குடும்ப பொழுதுபோக்கு படத்தில் பாலியல் குற்றங்கள்.; பாராட்டிய சென்சார்

குடும்ப பொழுதுபோக்கு படத்தில் பாலியல் குற்றங்கள்.; பாராட்டிய சென்சார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹர்ஷித் பிக்சர்ஸ் (S R HARSHITH PICTURES) சார்பில் பி.ஆர்.தமிழ்செல்வம் தயாரிப்பில், வேலன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மெய்ப்பட செய்’. அறிமுக நடிகர் ஆதவ் பாலாஜி நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில், மதுனிகா நாயகியாக நடித்திருக்கிறார்.

இவர்களுடன் தயாரிப்பாளர் தமிழ்செல்வம், ஆடுகளம் ஜெயபாலன், ஓ.ஏ.கே.சுந்தர், இயக்குநர் ராஜ்கபூர், ராகுல் தாத்தா, சூப்பர் குட் சுப்பிரமணி, விஜய கணேஷ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

முழுக்க முழுக்க குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ள ’மெய்ப்பட செய்’ பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் குறித்து பேசியிருப்பதோடு, வேகமான காட்சிகளோடும், விறுவிறுப்பான திரைக்கதையோடும் அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் வகையிலான படமாக உருவாகியுள்ளது.

பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை மையப்படுத்தி பல படங்கள் வந்தாலும், அப்படங்களில் குற்றங்கள் எதனால் நடக்கிறது அல்லது குற்றங்கள் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?, போன்றவற்றை சொல்வதில்லை.

பாலியல் குற்றங்களும், அதற்கான பழிவாங்குதல் என்ற பாணியில் மட்டுமே இருக்கின்றன. ஆனால், ‘மெய்ப்பட செய்’ படத்தில் பாலியல் குற்றங்கள் எதனால் நடக்கிறது? என்பது பற்றி விரிவாக பேசப்பட்டிருப்பதோடு, பாலியல் குற்றங்கள் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? என்ற தீர்வும் சொல்லப்பட்டிருக்கிறது.

சமூக அக்கறையோடு கிராமத்தில் வாழும் நான்கு நண்பர்கள் சந்தர்ப்ப சூழ்நிலையால் தனது காதல் மனைவியோடு சென்னை வர நேரிடுகிறது. சென்னையில் வாழ வழி தேடும் அவர்கள் கண்முன்னே பாலியல் குற்றவாளிகளின் கொலைவெறியாட்டத்தை காண நேரிடுகிறது.

சட்டத்தில் உள்ள ஓட்டைகளை வைத்து பகிரங்கமாக மக்களையும் காவல்துறையையும் தங்களது ரவுடித்தனத்தாலும், ஆளுமையாலும் அடிபணிய வைத்து சுற்றிக் கொண்டிருக்கும் இந்த கும்பலை தனி மனிதர்களாக இந்த கிராமத்து இளைஞர்கள் போராடி சமுதாயத்துக்கு முன் குற்றவாளிகளை தோலுரித்து காட்டியும், மக்களுக்கான நம் நாட்டின் சட்டம் தப்பு செய்தவர்களை தண்டித்ததா? இல்லை அப்பாவிகளை குற்றவாளிகளாக்கியதா? என்பது தான் இப்படத்தின் கதை.

சமீபத்தில் படத்தை பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள், படம் பார்ப்பவர்களுடன் கனெக்ட் ஆவது போல் படம் நகர்கிறது, என்று சொல்லி பாராட்டியதோடு, படத்தில் எந்தவித கட்டும் கொடுக்கவில்லையாம்.

சில காட்சிகளின் கோணத்தை மட்டும் மாற்றும்படி சொல்லியவர்கள், படத்தில் இடம்பெற்றுள்ள சண்டைக்காட்சிகளுக்காக படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்.

வரும் ஜனவரி 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள ’மெய்ப்பட செய்’ வழக்கமான படமாக இல்லாமல் சினிமா ரசிகர்களுக்கு ஏற்ற ஜனரஞ்சகமான படமாக மட்டும் இன்றி, சமூக அக்கறையுடன் கூடிய தரமான படமாகவும் இருக்கும், என்று தயாரிப்பாளர் பி.ஆர்.தமிழ்செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

’பார்வை ஒன்றே போதுமே’. ’பெரியண்ணா’. ’சாப்ளின்’ போன்ற படங்களில் பாடல்கள் மூலம் கவனிக்க வைத்தவர் இசையமைப்பாளர் பரணி.

