எந்த காலக்கட்டத்திலும் காதல் படங்களுக்கு என்று தனி ரசிகர்கள் இருப்பார்கள், அப்படிப்பட்ட ரசிகர்களோடு
அனைத்து தரப்பு ரசிகர்களையும் டி.ராஜேந்தர் பாணியில் காதலால் உருவ வைக்க வருகிறது ‘உதிர்’.

அறிமுக இயக்குநர் ஞான ஆரோக்கியராஜா கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குவதோடு, இப்படத்தின் பாடல்களை
எழுதி படத்தை தயாரிக்கவும் செய்கிறார்.

இவர் பள்ளியில் படிக்கும் போதே, டி.ராஜேந்திரன் ‘ஒருதலை ராகம்’, ‘இரயில்
பயணங்களில்’ போன்ற படங்களை பார்த்துவிட்டு, அவரைப் போலவே பாடல்கள் எழுதி படம் இயக்க வேண்டும், என்ற
முடிவுக்கு வந்திருக்கிறார்.

அந்த நாள் முதல் சினிமா மீது தீராத காதல் கொண்ட ஞான ஆரோக்கியசாமி, தனது முதல்
படமான ‘உதிர்’ மூலம் காதலர்களை உருக வைக்கப் போகிறார்.

பணக்கார வாலிபனுக்கும், கால் இல்லாத பெண்ணுக்கும் இடையே ஏற்படும் காதலும், அதனை சுற்றி நடைபெறும்
சம்பவங்களும் தான் ‘உயிர்’ படத்தின் கதை. கரு எளிமையாக இருந்தாலும், தனது திரைக்கதை, காட்சிகள் மற்றும் வசனம்
மூலம் இப்படத்தை வலிகள் மற்றும் மகிழ்ச்சி நிறைந்த வலிமையான காதல் படமாக ஞான ஆரோக்கியராஜா இயக்கி
வருகிறார்.

சரவணன், சதீஷ் ஆகியோர் ஹீரோக்களாக நடிக்கும் இப்படத்தில் மனிசா, மீனா ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கிறார்கள்.

இவர்களுடன் தேவதர்ஷினி, ஓ.எஸ்.மணி, மனோபாலா, சிங்கம்புலி, நெல்லை சிவா, போண்டா மணி உள்ளிட்ட பல முன்னணி
நட்சட்த்திரங்கள் நடிக்கிறார்கள்.

அரவிந்த் ஸ்ரீராம் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜோ ஒளிப்பதிவு செய்கிறார். சார்ப் ஆனந்த் படத்தொகுப்பாளராக
பணியாற்றுகிறார்.

ரஞ்சித், உன்னி மேனன், திப்பு, வைக்கம் விஜயலெட்சுமி ஆகியோர் இப்படத்தின் பாடல்களை
பாடியிருக்கிறார்கள்.

ஜீசஸ் கிரேஸ் சினி எண்டர்டெயின்மெண்ட் (Jesus Grace Cine Endartainment) சார்பில் ஞான ஆரோக்கியராஜா,
புகழேந்தி ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கேரளா, கொடைக்கானல் போன்ற இடங்களில்
நடைபெற்று வருகிறது.

தற்போது இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் உள்ள இப்படம் விரைவில் தமிழ் சினிமாவின் சூப்பர் ஹிட்
காதல் படங்களின் பட்டியலில் இடம் பிடிக்க வர உள்ளது.

கௌதம் சார் தான் இந்தப்படத்தின் மிகப்பெரிய பலம் துல்கர் சல்மான் பேச்சு

கௌதம் சார் தான் இந்தப்படத்தின் மிகப்பெரிய பலம் துல்கர் சல்மான் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dulqer salman and gautham menonதுல்கர் சல்மான், ரிது வர்மா, கௌதம் மேனன் நடித்துள்ள காதல், ஆக்‌ஷன் கலந்த கமர்ஷியல் படம் “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்”. Anto Joseph Film company நிறுவனம் Viacom 18 Motion pictures இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. புதுமுக இயக்குநர் தேசிங்கு பெரியசாமி எழுதி இயக்கியுள்ளார். பிப்ரவரி 28 அன்று வெளியாகும் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

இச்சந்திப்பில்
இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் பேசியது…

இந்தப்படத்திற்கு பின்னணி இசை மற்றும் ஒரு பாடலுக்கு இசையமைத்திருக்கிறேன். உங்களுக்கு மிக பிடிக்கும் என நம்புகிறேன். வாய்ப்பளித்த இயக்குநருக்கு நன்றி.

ஒளிப்பதிவாளர் பாஸ்கர் பேசியது…

கௌதம் சாருக்கு நன்றி அவருடன் வேலை செய்ய வேண்டுமென்பது நெடுநாள் கனவு. துல்கர் மிக எளிமையான மனிதர். படப்பிடிப்பில் அவர் இருந்தால் சந்தோஷமாக இருக்கும். ரிது வர்மா அழகான ஹீரோயின். மிக திறமை வாய்ந்தவர். படம் நன்றாக வந்துள்ளது. எல்லோருக்கும் நன்றி

உடை வடிவமைப்பாளர் நிரஞ்சனி பேசியது ….
இயக்குநருக்கு நன்றி. இது கனவு மாதிரி இருக்கிறது. ஆனால் இன்று இங்கு நிற்க இயக்குநர் தான் காரணம். உடை வடிவமைப்பிற்காக தான் சென்றேன் ஆனால் என்னை நடிக்க வைத்து விட்டனர். என்னை நம்பி வாய்ப்பளித்தற்கு நன்றி. கௌதம் சார் படத்தில் வேலை செய்திருக்கிறேன் ஆனால் இப்படத்தில் கௌதம் சாருக்கு உடை வடிவமைத்திருக்கிறேன் அது மிகுந்த மகிழ்ச்சியை தந்தது. இந்தபடத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். ரிது வர்மா மிகவும் நட்பாக இருந்தார். துல்கர் நன்றாக நடித்திருக்கிறார். நான் நடித்திருக்கும் படத்தை திரையில் காண நானும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். நன்றி.

நாயகி ரிது வர்மா பேசியது

எல்லோருக்கும் வணக்கம். தமிழ் எனக்கு குறைவாகவே தெரியும். இது தமிழில் எனது முதல் மிகப்பெரிய படம். நிறைய எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறேன். இயக்குநர் வெகு காலமாக இந்தப்படத்திற்காக உழைத்திருக்கிறார். துல்கர் மிகச்சிறந்த நடிகர் அவரின் காந்த ஈர்ப்பு 10 சதவீதம் என்னிடம் இருந்தாலே போதுமென நினைப்பேன். கௌதம் சார் என்னை வைத்து படம் இயக்கியுள்ளார். அவருடன் இந்தப்படத்தில் பங்கு கொண்டது மகிழ்ச்சி. படம் எல்லோருக்கும் பிடிக்கும்படி இருக்கும். நன்றி.

நடிகர் ரக்‌ஷன் பேசியது…

டிவியில் வேலை செய்யும் போது படம் நடிக்க ஆசைப்பட்டேன். தேசிங்கு அண்ணன் இந்த வாய்ப்பை தந்துள்ளார். அவருக்கு நன்றி. துல்கர் என்னை ஒரு சகோதரன் போல் பார்த்து கொண்டார். இந்தப்படம் உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். எல்லோருக்கும் நன்றி.

கௌதம் வாசுதேவ் மேனன் பேசியது…

ஒரு நடிகராக புதிய பயணம் தொடங்கியிருக்கிறது. இது எதுவுமே திட்டமிட்டது இல்லை ஆனால் நன்றாகவே இருக்கிறது. தேசிங்கு என்னை அணுகிய விதம் எனக்கு பிடித்திருந்தது. எஸ் ஜே சூர்யா நடிக்க வேண்டிய பாத்திரம். துல்கரை எனக்கு தெரியும் அவர் தேர்ந்தெடுத்தால் கதை நன்றாக இருக்குமென தெரியும். துல்கருடன் பணிபுரிந்தது சந்தோஷம். ரிது வர்மா, நிரஞ்சனி என்னிடம் வேலை செய்திருக்கிறார்கள். அவர்களுடன் இந்தபடத்தில் பணிபுரிந்தது மகிழ்ச்சி. இளைஞர்கள் புத்துணர்வுடன் வேலை செய்துள்ளார்கள். நான் நடித்த பகுதிகள் பார்த்தேன் எனக்கு பிடித்திருந்தது. படம் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

இயக்குநர் தேசிங்கு பெரியசாமி பேசியது…

இது எனக்கு முதல் மேடை. பத்திரிக்கைகள் தான் என்னை முதலில் அறிமுகப்படுத்தியது. படம் அறிவித்த போதே என் பெயர் இயக்குநர் என வந்துவிட்டது. எல்லா அறிமுக இயக்குநரும் பட்ட கஷ்டங்களை பட்டே இந்தப்படத்தை நானும் இயக்கினேன். துல்கரை மட்டுமே மனதில் வைத்து இந்தப்படத்தின் கதையை எழுதினேன். அவர் வந்துவிட்டதால் இந்தப்படத்தின் மீது மற்றவர்களுக்கு பெரிய நம்பிக்கை வந்துவிட்டது. பெல்லி சூப்புலு பார்த்து ரிது வர்மாவை இந்தப்படத்தில் நடிக்க வைத்தோம். அருமையாக நடித்திருக்கிறார். கௌதம் சார் நினைத்தால் மிகப்பெரிய படங்களில் நடிக்கலாம் ஆனால் என்னை நம்பி ஒரு அறிமுக இயக்குநருக்கு உதவியாக இருக்குமென்றே அவர் நடித்திருக்கிறார். அவர் இந்தப்படத்தில் அசத்தியிருக்கிறார். துல்கர் எந்த தலையீடும் இல்லாமல், எந்த ஈகோவும் இல்லாமல், அவ்வளவு அர்ப்பணிப்புடன் நடித்து தந்தார். கால் உடைந்த மிக கடினமான நேரத்திலும் எங்களுக்கு ஒத்துழைப்பு தந்தார். எனது படக்குழு என் மீது மிகவும் அன்பானவர்கள். எந்த ஒரு எதிர்பார்ப்பு இல்லாமல் உழைத்த என் உதவி இயக்குநர்களுக்கு நன்றி. இந்தப்படத்தில் நிறைய ஆச்சர்யங்கள் இருக்கிறது. உங்களுக்கு பிடிக்கும். பட ரிலீஸுக்கு பிறகு மீண்டும் பேசுவோம் நன்றி.

துல்கர் சல்மான் பேசியது….

இந்தப்படத்தின் விளம்பரத்தை ஆரம்பித்தபோது எல்லோரும் என்னிடம் “ஏன் இந்த இடைவெளி” என கேட்டது எனக்கு சந்தோஷமாக இருந்தது. என்னை மறக்காமல் இருப்பது எனக்கு மகிழ்ச்சி. இந்தக்கதை கேட்டவுடனே மிக உற்சாகமாக இருந்தது. எப்போது இந்தப்படம் செய்யலாம் எனக் காத்திருந்தேன். நான் முதலில் பயந்திருந்தேன் படக்குழு புதிது எப்படி இருக்கும் என நினத்தேன். என் மீது எல்லோரும் அன்பாக இருந்தார்கள். ரிது வர்மாவின் பெல்லி சூப்புலு பார்த்துள்ளேன் அவர் மிகத்திறமை வாய்ந்தவர். அவர் ஒரு தமிழ்பெண் போலவே இப்படத்தில் இருப்பார். படப்பிப்பிடிப்பில் பெரும் ஒத்துழைப்பு தந்தார். கௌதம் சார் தான் இந்தப்படத்தின் மிகப்பெரிய பலம். அவர் இல்லாவிட்டால் இந்தப்படம் காமெடியாக இருந்திருக்கும். இந்தப்படத்தின் சூப்பர்ஸ்டார் அவர் தான். அவர் விசிறியாக படப்பிடிப்பில் நிறைய பேசிக்கொண்டிருந்தோம் . அவருடன் கண்டிப்பாக ஒரு காதல் படம் நடிப்பேன். இயக்குநர் தேசிங்கு பயங்கர தெளிவானவர், அவரது கனவு இந்தப்படம். எல்லோருக்கும் பிடிக்கும் படமாக இந்தப்படம் கண்டிப்பாக இருக்கும். எல்லோரும் பாருங்கள் நன்றி.

மிஷ்கினின் அடுத்த படம் குறித்த அப்டேட்

மிஷ்கினின் அடுத்த படம் குறித்த அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Mysskinஒரு படைப்பாளியின் பயணம் முற்றிலும் விநோதமானது. அவர்களது வெற்றி என்பது அவர்கள் எத்துனை கைதேர்ந்த இரசவாதி, அவர்கள் படைப்பை படைக்கும் விதம் ஆகியவற்றால் மட்டுமே மதிப்பிடப்படுகிறது. இயற்கையாகவே ஒரு எளிய எண்ணத்தை, மிகப்பெரும் கருத்துருவாக்கமாக மாற்றுவதும் மற்றொரு வகையில் மக்கள் கொண்டாடும் படைப்பாக்குவதும் பிரமிப்பு தரும் படைப்பாளியின் திறன் தான். மிஷ்கின் இது அனைத்தையும் நிரூபித்து அதனையும் கடந்த படைப்பாளி ஆகிவிட்டார். மிஷ்கின் தனக்கென ஒரு தனியான நேர்த்தியை கைகொண்டு, உருவாக்கத்தில் உன்னத வடிவத்தை அடைந்திருக்கிறார். அவரது வடிவத்தில் கமர்ஷியல் சினிமா, ஆர்ட் சினிமா எனும் ஒப்புமையையெல்லாம் கடந்துவிட்டார். இறுதியில் அழுத்தமான கதையை பார்ப்பவனின் பார்வையில் மனதை பிசைந்து, எண்ணங்களை நல்வழிப்படித்தும், அன்பை பேசும் படைப்பை தருவதே அவரது அழகு. சமீபத்தில் “பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ” என மூன்று தொடர் வெற்றிகளை தந்து அனைத்து ஜானர்களிலும் தான் ராஜா என நிரூபித்திருக்கிறார்.

இது குறித்து மிஷ்கின் கூறியதாவது…
இதை மாபெரும் வெற்றி என்று கூறுவதை விட “அளவில்லாத அன்பு” என்றே கூறுவேன். படத்தை பார்த்த மக்கள் எடுத்து சென்றதும், கொடுத்ததும் அதுதான். எந்த வகை ஜானராக இருக்கட்டும், எந்த வகை பின்புலத்தில் கதை சொன்னாலும், பார்க்கும் பார்வையாளன் உணர்வுப்பூர்வமாக உணர்ந்தால் மட்டுமே, அதனை கொண்டாடுவான். நான் இந்தப்படங்களை கண்மூடித்தனமான நம்பிக்கையில் தான் உருவாக்கினேன். ஆனால் இறுதியில் அளவிலா அன்பை பெற்றிருக்கிறேன். “கண்மூடித்தனாமான நம்பிக்கை, ஆத்மாவின் தேடல்” இரண்டும் தான் வாழ்வின் உள்ளார்ந்த அர்த்தம் என்பதை நம்புவன் நான். உண்மை என்னவெனில் எனது “பிசாசு” நாயகன் சித்தார்த், “துப்பறிவாளன்” கணியன் பூங்குன்றன், “சைக்கோ” கௌதம் அனைவரும் இந்த மந்திரத்தை நம்புபவர்களே. ரசிகர்கள் இதனை வாழ்வின் அன்பாக எடுத்து செல்ல வேண்டுமென்பதே என் விருப்பம். நான் வெகு பணிவுடன் இந்த படங்களின் தயாரிப்பாளர்கள் பணிபுரிந்த நடிக நடிகையர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், விமர்சகர்கள், என் வளர்ச்சியை விரும்பும் அன்பு உள்ளங்கள், ரசிகர்கள் அனைவருக்கும் எனக்கு தனித்துவ வெற்றி தந்ததற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இதே போல் அனைவரையும் மகிழ்விக்கும் திரைப்பயணத்தை தொடர விரும்புகிறேன். மிக விரைவில் எனது அடுத்த பயணம் பற்றிய அறிவிப்பை வெளியிடுகிறேன் நன்றி.

