புதுச்சேரி சபாநாயகராக பாஜக செல்வம் பதவியேற்றார்.; திமுகவில் இருந்தால் அப்படியேதான் இருந்துருக்கனும் என நாஜிமுக்கு பதிலடி கொடுத்தார்.!

புதுச்சேரி சபாநாயகராக பாஜக செல்வம் பதவியேற்றார்.; திமுகவில் இருந்தால் அப்படியேதான் இருந்துருக்கனும் என நாஜிமுக்கு பதிலடி கொடுத்தார்.!

BJP Selvam2021 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் என்ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி வெற்றி பெற்றது.

இவர்களின் உட்கட்சி பிரச்சினையால் அமைச்சரவை இன்னும் அமையவில்லை.

தற்போது தான் பதவி பேரம் நாற்காலி பஞ்சாயத்து எல்லாம் முடிந்துள்ளது.

வெற்றி பெற்று 2 மாதங்களை நெருங்கும் வேளையில் மணவெளி தொகுதியில் வெற்றி பெற்ற பாஜக எம்.எல்.ஏ. செல்வம் சபாநாயகர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.

எதிர்கட்சிகளின் சார்பில் வேட்புமனு எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. எனவே சபாநாயகராக செல்வம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில் சபாநாயகர் தேர்வை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க சட்டசபை இன்று காலை தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் கூடியது.

தற்காலிக சபாநாயகர் லட்சுமிநாராயணன் குறள் வாசித்து சபை நிகழ்வுகளை தொடங்கினார்.

முதல்வர் ரங்கசாமி, எதிர்க்கட்சி தலைவர் சிவா ஆகியோர் செல்வத்தை அழைத்துச் சென்று சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.

தொடர்ந்து முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சபாநாயகரை வாழ்த்தி பேசிக் கொண்டு இருந்தனர்.

அப்போது திமுக காரைக்கால் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. நாஜிம் பேசும்போது…

“சபாநாயகர் செல்வம் திமுகவின் தொகுதி செயலாளராக இருந்ததை தற்காலிக சபாநாயகர் சொல்ல மறந்து விட்டார் என குறிப்பிட்டு பேசினார்.

அப்போது பேசிய செல்வம்..”திமுக-வில் இருந்தால் அப்படியே தான் இருந்து இருப்பேன். 36 ஆண்டுகளாய் திமுகவில் தொகுதி செயலாளராக மட்டுமே இருந்தேன்.

ஆனால் பாஜகவிற்கு வந்த பிறகு இந்த பெரிய பதவி கொடுத்து இந்த இயக்கம் பாஜக” எனக் கூறினார்.

BJP’s R Selvam elected Speaker of Puducherry Assembly

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *