‘காமன்மேன்’ டைட்டிலை சுசீந்திரன் உதவியாளருக்கு வழங்கியது சென்சார்

‘காமன்மேன்’ டைட்டிலை சுசீந்திரன் உதவியாளருக்கு வழங்கியது சென்சார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காமன்மேன் (Common Man) என்கிற தலைப்பில் Chendur Films International தயாரிக்க நடிகர் சசிகுமார் நடிக்கவிருக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு Teaser சமீபத்தில் இணையதளத்தில் வெளியானது.

ஆனால் இந்த தலைப்பின் உரிமை எங்களிடம் தான் உள்ளது என்று AGR RIGHT FILMS என்கிற தயாரிப்பு நிறுவனம் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையிடம் மேல்முறையீடு செய்தது.

டைரக்டர் சுசீந்திரன் இணை இயக்குனரான அறிமுக இயக்குநர் விஜய் ஆனந்த் சார்பில் 2018 ஆண்டே “COMMON MAN” என்கிற தலைப்பு தென்னிந்திய திரைப்பட சாம்பரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த உரிமை தொடர்பாக அனைத்து ஆதார ஆவணங்களும் தங்களிடம் இருப்பதாக AGR RIGHT FILMS தெரிவித்துள்ளது.

தற்போது CHENDUR FILMS INTERNATIONAL “COMMON MAN” என்கிற தலைப்பில் படம் அறிவிக்கவே, அதில் ஒப்பந்தமாகி இருக்கும் நடிகர் சசிகுமாரிடம்.. AGR RIGHT FILMS தலைப்பு தொடர்பான பிரச்சினை குறித்து சொல்லவே, சசிகுமார் எதுவானாலும் FILM CHAMBER வழியாக நீங்கள் தீர்த்து கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.

அதன் பின்னர் இது தொடர்பாக AGR RIGHT FILMS.. FILM CHAMBER-ஐ அணுகவே, சேம்பரோ தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திடம் இருந்து இந்த தொடர்பாக விளக்கம் கேட்டுள்ளது. பதில் வர தாமதமான நிலையில்,

CHENDUR FILMS INTERNATIONAL நிறுவனம் “COMMON MAN” என்கிற தலைப்பில் பட டீசர் வெளியிட்டுவிட்டது.

இதன் பிறகு AGR RIGHT FILMS.. சேம்பரை மீண்டும் அணுகவே, சேம்பருக்கு தயாரிப்பாளர் சங்கத்திடம் இருந்து எந்தவிதமான முறையான பதிலும் வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான தேவையான சட்ட நடவடிக்கைகளை AGR RIGHT FILMS எடுத்துக்கொள்ளலாம் என்றும், அதற்கு சேம்பரும் உறுதுணையாக இருக்கும் என Film Chamber அறிவித்துள்ளது.

AGR RIGHT FILMS “COMMON MAN” என்கிற தலைப்பு தங்களுக்கே சொந்தம் எனவும், இந்த தலைப்பில் தங்களை தவிர வேற எந்த நிறுவனத்தின் படத்திற்கும் அனுமதிசான்று வழங்கக் கூடாது என்று Censor Board-இடம் சட்ட ரீதியான notice ஒன்றை அனுப்பியது.

அதற்கு சென்சார் போர்ட் இப்பொழுது, ‘காமன்மேன்’ டைட்டிலை AGR RIGHT FILMS நிறுவனத்திற்கு முறையாக சான்றிதழ் வழங்கியுள்ளார்கள்.

இப்படத்தின் மோஷன் போஸ்டர் motion poster விரைவில் வெளிவரும். இதனால், அறிவிப்பு வெளியான சசிகுமார் பட டைட்டிலுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Common Man movie title goes to Suseenthiran assistant

காதலர்களை காந்தமாக கவரும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ பட டீசர்

காதலர்களை காந்தமாக கவரும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ பட டீசர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்த ஆண்டில் ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் முக்கியமான படங்களின் ஒன்றான “காத்து வாக்குல ரெண்டு காதல்” படத்தின் அழகான டீசர் சற்று முன் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

தமிழ் திரையுலகில் மாறுபட்ட களங்களில் தரமான படைப்புகளை வழங்கி வரும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் வழங்க, இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நயன்தாரா,சமந்தா என தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர கூட்டணி இணைந்து நடித்திருக்கும் படம் “காத்து வாக்குல ரெண்டு காதல்”.