வசூல் படங்களை விட வலிமையான படங்களே தேவை; கன்னி மாடம் குறித்து திருமாவளவன்

வசூல் படங்களை விட வலிமையான படங்களே தேவை; கன்னி மாடம் குறித்து திருமாவளவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thirumavalavan praises about Kanni maadam and slams Honour killing நடிகர் போஸ் வெங்கட் இயக்கத்தில் உருவான கன்னி மாடம் படம் பிப்ரவரி 21ஆம் தேதி வெளியானது.

ரூபி பிலிம்ஸ் சார்பாக ஹஷீர் இப்படத்தை உருவாக்கியுள்ளார்.

இனியன் ஒளிப்பதிவு செய்ய ஹரிஷ் சாய் இசையமைத்துள்ளார்.

ஸ்ரீ ராம், சாயாதேவி, விஷ்ணு, ஆடுகளம் முருகதாஸ், கஜராஜ், வலீனா பிரின்சஸ், சூப்பர் குட் சுப்பிரமணி, ப்ரியா ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர்.

சாதி வெறியர்களுக்கு எதிராக ஆணவக் கொலைகளை சாடியுள்ள இந்த படத்திற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில் திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தைகள் கட்சி) இந்த படத்தை பார்த்து தன் கருத்தை தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது…

இன்றைய கால கட்டத்திற்கு தேவையான படமாக கன்னி மாடம் வெளி வந்துள்ளது,

சாதி வெறியாட்டமும் மத வெறியாட்டமும் இன்றைக்கு இந்திய மண்ணில் தலை தூக்கியுள்ளது. இவையிரண்டும் வன்முறைக்கு காரணமாக அமைந்துள்ளது.

நாம் வெட்கி தலைகுனியும் அளவுக்கு பெருகி வருகிறது.

ஆணவக் கொலைகள், தீ வைப்பு, என்று இன்றைய காலச் சூழல் பதற்றமாகியுள்ள நிலையில் தந்தை பெரியாரின் சிந்தனைகள், புரட்சியாளர் அம்பேத்கரின் சிந்தனைகள் பரவலாக மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும் என்ற சிந்தனையோடு இந்த படத்தை போஸ் வெங்கட் இயக்கியுள்ளார்.

சாதி மனிதனை சாக்கடையாக்கும்… மதம் மனிதனை மிருகமாக்கும் என் பெரியாரின் கருத்தோடு இந்த படத்தை நிறைவு செய்திருக்கிறார்.

வணிக நோக்கத்தோடு இந்த படத்தை தயாரிக்காமல் இன்றைய தலைமுறைக்கு தேவையான கருத்தை கொடுத்துள்ளனர்.
இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் என் பாராட்டுக்கள்.

படத்தில் நடித்துள்ளவர்கள் மிக இயல்பாக பாத்திரத்தோடு ஒன்றி நடித்துள்ளனர். ஒவ்வொரு காட்சியும் இன்றைய இளைஞர்களை ஆழமாக சிந்திக்க வைக்க கூடிய அளவுக்கு சித்தரிக்கப்பட்டுள்ளன.

சாதி விட்டு சாதி காதல் மலர்வது அல்லது திருமணம் செய்து கொள்வது என்பது சமூக இயங்கியல் நிகழ்வாகும். ஆனால் இதை எதிர்க்க கூடியவர்கள் எத்தகைய மன நோயாளிகளாக இருக்கிறார்கள் என்பதை இந்த படம் சித்தரிக்கிறது.

