DeAr YOUR SUCCESS NeAr.. வெள்ளிக்கிழமை நாயகன் & நாயகிக்கு கிடைத்த வெற்றி

DeAr YOUR SUCCESS NeAr.. வெள்ளிக்கிழமை நாயகன் & நாயகிக்கு கிடைத்த வெற்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

DeAr YOUR SUCCESS NeAr.. வெள்ளிக்கிழமை நாயகன் & நாயகிக்கு கிடைத்த வெற்றி

டியர்’ படத்தின் வெற்றியால் உற்சாகமடைந்திருக்கும் படக்குழு..

ஜீ.வி. பிரகாஷ் குமார் – ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் முறையாக இணைந்து நடித்து, ஏப்ரல் 11ம் தேதியன்று வெளியானது ‘டியர்’ திரைப்படம்.

அனைத்து தரப்பு ரசிகர்களின் வரவேற்பை பெற்று, பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது.

நட்மெக் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான ‘டியர்’ திரைப்படத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாகவும் நடித்திருந்தனர்.‌

பெரும் எதிர்பார்ப்பில் இருந்த இந்த திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. படத்தின் கதை களம், கதை சொல்லும் பாணி, நட்சத்திர நடிகர்களின் தனித்துவமான நடிப்பு, பாடல்கள், இசை, பின்னணியிசை.. என அனைத்து அம்சங்களும் சிறப்பானதாக இருந்ததால் ரசிகர்களும், விமர்சகர்களும் இப்படத்தை கொண்டாடினர்.

இப்படம் வெளியான பிறகு வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. ரசிகர்களின் தொடர் ஆதரவால் இப்படம் தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.

‘வெள்ளிக்கிழமை நாயகன்’- ‘வெள்ளிக்கிழமை நாயகி’ என ரசிகர்களால் போற்றப்பட்ட ஜீ.வி. பிரகாஷ் குமாரும், ஐஸ்வர்யா ராஜேசும் முதன்முறையாக இணைந்து ‘டியர்’ படத்தில் நடித்திருப்பதும் இப்படத்தின் வெற்றிக்கான காரணம் என திரையுலகினர் தெரிவிக்கிறார்கள்.

இதனாலேயே திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் குறையாமல் அதிகரித்துக் கொண்டே இருப்பதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

Dear movie hit cast and crew very happy

4 கதைகள்.. 4 ஊர்கள்… 4 கலர் டோன்.. என வித்தியாசமான ‘நிறம் மாறும் உலகில்’

4 கதைகள்.. 4 ஊர்கள்… 4 கலர் டோன்.. என வித்தியாசமான ‘நிறம் மாறும் உலகில்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

4 கதைகள்.. 4 ஊர்கள்… 4 கலர் டோன்.. என வித்தியாசமாக உருவான ‘நிறம் மாறும் உலகில்’

பாரதிராஜா, நட்டி, ரியோராஜ், சாண்டி இணைந்து நடிக்கும் ‘நிறம் மாறும் உலகில்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

Signature Productionz மற்றும் GS Cinema International இணைந்து வழங்க, பாரதிராஜா, நட்டி, ரியோராஜ், சாண்டி இணைந்து நடிக்க அறிமுக இயக்குநர் பிரிட்டோ JB இயக்கத்தில், உணர்வுகளின் அழகியல் குவியலாக உருவாகியுள்ள ‘நிறம் மாறும் உலகில்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

முன்னணி பிரபலங்கள், இயக்குநர் பா ரஞ்சித், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், லைகா நிறுவன நிர்வாக இயக்குநர் GKM தமிழ்குமரன், இயக்குநர் தேசிங்கு பெரியசாமி, தயாரிப்பாளர் சுரேஷ் கமாட்சி ஆகியோர் தங்கள் சமூக வலைதளம் வழியே இணையத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

நான்கு விதமான வாழ்க்கை, நான்கு கதைகள் அதை இணைக்கும் ஒரு புள்ளி, என நம் வாழ்வின் உறவுகளின் அவசியத்தை, உணர்வுகளை பேசும் அழகான கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளார் அறிமுக இயக்குநர் பிரிட்டோ JB.

தற்போது வெளியாகியிருக்கும் ஃபர்ஸ்ட் லுக் இரத்தம் பாயும் கரும் சிவப்பு நிற பின்னணியில், துப்பாக்கி, ஆட்டோ, கண்ணாடி, ஹவுஸிங் போர்ட் பின்னணி, ஒரு பெண்ணின் நிழல் முகம், என குறியீடுகளுடன், கதாப்பாத்திரங்களின் வித்தியாசமான தோற்றத்தில் பாத்தவுடனே இதயத்தை உருக்கும் விதமாக அமைந்துள்ளது.

பாரதிராஜா, நட்டி, ரியோராஜ், சாண்டி என ஒவ்வொருவரின் லுக்கும் இதுவரையிலும் அவர்களை பார்த்திராத வகையிலான தோற்றத்தில் மிரட்டுகிறது. வித்தியாசமான இந்த ஃபர்ஸ்ட் லுக் திரைப்பட ஆர்வலர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது.

இப்படத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜா, நட்டி, ரியோராஜ், சாண்டி ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க, சுரேஷ் மேனன், ஆடுகளம் நரேன், மைம் கோபி, வடிவுக்கரசி, விக்னேஷ்காந்த், ரிஷிகாந்த், கனிஹா, ஆதிரா, காவ்யா அறிவுமணி, துளசி, அய்ரா கிருஷ்ணன், லிசி ஆண்டனி, நமோ நாராயணன், சுரேஷ் சரவதி, ஹரிநிரமேஷ்கிருஷ்ணன், விஜித், ஜீவா சினேகா, திண்டுக்கல் சரவணன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நான்கு கதைகளும் வேறு வேறு களங்களில் நடக்கிறது.. மும்பை செட் இங்கு தத்ரூபமாக உருவாக்கப்பட்டு அதில் ஒரு கதை, வேளாங்கண்ணி பின்னணியில் ஒரு கதை, சென்னை ஹவுசிங்க் போர்ட் பின்னணியில் ஒரு கதை, திருத்தணி அருகில் ஒரு கிராமத்தில் ஒரு கதை என பல்வேறு இடங்களில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது.

கதைகளின் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு கலர் டோனில் படமாக்கப்பட்டுள்ளது.

முற்றிலும் புதிதான அழகான அனுபவம் தரும் படைப்பாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்த நிலையில் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் டீசர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

தொழில் நுட்ப குழு

எழுத்து இயக்கம் – பிரிட்டோ JB
ஒளிப்பதிவாளர் – மல்லிகா அர்ஜுன், மணிகண்ட ராஜா
இசையமைப்பாளர் – தேவ் பிரகாஷ்
கலை – ராம் , தினேஷ், சுபேந்தர்
எடிட்டர் – தமிழ் அரசன்
ஸ்டண்ட் இயக்குனர் – ராக் பிரபு
ஒலி வடிவமைப்பு – சுகுமார் MPSE, ஸ்ரீகம்த் சுந்தர் MPSE, ( The Soundables)
ஆடை வடிவமைப்பாளர் – ஸ்ரீதேவி, ரெபேக்கா, ஜீவா
நடன இயக்குனர் – சாண்டி
ஒப்பனை – கோலப்பன்
பாடல் வரிகள் – A.S தாவூத், அக்ஷரா பாலகிருஷ்ணன்
விளம்பர வடிவமைப்பாளர் – ஃபாக்ஸ் ஐ
மக்கள் தொடர்பு – யுவராஜ்
இணை இயக்குநர் – மெல்பர்ட்
கலரிஸ்ட் – கௌஷிக்
வி எஃப் எக்ஸ் – அதிதியா
தயாரிப்பு மேலாளர் – செல்வம் இளையராஜா
தயாரிப்பு -Signature Productionz மற்றும் GS Cinema International

Bharathiraja Natty Rio Sandy starrer Niram maarum Ulagil

ஒரே படத்திற்காக 12 வருடங்கள் தியாகம் செய்த இயக்குனர்.; ‘ஒரு நொடி’ படத்தை பாராட்டிய பிரபலங்கள்

ஒரே படத்திற்காக 12 வருடங்கள் தியாகம் செய்த இயக்குனர்.; ‘ஒரு நொடி’ படத்தை பாராட்டிய பிரபலங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரே படத்திற்காக 12 வருடங்கள் தியாகம் செய்த இயக்குனர்.; ‘ஒரு நொடி’ படத்தை பாராட்டிய பிரபலங்கள்

*தமன்குமார் நடிக்கும் ‘ஒரு நொடி’ படத்தின் இசை வெளியீடு !!*

*தனஞ்ஜெயன் வழங்கும் ‘ஒரு நொடி’ படத்தின் இசை வெளியீடு !!*

தயாரிப்பாளரும், திரைப்பட விமர்சகரும், விநியோகஸ்தருமான தனஞ்ஜெயனின் கிரியேட்டிவ் எண்டர்டெய்ன்மென்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் உலகம் முழுவதும் ஏப்ரல் 26 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியிடும் தமன்குமார் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘ஒரு நொடி’ எனும் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இதன் போது நடிகரும், சமூக செயற்பாட்டாளருமான ஆரி அர்ஜுனன் படத்தின் இசையை வெளியிட, தயாரிப்பாளர் சி. வி. குமார், நடிகரும், அரசியல்வாதியும், இலக்கியவாதியுமான பழ. கருப்பையா, எழுத்தாளரும், நடிகருமான வேல. ராமமூர்த்தி உள்ளிட்ட பட குழுவினர் பெற்றுக் கொண்டனர்.‌

இயக்குநர் பி. மணிவர்மன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஒரு நொடி’ எனும் திரைப்படத்தில் தமன்குமார், எம். எஸ். பாஸ்கர், வேல.ராமமூர்த்தி, பழ. கருப்பையா, ஸ்ரீ ரஞ்சனி, கஜராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே. ஜி. ரத்தீஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சஞ்சய் மாணிக்கம் இசையமைத்திருக்கிறார்.

