சிரஞ்சீவி பர்த் டே ஸ்பெஷலாக மோகன் ராஜா இயக்கும் பட அப்டேட்

சிரஞ்சீவி பர்த் டே ஸ்பெஷலாக மோகன் ராஜா இயக்கும் பட அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில், மோகன் ராஜா இயக்கத்தில் தயாராகி வரும் ‘சிரஞ்சீவி 153’ திரைப்படத்தின் புதிய அப்டேட் சிரஞ்சீவியின் பிறந்த நாளை முன்னிட்டு நாளை மாலை வெளியாகும் என தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் தயாராகி வரும் புதிய படம் ‘சிரஞ்சீவி 153’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டு, இயக்குனர் மோகன் ராஜா இயக்குகிறார்.

இப்படத்தின் பணிகள் படப்படிப்பு அண்மையில் ஹைதராபாத்தில் தொடங்கியது. இப்படத்தை கொனிடேலா புரொடக்சன்ஸ் மற்றும் சூப்பர் குட் பிலிம்ஸ் இணைந்து தயாரித்து வருகிறது.

இந்நிலையில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் பிறந்த நாளை முன்னிட்டு நாளை மாலை 5.04 மணி அளவில் இப்படத்தை பற்றிய புதிய அப்டேட்டை வெளியிடுகின்றனர்.

இதுதொடர்பான அறிவிப்பு வெளியானவுடன் ரசிகர்கள், மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஒரு நாள் முன்னதாகவே திருவிழா போல் உற்சாகத்துடன் கொண்டாட தயாராகி விட்டார்கள்.

இயக்குனர் மோகன் ராஜா ‘சிரஞ்சீவி 153’ படத்தின் திரைக்கதையை வித்தியாசமாக எழுதியிருக்கிறார்.

இப்படத்திற்கு எஸ். தமன் இசையமைக்கிறார். இதன் காரணமாக ரசிகர்கள் இப்படத்தின் இசையும், மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் நடனமும் இருக்கும் என்று எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டார்கள்.

#Chiru153 special Update tomorrow at 5:04PM

சூர்யாவுக்கும் ‘சூரரை போற்று’ படத்துக்கும் விருது..; கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத் பாராட்டு

சூர்யாவுக்கும் ‘சூரரை போற்று’ படத்துக்கும் விருது..; கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா, அபர்ணா பாலமுரளி, காளி வெங்கட், ஊர்வசி உள்ளிட்டோர் நடிப்பில் சுதா கொங்கோரா இயக்கத்தில் அமேசான் ஓடிடியில் ரிலீசான படம் ‘சூரரைப் போற்று’.

பிரபல ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவானது.

இப்படத்தை தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது.

ஓடிடி தளம் என்றாலும் படம் வெளியாகி அனைவரின் ஆதரவைப் பெற்று சூப்பர் ஹிட் அடித்தது.

நடிகர் ஜிவி. பிரகாஷ் இசையமைத்து இருந்தார்.

இந்த நிலையில் மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் (Indian Film Festival Of Melbourne) நடிகர் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான விருது மற்றும் சிறந்த படத்துக்கான விருதும் கிடைத்துள்ளது.

இதே போல் சிறந்த இயக்குநர் பிரிவில் ‘சூரரைப் போற்று’ பட இயக்குநர் சுதா கொங்கராவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கடந்த பல மாதங்களுக்கு முன் ஐஎம்டிபி ( IMDB) என்ற ரேடிங் தளம், உலக அளவில் தலைசிறந்த படங்கள் எது என ரசிகர்களிடம் கருத்துக் கேட்டு பட்டியலை வெளியிட்டு இருந்தது.

இதனையடுத்து கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத் சூர்யாவுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார்.

அதிலும் 10க்கு 9.1 ரேட்டிங் பெற்று, சூரரைப் போற்று திரைப்படம் உலகளவில் 3-ஆம் இடம் பிடித்திருந்தது.

