அவன் இவன் பட சிங்கம்பட்டி ஜமீன் அவதூறு; ஆர்யா ஆஜராக கோர்ட் ஆர்டர்

அவன் இவன் பட சிங்கம்பட்டி ஜமீன் அவதூறு; ஆர்யா ஆஜராக கோர்ட் ஆர்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Avan Ivan movie case Court Order to Actor Aryaஒரு நடிகரை சிறந்த நடிகராக செதுக்குவதில் கைதேர்ந்த சிற்பி இயக்குனர் பாலா.

விக்ரம் மற்றும் சூர்யாவுக்கு பிதாமகன், ஆர்யா மற்றும் விஷாலுக்கு அவன் இவன் என தரமான படைப்புகளை கொடுத்து அவர்களின் நடிப்பாற்றலை ரசிகர்களுக்கு காட்டியவர் பாலா.

இந்த நிலையில் அவன் இவன் படத்தில் சிங்கம்பட்டி ஜமீனை அவதூறு செய்துள்ளதாக நெல்லை அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் நடிகர் ஆர்யாவுக்கு எதிராக சில ஆண்டுகளுக்கு முன் வழக்குத் தொடரப்பட்டது.

அந்த வழக்கு விசாரணைக்காக வரும் 28 ஆம் தேதி ஆர்யா நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Avan Ivan movie case Court Order to Actor Arya

பிக்பாஸில் அஜித் ரீல் தங்கை.?; 75 நாட்கள்..? 12 போட்டியாளர்கள்.?

பிக்பாஸில் அஜித் ரீல் தங்கை.?; 75 நாட்கள்..? 12 போட்டியாளர்கள்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bigg Boss contestants name list and latest updatesபிக்பாஸ் நிகழ்ச்சியின் 3 சீசன்களை சிறப்பாக நடத்திய நடிகர் கமல்ஹாசனே நான்காவது சீசனையும் நடத்தவுள்ளார்.

இந்த நிகழ்ச்சி அக்டோபர் முதல் வாரம் முதல் ஒளிப்பரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த சீசனில் சஞ்சனாசிங், சனம் செட்டி, ஷாலு ஷம்மு, ஷிவானி நாராயணன், ரக்சன், ரியோ ராஜ், கரன், பாலாஜி முருகதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொள்வார்கள் என சொல்லப்படுகிறது.

அதுபோல் வேதாளம் படத்தில் அஜித்தின் தங்கையாக நடித்த லட்சுமி மேனனும் போட்டியாளராக இணைவார் என கூறப்படுகிறது.

இதுவரை நடைபெற்ற சீசன்களிலும் 16 போட்டியாளர்கள் உடன் 100 நாட்கள் நடைபெற்றது.

ஆனால் இம்முறை கொரோனா வைரஸ் காரணமாக நாட்களையும் போட்டியாளர்களை குறைக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

அதாவது 12 போட்டியாளர்கள் உடன் 75 நாட்கள் நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகும் என கூறப்படுகிறது.

Bigg Boss contestants name list and latest updates

சூர்யாவுக்காக ரசிகர்களே கட்சி தொடங்கி அரசியலுக்கு அழைத்து போஸ்டர்

சூர்யாவுக்காக ரசிகர்களே கட்சி தொடங்கி அரசியலுக்கு அழைத்து போஸ்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriyas statement about NEET exam and Education systemநீட் தேர்வு அச்சத்தால் அந்த தேர்வை எழுதாமல் 3 தமிழக மாணவர்கள் தற்கொலை செய்துக் கொண்டனர்.

இதனால் வேதனையுடன் நீட் தேர்வுக்கு எதிராக அரசியல் கட்சிகளை விமர்சித்தும் நீதிமன்றத்தை விமர்சித்தும் நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டார்.

இதனால் சில வழக்கறிஞர்களும் ஓரிரு அரசியல் கட்சிகளும் சூர்யாவை விமர்சித்தனர்.

இதனையடுத்து சூர்யாவுக்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் போஸ்டர்கள் அடித்து வருகின்றனர். அவரை அரசியலுக்கும் அழைக்கின்றனர்.

தற்போது ஒரு புதிய போஸ்டரை அடித்துள்ளனர். அதில்…

வாடிவாசல் நாயகனே அரசியல் களத்திற்கு வாருங்கள்…
அநீதிக்கு எதிராக குரல் இனி அரசியலில் ஒலிக்கட்டும்…
அறம் சார்ந்த அரசியலை முன்னெடுப்போம் வாருங்கள்…

என மதுரையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

மேலும் சூர்யா கட்சிக்கு ’இளம் காளைகள் கட்சி’ என்ற பெயரையும் அவர்களே முடிவு செயது அறிவித்துள்ளனர்.