திரில்லர் ஜானரிலான இந்த திரைப்படத்தை மதுரை அழகர் மூவிஸ் மற்றும் ஒயிட் லாம்ப் பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் அழகர் ஜி மற்றும் கே.ஜி. ரத்தீஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை கிரியேட்டிவ் எண்டர்டெய்ன்மென்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் சார்பில் பிரபல விநியோகஸ்தர் ஜி. தனஞ்ஜெயன் வழங்குகிறார்.

இம்மாத இறுதியில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது.

இதன் போது நடிகரும், சமூக செயற்பாட்டாளரும், பிக் பாஸ் பிரபலமுமான ஆரி அர்ஜுனன், தயாரிப்பாளரும், இயக்குநருமான சி. வி. குமார், நடிகரும், பேச்சாளருமான ஈரோடு மகேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர் இவர்களுடன் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களும், நடிகர்களும் கலந்து கொண்டனர்.

*படத்தின் இயக்குநர் மணிவர்மன்* பேசுகையில்…

” எங்களுடைய ஒரு நொடி திரைப்படத்திற்காக பல நொடிகளை செலவு செய்து இங்கு வாழ்த்த வருகை தந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. படப்பிடிப்பு தளத்தில் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியது போல்.. படத்தின் விளம்பர நிகழ்வுகளிலும் தங்களின் முழுமையான பங்களிப்பை வழங்கியிருக்கும் இப்படத்தில் பணியாற்றிய நடிகர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நாம் வாய்ப்புகளைத் தேடி அலையும் போது நம்மை மற்றவர்கள் பார்க்கும் பார்வை வேறாக இருக்கும். ஆனால் தயாரிப்பாளர் அழகர் என்னை நம்பி இந்தத் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை வழங்கினார். அதற்காக அவருக்கு சிறப்பு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த திரைப்படத்தின் கதையை கேரளாவில் உள்ள ஒரு இயக்குநருக்காக உருவாக்கி.. அதை முதலில் இப்படத்தின் ஒளிப்பதிவாளரான ரத்தீஷிடம் சொன்னேன். கதையை முழுவதுமாக கேட்ட ரத்தீஷ், இந்த திரைப்படத்தை நாம் இணைந்து உருவாக்கலாம் என்றார். இந்த படத்திற்கு அவரும் இணை தயாரிப்பாளர்.

சின்ன பட்ஜெட் படம் என்பதால் எனக்கு எந்தவித நெருக்கடியும் அளிக்காமல் நான் கேட்ட விசயங்களை தயாரிப்பாளர் தாராள மனதுடன் வழங்கினர். மதுரையில் படப்பிடிப்பு தளத்தில் பல சிரமங்களுக்கு இடையே முழுமையாக ஒத்துழைப்பு வழங்கி படத்தின் படப்பிடிப்பிற்கு உதவினார்.

படப்பிடிப்பு நிறைவடைந்து டப்பிங் பணிகளைத் தொடங்கிய போது ஒரு வேடத்திற்காக டப்பிங் பேச கேபிள் சங்கரை அழைத்தேன். அவர் இப்படத்தினை பார்த்து சிலாகித்து பாராட்டினார். அத்துடன் இல்லாமல் தமிழ் சினிமாவின் முக்கிய முகமாக அறியப்படும் தனஞ்ஜெயனை அழைத்து வந்து படத்தை காண்பித்தார். இன்றைக்கு இந்த திரைப்படம் இந்த அளவிற்கு மக்களை சென்றடைந்திருக்கிறது என்றால்… அதற்கு கேபிள் சங்கரும், தனஞ்ஜெயனும் தான் முக்கியமான காரணம். இதற்காக இவர்கள் இருவருக்கும் நன்றி. ‌

தணிக்கை குழுவினர் இந்த படத்தை பார்த்துவிட்டு, ‘நாங்கள் பார்த்த திரில்லர் திரைப்படங்களில் ஒரு நொடி வித்தியாசமாக இருக்கிறது. அதிலும் கிளைமாக்ஸ் எங்களால் யூகிக்கவே முடியவில்லை. மிகவும் அற்புதமான படைப்பு ‘ என பாராட்டு தெரிவித்தனர். இது எனக்கு மிகப்பெரிய உற்சாகத்தை அளித்தது.

இந்த படத்தைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால்… எல்லோருடைய வாழ்க்கையிலும் நடைபெறும் ஒரு நொடி… அந்த ஒரு நொடி எதைப் பற்றியதாக வேண்டுமானாலும் இருக்கலாம். எப்படி வேண்டுமானாலும் மாறலாம். அப்படி ஒரு நொடியில் நடைபெற்ற நடந்த சம்பவம் தான் இந்த படத்தின் கதை. மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் நடந்த உண்மை சம்பவங்களை தழுவி படத்தின் திரைக்கதையை உருவாக்கி இருக்கிறோம். படத்தைப் பார்த்த அனைவரும் பாராட்டியுள்ளனர். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.

இந்த விழாவின் நாயகன் இசையமைப்பாளர் சஞ்சய் மாணிக்கம். அறிமுக இசையமைப்பாளர். இவரின் இசையில் உருவான பாடல்களை கேட்டிருக்கிறேன். திறமை இருக்கிறது. அதனால் வாய்ப்பு அளித்திருக்கிறேன். இந்தத் திரைப்படம் மியூசிக்கலாகவும் நன்றாக வந்திருக்கிறது. இதற்காக அர்ப்பணிப்புடன் உழைத்த இசையமைப்பாளருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திரைப்படம் வெளியான பிறகு இசையமைப்பாளருக்கும் நல்லதொரு அடையாளமும், அங்கீகாரமும் கிடைக்கும்” என்றார்.

*ஒளிப்பதிவாளரும், இணை தயாரிப்பாளருமான கே. ஜி. ரத்தீஷ்* பேசுகையில், ” ஒயிட் லாம்ப் நிறுவனத்தின் முதல் தயாரிப்பு இது. சிறிய தயாரிப்பு நிறுவனம். ஒரு நொடி படத்தின் இன்றைய நிலைக்கு கேபிள் சங்கரும், தனஞ்ஜெயனும்தான் காரணம். அவர்களுக்கு கோடான கோடி நன்றி. ஒளிப்பதிவாளராக நிறைய இயக்குநர்களிடம் கதை கேட்டு இருக்கிறீர்கள். ஆனால் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறீர்கள் ஏன்? என் நண்பர்கள் கேட்டார்கள். என் நண்பனுக்கு நான் செய்யாமல் வேறு யார் செய்வார்கள்? நன்றி.” என்றார்.

*படத்தின் இசையமைப்பாளர் சஞ்சய் மாணிக்கம்* பேசுகையில், ” வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. படத்தில் பணியாற்றும்போது இயக்குநரும், ஒளிப்பதிவாளரும் என் இரண்டு புறத்திலும் இரண்டு துண்களாக இருந்து ஆலோசனைகளை சொல்வார்கள். இந்தப் படத்தின் கதையை இயக்குநர் எழுதி முடித்தவுடன் என்னிடம் முழு கதையை விவரித்தார். முதலில் ஒப்புக்கொள்ள தயங்கினேன். அதன் பிறகு,’ உனது திறமை மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. துணிந்து பணியாற்று’ என நம்பிக்கை அளித்தார்.

படத்திற்கு பின்னணியிசை அமைக்கும் போது வியப்பாக இருந்தது. முதன்முதலாக இரண்டரை மணி நேர திரைப்படத்திற்கு இசையமைக்க போகிறோம் என்ற மலைப்பு இருந்தது. ஆனால் ஒவ்வொரு காட்சிக்கும் இயக்குநர் எனக்கு முழுமையான வழிகாட்டினார். இதற்காக இயக்குநருக்கு சிறப்பான நன்றி.

இந்த திரைப்படத்தில் மூன்று பாடல்கள் இருக்கிறது. டைட்டில் சாங்.. அப்பா – பொண்ணு இடையிலான சாங்.. ஒரு லவ் சாங்… என மூன்று பாடல்கள் இருக்கிறது. மூன்று பாடல்களையும் பாடலாசிரியர்கள் உதயா அன்பழகன், ரவிசங்கர், ஜெகன் கவிராஜ் என மூன்று பாடலாசிரியர்கள் எழுதியிருக்கிறார்கள். இந்த மூன்று பாடல்களையும் சூப்பர் சிங்கர் சத்ய பிரகாஷ், என்னுடைய நண்பர் வருண் சந்திரசேகரன் மற்றும் நான் பாடல்களை பாடி இருக்கிறோம். என்னுடைய கல்லூரியில் உள்ள இசைக்குழுவினரை அழைத்து வந்து, படத்திற்காக இணைந்து பணியாற்றியிருக்கிறோம். ” என்றார்.