அவரது இசையில் நான்கு பாடல்கள் இடம்பெற்றுள்ளது. மீண்டும் இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளர் பரணி பட்டி தொட்டி எங்கும் பேசப்படுவார். குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாரதமே பாரதமே என்கிற பாடல் கேட்பவரையும் பார்ப்பவரை நிச்சயம் கண்கலங்க வைக்கும்.

நடனத்தை தீனா மாஸ்டர் ஒவ்வொரு பாடலுக்கும் வித்தியாசமான நடன அசைவுகளை கொடுத்து அசத்தியுள்ளார்.

மிரட்டல் செல்வாவின் சண்டை பயிற்சியில் நான்கு சண்டைக்காட்சிகள் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டுள்ளது. சமூக அக்கறையுடன் பாலியல் குற்றவாளிகளை களையெடுக்க ஒரு தீர்வாக கதை அமைத்து திரைக்கதை வசனம் எழுதி அறிமுக இயக்குநர் வேலன் சிறப்பாக இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் ஆர்.வேல் இந்தப் படத்திற்கு பக்கபலமாக கதை ஓட்டத்தோடு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ’மிருதன்’, ’சித்திரம் பேசுதடி-2’, ’ஆடாம ஜெயிச்சோமடா’. ’பரமகுரு’ ஆகிய படங்களுக்கு படத்தொகுப்பாளராக பணிபுரிந்த கே.ஜே.வெங்கட்ரமணன் இப்படத்திற்கு சிறப்பான படத்தொகுப்பை கொடுத்துள்ளார்.

மக்கள் தொடர்பு தர்மதுரை மற்றும் சுரேஷ் சுகு இருவரும் பணியாற்றி உள்ளனர்.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள “கஞ்சா பிசினறியே..” என்ற பாடல் ஐந்து லட்சம் பார்வையாளர்களை கடந்து சோசியல் மீடியாவில் வைராகி வருவதோடு, பட்டி தொட்டி எங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

சமூக அக்கறை உள்ள படங்கள் தமிழ் சினிமாவில் அத்தி பூத்தார் போலதான் வருகிறது , அப்படி ஒரு படமாக உருவாகியுள்ள ‘மெய்ப்பட செய்’ திரைப்படம் ஜனவரி 27 ஆம் தேதி தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Censor board praised Meippada Sei movie team for its content

கவுண்டமணி வடிவேலு பாணியில் மீண்டும் காமெடியனாக சந்தானம்.!? இதான் காரணமா?

கவுண்டமணி வடிவேலு பாணியில் மீண்டும் காமெடியனாக சந்தானம்.!? இதான் காரணமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களில் நல்லதொரு இடத்தை பிடித்தவர் சந்தானம்.

பல படங்கள் இவரது காமெடிக்காகவே ஓடியது. எனவே ஒரு கட்டத்தில் இவர் நாயகனாக களமிறங்க திட்டமிட்டார்.

அதன்படி நாயகனுக்கே உரித்தான லுக்கில் ஸ்மார்ட்டாக மாறினார்.

அதன்படி.. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான், A1, தில்லுக்கு துட்டு ஆகிய படங்களில் நடித்தார்.

இந்த படங்கள் சந்தானத்திற்கு ஒரு நட்சத்திர நாயகன் அந்தஸ்த்தை கொடுத்தது.

ஆனால் அவர் நடித்து கடைசியாக வெளியான ‘சபாபதி, குளு குளு, ஏஜன்ட் கண்ணாயிரம்’ ஆகிய படங்கள் தோல்வியை சந்திதது.

‘சர்வர் சுந்தரம்’ படமும் சில வருடங்களாக கிடப்பில் உள்ளது.

தற்போது ‘கிக்’ என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் சந்தானம் மீண்டும் காமெடியனாக நடிப்பதாக தெரிகிறது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் 62 படத்திலும், சுந்தர் சி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘அரண்மனை 4’ படத்திலும் சந்தானம் நடிப்பதாக சொல்லப்படுகின்றது.

இதற்கு முன் காமெடியனாக நடித்து நாயகனாக வந்த கவுண்டமணி.. வடிவேலு விவேக் உள்ளிட்டவர்கள் மீண்டும் காமெடிக்கே திரும்பிய கதைகளும் இங்குண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

Santhanam again as a comedian in the style of Gaundamani Vadivelu.!?

