டான்ஸ் மாஸ்டர்ஸ் ஷோபி – லலிதா தம்பதியருக்கு 2வது குழந்தை பிறந்தது

டான்ஸ் மாஸ்டர்ஸ் ஷோபி – லலிதா தம்பதியருக்கு 2வது குழந்தை பிறந்தது

கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல முன்னணி பல படங்களில் பணியாற்றிய நடன இயக்குநர்கள் ஷோபி மாஸ்டர் மற்று லலிதா ஷோபி மாஸ்டர் தம்பதியருக்கு 2வது குழந்தை பிறந்துள்ளது.

இந்திய திரையுலகம் முழுக்க பிரபலமானவர் நடன இயக்குநர் ஷோபி. 2004 ஆம் ஆண்டு வெளியான கமல்ஹாசனின் ‘வசூல்ராஜா எம் பி பி எஸ்’ படம் மூலம் நடன இயக்குநராக திரைத்துறையில் அறிமுகமானவர் ஷோபி.

திரைத்துறையில் பல முன்னணி நட்சத்திரங்களுடனும், பிரம்மாண்ட படங்களிலும் நடன இயக்குநராக பணியாற்றி புகழ் பெற்றவர்.

ஷோபி மாஸ்டர், லலிதா ஷோபி மாஸ்டர் இருவரும் இணைந்து ஒரு நடன பள்ளியை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் தான் லலிதா ஷோபி மாஸ்டருக்கு கோலகலமாக வளைகாப்பு நடைபெற்றது.

இந்த தம்பதியருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சென்னையில் நேற்று ஜூலை 21 ஒரு தனியார் மருத்துவமனையில் லலிதா மாஸ்டர் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

தற்போது தாய் சேய் இருவரும் பூரண நலத்துடன் உள்ளனர். அன்பும் பாரட்டுக்களும் தெரிவித்த ரசிகர்கள், நலம் விரும்பிகள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ஷோபி மாஸ்டர் குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளனர்.

dance masters Shobhi-Lalita couple in born in 2nd child

யோகிபாபு பிறந்தநாளில் இயக்குனர் ரஞ்சித் நிறுவனம் கொடுத்த மெகா கிஃப்ட்

யோகிபாபு பிறந்தநாளில் இயக்குனர் ரஞ்சித் நிறுவனம் கொடுத்த மெகா கிஃப்ட்

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் ‘பொம்மை நாயகி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

யோகிபாபு கதையின் நாயகனாக நடிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் ஷான் இயக்குகிறார்.

அதிசயராஜ் ஒளிப்பதிவில் , இப்படத்திற்கு இசையமைக்கிறார் சுந்தரமூர்த்தி.

யோகிபாபுவின் பிறந்த நாளையொட்டி பொம்மை நாயகி படத்தின் போஸ்டரை வெளியிட்டது படக்குழு.

தகப்பனுக்கும் மகளுக்குக்கும் இடையில் இருக்கும் பாசப்பிணைப்பை சொல்லும் படமாக , வெகுஜன மக்களை கவரும் விதத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் யோகிபாபு.

சென்னை, கடலூரில் படப்பிடிப்பு முடிந்து , இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது ‘பொம்மை நாயகி’.

விரைவில் வெளியாகவிருக்கும் இப்படத்தை இயக்குனர் பா.இரஞ்சித் தயாரித்துள்ளார். இணை தயாரிப்பாக யாழி பிலிம்ஸ் விக்னேஸ் சுந்தரேசன் தயாரித்திருக்கிறார்.

கலை- ஜெயரகு,
எடிட்டிங் -செல்வாRK.
நடனம் – வினோத்குமார், சல்சாமணி.
சண்டைப்பயிற்சி- ஸ்டன்னர் சாம்.
பாடல்கள் -கபிலன், இளையகம்பன், அறிவு, சித்தன் ஜெயமூர்த்தி, லோகன்.
உடைகள் – ஏகாம்பரம்.
சவுண்ட் எபக்ட் – ஆண்டனி BJ ரூபன்.

இணை தயாரிப்பு-
விக்னேஷ் சுந்தரேசன்
வேலவன்
லெமுவேல்
PRO – குணா.
யோகிபாபு

Actor Yogi Babu’s Bommai Nayagi first look out

பட்டைய கிளப்பும் ‘காபி வித் காதல்’ பட பாடல்கள்.; யுவனின் ரம்பம்பம் – ஆரம்பம்.!

பட்டைய கிளப்பும் ‘காபி வித் காதல்’ பட பாடல்கள்.; யுவனின் ரம்பம்பம் – ஆரம்பம்.!

அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் ஏசிஎஸ் அருண்குமார் இணைந்து தயாரித்து வரும் படம் ‘காபி வித் காதல்’.

இயக்குனர் சுந்தர்.சி தனது வழக்கமான கலகலப்பான பாணியில் இயக்கியுள்ள இந்த படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் கதாநாயகர்களாக நடிக்க அம்ரிதா ஐயர், மாளவிகா சர்மா, ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

மேலும் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், திவ்யதர்ஷினி (டிடி), விச்சு விஸ்வநாத் சம்யுக்தா ஷண்முகம், அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தில் இருந்து ஏற்கனவே… “ரம்பம்பம் ஆரம்பம்..” என்கிற ரீமிக்ஸ் பாடல் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் அடுத்ததாக.. “பேபி கேர்ள்..” என்கிற இன்னொரு பாடல் வெளியாகி உள்ளது.

நாயகன் நாயகி இருவருக்கும் இடையேயான நட்பு ஒரு கட்டத்தில் காதலாக மாறுகிறது.

அந்த தருணத்தில் அந்த புதிய அன்பு கிடைப்பதன் மூலம் நாயகன் இதயத்தில் ஒரு மாற்றம் நிகழ்கிறது.

அதன்பின் அவன் பார்க்கும் பார்வையில் இதுவரை அவன் பார்த்த உலகம் எல்லாமே தற்போது புதிதாக வித்தியாசமாக தெரிகிறது. இந்த சூழலை மையப்படுத்தி

“என்ன இது
புதிதாய் புதிதாய் புதிதாய்
எனக்குள் ஏததா
புதிராய் புதிராய்
இரண்டாம் மூச்சுக் காற்று
உள்தே அடிக்குதே”

என நாயகன் பாடுவது போல இந்த பாடல் உருவாகி உள்ளது. பா.விஜய் எழுதியுள்ள இந்த பாடலை பாடகர் சித் ஸ்ரீராம் பாடியுள்ளார்.

அதேசமயம் இதே பாடலை யுவன் சங்கர் ராஜா பாடி, ஒரு சிறப்பு வீடியோ ஆல்பமாக தற்போது யூட்யூப் தளத்தில் இந்த பாடல் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்தப்பாடலில் இடையே இடம்பெறும் ராப் பாடல் வரிகளை அசல் கோலார் என்பவர் பாடியுள்ளார். U1 ரெக்கார்ட்ஸ் சார்பாக இந்தப்பாடலை கே.குமரகுருபரன் ஒலிப்பதிவு செய்துள்ளார்.

நடிகர்கள் :
ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, ரைசா வில்சன், அம்ரிதா ஐயர்,ஐஸ்வர்யா தத்தா, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், திவ்யதர்ஷினி (டிடி), விச்சு விஸ்வநாத் சம்யுக்தா ஷண்முகம், அருணா பால்ராஜ், பேபி விர்த்தி

தொழில்நுட்பக்குழு
எழுத்து ,இயக்கம் – சுந்தர் சி
தயாரிப்பு – அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட்
மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் குஷ்பு சுந்தர் C , ACS அருண் குமார்
இசை – யுவன் ஷங்கர் ராஜா
ஒளிப்பதிவு- E.கிருஷ்ணசாமி
படத்தொகுப்பு -ஃபென்னி ஆலிவர்
கலை -குருராஜ். B
நடனம் -ராஜு சுந்தரம், ராபர்ட், சாண்டி,தீனா
சண்டை பயிற்சி -தளபதி தினேஷ்
நிர்வாக தயாரிப்பு- பாலா கோபி.

‘Cafe with kadhal’ songs gets good response.

தடயவியல் நிபுணராக அமலா பால்.; அதுல்யா & ரித்விகாவுடன் கூட்டணி

தடயவியல் நிபுணராக அமலா பால்.; அதுல்யா & ரித்விகாவுடன் கூட்டணி

முன்னணி நட்சத்திர நடிகை அமலாபால் கதையின் நாயகியாக நடித்து, தயாரித்திருக்கும் ‘கடாவர்’ எனும் திரில்லர் திரைப்படம், டிஸ்னி +ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் பிரத்யேகமாக வெளியிடப்படுகிறது.

மலையாள இயக்குநர் அனூப் எஸ். பணிக்கர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘கடாவர்’.

இதில் நடிகை அமலாபால் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் நடிகர்கள் ஹரிஷ் உத்தமன், முனீஸ்காந்த், திரிகன் (ஆதித் அருண்), பசுபதி, நிழல்கள் ரவி, வினோத் சாகர், வேலு பிரபாகர், ஜெய ராவ் நடிகைகள் அதுல்யா ரவி, ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

அபிலாஷ் பிள்ளை வசனம் எழுதி இருக்கும் இந்த படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கிரைம் த்ரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரஞ்சின் ராஜ் இசையமைக்க, ஷான் லோகேஷ் பட தொகுப்பாளராக பணியாற்றிருக்கிறார்.

கடாவர்- முதுகுத்தண்டை சில்லிடச் செய்து, ரத்தத்தை உறையச் செய்யும் க்ரைம் திரில்லர் திரைப்படம்.

கொலை வழக்கு ஒன்று போலீஸ் உயரதிகாரி விஷால் தலைமையில் விசாரணை நடைபெறுகிறது.

இதில் தடயவியல் துறை நிபுணராக பத்ரா என்ற கதாபாத்திரத்தில் நடிகை அமலா பால் நடிக்கிறார். மர்மமான முறையில் கொலைகள் தொடர்ந்து நடைபெறுகிறது.

இதற்கான விசாரணையை மேலும் விரைவுபடுத்தி, வழக்கு இறுதி கட்டத்தை நெருங்கும் தருணத்தில், தடயவியல் துறை நிபுணரான பத்ரா கொலைக்கான பின்னணியையும், கொலைகாரனையும் கண்டறிகிறார்.

டிஸ்னி+ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளம்- தற்போது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாக திகழ்கிறது. இந்த டிஜிட்டல் தளம், இந்தியர்கள் தங்களின் பொழுதுபோக்கு அம்சங்களை பார்வையிடும் முறையை மாற்றி அமைத்திருக்கிறது.

அவர்களுக்கு பிடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை இந்தியா முழுவதும் அனைவரும் கண்டு ரசிக்கும் வகையிலான உள்ளடக்கத்துடன் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இயங்கி வருகிறது.

இந்த டிஜிட்டல் தளத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், வங்காளம் என எட்டு மொழிகளில் 1,00,000 மணி நேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது. இதனுடன் உலக அளவில் நடைபெறும் முக்கிய விளையாட்டு நிகழ்வினையும் பிரத்யேகமாக அளிக்கிறது.

Disney Hotstar to premiere Amala Paul starrer Cadaver

‘சந்திரமுகி-2’ சூட்டிங்கில் விஜய் பட காமெடி செய்த வடிவேலு.; லாரன்ஸ் ராதிகா அரட்டை (வீடியோ)

‘சந்திரமுகி-2’ சூட்டிங்கில் விஜய் பட காமெடி செய்த வடிவேலு.; லாரன்ஸ் ராதிகா அரட்டை (வீடியோ)

லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் பெரும் பொருட்செலவில் ‘சந்திரமுகி 2’ எனும் புதிய பிரம்மாண்டத் திரைப்படத்தை தயாரிக்கிறார்.

ரஜினிகாந்த் நடித்த ‘சந்திரமுகி’ படத்தின் முதல் பாகத்தை இயக்கிய பி வாசு இந்த படத்தையும் இயக்குகிறார்.

முதல் பாகத்தில் ரஜினியுடன் நயன்தாரா ,ஜோதிகா ,பிரபு ,விஜயகுமார் ,வடிவேலு ,நாசர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

வித்யாசாகர் இசையமைத்த இந்த படத்தை சிவாஜி புரொடக்ஷன்ஸ் சார்பாக பிரபு தயாரித்து இருந்தார்.

ஆனால் இரண்டாம் பாகத்தில் ரஜினி நடிக்கும் மறுத்துவிட்டதால் நடிகர் ராகவா லாரன்சை நாயகனாகியிருக்கிறார் பி வாசு.

இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் வடிவேலு இணைந்து நடிக்கிறார்கள்.

லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில், அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜி. கே. எம். தமிழ் குமரன் அவர்களின் மேற்பார்வையில் உருவாகவிருக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் தயாரிப்பு ஒருங்கிணைப்பு பணிகளை பிரபல கலை இயக்குநர் தோட்டா தரணி கவனிக்கிறார்.

‘பாகுபலி’, ‘ஆர் ஆர் ஆர்’ பட புகழ் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார்.

தோட்டா பானு கலை இயக்குநர் பொறுப்பை ஏற்க, ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

ஹாரர் திரில்லர் ஜானரில் தயாராகும் இந்தப் படத்தில் பணியாற்றும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

நாயகியாக த்ரிஷாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றன.

எனவே விரைவில் இது பற்றிய அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

சந்திரமுகி 2 படத்தின் சூட்டிங் மைசூரில் தொடங்கப்பட்ட நிலையில், அதற்கு முன்பு நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து அவரின் காலில் விழுந்து ஆசி பெற்று சென்றிருக்கிறார் ராகவா லாரன்ஸ்.

‘சந்திரமுகி2’ படப்பிடிப்பு மைசூரில் நடந்து வரும் நிலையில், ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் வடிவேலுவின் காமெடி வீடியோ ஒன்றினை போஸ்ட் செய்துள்ளார்.

அந்த பதிவில்… “வடிவேலு நம் அனைவரையும் சிரிக்க வைத்திருக்கிறார். இவர் நடித்த படத்தின் ஒரு பேமஸான காட்சியை நடித்துக் காட்டியுள்ளார்.

இந்த காமெடி காட்சி எந்த படத்தில் வரும் என யோசிங்க ” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் படத்தின் நாயகன் லாரன்ஸும் அருகில் இருக்கிறார்.

அந்த படக்காட்சி விஜய்யின் 25 வது படமான ‘சுறா’ படத்தில் இடம் பெற்ற காட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

Vadivelu, who made Vijay’s comedy while shooting ‘Chandramukhi-2’

5 மொழி.. 2500 தியேட்டர்.; அடேங்கப்பா அண்ணாச்சி.; லெஜண்ட் டைட்டிலுக்கு ஏத்த மாதிரி கலக்குறாரே

5 மொழி.. 2500 தியேட்டர்.; அடேங்கப்பா அண்ணாச்சி.; லெஜண்ட் டைட்டிலுக்கு ஏத்த மாதிரி கலக்குறாரே

லெஜண்ட் சரவணன் நடிக்கும் ‘தி லெஜண்ட் திரைப்படம் உலகெங்கும் 28 ஜூலை அன்று ஐந்து மொழிகளில் 2500 க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகிறது*

லெஜண்ட் சரவணன் முதல் முறையாக தயாரித்து அதிரடி நாயகனாக அறிமுகமாகும் ‘தி லெஜண்ட்’ திரைப்படம், ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ளது.

இப்படத்தின் டிரைலர், ‘மொசலோ மொசலு’ பாடல், ‘வாடிவாசல்’ பாடல் ஆகியவை பல மில்லியன் பார்வைகளை கடந்துள்ள நிலையில், சமீபத்தில் வெளியான ‘பொ பொ பொ’ பாடல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

முதல் படம் வெளிவருவதற்கு முன்பே தான் ஒரு லெஜண்ட் என அழுத்தமாக தடம் பதித்திருக்கிறார் லெஜண்ட் சரவணன்.