*படத்தின் தயாரிப்பாளர் அழகர் ஜி* பேசுகையில், ” ஒரு நொடி படத்தின் பணிகள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மேற்கு கோபுர வாசலிலிருந்து தொடங்கினேன். இந்த படத்தினை இயக்குநர் மணிவர்மன் சிறப்பாக இயக்கியிருக்கிறார். ஒளிப்பதிவாளர் கே ஜி ரத்தீஷும் தன் பணியை சிறப்பாக செய்திருக்கிறார். தனஞ்ஜெயன் எங்களையும், எங்கள் குழுவையும் மிக உயர்ந்த இடத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். இதற்காக அவருக்கு எங்கள் ‘ஒரு நொடி’ படக் குழு சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

*நாயகன் தமன்குமார்* பேசுகையில், ” ஒரு நொடி… ஒருவருக்கு ஒருவர் எப்போது உதவி செய்து கொண்டு தான் இருப்போம். ஆனால் நிறைய பேர் நம்மை பயன்படுத்திக் கொண்டிருப்பார்கள். இது உதவி செய்யும் போது தெரியாது. கொஞ்சம் நாட்கள் கழித்து அல்லது கொஞ்சம் மாதங்கள் கழித்து.. நம்மை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று ஒரு நொடியில் நமக்கு புரிய வரும். சினிமாவில் இது போன்ற அனுபவங்கள் அனைவருக்கும் ஏற்பட்டிருக்கும். சில பேருடைய வாழ்க்கையிலும் இது ஏற்பட்டிருக்கும். சில பேருக்கு இது குடும்பத்தில் ஏற்பட்டிருக்கலாம். சிலருக்கு உடனிருக்கும் நண்பர்களால் ஏற்பட்டிருக்கலாம். என்னுடைய வாழ்க்கையில் என்னை பயன்படுத்திக் கொண்டவர்களை நான் மறந்து விட்டேன். ஆனால் உதவி செய்தவர்களை ஒருபோதும் மறக்கவில்லை.‌ என் வாழ்க்கையில் முக்கியமாக ஒருவர் உதவி செய்தார் என்றால்… அது ஈரோடு மகேஷ் தான். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் அவர் இல்லை என்றால்… கடந்த பத்து பன்னிரண்டு ஆண்டுகளாக திரைத்துறையில் நான் இருந்திருக்க மாட்டேன்.

தற்போது ஒரு நொடி படத்தில் நடித்ததால் அனைத்தையும் கடந்து நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். அவை சுமாரான வெற்றியை பெற்றிருக்கின்றன. சில படங்கள் வெளிவராமல் இருந்திருக்கின்றன. இந்த நிலையில் ஊடகவியலாளர்களான நீங்கள் என் மீது அக்கறை கொண்டு ஊக்கப்படுத்தினீர்கள். இதற்காக இந்த தருணத்தில் நான் உங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் திரைப்படத்திற்கு மிகப்பெரிய பக்கபலம் தயாரிப்பாளர் தான். நல்ல நடிகர்கள் எப்போதும் தங்களது திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை தேடிக்கொண்டே இருப்பார்கள். இதனை ஒரு தயாரிப்பாளரால் தான் முதலீடு செய்து தகுதியான கலைஞர்களையும், நடிகர்களையும் உருவாக்க முடியும்.‌ இந்த திரைப்படத்தை நம்பி முதலீடு செய்து என்னை போன்ற திறமையான நடிகர்களை… மணி வர்மன் போன்ற திறமையான இயக்கநரையும் ..தயாரிப்பாளர் அழகரால் தான் உருவாக்க முடியும். இதற்காக அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படப்பிடிப்பின் போது ஏராளமான நெருக்கடிகளும், அழுத்தங்களும் ஏற்பட்டன. இருந்தாலும் தயாரிப்பாளர் அதனை எளிதாக கையாண்டு படத்தை உருவாக்கினார். முதலில் அவர் திரைப்படம் தயாரிப்பதை.. அவருடைய குடும்பத்தினருக்கு தெரிவிக்கவில்லை.‌ இப்போதுதான் அவர்களுக்கு தெரியும். யாருக்கும் தெரியாமல் ரகசியமாக அவருடைய ஊரில் தான் படப்பிடிப்பை நடத்தினார்.

இந்தப் படத்திற்கு தூணாக விளங்கிய மற்றொருவர் கே ஜி ரத்தீஷ். ஒளிப்பதிவாளர் மட்டுமல்ல இணை தயாரிப்பாளர் கூட. அவருடைய பங்களிப்பு என்பது ஈடு இணையற்றது. படம் பார்க்கும்போது உங்களுக்கு தெரியும். அவர் ஒரு நாளைக்கு திட்டமிட்டபடி அனைத்து காட்சிகளையும் தெளிவாக படமாக்குவார். ஒரு நாளைக்கு 65 ஷாட்களை படமாக்கியிருக்கிறோம். எந்த இடத்திலும் எதற்கும் சமரசம் செய்யாமல் இயக்குநரும், இவரும் திட்டமிட்டு படப்பிடிப்பை நடத்தினர். இதற்கு படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் நடிகைகளும் முழு ஒத்துழைப்பையும் அளித்தனர்.

இந்தத் திரைப்படத்தில் மூத்த அரசியல்வாதியான பழ கருப்பையா அவர்களுடன் இணைந்து நடித்திருக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் போது அவருடன் பேசும் போது பல விசயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் குறிப்பாக ”சினிமாவில் நம்பர் ஒன்.. நம்பர் டூ என்பது இருந்து கொண்டே இருக்கும். பத்து அல்லது இருபது ஆண்டுகளுக்கு ஒரு முறை நடிகர்கள்தான் மாறுவார்கள்.‌ அது நிலைத்த புகழ் அல்ல. நிலைத்த புகழ் என்பது… யார் ஒருவர் ஈகை, தியாகம் , வீரம், அன்பு.. இருக்கிறதோ அவர்தான் நடித்த புகழை பெறுவார்” என சொன்னார். அது உண்மைதான். அவர் சொன்னதை தினமும் நான் ஒரு முறை நினைத்துப் பார்க்கிறேன். என்னால் முடிந்த சிறிய சிறிய உதவிகளை செய்து கொண்டுதான் இருக்கிறேன்.

இந்தப் படத்திற்கு கேபிள் சங்கரின் பங்களிப்பும் மகத்தானது. இந்தப் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பின் போது போனில் தொடர்பு கொண்டு ‘அயோத்தி’ படத்தில் உங்களுடைய கதாபாத்திரம் பேசப்படுகிறது. அதற்கு பெரும் வரவேற்பு இருக்கிறது’ என பாராட்டினார். அப்போது அவரிடம், ‘நான் இன்று ஒரு படப்பிடிப்பில் இருக்கிறேன். இந்த படமும் சிறப்பாக வரும்’ என்று நம்பிக்கையுடன் சொன்னேன்.‌ படத்திற்கு டப்பிங் செய்யும் போது ஒரு கேரக்டருக்காக கேபிள் சங்கர் பின்னணி பேச வந்தார். படத்தைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்து, தனஞ்ஜெயனை அழைத்து வந்தார். அவர் வந்த பிறகு இந்தப் படத்திற்கான முகவரியே மாறிவிட்டது.

நானும் இயக்குநர் மணி வர்மனும் இணைந்து இதற்கு முன் ‘கண்மணி பாப்பா’ எனும் படத்தினை உருவாக்கினோம். அந்த திரைப்படம் நன்றாக தான் இருந்தது. ஆனால் வெளியீடு சரியான தருணத்தில் அமையாததால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.

இந்தப் படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்தவுடன் தனஞ்ஜெயன், ”இந்த படத்தை நான் வெளியிடுகிறேன். ஆனால் சில சிறிய திருத்தங்களை செய்ய ஒப்புக் கொள்ள வேண்டும்” என்றார். இதனையும் அவர் ஒரு ஆலோசனையாக தான் சொன்னார். படத்தின் டைட்டில் முதல் கொண்டு சில திருத்தங்களை அவர் சொன்னதை ஏற்றுக் கொண்டோம். சின்ன சின்ன விசயங்கள் ஒரு படத்தினை மாற்றிவிடும் என்பதை உணர்ந்தோம்.‌ இந்த திரைப்படத்தை மக்களை சென்றடைய வைப்பதற்காக அவர் எடுத்துக் கொண்ட முயற்சி.. எங்களுக்கு ஒரு பாடமாக அமைந்தது. அவரிடமிருந்து நிறைய விசயங்களை கற்றுக் கொண்டோம். ” என்றார்.

*தயாரிப்பாளர் சி. வி. குமார்* பேசுகையில், ” ஹீரோ தமன் குமாரும், டைரக்டர் மணியும் இணைந்து நான்கு ஐந்து வருடங்களுக்கு முன் ‘கண்மணி பாப்பா’ என்ற படத்தினை வழங்கினர். அந்தப் படமும் சிறந்த படம் தான். அந்தப் படம் சரியான நபரின் கையில் கிடைக்காததால் வெளியீடு சிறப்பாக இல்லை. அதனால் வெற்றியும் கிடைக்கவில்லை. ஒரு நொடி எனும் இந்தத் திரைப்படம் நன்றாக வந்திருக்கிறது என கேள்விப்பட்டேன். இந்த திரைப்படம் தனஞ்ஜெயனின் கைகளுக்கு கிடைத்திருக்கிறது. அவர் இந்த திரைப்படத்தை சிறப்பான முறையில் வெற்றி பெற செய்வார். படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.” என்றார்.

*நடிகர் ஆரி அர்ஜுனன்* பேசுகையில், ” இந்தப் படக் குழுவினருக்கு இதுவரை தெரியாத ஒரு விசயத்தை பகிர்ந்து கொள்கிறேன். இப்போதுதான் ட்விட்டரை பார்த்தேன். ‘அரண்மனை 4’ படத்தின் வெளியீடு மே மூன்றாம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஒரு நொடி படத்திற்கு போட்டியில்லை. உங்களுக்கு விஷால் நடித்திருக்கும் ‘ரத்னம்’ படம் மட்டும் தான் போட்டி.