இந்தப் படம் விரைவில் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படவிருக்கிறது என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

Soorarai Pottru bags the Best Actor for Suriya & Best Film awards at the Indian Film Festival of Melbourne

soorarai pottru

தமிழ் சினிமா PROக்கள் எலெக்சன் ரிசல்ட்..: புதிய தலைவர் செயலாளர் பொருளாளர் யார்.?

தமிழ் சினிமா PROக்கள் எலெக்சன் ரிசல்ட்..: புதிய தலைவர் செயலாளர் பொருளாளர் யார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவிற்கும் ரசிகர்களுக்கும் பாலமாக இருப்பவர்கள் ‘பி.ஆர்.ஓ.க்கள்’ என்றழைக்கப்படும் பத்திரிகை தொடர்பாளர்கள்.

தமிழ் சினிமாவில் ‘பி.ஆர்.ஓ.க்கள்’ சங்கமான ‘தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் சங்க’த்திற்கு நேற்று ஆகஸ்ட் 19ல் தேர்தல் நடைபெற்றது.

இந்த சங்கத்திற்கு 2 வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம்.

பிஆர்ஓ சங்க முன்னாள் தலைவரான டைமண்ட் பாபு தலைமையில் ஒரு அணியும், முன்னாள் செயலாளர் ஜான் தலைமையில் ஒரு அணியும் தற்போது களத்தில் இருந்தனர். இவர்கள் தலைவர்கள் பதவிக்கு போட்டியிட்டனர்.

டைமண்ட் பாபு அணியில் தலைவர் பதவிக்கு அவரே போட்டியிட்டார். செயலாளர் பதவிக்கு யுவராஜ் போட்டியிட்டார். பொருளாளர் பதவிக்கு ஆனந்த் போட்டியிட்டார்.

துணைத் தலைவர்கள் பதவிக்கு வி.கே.சுந்தரும், ராஜ்குமாரும், இணைச் செயலாளர்கள் பதவிக்கு முத்துராமலிங்கமும், கணேஷூம் போட்டியிட்டனர்.

செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு, ‘திரைநீதி’ செல்வம், ‘மதிஒளி’ குமார், இனியன் ராஜன், சரவணன், புவன், செய்யது இப்ராஹிம், தர்மதுரை ஆகியோர் போட்டியிட்டனர்.

ஜான் தலைமையிலான அணியில் அவரே தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார்.

செயலாளர் பதவிக்கு விஜயமுரளியும் பொருளாளர் பதவிக்கு குமரேசனும் போட்டியிட்டனர்.

துணைத் தலைவர்கள் பதவிக்கு மதுரை செல்வம், கோவிந்தராஜ் இருவரும் போட்டியிட்டனர்.

இணைச் செயலாளர்கள் பதவிக்கு ராமானுஜம், செல்வரகு இருவரும் போட்டியிட்டனர்.

செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு, கடையம் ராஜூ, ‘கிளாமர்’ சத்யா, வெங்கட், சாவித்திரி, வி.எம்.ஆறுமுகம், நித்திஷ் ஸ்ரீராம், பிரியா ஆகியோர் போட்டியிட்டனர்.

இந்தத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நேற்று காலை 8 மணி முதல் மதியம் 1 மணிவரையிலும் சென்னை, சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

தேர்தல் முடிவுகள் இதோ….

பிஆர்ஓ யூனியன் தேர்தல்: டைமண்ட் பாபு தலைவர், யுவராஜ் செயலாளர்!

தென்னிந்திய திரைப்பட மக்கள் தொடர்பாளர் யூனியன் தேர்தலில் டைமண்ட் பாபு தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

அவரது தலைமையிலான அணி பெரும்பாலான பதவிகளைப் பிடித்தது.