‘நானும் ரௌடி தான்’ படத்திற்கு பிறகு இயக்குநர் விக்னேஷ் சிவன் மீண்டும் ரொமாண்டிக் காமெடி ஜானரில் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே, ரசிர்களிடம் எக்கசக்க எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இசையமைப்பாளர் அனிருத் இசையில் வெளியான மூன்று பாடல்களும் அனைத்து தரப்பினரிடமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று, பம்பர் ஹிட்டாகியுள்ளது.

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள இப்படத்தின் டீசர் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு, வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் காதல் காமெடி படங்கள் இல்லையெனும் ஏக்கத்தை போக்கும் படி, நீண்ட இடைவேளைக்கு பிறகு, பெரும் நட்சத்திர கூட்டணியில், அழகான காதல் கவிதையாக, மனம் விட்டு சிரித்து மகிழும் இனிமையான திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்த நிலையில் போஸ்ட் புரடக்சன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் விக்னேஷ் சிவன். இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க, S.R.கதிர் மற்றும் விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஶ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார்.

கலை இயக்கத்தை ஸ்வேதா செபாஸ்டியன் கவனிக்க, ஸ்டண்ட் பணிகளை திலீப் சுப்பராயன் செய்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ மற்றும் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை, தயாரிப்பாளர் S.S. லலித்குமார் தயாரித்துள்ளார்.

இப்படம் வரும் 2022 ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி, உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Massive response for #KaathuVaakulaRenduKaadhal Teaser

சசிகுமார் – ஹரிப்ரியா ஜோடிக்கு சாத்தானாக மாறிய விக்ராந்த்

சசிகுமார் – ஹரிப்ரியா ஜோடிக்கு சாத்தானாக மாறிய விக்ராந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் சத்யசிவா இயக்கத்தில் அடுத்ததாக சசிகுமார் மற்றும் ஹரிப்ரியா நடிக்கும் படம் “காமன் மேன்”.

ஒவ்வொரு கதைக்கும் ஒரு வில்லன் உண்டு. ஆனால் இந்தபடித்தில் ஒரு சாத்தன் போன்ற குணம் படைத்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விக்ராந்த்.

இன்று படத்திலிருந்து விக்ராந்தின் சிறு வீடியோ காட்சி வெளியிடப்பட்டது .அவரது தோற்றம் ஒரு சாதாரணமாக இருந்தாலும், அவரது அனைத்து முயற்சிகளும் சாத்தானை (நரகத்தின் ராஜா) நினைவூட்டும்.

இத்திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார் .செந்தூர் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் டி.டி.ராஜா இப்படத்தை தயாரிக்கிறார்.

Director Sathyasiva’s next is “Common Man” Starring SASIKUMAR and Haripriya in the lead.

சைக்கலாஜிக்கல் திரில்லர் படத்தில் ‘V1’ ஹீரோ ராம் அருண்

சைக்கலாஜிக்கல் திரில்லர் படத்தில் ‘V1’ ஹீரோ ராம் அருண்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2019ம் ஆண்டு வெளியாகி பல எண்ணற்ற ரசிகர்களின் பாராட்டுக்களை வென்ற படம் “வி1”. இப்படத்தின் நாயகனாக ராம் அருண் காஸ்ட்ரோ நடித்திருந்தார்.

புதுமுகமாக இருந்தாலும் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்தார் ராம் அருண் காஸ்ட்ரோ.

தற்போது இவர் கதாநாயகனாக நடிக்கும் மூன்றாவது படத்தின் பூஜை இன்று இனிதே நடைபெற்றது.