படத்தைப் பற்றி அனைவரும் அனைத்து விசயங்களையும் பேசி விட்டனர். பேச்சாளர் பழ. கருப்பையா பேசும்போது, ‘இங்கு கரப்சனும் இருக்கும். அடாவடித்தனமும் இருக்கும். எதுவும் மாறாது’ என்பதை சொல்லியிருக்கிறார். ஆனால் ஓட்டு போடும் நமக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை மாற்றம் ஏற்படும் என்பது தான். ஓட்டு போட்டால் மாற்றம் வரும் என்று நம்பி தான் ஓட்டு போடுகிறோம்.

சி. வி. குமார் தனஞ்ஜெயன் என தமிழ் சினிமாவின் ட்ரென்ட் செட்டர்ஸ் இங்கு வருகை தந்திருக்கிறார்கள். நான் சினிமாவில் நுழைந்து போராடிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் நான் பார்த்து வியந்த சில தயாரிப்பாளர்களில் இவர்களும் உண்டு. குறிப்பாக இவர்கள் நல்ல படைப்புகளை உருவாக்கி திரையரங்கத்திற்கு கொண்டு செல்லும் தயாரிப்பாளர்கள். இவர்களுடைய நிறுவனத்திலிருந்து அழைப்பு வராதா..? என ஏங்கி இருக்கிறேன்.

என்னைவிட.. சினிமா கனவுகளுடன் கடுமையாக உழைத்து சிறந்த படைப்பை உருவாக்கும் கலைஞர்களை தேடி கண்டறிந்து, அவர்களுக்கு வாய்ப்பளித்து படத்தை உருவாக்கி திரையரங்கத்திற்கு கொண்டு வரும் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதே.. இதற்கு மிகப்பெரிய பாராட்டை அளிக்க வேண்டும்.

தமன்- ஈரோடு மகேஷ்- நான் நெருங்கிய நண்பர்கள். இருந்தாலும் ஒரு கதாநாயகனின் வெற்றி என்பது ஒவ்வொரு நாளும் எதிர்கொள்ளும் பெரிய போராட்டத்தை போன்றது. ஏனெனில் நடிகர்கள் உடம்பை எப்போதும் தயாராக வைத்திருக்க வேண்டும். சாப்பிட வேண்டும். வாய்ப்புகளை தேடி ஓட வேண்டும். நல்ல படைப்புகள் வெளியாக வேண்டும். எனக்கும்.. தமனுக்கும்.. எங்களைப் போன்றவர்களுக்கும் என்ன பிரச்சனை என்றால்… கடைசி நிமிடம் வரை வேலை செய்ய வேண்டிய சூழல் உண்டு.‌ படத்தின் போஸ்டர் ஒட்டும் வேலையை கூட தயாரிப்பாளர், இயக்குநர் என அனைவரும் செய்வார்கள். ஆனால் நாயகன் என்பவர் திரையரங்கில் படம் ஓடும் கடைசி நாள் வரை வேலை செய்து கொண்டிருப்பார்.

தமிழ் சினிமாவில் ஏற்கனவே படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு சில சிக்கல்கள் இருக்கும். ஏனெனில் சினிமா பணம் போட்டு பணம் எடுக்கும் பிசினஸ். ஆனால் புதிய தயாரிப்பாளர்கள் நம்பிக்கையுடனும், கனவுகளுடனும் இங்கு படத்தை தயாரிக்க தொடங்குகிறார்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு இல்லை என்றாலும்.. படத்தை தயாரிக்க வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் தயாரிப்பாளர்கள் பலர் இருக்கிறார்கள். அந்த வரிசையில் வந்தவர்தான் தயாரிப்பாளர் அழகர். இவர் மனது வைத்ததால் தான் ஒரு நொடி தயாராகி இருக்கிறது. நல்ல சினிமாவாக தயாராகி தனஞ்ஜெயன் கைகளுக்கு வந்திருக்கிறது. நிறைய நபர்களின் கனவுகளை நனவாக்க க்கூடிய இந்த தயாரிப்பாளர் போன்றவர்கள் தான் சினிமாவுக்கு தேவை.

‘சின்ன பட்ஜெட்டில் படம் எடுக்காதீர்கள்’ என்று விஷால் நல்ல நோக்கத்தில் தான் சொன்னார். ஆனால் பலரும் அதனை வேறு விதமாக புரிந்து கொண்டார்கள். ஆனால் ஒரு விசயத்தை புரிந்து கொள்ளுங்கள். சின்ன பட்ஜெட் படம் …பெரிய பட்ஜெட் படம்.. என்றில்லை.
நல்ல கன்டென்ட் உள்ள படத்திற்கு மக்கள் எப்போது ஆதரவு தர தயாராகவே இருக்கிறார்கள்.

‘மஞ்சுமல் பாய்ஸ்’, ‘காந்தாரா’ போன்ற படங்கள் பெரிய வசூலை தமிழில் பெற்றிருக்கிறது. நிறைய நல்ல படங்கள் இங்கு ஓடுவதற்கு மிக முக்கியமான காரணம் நல்ல கன்டென்ட் தான். நல்ல கதை… நல்ல திரைக்கதை… நேர்மையான உழைப்பு… இவையெல்லாம் ஒன்றிணைந்தால்.. அதுதான் ரசிகர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம்.

இப்படத்தின் இயக்குநர் மணிவர்மன்.. இயக்கிய ‘கண்மணி பாப்பா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது தான் அறிமுகமானார். அதன் பிறகு எங்களுக்குள் நல்ல நட்பு தொடர்கிறது. அவர் படப்பிடிப்பின் போது செலவுகளை திட்டமிட்டு தான் செலவு செய்வார். தயாரிப்பாளரின் பணம் என்றாலும் கூட அதனை தன்னுடைய சொந்த பணமாக நினைத்து தான் சிக்கனமாக செலவு செய்வார். அவரின் இந்த அணுகுமுறை என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு நொடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு தயாரிப்பாளர்கள் விரும்பும் தரமான இயக்குநர் கிடைத்திருக்கிறார் என மகிழ்ச்சி அடைகிறேன். அவரை வாழ்த்துகிறேன். புதிய தயாரிப்பாளர்கள் அவரை நம்பி முதலீடு செய்து படத்தை தயாரிக்கலாம். உங்கள் பணத்திற்கு அவர் பாதுகாப்பாக இருப்பார்.

இந்த படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் அனைவரும் பணத்தை எதிர்பார்த்து பணியாற்றவில்லை. இப்படத்தின் கதைதான் அனைவரையும் ஒன்றிணைந்து, எதையும் எதிர்பார்க்காமல் பணியாற்ற வைத்து. இந்த படம் வெளியான பிறகு ஹீரோ தமன் குமார் உள்ளிட்ட அனைவருக்கும் பெரிய மாற்றங்கள் ஏற்படும் என நம்புகிறேன்.

இந்த படத்தின் வணிகத்திற்கும், வெளியீட்டிற்கும் கேபிள் சங்கரும் ஒரு காரணம். இந்த விழா முடிவடைந்த பிறகு அவரை சந்தித்து, எங்களது படத்தைப் பார்த்து ஆதரவு தருமாறும் வணிகத்திற்கு வழிகாட்டுமாறும் ஏராளமானவர்கள் தொடர்பு கொள்வார்கள்.

‘தங்கலான்’, ‘கங்குவா’ என பெரிய பட்ஜெட் படங்களுக்கு பணியாற்றி வரும் தனஞ்ஜெயன் எப்போதும் பரபரப்பாகவே இருக்கிறார். இது மட்டும் இல்லாமல் திரையுலகில் ஏதேனும் பிரச்சனை என்றால் உடனடியாக அது பற்றிய தனது எண்ணங்களை டிவீட் செய்கிறார்.

தனஞ்ஜெயன் மீது திரையுலகினருக்கு குறிப்பாக இளம் தலைமுறையினருக்கு பெரிய மரியாதை இருக்கிறது. ஏனெனில் அவரிடம் உள்ள ஃபினான்சியல் டிசிப்ளின்.

ஒரு நொடி படத்திற்காக தனஞ்ஜெயன் அனைவரையும் பணிவுடன் அணுகி படத்தைப் பற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுமாறும், அதை வீடியோவாக வெளியிடுமாறும் கேட்டுக் கொண்டார்.

இது தொடர்பாக என்னை அணுகும் போது நான் செய்த தவறை அது சுட்டிக்காட்டி இருந்தேன். நான் முதன் முதலாக வாக்களிக்க சென்று இரண்டு மணி நேரத்திற்கு மேலாக வரிசையில் நின்று அதற்கு மேல் பொறுமை இல்லாமல் வாக்களிக்காமல் திரும்பி வந்த விசயத்தை பகிர்ந்து கொண்டேன். காலப்போக்கில் நான் செய்த தவறை உணர்ந்தேன். ஓட்டு போடுவது நமக்காக. நாம் யாரையோ தேர்வு செய்கிறோம் என்பதற்காக அல்ல. நமக்காகத்தான் ஒருவரை தேர்வு செய்கிறோம் என்ற பொறுப்புணர்வை வீடியோவாக பதிவு செய்து அனுப்பினேன். இதற்கும் ஒரு காரணம் உண்டு. இதற்கும் இப்படத்தில் கிளைமாக்ஸிக்கும் ஒரு தொடர்பு உண்டு.

நாம் நமது தவறுகளை எப்போது ஒப்புக்கொள்கிறோம்…. நாம் செய்யும் தவறுகளை எப்போது திருத்திக் கொள்கிறோம்… என்பது மிகவும் முக்கியமானது. தவறு என்று தெரிந்த பிறகு அதனை திருத்திக் கொள்ளாமல் இருப்பது தான் தவறு. இதை உணர்த்தும் வகையில் இந்த திரைப்படம் தயாராகி இருக்கிறது. இந்த திரைப்படம் மாற்றத்திற்கான ஒரு படம்.