பிரசாத் லேபில் இன்று நடந்த தேர்தலின் முடிவுகள்:

தலைவர்: டைமண்ட் பாபு

துணைத் தலைவர்: வீ கே சுந்தர்

துணைத் தலைவர்: கோவிந்தராஜ்

செயலாளர்: யுவராஜ்

இணைச் செயலாளர்கள்: கணேஷ்குமார், முத்துராமலிங்கம்

பொருளாளர்: இரா குமரேசன்

பொருளாளர் பதவிக்குப் போட்டியிட்ட எம்பி ஆனந்த், இரா குமரேசன் இருவரும் சமமாக வாக்குகள் பெற்றனர். எனவே குழுக்கள் முறையில் குமரேசன் தேர்வு செய்யப்பட்டார்.

செயற்குழு உறுப்பினர்கள்:

ஆறுமுகம்
புவன்
தர்மா
இனியன்
கிளாமர் சத்யா
சாவித்ரி
ராஜேஷ்
வெங்கட்
திரைநீதி செல்வம்.

விபி மணி, கண்ணதாசன், பாரிவள்ளல் ஆகிய மூவரும் தேர்தல் அதிகாரிகளாக செயல்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினர்..

Tamil Cinema Pro election result here

மாதவன் – தனுஷ் பட நடிகையை கைது செய்ய வலுக்கும் கோரிக்கை

மாதவன் – தனுஷ் பட நடிகையை கைது செய்ய வலுக்கும் கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலிவுட்டில் தனுஷ் நடித்த ராஞ்சனா மற்றும் மாதவன் நடித்த தனு வெட்ஸ் மனு உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சுவரா பாஸ்கர்.

பல சர்ச்சையான கருத்துகளை சொல்லி பல சிக்கலில் சிக்குபவர் இவர்.

தற்போதும் ஒரு சர்ச்சையான கருத்தை தெரிவித்து சமூகவலைதள கண்டனத்திற்கு ஆளாகியுள்ளார்.

சுவரா பாஸ்கரின் சமீபத்திய ட்விட்டரில்…

“ஆப்கானிஸ்தானில் நடப்பதுதான் இந்தியாவிலும் நடக்கிறது.

ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளின் அட்டகாசம் அளவுக்கு மீறி உள்ளது.

அதேபோல் இந்தியாவிலும் இந்துவா தீவிரவாதமும் சகித்துக்கொள்ள முடியாத அளவுக்கு உள்ளது.

மேலும் இந்துத்துவ தீவிரவாதத்தைப் பொறுத்துக் கொள்ளும் நாம், தாலிபனில் நடக்கும் தீவிரவாதத்தைக் கண்டு கொதிக்கிறோம்.. அதிர்ச்சியடைகிறோம்.” என கூறியிருந்தார்.

இந்துத்துவா உடன் தீவிரவாதத்தை அவர் இணைத்துப் பேசியிருப்பதால் அவரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வலுக்கிறது.

Arrest Swara Bhasker Trends on Twitter After Actress’s Latest Post on Taliban

லயோலாவில் லா..ல்லா..லலா…ல்லா..; மாணவர்களை ஊக்கப்படுத்தும் கொலசாமி..; கை கொடுக்கும் சீனு ராமசாமி

லயோலாவில் லா..ல்லா..லலா…ல்லா..; மாணவர்களை ஊக்கப்படுத்தும் கொலசாமி..; கை கொடுக்கும் சீனு ராமசாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

“கொலசாமி” என்ற பாடல், விவசாயிகளின் அன்றாட வாழ்க்கை முறையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

விவசாயத்தை மட்டுமே நம்பி அதையேக் கச்சையாகக் கட்டிக்கொண்டு பல எதிர்பார்ப்புகளோடு, சிறு சிறு கனவுகளை மனக்கண்கொண்டு வாழும் விவசாயிகளுக்கு, திடீர் தீடீரென உருவாகும் பருவநிலை மாற்றத்தாலும் இயற்கையின் சீற்றத்தாலும் சொல்லிமாளா கஷ்டத்தையும் நஷ்டத்தையும் ஒவ்வொரு வருடமும் அனுபவிக்கிறார்கள்.

இப்படிப்பட்ட தொடர் நிகழ்வை நம் கண்முன்னே படம்பிடித்துக் காட்டுகிறது இப்பாடல்.