தன் தந்தையாக இருந்தாலும் அவரின் சாதி வெறி ஒட்டுமொத்த சமூகத்தை சீரழிக்கும் என்பதால் தந்தையை கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்படுகிறான் நாயகன்.

காதல் எந்தளவு வலிமையானது… புனிதமானது என்பதை காதலனை இழந்து கருவினை சுமக்கின்ற ஒரு பெண்மணிக்கு ஒரு தந்தையாக இருந்து பாதுகாக்கும் ஒரு நாயகனாக உருவாக்கப்பட்டு இருக்கிறான்.

அப்படி போற்றுதலுக்குரிய பாத்திரமாக நாயகன் பாத்திரம் உள்ளது.

ஆண்களுக்கு நிகராக ஒரு பெண் பாத்திரமும் படைக்கப்பட்டுள்ளது. ஆட்டோ ஓட்டுகிற பெண்களுக்கு ஏற்படும் சிரமங்களும் காட்டப்பட்டுள்ளது.

ஆண்கள் தங்களை சமமாக பார்க்காவிட்டாலும் தங்களை தவறாக பார்க்கக்கூடாது என அறிவுரை சொல்கிற அந்த ஆட்டோ பெண் டிரைவர் பாத்திரத்தின் வசனமும் பாராட்டப்பட வேண்டியது.

மகளையும் மருமகனையும் படுகொலை செய்து.. பிறகு நாயகி கீழ்ஜாதி பெண் என்றறிந்து அவரை கொலை செய்த பரோலில் வந்த தன் தந்தையை கொலை செய்து தான் ஒரு நீதிமானாக காட்சியளிக்கிறார் நாயகன்.

சட்டமும் அதிகார வர்க்கமும் இங்கே நீதியை வழங்கவில்லை என்பதையும் அந்த காட்சியில் சுட்டிக்காட்டியிருக்கிறார் இயக்குனர்.

கன்னி மாடம் என்கிற இந்த திரைப்படம் ஆணவக் கொலைக்கு எதிரானது… ஜாதி வெறிக்கு எதிரானது… மத வெறிக்கு எதிரானது… காதல் புனிதமானது உள்ளிட்ட பல விஷயங்களை ஒரே நேரத்தில் சொல்லியிருக்கிறது.

இளம் தலைமுறைக்கு பாடம் புகட்ட கூடிய திரைப்படமாக இது வெளிவந்துள்ளது.

எனவே டைரக்டர் போஸ் வெங்கட் மற்றும் தயாரிப்பாளர் ஹசீர் ஆகியோரை பாராட்டுகிறேன்.

நல்ல பாடல்களை கொடுத்த இசையமைப்பாளருக்கும், ஒவ்வொரு காட்சிகளை திறமையாக படம் பிடித்த ஒளிப்பதிவாளருக்கும் என் வாழ்த்துக்கள்.

இதுபோன்ற படங்கள் விருதுகள் பெறுகிறதோ இல்லையோ… சமூகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும். அந்த வலிமை கன்னி மாடம் படத்திற்கு உள்ளது. நல்ல வழிகாட்டியாக இந்த படம் அமைந்துள்ளது.

வணிக நோக்கில் எத்தனையோ படங்கள் வருகின்றன. அவர்கள் வெற்றியை வசூலில் குவிக்கிறார்கள்.

ஆனால் அவை சமூகத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

சாதிகள் இல்லையடி பாப்பா என்ற பாரதியாரின் கருத்துக்களை சேர்க்கின்ற படமாக இது அமைந்துள்ளது. என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

Thirumavalavan praises about Kanni maadam and slams Honour killing

சபாஷ் நண்பர் ரஜினி; நல்ல வழி.. ஆனா தனி வழி அல்ல.. – கமல்

சபாஷ் நண்பர் ரஜினி; நல்ல வழி.. ஆனா தனி வழி அல்ல.. – கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal talks about Rajinis stand on CAA and Delhi violence இன்று மாலை ரஜினி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்த போது…

சிஏஏ சட்டத்தால் இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டால்தான் முதல் ஆளாக நிற்பேன் என்று தான் கூறியிருந்தேன்.