அனைவரும் வெற்றியை நோக்கி தான் ஓடிக்கொண்டிருக்கிறோம். இந்த திரைப்படம் நல்ல கன்டென்ட் இருப்பதால் வெற்றி பெறும்.

மலையாள திரைப்படங்கள் வெற்றி பெறுகிறது. வேறு மொழி திரைப்படங்கள் வெற்றி பெறுகிறது. ஆனால் இதற்கு எல்லாம் முன்னோடி தமிழ் சினிமா தான். இங்குதான் சிறந்த கன்டென்ட்டிற்கு எப்போதும் ஆதரவு உண்டு. தமிழ் சினிமாவில் அதற்கு தற்போது ஒரு தேக்க நிலை ஏற்பட்டிருக்கிறது. இதற்கு காரணம் நாம் கதாசிரியர்களுடன் இணைந்து பணியாற்றுவதில்லை.

இங்கு இரண்டு எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் நடிக்க வந்து விட்டார்கள். எழுதுவதை குறைத்து கொண்டு விட்டார்கள். அதனால் இவரைப் போன்ற எழுத்தாளர்களை நாம் உருவாக்க வேண்டும். இதற்காக ரைட்டர்ஸ் மேளா என்ற ஒரு விசயத்தை தொடங்க வேண்டும். எழுத்தாளரிடம் கதையை வாங்கி படத்தை தயாரிக்கும் போக்கு நம்மிடம் குறைந்து வருகிறது. இயக்குநர் கதையை கொண்டு வந்தால் அதனை ஏற்றுக் கொள்கிறோமே தவிர.. ஒரு எழுத்தாளிடமிருந்து கதையை வாங்கி அதை இயக்குவதற்கு மற்றொரு இயக்குநரை நாம் தேர்ந்தெடுப்பதில்லை. எழுத்தாளர்களையும், இயக்குநர்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியை தொடங்க வேண்டும் என்று நானும் எண்ணி கொண்டிருக்கிறேன். இதற்கான தொடக்கமாக இந்த மேடை அமையும் என நான் நம்புகிறேன். ” என்றார்.

*படத்தை வெளியிடும் தயாரிப்பாளரும், விநியோஸ்தருமான தனஞ்செயன்* பேசுகையில்…

” நம்பிக்கை வைத்து மீனாட்சி அம்மனின் அருளுடன் இந்த படத்தை தயாரித்திருக்கும் தயாரிப்பாளர் அழகருக்கு நன்றி. உங்களுக்கு மாபெரும் வெற்றி காத்திருக்கிறது. நல்ல திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறீர்கள். இந்தப் படத்தின் மீது நம்பிக்கை வைத்து இணை தயாரிப்பாளராகவும் பணியாற்றி, கடுமையாக உழைத்திருக்கும் ஒளிப்பதிவாளர் ரத்தீசுக்கும் நன்றி.

இந்தப் படத்தை கேபிள் சங்கர் மூலமாக எங்கள் குழுவினருடன் இணைந்து பார்த்தேன் பார்க்கும்போது எனக்கு தோன்றிய கருத்துக்களை எழுதி கொண்டே வந்தேன். படம் முடிவடைந்த பிறகு இயக்குநரிடம் பேசினேன். அவர் பல இயக்குநர்களுக்கு உரிய பிடிவாத போக்கை கைவிட்டு.. புரிந்து கொள்ளும் கலாச்சாரத்தை கொண்டிருந்தார்.‌ இது எனக்கு மிகவும் பிடித்து விட்டது. படத்தின் டைட்டில் முதலில் ‘நொடி’ என்று இருந்தது.‌ இதனை ‘ஒரு நொடி’ என மாற்ற வேண்டும் என கேட்டேன். சற்றும் தயக்கம் இல்லாமல் ஒப்புக்கொண்டார்.

அந்த நொடியிலேயே இவருடன் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என தீர்மானித்து விட்டேன். இந்த படத்திற்கான டைட்டில் மாற்றத்தை கதையின் கான்செப்ட் உடன் ஒத்திருந்ததால் இதை சொன்னவுடன் எந்த தயக்கமும் இன்றி அவர் ஏற்றுக்கொண்டார். அப்போது இந்த படம் தணிக்கை செய்யப்படவில்லை. அதனால் எனக்கு வாய்ப்பு இருந்தது. இதன் பிறகு தயாரிப்பாளர் சங்கத்தை அணுகி படத்தின் பெயர் மாற்றத்திற்கு அனுமதி வாங்கினோம்.

நான் எளிதில் திருப்தி அடைய மாட்டேன். சிறிய சிறிய மாற்றங்களை செய்ய வேண்டும் என சொல்லிக் கொண்டே இருப்பேன். டப்பிங்… வசனம்… காட்சி அமைப்பு… என பல விசயங்களில் திருத்தங்களை செய்யலாமே என சொல்லிக் கொண்டே இருந்தேன். படைப்பு எங்களிடம் இருக்கும் வரை மாற்றங்கள் செய்து கொண்டே இருக்கலாம். அவை வெளியான பிறகு ரசிகர்களும், ஊடகங்களும் சொல்லும் விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்.

படத்தின் நீளத்தை குறைக்கலாம் என்று சொன்னேன். குறிப்பாக எட்டு நிமிட காட்சிகளை வெட்டி விடலாம் என சொன்னேன். அதற்கும் இயக்குநர் சரி என்று ஒப்புக்கொண்டார். உடனே இயக்குநர், படத்தொகுப்பாளர் இணைந்து எந்தெந்த காட்சிகளை நீக்கலாம் என தீர்மானித்து, படத்தின் நீளத்தை குறைத்து திரைக்கதையை வேகப்படுத்தினர். அவர்களுடைய கூட்டு உழைப்பு எனக்கு பிடித்திருந்தது.

படத்தின் இசையமைப்பாளர் சஞ்சய் மாணிக்கம். ஒரு இளம் திறமைசாலி. அற்புதமாக பணியாற்றி இருக்கிறார்.

இயக்குநர் மணிவர்மனிடம் கடைசியாக ஒரு திருத்தத்தை சொன்னேன். ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். அது கதையின் போக்கையே மாற்றிவிடும் என்பதை அவர் விளக்கிய பிறகு.. நானும் உணர்ந்தேன். இது அவரிடமிருந்து நான் கற்றுக் கொண்ட பாடம்.

படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்த பிறகு, அவரிடம் எனது நிறுவனத்தில் ஒரு படத்தை இயக்குங்கள் என கேட்ட போது, அவர் மற்றொரு நிறுவனத்திற்காக ஒப்பந்தமாகி இருக்கிறேன் என்றார். அத்துடன் அந்த தயாரிப்பாளரை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். தமன் தான் நாயகன். நாங்கள் இப்படத்தில் தொடக்கத்திலிருந்தே உங்களுடன் இணைந்து பயணிக்கிறோம் என்றார் இதுவும் என்னை மிகவும் கவர்ந்தது.

இந்தப் படத்தை ஒரு குறும்படமாக காண்பிக்க வேண்டும் என சொன்னேன். உடனே படத்தொகுப்பாளரும், இயக்குநரும் இணைந்து 13 நிமிட காட்சிகளை உருவாக்கி இந்தப் படம் எதைப் பற்றி பேசுகிறது என்பதனை தொகுத்து காண்பித்தார்கள்.

ஒரு தயாரிப்பாளர் -விநியோகஸ்தர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் இயக்குநர் மணிவர்மன் போன்றவர்களுடன் தொடர்ந்து பயணிக்க விரும்புகிறேன். மணிவர்மன் போன்றவர்கள் திரையுலகில் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.‌

ஏப்ரல் 26 ஆம் தேதி இப்படத்தை வெளியிட திட்டமிட்டோம். கோடை விடுமுறை தொடங்கியதால் இந்த தேதி சிறப்பானது என கருதி வெளியிடுவதற்காக திரையரங்குகளை தொடர்பு கொண்டோம். அவர்கள் ‘அரண்மனை 4’, ‘ரத்னம்’ என இரண்டு பெரிய திரைப்படங்கள் அன்றைய தேதியில் வெளியாகிறது என சொன்னார்கள். ஆனால் இப்போது நடிகர் ஆரி சொன்ன தகவலால் உற்சாகமடைந்திருக்கிறேன். ‘அரண்மனை 4’ படத்தின் வெளியீட்டு தேதி தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. அதனால் ஒரு நொடி படத்திற்கு கூடுதலான திரையரங்குகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

ஆரியின் பேச்சை கவனித்தபோது அவர் எதிர்காலத்தில் சிறந்த அரசியல்வாதியாக வருவார் என எதிர்பார்க்கிறேன். அவருடைய பேச்சில் .. தேர்தல் ஆணையத்திற்கு அவர் வழங்கிய ஆலோசனை.. மிகவும் சிறப்பானது. அவரது ஆலோசனையை ஏற்று வாக்களித்ததற்கான டிஜிட்டல் சான்றிதழ் உடனடியாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டால் பெரும் மாற்றம் ஏற்படும். இதற்காக ஆரியை மனமார வாழ்த்துகிறேன். அதிலும் மாற்றத்திற்காக அவர் கொடுக்கும் குரல்‌ பெரிய அளவில் பேசப்படும்.‌ தனி மனிதனாக இந்த சமூகத்தில் மேலும் பல உயரங்களை தொடுவீர்கள் என வாழ்த்துகிறேன். ” என்றார்.

*பேச்சாளர் ஈரோடு மகேஷ்* பேசுகையில்..