ஐடா பிலிம்ஸ் சார்பாக தயாரிப்பாளர் தங்க மீனா பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் ராஜேஷ் பாலசந்திரன் இயக்குகிறார்.

இவர் இந்தியன் 2, பூமிகா உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களுக்கு நடிப்பு பயிற்சி கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சைக்கலாஜிக்கல் திரில்லராக உருவாகும் இப்படத்தில் பிரபல ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சனிடம் பணியாற்றிய நித்யானந்தம் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார்.

பரியேறும் பெருமாள், ராக்கி உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய ராமு தங்கராஜ் இப்படத்தின் கலை இயக்குனராக பணியாற்றுகிறார்.

கஸ்ட்யும் டிசைனர் – ஒஷின் அனில், மக்கள் தொடர்பு – சதிஷ் (AIM)

மற்ற நடிகர்கள் – தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

V1 hero Ram Arun’s next film is psycological thriller based

கொடி-பட்டாஸ் படங்களுக்கு பிறகு மீண்டும் டபுள் ரோலில் தனுஷ்

கொடி-பட்டாஸ் படங்களுக்கு பிறகு மீண்டும் டபுள் ரோலில் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘நானே வருவேன்’.

வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ் தாணு தயாரித்து வரும் இப்படத்துக்கு யுவன் இசையமைத்து வருகிறார்.

நாயகியாக இந்துஜா நடிக்க ஓம்பிரகாஷ் ஓளிப்பதிவு செய்ய புவனா சுந்தர் எடிட்டிங் பணிகளை செய்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிற நிலையில் இன்று நானே வருவேன் பட போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

இதில் தனுஷின் டபுள் ரோல் கேரக்டர்கள் இடம் பெற்றுள்ளன.

இதற்கு முன்பு கொடி மற்றும் பட்டாஸ் படங்களில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dhanush dual role in selva raghavan’s Naane Varuven

‘மகான்’ மகா ஹிட்டு..; தமிழகமெங்கும் மாஸ் காட்டும் விக்ரம் ரசிகர்கள்

‘மகான்’ மகா ஹிட்டு..; தமிழகமெங்கும் மாஸ் காட்டும் விக்ரம் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சீயான் விக்ரமின் 60வது படமான ‘மகான்’ திரைப்படம் பிப்ரவரி 10ஆம் தேதி நள்ளிரவு பிரைம் வீடியோவில் வெளியானது.

துருவ் சிம்ரன் பாபி சிம்ஹா ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்த படம் பிளாக்பஸ்டர் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில் சீயான் விக்ரமின் 60 வது படமான “மகான்” படத்தை கொண்டாடும் வகையிலும், சீயான் விக்ரம் கடும் உழைப்புக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், அவரின் ரசிகர்கள் 60 பேர் தங்கள் மோட்டார் சைக்கிள்களில் பல குழுக்களாகப் புறப்பட்டு, தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்று, தாங்கள் மிகவும் நேசிக்கும் நடிகரின் 60வது திரைப்படத்தின் புகழை பரப்பி வருகின்றனர்.

சென்னை, கோயம்புத்தூர், கன்னியாகுமரி மற்றும் மதுரை முழுவதுமான பகுதிகளில் பைக் ஓட்டி, சியான் விக்ரமின் அன்பையும் பாசிட்டிவ் எண்ணத்தையும் மக்களிடம் பரப்பி வருகிறார்கள்.

இந்திய திரையுலகில் எவருடனும் ஒப்பிடமுடியாத, கதாப்பாத்திரத்திற்குள் புகுந்துகொள்ளும் சீயான் விக்ரமின் திறமையான நடிப்பாற்றலை பாராட்டுவதற்காக ரசிகர்களால் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

“மகான்” திரைப்படம் தற்போது பிரைம் வீடியோவில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளிலும், கன்னடத்தில் மகா புருஷா என்ற பெயரிலும் பிரத்தியேகமாக உலகளவில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

On the occasion of Chiyaan Vikram’s 60th Blockbuster release, fans of the ‘Mahaan’ actor, set out on a motorcycle-journey to spread joy

More Articles
Follows