சுந்தர் சி இயக்கத்தில் விஜய் சேதுபதி.; மீண்டும் காமெடியனாக சந்தானம்.?!

சுந்தர் சி இயக்கத்தில் விஜய் சேதுபதி.; மீண்டும் காமெடியனாக சந்தானம்.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் நடிகர் தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் சுந்தர் சி.

ஒரு பக்கம் இயக்கம் மறுபக்கம் நடிப்பு என பிசியாக உள்ளார்.

ஆக்சன், அரண்மனை 3, காபி வித் காதல் உள்ளிட்ட படங்கள் இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியானது.

தற்போது தலைநகரம் 2 படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அரண்மனை 4 படத்தை சுந்தர் இயக்க உள்ளதாக தகவல் வந்துள்ளன.

இதில் விஜய் சேதுபதி நாயகனாக நடிப்பதாகவும் முக்கியமான காமெடி வேடத்தில் சந்தானம் நடிக்க உள்ளதாகவும் தகவல் வந்துள்ளன.

சில தினங்களுக்கு முன் சுந்தர் சி மற்றும் சந்தானம் பிறந்தநாள் விழாவில் விஜய் சேதுபதி கலந்து கொண்டார்.

எனவே இந்த தகவல் உறுதியென கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Vijay Sethupathi and Santhanam joins for Sundar C film?

ரஜினிகாந்தின் புதிய படத்தில் இருந்து வெளியேறும் பிரபலம்

ரஜினிகாந்தின் புதிய படத்தில் இருந்து வெளியேறும் பிரபலம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி, விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் ‘லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்கவுள்ளார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

இதற்கிடையில், ‘லால் சலாம்’ படத்தில் ஆடை வடிவமைப்பில் கையெழுத்திட்ட பூர்ணிமா ராமசாமி, அந்த திட்டத்தில் இருந்து விலகுவதாக ட்விட்டரில் அறிவித்துள்ளார். அவர் “முன் தயாரிப்பு நிலையில் உள்ள மாற்ற முடியாத வேறுபாடுகள் காரணமாக, நான் லால் சலாம்’ திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார் .

Popular celebrity announces walk out of Superstar Rajinikanth’s new movie

மனித ரூபத்தில் கடவுள்.; மலையாள மக்களை மயக்கிய ‘மாளிகப்புரம்’ தமிழில்..

மனித ரூபத்தில் கடவுள்.; மலையாள மக்களை மயக்கிய ‘மாளிகப்புரம்’ தமிழில்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாளத்தில் வெளியாகி மெகா ஹிட்டான ‘மாளிகப்புரம்’ பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இது தமிழில் வருகிற 26ம் தேதி குடியரசு தினத்தில் வெளியாகிறது. மக்களிடத்தில் இதன் எதிர்பார்ப்பும் அதிகமாகியுள்ளது.

‘மாளிகப்புரம்’ படத்தில் ஐயப்பனின் மார்கழி மாத வழிபாடு பிரதானம். ஆன்மீகமும், அறிவியலும், நம்பிக்கையும் ஒன்றுக்குள் ஒன்று பின்னிப் பிணைந்தது என்பதை சொல்லுவது தான் இப்படம்.

‘மாளிகப்புரம்’ படம், ஒரு குடும்பத்தின் பிரச்னையை ஆன்மீக வழியாக பார்க்கிறது.

‘கடவுள் மனித ரூபத்தில் வந்து மனிதர்களுக்கு உதவி செய்வான்’ என்பது ஆன்மீகம்.

‘தகுந்த நேரத்தில் சகமனிதர்களுக்கு உதவி செய்பவன் கடவுள்’ என்று சொல்கிறது நம்பிக்கை.

இரண்டுக்குமான இடைவெளி, ஒரு மெல்லிய நூலிழை அதன் வழியாக பயணிக்கிறது, ‘மாளிகப்புரம்’.

எட்டாம் நூற்றாண்டில் மதுரையிலிருந்து சென்று பந்தள நாட்டில் குடியேறிய பாண்டிய மன்னர்களின் வழித்தோன்றல்களே ஐயப்பன் பிறந்த பந்தள ராஜவம்சத்தினர்.

ஒரு பக்தன் ஐயப்பனை வேண்டி தூய்மையாக விரதம் இருந்தால் சாமி ஐயப்பன் ஏதோ ஒரு உருவத்தில் நிச்சயம் அவர்கள் முன்பு தோன்றி வழித்துணையாக இருப்பார் என்பதே “மாளிகப்புரம்” திரைக்கதையின் கரு.