” ‘ஒரு நொடி’ இந்த பட குழுவினருக்கு இந்த படம் எவ்வளவு முக்கியமோ… அந்த அளவிற்கு என்னுடைய நண்பன் தமனுக்கும் இந்த படம் முக்கியம். ஒரு மனிதன் ஒரு வெற்றிக்காக ஒரு மாதம் உழைக்கலாம். ஓராண்டு உழைக்கலாம். ஈராண்டு உழைக்கலாம். ஆனால் பன்னிரண்டு ஆண்டு காலம் உழைத்திருக்கிறார்.

ஒரு வெற்றிக்காக தன்னுடைய வாழ்க்கையில் பன்னிரண்டு ஆண்டுகளை தியாகம் செய்தவர் என்னுடைய நண்பர் தமன் குமார். எல்லாம் வல்ல இறைவனின் ஆசியால் இந்த திரைப்படம் வெற்றியடைய வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.

நான் மிகவும் நேசிக்கும் இலக்கிய ஆளுமைகள் வேல. ராமமூர்த்தி மற்றும் பழ. கருப்பையா ஆகியோர் இங்கு வருகை தந்திருக்கிறார்கள். இவர்களின் எழுத்துக்களை வாசித்திருக்கிறேன். பழ கருப்பையா பேசும் போது, ‘இங்கு எதுவும் மாறாது’ எனக் குறிப்பிட்டார். உண்மைதான். உதாரணத்திற்கு டிராபிக்.

ஐயா சொன்னது போல் தப்பு செய்பவர்கள் அடாவடியாகத்தான் இருக்கிறார்கள். தப்பு செய்பவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள். போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார்கள். கை கொடுக்கிறார்கள். கட்டிப்பிடிக்கிறார்கள். தெளிவாக இருக்கிறார்கள்.

கோர்ட்டில் கேஸ் ஒன்று வருகிறது. ஏடிஎம்மில் ஒருவன் ஐந்து முறை கொள்ளையடித்திருக்கிறான். அவரைப் பார்த்து ஜட்ஜ், ‘ஏடிஎம்மில் ஐந்து முறை கொள்ளையடித்திருக்கிறாயே.. இதற்கு என்ன தண்டனை தெரியுமா?” என கேட்டிருக்கிறார். அதற்கு அவன், ‘:ஐந்து ட்ரான்ஸாக்ஷன்களுக்கு மேல் சென்றால் 150 ரூபாய் பிடிப்பீர்களா..?! ” என பதிலுக்கு கேட்டிருக்கிறார்.

வட இந்தியாவில் பதினைந்து நாளில் ஏடிஎம்மில் கொள்ளை அடிப்பது எப்படி ?என்று கிராஷ் கோர்ஸ் ஒன்றை நடத்தியிருக்கிறான். கடைசியில் செய்முறை பயிற்சியின் போது அவனை கைது செய்திருக்கிறார்கள்.

இதெல்லாம் நாளிதழில் வெளியான உண்மைச் சம்பவங்கள். இப்படித்தான் இருக்கிறது உலகம். இதற்கு நடுவில் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு நொடி முக்கியம்.

ஜெயகாந்தன் சொல்வார் ‘வாழ்க்கை என்பது அந்தந்த நேரத்து நியாயம்’ என்பார்.

ஒவ்வொருத்தனுக்கும் ஒவ்வொரு நொடி முக்கியம். கொலை செய்கிறவனுக்கு கொலை செய்வது நியாயமாகப்படும். கொள்ளையடிக்கிற உனக்கு அந்த நொடியில் கொள்ளை அடிப்பது நியாயமாகப்படும். இருந்தாலும் உண்மையான நியாயம் என்று ஒன்று இருக்கிறது அல்லவா… அதுதான் இந்த படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

இங்கு உள்ள அனைத்து நட்சத்திரங்களுக்கும் அவர்களது குடும்பத்தினர் செய்த தியாகங்கள் கொஞ்சநஞ்சமல்ல. இறையருள் காரணமாக இந்த திரைப்படத்தின் மிகப்பெரிய ஆளுமைகள் நடித்திருக்கிறார்கள். இறையருளால் தயாரிப்பாளர் அழகர் இந்த திரைப்படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்டார். இறையருளால் தனஞ்ஜெயன் இந்த திரைப்படத்தை வாங்கி வெளியிடுகிறார். இறையருளாலும், ரசிகர்களின் ஆதரவாலும் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். ” என்றார்.

You cant guess the climax of Oru Nodi movie

JUST IN அரசியலுக்கு வராதீங்க விஷால்.; ‘ரத்னம்’ பட விழாவில் தனஞ்செயன் அட்வைஸ்

JUST IN அரசியலுக்கு வராதீங்க விஷால்.; ‘ரத்னம்’ பட விழாவில் தனஞ்செயன் அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

JUST IN அரசியலுக்கு வராதீங்க விஷால்.; ‘ரத்னம்’ பட விழாவில் தனஞ்செயன் அட்வைஸ்

தாமிரபரணி & பூஜை ஆகிய படங்களைத் தொடர்ந்து நடிகர் விஷால் இயக்குனர் ஹரி இணைந்திருக்கும் படம் ‘ரத்னம்’.

இந்தப் படத்தில் விஷால் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க சமுத்திரக்கனி யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

சுகுமார் ஒளிப்பதிவு செய்ய டி எஸ் ஜெய் எடிட்டிங் செய்ய பாடல்களை விவேகா எழுதியுள்ளார்.

தேசிய விருது பெற்ற தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். சண்டை பணிகளை கனல் கண்ணன் மேற்கொண்டுள்ளார்.

கார்த்திகேயன் சந்தானம் ஜி ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்திருக்கும் ரத்னம் படம் வருகிற ஏப்ரல் 26 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகிறது.

இந்த நிலையில் இன்று ஏப்ரல் 18ஆம் தேதி சென்னை வடபழனியில் உள்ள கிரீன் பார்க் ஹோட்டலில் இந்தப் படத்தின் ஃப்ரீ ரிலீஸ் இவன்ட் நடைபெற்றது.

தேவி ஸ்ரீ பிரசாத் பேசும்போது…

இதுவரை ஆறு படங்களில் பணிபுரிந்து விட்டேன்.. ஆறு படத்தில் தொடங்கியது எங்கள் கூட்டணி.

ரத்னம் படத்தின் பாடல்கள் மிக சிறப்பாக வந்துள்ளது. இது எல்லாருக்கும் பிடிக்கும்”.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தயாரிப்பாளர் தனஜெயம் பேசும்போது…

கடந்த இரண்டு மூன்று நாட்களாக விஷால் பேசிய பேச்சு ஒன்று சமூக வலைத்தளங்களை கலக்கி வருகிறது.

இந்த ‘ரத்னம்’ படம் நிகழ்ச்சிக்கு விஷாலின் பெற்றோர்கள் வந்துள்ளனர். எனவே அவர்களின் பிள்ளையாக விஷாலின் ஒரு மூத்த சகோதரனாக அவருக்கு ஒரு அட்வைஸ் செய்கிறேன்.

மார்க் ஆண்டனி மூலம் நீங்கள் 100 கோடி வசூலை செய்தீர்கள் விஷால். இந்த ரத்னம் படம் மூலம் 150 கோடி வசூலை நீங்கள் பெற வேண்டும்.

அதுபோல நீங்க தொடர்ந்து 300 கோடி 500 கோடி 1000 கோடி வரை எட்ட வேண்டும். நீங்கள் ஒரு ஆக்ஷன் ஸ்டார். ஃபேன் இந்திய அளவில் ஜொலிக்க வேண்டும். எனவே உங்களுக்கு அரசியல் வேண்டாம்.

ஒருவேளை அரசியல் வேண்டுமென்றால் நீங்கள் 60 வயதில் கூட வரலாம். 2026 தேர்தலில் நீங்கள் அரசியல் களம் இறங்க வேண்டாம். 2031 ஆம் ஆண்டு தேர்தலில் கூட நீங்கள் போட்டியிடலாம்.. அல்லது ஒரே நாடு ஒரே தேர்தல் வரும்போது 2034 ஆண்டில் கூட நீங்கள் போட்டியிடலாம். இப்போது அரசியல் வேண்டாம். சினிமாவில் நிறைய சாதிக்க வேண்டும் நீங்கள் மிகப்பெரிய உயரத்தை எட்ட வேண்டும்.

தற்போது நீங்கள் இளம் வயது தான். இப்போது உங்களுக்கு அரசியல் வேண்டாம் என உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

ஏப்ரல் 26 ஆம் தேதி ரத்னம் படம் ரிலீஸ் ஆகிறது.. ஆயிரம் திரையரங்குகள் கண்டிப்பாக கிடைக்கும். நாங்கள் தயாரித்து உள்ள ஒரு நொடி என்ற படமும் ரிலீஸ் ஆகிறது.. அதற்கு 150 திரையரங்குகள் கூட போதும் உங்கள் படம் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துக்கள்” என பேசினார் தனஞ்செயன்.

Dhananjayan advice Vishal Dont enter politics

ரஜினி இல்லனா உங்கள தெரியாது..; ‘ரூபன்’ விழாவில் ரஞ்சித்தை வெளுத்து வாங்கிய மோகன்.ஜி

ரஜினி இல்லனா உங்கள தெரியாது..; ‘ரூபன்’ விழாவில் ரஞ்சித்தை வெளுத்து வாங்கிய மோகன்.ஜி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி இல்லனா உங்கள தெரியாது..; ‘ரூபன்’ விழாவில் ரஞ்சித்தை வெளுத்து வாங்கிய மோகன்.ஜி

*”ரூபன்”திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டுவிழா!*

ஏ கே ஆர் ஃபியூச்சர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் ஐயப்பன் இயக்கத்தில் (ஏப்ரல் -2024) 20 – ஆம் தேதி திரையரங்கிற்கு வெளிவரவிற்கும் திரைப்படம் “ரூபன்” இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா! படக்குழுவினர் கலந்து கொள்ள பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

*இந் நிகழ்வில் இயக்குனர் கணேஷ் பாபு பேசியது …*

அனைவருக்கும் வணக்கம் சாமி படங்கள் பார்த்து ரொம்ப நாள் ஆச்சி மீண்டும் இந்த மாதிரி ஒரு நல்ல படம் வருது அப்படிங்க போது ரொம்ப சந்தோஷமா இருக்கு.