தன் வாழ்க்கையின் உச்சநிலை துயரத்தை தனக்குள்ளே சொல்லிக்கொண்டு, தனக்கு சோறுபோடும் விளைநிலத்தை தான் பெற்றெடுத்தப் பிள்ளையாகவேப் பேணிக்காக்கிறார் விவசாயி.

விவசாயிகளின் உண்மையானத் துயரத்தை உள்வாங்கியவர்களாய், வருடம் முழுவதும் வெட்டவெளி வெயில் காட்டில் வெந்து தணியும் விவசாயிகளை மதிப்போம்.

விவசாயிகளின் விவசாய தொழிலுக்கு முன்னுரிமை வழங்கி விவசாயத்தைக் காப்போம் என்ற உள்ளார்ந்த வேண்டுகோளை உரத்தக் குரலில் ஒலிக்கிறது இந்த “கொலசாமி” பாடல்.

#லயோலா இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் சேர்ந்து உருவாக்கிய இந்த #கொலசாமி பாடல் மாணவர்களை ஊக்கப்படுத்தும் பாடலாக அமையும்.

இதற்கு பாடல் எழுதி இயக்கிய மாணவர் எஸ்.அருள்துரை.
இசை:எம்.சுமன் மரிய அந்தோணி.
பாடகர்:யாழினி
எடிட்டிங்:B.சரவணன்
கிரியட்டிவ் சப்போர்ட்: நதியா
மீடியா சப்போர்ட்:மூவி பாண்ட் டிஜிட்டல்
Pro: ஜான்சன்
தயாரிப்பு:காஸ்மோஸ் மீடியா புரொடக்‌ஷன்ஸ் .

இந்த பாடலை பிரபல சினிமா இயக்குநர் சீனு ராமசாமி அவர்கள் நாளை 20.8.2021 வெள்ளிக்கிழமை மாலை 5மணிக்கு அவரது டிவிட்டரில் வெளியிடுகிறார்.

Loyola students in Kolasaami song will be released by Seenu Ramasamy

ரஜினிக்கு மகளாக நடித்த மீனாவே ஜோடியானதை போல சூர்யா ரீல் மகளுக்கும் ஆசையாம்

ரஜினிக்கு மகளாக நடித்த மீனாவே ஜோடியானதை போல சூர்யா ரீல் மகளுக்கும் ஆசையாம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1970-களில் ஓரிரு படங்களில் ரஜினிக்கு மகளாக குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் மீனா.

‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தில் ரோஸி கேரக்டரில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

பின்னர் பருவ மங்கையான பின்னர் ‘எஜமான், வீரா, முத்து ஆகிய படங்களில் ரஜினிக்கு ஜோடியானார். இந்த ஜோடிக்கு இப்போதும் மவுசு உண்டு. ‘அண்ணாத்த’ படத்திலும் இவர்கள் இணைகின்றனர்.

ரஜினிக்கு மகளாக நடித்து பின்னர் மீனா ஜோடியானதை போல சூர்யாவுக்கு மகளாக நடித்தவர் அவருடன் ஜோடி போட ஆசைப்பட்டு ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

‘சில்லுனு ஒரு காதல்’ படத்தில் சூர்யா, ஜோதிகா ஜோடியின் மகளாக நடித்து பிரபலமானவர் ஸ்ரேயா ஷர்மா.

இவர் ரஜினி நடித்த எந்திரன் படத்தில் க்ளைமாக்ஸ் காட்சியில் சிட்டி ரோபோவை பார்க்க வரும் சிறுமியாக வந்தார்.

தற்போது ஸ்ரேயா நன்றாக வளர்ந்து பெரிய மனுஷியாகிவிட்டார்.

இவர் தனுஷ் ரசிகை என்று கூட ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

மற்றொரு பேட்டியில் ரஜினி மீனாவை போல நானும் சூர்யாவுடன் ஜோடி போட வேண்டும் என்ற தனது ஆசையை தெரிவித்துள்ளார்.

Suriya’s reel daughter wants to pair with him

More Articles
Follows