உளவுத்துறையின் தோல்வி தான் டெல்லி வன்முறைக்கு காரணம். மத்திய அரசு இரும்புக்கரம் கொண்டு வன்முறையை ஒடுக்க வேண்டும். முடியாவிட்டால் ராஜினாமா செய்ய வேண்டும்.

மார்ச் மாதத்தில் கமல் & ரஜினி இணையும் படப் பூஜை .?

மக்கள் என்ன போராடினாலும் மத்திய அரசு இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறாது என நினைக்கிறேன்.

சில கட்சிகள் மதத்தை வைத்து அரசியல் செய்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என பேசியிருந்தார் ரஜினி.

இந்த நிலையில், ரஜினியின் கருத்தை வரவேற்று கமல் தன் கருத்தை கூறியுள்ளார்.

அதில், சபாஷ் நண்பர் ரஜினிகாந்த் அவர்களே, அப்படி வாங்க, இந்த வழி நல்ல வழி. தனி வழி அல்ல, ஒரு இனமே நடக்கும் ராஜபாட்டை வருக வாழ்த்துகள் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வரவேற்றுள்ளார்.

Kamal talks about Rajinis stand on CAA and Delhi violence

வன்முறையை ஒடுக்காவிட்டால் ராஜினாமா செய்யுங்கள்.; பாஜக.-வை தாக்கிய ரஜினி

வன்முறையை ஒடுக்காவிட்டால் ராஜினாமா செய்யுங்கள்.; பாஜக.-வை தாக்கிய ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini slams CAA Delhi violence and BJP Central Govt சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் தன் போயஸ் தோட்ட கார்டன் முன்பு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அதில்…

டெல்லியில் ஏற்பட்ட கலவரத்திற்கு மத்திய உளவுத்துறையின் தோல்வியே காரணம்.

ட்ரம்ப் போன்ற தலைவர்கள் வரும்நேரத்தில் மத்திய அரசு போராட்டத்தை கட்டுப்படுத்தியிருக்க வேண்டும்.

டெல்லியில் நடைபெற்ற போராட்டங்கள் மத்திய அரசின் intelligence-ன் தோல்வி.. இதற்காக மத்திய அரசை கண்டிக்கிறேன்.

மார்ச் மாதத்தில் கமல் & ரஜினி இணையும் படப் பூஜை .?

அமைதி வழியில் போராட்டம் நடத்தலாம், வன்முறைக்கு இடம் கொடுக்கக்கூடாது; போராட்டத்தை இரும்பு கரம் கொண்டு அடக்கியிருக்க வேண்டும்.

மதத்தை வைத்து அரசியல் செய்வதையும் வன்மையாக கண்டிக்கிறேன்.

போராட்டம் எப்போதும் வன்முறையாக மாறக் கூடாது, அமைதியாக நடைபெறலாம்.

டெல்லியில் வன்முறையை ஒடுக்க முடியாவிட்டால், ராஜினாமா செய்யுங்கள்.

சிஏஏ நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று சட்டமாகிவிட்டது.

குடியுரிமைச் சட்டத்தை இனி திரும்ப பெறுவது சாத்தியமில்லை.

சிஏஏ சட்டத்தால் இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்காக முதல்ஆளாக நிற்பேன் என்றுதான் கூறினேன்.

என்ன உண்மையோ அதை சொல்கிறேன்; என் பின்னால் பாஜக இருப்பதாக கூறுவது வருத்தமளிக்கிறது.

நான் பாஜகவின் ஊதுகுழல் என மூத்த பத்திரிகையாளர்கள், அரசியல் விமர்சகர்கள் கூறுவது வேதனை அளிக்கிறது

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

Rajini slams CAA Delhi violence and BJP Central Govt

More Articles
Follows