இந்த படத்தை இயக்கிய ஐயப்பன் அவர்களுக்கும் மற்றும் பட குழுவினர் அனைவருக்கும் நன்றி.

மியூசிக் ரொம்ப நல்லா இருக்கு எல்லாருக்கும் புடிச்ச மாதிரி இந்த படம் இருக்கும் என்று நம்புகிறேன் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

*இயக்குனர் மோகன் ஜி பேசியது …*

ரூபன் திரைப்பட குழுவினரை வாழ்த்த வருகை தந்திருக்கும் அனைவருக்கும் மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

கடவுள் சம்பந்த பட்ட படங்கள் குழந்தைகளை கூட்டிட்டு போய் திரையில் பாருங்க சப்போர்ட் பண்ணுங்க இயக்குனர்கள் அந்த மாதிரி படங்கள் திரும்ப பண்ண ஆரம்பிக்கணும்

எல்லா வகையான சினிமாக்களும் இங்க வந்து தமிழ் சினிமாவுல வரணும் மக்களுக்கு தேவையான கலையை பண்றது தான் எங்களுக்கு தெரிஞ்ச கிராஃப்ட் என்னோட படம் அரியலூர் பிரச்சினையை பேசும் விழுப்புரத்தில் கடலூரில் இருக்கிற பிரச்சினையை பேசும் அந்த மக்கள் எப்படி பாதிக்கப்பட்டு இருக்காங்கன்னு பேசும் விழுப்புரத்தில் இருக்கிற பெண்கள் காலேஜுக்கு போயிட்டு வந்து என்ன பிரச்சினை என்று பேசும் சேலத்தில் இருக்கிற பெண்களுக்கு வந்து ஆன்லைன்ல எந்த மாதிரியான பிரச்சனைகள் அவங்கள வந்து வறுமையில் பயன்படுத்தி உங்களை கொண்டு போறாங்கன்னு பேசுவோம் நாங்க..

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் நீங்கள் பேசும் அரசியல் சித்தாந்தம் ரஜினிக்கு புரிந்ததா என்று ஒருவரிடம் கேட்டிருந்தார்கள்.. அவர் (பா. ரஞ்சித்) சிரித்துக்கொண்டார்.. சாதாரண இயக்குனரான உங்களுக்கு ரஜினி படங்கள் கொடுத்து புகழடையச் செய்தார்.. ஆனால் அந்த நன்றி மறந்து சிரித்து கலாய்த்து கொண்டிருக்கிறீர்கள்.

உங்களது படங்கள் இப்படியே தொடருமானால் நான் இருக்கும் வரை உங்களுக்கு பதிலடி கொடுத்துக் கொண்டே இருப்பேன்..

இந்த ரூபன் திரைப்படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள் எல்லாருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள் தேங்க்யூ.

*சிறு பட முதலீட்டு தயாரிப்பாளர் சங்க தலைவர் அன்புச்செல்வன் பேசியது…*

இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெரும் உண்மை இந்த படம் கில்லி படம் பாத்திருக்கீங்களா விஜய் படம் அந்த மாதிரி மியூசிக் பிரசாத் பண்ணி இருக்காரு.

ரொம்ப எமோஷனலா ரொம்ப நல்லா இருந்தது ட்ரெய்லர்

ஹீரோ வந்து ரொம்ப நல்லா பண்ணி இருந்தாரு சான்சே இல்ல

டைரக்டர் வேற லெவல் கேமரா மேன் எல்லாருமே ரொம்ப சூப்பரா பண்ணிருக்காங்க இந்தப் படத்தின் டீம் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் நன்றி.

*படத்தின் நாயகன் விஜய் பிரசாத் பேசியது …*

மீடியா நண்பர்களுக்கு வணக்கம்!இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த ஆறுமுகம் அண்ணன் கார்த்தி அண்ணா ராஜா அண்ணா அவர்களுக்கு நான் ரொம்ப நன்றி சொல்லிக்கிறேன். இந்த படத்திற்கு ஐயப்பன் சார நான் பர்ஸ்ட் பர்ஸ்ட் கரூர்ல தான் மீட் பண்ணி கதை சொல்லி முடிச்சிட்டாரு இவங்க பஸ்ட் பேனர் இந்த படத்துல பண்றது நாங்க ஐயப்பன் படம் தான் பண்ணுவோம். எங்களுக்கு அந்த பேட்டன்ல சொல்லுங்கன்னு சொல்லி முடிச்சிட்டாரு.

அதுக்கப்புறம் யாரை வைத்து ஹீரோ பண்றீங்கன்னு கேட்டாங்க அப்ப ஐயப்பன் சார் தம்பி ஒருத்தன் இருக்கான் சொன்னாரு உடனே ஓகே அவனை வச்சு பண்ணுங்க சொல்லிட்டாரு

ஐயப்பன் சாருக்கு ரொம்ப தேங்க்ஸ் இந்த படம் நிறைய ரிஸ்க் எடுத்து பண்ணினோம் தர்மபுரி மாவட்டம் வத்தல்மலை என்ற ஒரு வில்லேஜ் தான் பண்ணுனோம்

சூட்டிங் போயிட்டு இருக்கும்போது ஒரு திடீர்னு யானை வந்துடுச்சு அப்பதான் ஊர் ஜனங்கள் எல்லாம் சொன்னாங்க அந்த இடத்தை விட்டு கிளம்புங்கன்னு

அப்ப எதுர்ல ஒரு பைக்ல வந்து ஒரு இடத்துல நிக்க சொல்லிட்டு எல்லா வண்டியும் வந்த பிறகுதான் அனுப்புனாங்க நிறைய ரிஸ்க் எடுத்து பண்ணனும் இந்த படத்துல நானும் மரம் ஏறி இருக்கேன்.

கேமரா மேன் சார் ஐயப்பன் சார் என் கூடவே வந்து எப்படி பண்ணனும்னு சொல்லி எல்லாமே பண்ணி காட்டினாங்க பண்ணாங்க

இந்த மாதிரி பல வெற்றி படங்களை கொடுக்கணும் என்ன மாதிரி நியூ பேஸ் ஹீரோக்களை வளர்த்து விடனும்னு கேட்டுக்குறேன் மீடியா நண்பர்கள் இந்த படத்தை நல்ல விதமா எடுத்துட்டு போய் சப்போர்ட் பண்ணி இந்த படத்தை வெற்றி படமா மாத்தணும் நான் எட்டு வருஷமா கஷ்டப்பட்டு இந்த படத்துல வாய்ப்பு கிடைத்து நடிச்சிருக்கேன் ஆக்சன் பேக்லாம் பண்ணி இருக்கேன்.

நீங்க எல்லாம் எனக்கு சப்போர்ட் பண்ணனும் நன்றி வணக்கம்.

*படத்தின் நாயகி காயத்ரி பேசியது …*

அனைவருக்கும் வணக்கம்..
ஆன்மீக சப்ஜெக்ட் அப்படின்னு ஐயப்பன் சார் சொன்னப்ப இந்த ஒரு காட்சி இருக்கும் என்று நான் எதிர்பார்த்தேன் ஆனா அந்த மாதிரி எதுவுமே இல்ல

கொஞ்சம் ரொம்ப ரொம்ப டேஞ்சரஸ் ஆன சீன்ஸ் கிராமத்துக்குள்ளேயேதான் நாங்க ஷூட் பண்ணுவோம். சோ அந்த வகையில என்ன சேபா பாத்துக்கிட்டாங்க.

டிரஸ் சேஞ்ச் பண்றதுக்கு கூட போன டோரிலே நிறுத்தி கேட்பாங்க நீங்க என்ன ஜாதி இல்லல்ல இங்க எல்லாம் டிரஸ் சேஞ்ச் பண்ண கூடாது நீங்க அங்க போங்க அப்படின்னு மேக்கப் அண்ணா தேங்க்யூ அவர் வந்து அந்த வீட்ல செய்யும் அதே ஜாதிங்கிறதினால அவர் பேசி சொன்னாரு என் தங்கச்சி தான் பா கொஞ்சம் ரெஸ்ட் ரூம் மட்டும் யூஸ் பண்ண விடுப்பா.

கொஞ்சம் உட்காரட்டும் 15 நிமிஷம் அப்படின்னு சொல்லி அங்க தான் அப்படித்தான் டிரஸ் சேஞ்ச் எல்லாம் பண்ணும் சோ அந்த அளவுக்கு நாங்க போராடி இருக்கோம் ஒரு வீட்ல கூட ஒரு சப்போர்ட் பண்ண மாட்டாங்க அந்த அளவுக்கு நாங்க போராடனும்.

இதுல ஒரு செயின்ல வந்து நான் ஊர ஒருத்தவங்களோட கதைல போய் தட்டி தட்டி கேட்பேன் அய்யோ என்னோட புருஷன பாத்தீங்களா புருஷனை பார்த்தீர்களா அப்படின்னு அந்த சீன்ல அவங்க அலோ பண்ண மாட்டோம் என்ற அளவுக்கு வந்துட்டாங்க இல்ல அங்க போகக்கூடாது இங்க போகக்கூடாது இங்க தொடக்கூடாது என்ற மாதிரி மஞ்சள் எல்லாம் தெளிச்சு விட்டாங்க ரொம்ப கஷ்டமா இருந்தது அவளை கஷ்டப்பட்டு அந்த கிராமத்துல அந்த காட்டுல நாங்க நடிச்சிருக்கோம் ரொம்ப நன்றி சார்
நன்றி சார்.