எமோஷன், ஆக்‌ஷன், காதல், காமெடி என அனைத்தும் ஒருங்கிணைந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து மக்களும் மீண்டும் மீண்டும் படம் பார்க்கும் வகையில், சினிமா பாணியில் சொல்வதென்றால் ரிபீட் ஆடியன்ஸை வரவழைக்கும் ஒரு பக்கா கமர்சியல் மாஸ் படமாக பான் இந்தியா அளவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் மிகுந்த பொருட்செலவில் மிகப்பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம் ஜூலை 28 அன்று வெளியாகவுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் நடித்த பல வெற்றி படங்களை தமிழகம் எங்கும் விநியோகம் செய்து ராசியான விநியோகஸ்தர் என பெயர் எடுத்த கோபுரம் சினிமாஸ் ஜி என் அன்புச்செழியன், ‘தி லெஜண்ட்’ படத்தை பார்த்து மகிழ்ச்சி அடைந்து “என் கணிப்பின் படி முதல் படத்திலேயே உச்ச நட்சத்திரங்கள் வரிசையில் லெஜண்ட் சரவணன் இணைகிறார்” என்று பாராட்டி, நிச்சயம் இப்படம் மாபெரும் வெற்றி பெறும் எனக் கூறி அதிக முன் பணம் கொடுத்து தமிழகம் முழுவதும் வெளியிடும் உரிமையை பெற்றிருக்கிறார்.

மேலும், தமிழகம் எங்கும் 800க்கும் அதிகமான திரையரங்குகளில் ‘தி லெஜண்ட்’ திரைப்படத்தை அவர் வெளியிட உள்ளார்.

தமிழகத்தை போல மற்ற மொழிகளிலும் அதிக திரையரங்குகளில் வெளியாகிறது என வெளிநாடு மற்றும் அனைத்து மொழிகளில் வெளியீட்டு உரிமையை வாங்கிய விநியோகஸ்தர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

தெலுங்கு உரிமை, ஸ்ரீ லட்சுமி மூவிஸ் திருப்பதி பிரசாத் – கே ஜி எப், ஆர் ஆர் ஆர், டான், 2.0, காலா ஆகிய படங்களின் தெலுங்கு விநியோகஸ்தர்.
ஸ்பைடர் மற்றும் காட்பாதர் படங்களின் தயாரிப்பாளர்.விக்ரம் நடித்துள்ள கோப்ரா படத்தின் வெளியீட்டு உரிமையையும் இவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிந்தி விநியோகம், கணேஷ் ஃபிலிம்ஸ் நம்பிராஜன்- ரஜினி நடித்த சிவாஜி, ஏவி எம் தயாரிப்பில் வெளியான அநேக படங்கள், டான், செக்க சிவந்த வானம், ராவணன், மாஸ்டர் மற்றும் நானும் ரவுடி தான் ஆகிய படங்களை வெளியீட்டாளர்.

வெளிநாட்டு உரிமை, ஏ பி இன்டர்நேஷனல் சஞ்சய் வாத்வா – கே ஜி எப், விக்ரம், சார்லி உள்ளிட்ட பல படங்களின் வெளிநாட்டு உரிமையை பெற்றவர். வெளிநாட்டு வெளியீட்டில் முதன்மையான நிறுவனம்.

மலையாளம் உரிமை, மேஜிக் ஃபிரேம்ஸ் லிஸ்டின் ஸ்டீபன்- கே ஜி எப், மாஸ்டர், பீஸ்ட் ஆகிய படங்களை வெளியிட்டுள்ளார். மேலும் சார்லி படத்தின் தயாரிப்பாளர்.

கன்னட உரிமை, ஃபைவ் ஸ்டார் செந்தில் – விக்ரம், டான், கோப்ரா ஆகிய படங்களின் வெளியீட்டு உரிமையை பெற்ற முன்னணி நிறுவனம்.

முதல் படத்திலேயே அதிக பணம் கொடுத்து பெறப்பட்ட படம், மற்றும் உலகமெங்கும் 2500க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் படம் என்கிற பெருமை லெஜண்ட் சரவணனுக்கு கிடைத்துள்ளது என்று திரைத்துறை மற்றும் திரையரங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Legend Saravanan starrer ‘The Legend’ to release in five languages in more than 2500 theatres worldwide

More Articles
Follows