பெரிதும் வரவேற்பு இல்லாமல் சாதாரணமாக இப்படம் வெளியாகி, இப்போது பட்டி தொட்டியெங்கும் குடும்பம் குடும்பமாக இப்படத்தை பார்த்து வருகிறார்கள்.

படத்தை கமர்சியலாகவும்.. ஹீரோயிசமாகவும் உருவாகியதுதான் இதன் பலம்.

இப்படத்தை புதுமுக இயக்குனர் விஷ்ணு சசிசங்கர் இயக்கி பெரும் வெற்றிக் கண்டுள்ளார். இவர், AVM தயாரித்து, சூர்யா-ஜோதிகா நடித்த #பேரழகன் படத்தை டைரக்ட் செய்த சசிசங்கர் மகன் ஆவார்.

நாயகனாக உன்னி முகுந்தன் நடித்துள்ளார். இவர், தனுஷ் நடித்த #சீடன் படத்தில் அறிமுகமானவர். சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த #யசோதா படத்தில் நடித்திருக்கிறார்.

முக்கிய கதாபாத்திரமாக குழந்தை நட்சத்திரம் பேபி தேவானந்தா நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

இவர்களுடன் சம்பத்ராம், மனோஜ் கே.ஜெயன், மாஸ்டர் ஸ்ரீபத், டி.ஜி. ரவி,சைஜிகுருப், அஜய் வாசுதேவ், ஸ்ரீஜித்ரவி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இதில் இரண்டு பாடல்களை பிரபல இயக்குனர் R.V.உதயகுமார் எழுதியுள்ளார்.
ஒரு பாடலை இயக்குனர் யார் கண்ணன் எழுதியுள்ளார்.

KAVYA FILM COMPANY PRESENTS
IN ASSOCIATION WITH – AAN MEGA MEDIA

காவ்யா பிலிம் கம்பெனி வழங்கும், ஆன் மெகா மீடியா இணைந்து தயாரிப்பில்
#மாளிகப்புரம்.

இயக்கம் : விஷ்ணு சசிசங்கர்.
தயாரிப்பு : பிரியா வேணு – நீட்டா பிண்டோ.
கதை,திரைக்கதை: அபிலாஷ் பிள்ளை.
ஒளிப்பதிவு : விஷ்ணு நாராயணன்.
இசை: ரானின்ராஜ்.
எடிட்டிங் : சமீர் முகமது.
வசனம் : கலைமாமணி வி.பிரபாகர்
சவுண்ட் டிசைனர் : எம்.ஆர். ராஜாகிருஷ்ணன்
ஸ்டண்ட்: ஸ்டண்ட் சில்வா,
நடனம்: ஷெரிப்
பாடல்கள்: இயக்குனர் R.V. உதயகுமார்,
இயக்குனர் கண்ணன், முருகானந்தம், பல்லவிகுமார், கோவை சிவா.

பாடியவர்கள் : பிரசன்னா/ வேல்முருகன் / பிரபாகர்/அஜீம்ராஜா / காயத்ரி/ ஏ.கே,ரமேஷ்/சி.அதிதீ

Tamil Nadu Release By #TridentArts Ravi.

Malayalam hit film Maalikappuram to release in tamil

சிம்புவின் 50வது படத்தை தயாரிக்கும் லைக்கா.?; இயக்குனர் இவரா.?

சிம்புவின் 50வது படத்தை தயாரிக்கும் லைக்கா.?; இயக்குனர் இவரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் பிரபலமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று லைக்கா நிறுவனம்.

அண்மைக்காலமாக பல பிரம்மாண்ட படங்களை தயாரித்து வருகிறது.

ரஜினி கமல் விஜய் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களை இந்த நிறுவனம் தயாரித்துள்ளது.

மேலும் ‘பொன்னியின் செல்வன் 1 & 2 படத்தையும் மிகப் பிரமாண்டமாக தயாரித்து இருந்தது.

இந்த நிலையில் சிலம்பரசனின் 50 வது படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை பிரபல இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்குவார் எனவும் சொல்லப்படுகிறது.

அஜித்தின் ‘பில்லா – ஆரம்பம்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் விஷ்ணுவர்தன் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Lyca to produce Simbu’s 50th film?

More Articles
Follows