*படத்தின் இயக்குனர் ஐயப்பன் பேசியது …*

வாழ்த்த வந்திருந்த நிறைய இயக்குனர்கள் பெரியவங்க சார்லி சார் என பேசும்போது என்ன பேசுறதுன்னு தெரியாம போச்சு அவ்ளோ எனக்கு புடிச்ச ஒரு ரொம்ப ரொம்ப நான் நேசிச்ச என்ன நிறைய டி ஆர் சார் படங்கள் எல்லாம் நான் அவரை ரொம்ப ரசிக்க கூடிய ஒரு கேரக்டர் அதனால அந்த மாதிரி இடங்கள்ல நிறைய பேர் அந்த மாதிரி அதே மாதிரி டாடா டைரக்டர் மோகன்ஜிசார் எல்லாரையுமே நிறைய பேசணும் ரொம்ப நன்றி

இந்த படம் கண்டிப்பா ஒரு கமர்சியல் கலந்து படமா இருக்கும் இது ஒரு சாமி படம் என்று எல்லாரும் பதிவு பண்றதால கண்டிப்பா இது அப்படி கிடையாது நீங்க சமீபத்துல காந்தாரா? அனுமான் போன்ற படங்கள் வரிசையில் கண்டிப்பா இந்த படம் இடம் பிடிக்கும் ரொம்ப நல்ல கமர்சியல் ஓட இந்த படத்தை ஒரு தெய்வீகமா நாங்க எடுத்திருக்கோம். இந்த தயாரிப்பாளர்கள் ரொம்ப ரொம்ப எங்களுக்கு சப்போர்ட் பண்ண விதம் பெரிய விஷயம்.ஒரு பெரிய சேலஞ்ச் என்னன்னா சினிமாவுல ஒரு சின்ன பட்ஜெட் குடுத்துட்டு அதுல ஒரு பெரிய விஷுவல் காட்டறது என்பது ஒரு சவாலான விஷயம் நான் அந்த பெரிய விஷுவல் பண்றதுக்கு நான் படிச்ச நாவல் எனக்கு என்ன சொல்றேன் கேமரா மட்டும் குடு எனக்கு அது போதும் அப்படி எல்லா இடத்திலும் சொல்லுவாங்க ஏன்னா அது ஒன்னு தான் நான் பேசுற ஆயுதமா எல்லா இடத்திலும் பார்க்கப்படுது அதனால் அந்த ஆயிதத்தை என்கிட்ட கொடுத்துட்டாங்க நான் ஓடிட்டே இருந்தேன் அதனால இந்த ப்ரொடியூசர்க்கு ரொம்ப நன்றி.

வந்திருந்த எல்லாருக்கும் நன்றி தேங்க்யூஅனைவருக்கும் இனிய மாலை வணக்கம் இந்த இனிய வாய்ப்பினை நழுவிய ஏ கே ஆர் பி எஸ் பிலிம்ஸ் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

*நடிகர் சார்லி பேசியது …*

அருகில் வீற்றிருக்கும் அத்தனை பெரியவர்களுக்கும் அடியினுடைய பணிவான வணக்கங்கள்.

நான் மிகைப்படுத்தி சொல்லல ரொம்ப யதார்த்தமான ஒரு உண்மையை சொல்றேன் எனக்கு பர்சனலா எத்தனை முறை கடல் அலைகளை பக்கத்தில் இருந்து பார்த்தாலும் திகட்டவே திகட்டாது எப்பொழுதுமே எனக்கு அது மகிழ்ச்சி. பெரிய மலை அடிவாரத்தில் நின்னுகிட்டு வியாதித்து இருக்கும் உயர்ந்து நிற்கும் அந்த மலையை எப்பொழுது பார்த்தாலும் எனக்கு அனுப்பவே தோன்றாது அது ரொம்ப ரசிச்சு பார்த்துகிட்டே இருப்பேன் அது திரும்பத் திரும்ப எத்தனை முறை சந்தித்தாலும் உற்சாகத்தை கொடுக்கக் கூடியது இப்படி அடிக்கடி நினைத்த மாத்திரத்தில் பார்த்த மாத்திரத்தில் உற்சாகத்தை கொடுப்பது எனக்கு பர்சனலா நிறைய விஷயங்கள் இருந்தாலும் அவற்றுள் மிக முக்கியமான ஒன்று கடந்த 42 ஆண்டுகளுக்கு மேலாக என்னுடைய திரை பயணத்தில் என்னுடன் ஒன்றாய் கலந்து பணியாற்றும் என் ஊடக நண்பர்களுக்கு எத்தனை முறை பார்த்தாலும் நான் மிகவும் மகிழ்ச்சியின்றேன் உங்கள் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கின்றேன்.

இது சின்ன படம் அது பெரிய படம் அப்படிங்கற பாகுபாடு வந்து எடுக்கக்கூடிய படத்திலையோ போடக்கூடிய பட்ஜெட்லயோ கிடையாது படம் வெளியிட்டுருக்கு பிறகு மக்கள் எப்படி ரசிக்கிறாங்க இது எந்த அளவிற்கு வரவேற்பை பெறுகிறது அதை பொறுத்து தான் அந்த படம் பெரிய படமாக கருதப்படுகிறது அந்த விதத்தில் ரூபன் படம் மிகப்பெரிய வெற்றி படம்

ரூபன் படம் எனக்கு நிறைய என்னுடைய பர்சனலா நிறைய விஷயங்களை அலசி ஒரு உட்படுத்திக் கொண்ட படம்.

இந்த ஐயப்பன் படைப்பாளி தலைசிறந்த இயக்குனர் மிகப் பிரமாதமான இயக்குனதாகில் சாதிக்கக்கூடிய மிகப்பெரிய சாதனைக்குரிய இயக்குனர் சில இயக்குனர்கள் என்னுடைய என்னை நேசிக்கும் நான் நேசிக்கும் எங்க டைரக்டர் பாசில் சார் ஒரு தடவை சொன்னாரு நீ நடந்து வந்து இதை இப்படி செய்யணும் அப்படின்னு நான் சீன் சொல்லிட்டேன் நீ எப்படி செய்றியோ அதுக்கு ஏத்த மாதிரி வைக்க போறேன் எத்தனையோ பேர் இருக்கிறார்கள் ஆனால் இந்த டைரக்டர் ஐயப்பன் சார் எப்படின்னா நிறைய எடுத்துட்டு வரமா அதை மட்டுமே எடுக்கக்கூடிய ஒரு ஒப்பற்ற ஆற்றல்மிக்க இயக்குனர் ஐயப்பன்.

அது மட்டுமல்லாமல் எங்க படக்குழுவினர் அத்தனை பேரையும் அந்த இறைவன் ஐயப்பனும் இறையருளும் என்றென்றும் காத்து இந்த ரூபன் திரைப்படம் வெற்றி வெற்றி என்று பறைசாற்றும் நிச்சயமாக உறுதி அனைவருக்கும் நன்றி வணக்கம்..

Mohan G condemns Ranjith for Insulting Rajini at Ruban event

வீர தீர சூரன்..: ‘சியான்’ படத்திற்கு ‘சித்தா’ இயக்குனர் வைத்த மாஸ் டைட்டில்

வீர தீர சூரன்..: ‘சியான்’ படத்திற்கு ‘சித்தா’ இயக்குனர் வைத்த மாஸ் டைட்டில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வீர தீர சூரன்..: ‘சியான்’ படத்திற்கு ‘சித்தா’ இயக்குனர் வைத்த மாஸ் டைட்டில்

ரசிகர்களுக்கு இரட்டை விருந்து அளித்த சியான் விக்ரம்.

*’சியான் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வீர தீர “சூரன்”!*

‘சியான்’ விக்ரம் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படத்திற்கு வீர தீர “சூரன்” என பெயரிடப்பட்டிருக்கிறது. இதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் சியான் விக்ரம் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்திற்கான சிறப்பு காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.

சியான் விக்ரமின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிப்பில் தயாராகும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் சியான் விக்ரம் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் காணொளி ஆகியவை வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் இரட்டை விருந்து கிடைத்த மகிழ்ச்சியில் திளைத்திருகிறார்கள்.

இயக்குநர் எஸ் யு அருண்குமார் இயக்கத்தில் உருவாகும் வீர தீர “சூரன்” எனும் திரைப்படத்தில் சியான் விக்ரம், எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ‘இசை அசுரன்’ ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஆக்சன் எண்டர்டெயினராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஹெச் ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிக்கிறார்.

சியான் விக்ரம் நடிப்பில் தயாராகி வரும் இப்படத்தின் தகவல்களை தொடர்ந்து வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்திய படக்குழு.., தற்போது படத்தின் நாயகனான சியான் விக்ரமின் பிறந்த நாளை முன்னிட்டு, வீர தீர “சூரன்” எனும் படத்தின் டைட்டிலையும், இந்த படத்தில் சியான் விக்ரம் ஏற்றிருக்கும் காளி எனும் கதாப்பாத்திரத்திற்கான சிறப்பு காணொளியையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

மூன்று நிமிடங்கள் கொண்ட இந்த காணொளியில் சியான் விக்ரமின் திரைத் தோற்றம்… அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது. அத்துடன் இந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Veera Dheera Sooran title for Chiyaan 62 movie

More Articles
Follows