Suriya fans wall poster with Political Party name

Suriya fans wall poster with Political Party name

மீண்டும் ரீமேக்கில் பாலா; ஆர்.கே. சுரேஷ்க்கு கைகொடுக்கும் சிவகார்த்திகேயன்

மீண்டும் ரீமேக்கில் பாலா; ஆர்.கே. சுரேஷ்க்கு கைகொடுக்கும் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyan will launch Bala and RK Sureshs movie first lookநடிகர், நடிகைகளுக்கு ரசிகர்கள் இருப்பதுபோல ஒரு சில இயக்குனர்களுக்கும் ரசிகர்கள் உள்ளனர்.

பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம், மகேந்திரன் பாலுமகேந்திரா, பாக்யராஜ், மணிரத்னம் உள்ளிட்டோர் தங்களுக்கென ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கி வைத்திருந்தனர்.

கடந்த 20 வருடங்களில் ஷங்கர், பாலா, செல்வராகவன், வெற்றிமாறன், கௌதம் மேனன் உள்ளிட்டோரும் இதே பாணியில் பயணிக்கின்றனர்.

இதில் பாலாவின் படங்கள் சற்று வித்தியாசமானதாக இருக்கும்.

இவர் பெரும்பாலும் ரீமேக் படங்களை இயக்குவதில்லை.

ஆனால் விக்ரம் மகன் துருவ்வுக்காக வர்மா என்ற படத்தை இயக்கினார்.

அந்த படம் முழுவதும் தயாரான நிலையில் அந்த படத்தை ரிலீஸ் செய்ய மறுத்துவிட்டார் தயாரிப்பாளர். இது உலக வரலாற்றில் முதன்முறை என கூறப்படுகிறது.

அதன்பின்னர் துருவ் ஆதித்ய வர்மா என்ற படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகம் செய்துவிட்டார் விக்ரம்.

அதன்பின்னர் பாலா எந்த படத்தையும் இயக்கவில்லை.

தற்போது தன் சொந்த நிறுவனமான பி ஸ்டுடியோ சார்பாக ஒரு படத்தை தயாரித்து வருகிறார் பாலா.
அதில் ஆர்கே. சுரேஷ், பூர்ணா உள்ளிட்டோர் இணைந்துள்ளனர்.

இந்த படம் மலையாளத்தில் வெளியான ‘ஜோசப்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த புதிய பட டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வரும் 23ஆம் தேதி காலை 9.30 மணிக்கு சிவகார்த்திகேயன் வெளியிடவுள்ளார் என அறிவித்துள்ளனர்.

Sivakarthikeyan will launch Bala and RK Sureshs movie first look

போதை பொருள் வழக்கில் சிறையில் இருக்கும் நடிகைகள் சிகரெட் கேட்டு தகராறு..?

போதை பொருள் வழக்கில் சிறையில் இருக்கும் நடிகைகள் சிகரெட் கேட்டு தகராறு..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sandalwood drug case Actress Ragini Sanjjanaa demanding cigarettes in Jailகன்னட சினிமா உலகை போதை பொருள் விவகாரம் ஆட்டி வைக்கிறது.

கன்னட நடிகைகள் ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி ஆகிய இருவரும் போதை பொருள் விவகாரத்தில் சிக்கினர்.

இதனை தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டு பெங்களூரு பார்ப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இவர்கள் இருவருக்கும் சிகரெட் மற்றும் மது பழக்கம் இருந்துள்ளதாம்.

எனவே இதனையடுத்து இவர்கள் சிகரெட் கேட்டு பெண் காவலரிடம் தகராறு செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இவர்களின் ஜாமீன் மனு மீதான விசாரணை செப். 21ல் பெங்களூர் நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.

Sandalwood drug case Actress Ragini Sanjjanaa demanding cigarettes in Jail

டைரக்டர் மிஷ்கினின் அடுத்த பட அப்டேட்

டைரக்டர் மிஷ்கினின் அடுத்த பட அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director mysskinசைக்கோ படத்திற்கு பிறகு துப்பறிவாளன் 2 படத்தை மிஷ்கின் இயக்கி வந்தார்.

ஆனால் அந்த பட தயாரிப்பாளரும் நடிகருமான விஷாலுடன் ஏற்ப்பட்ட மோதலால் விலகினார்.

இந்த நிலைநில் தனது அடுத்த படம் தொடர்பான அறிவிப்பை வருகிற 20ம் தேதி வெளியிடுவதாக தெரிவித்துள்ளார்.

வருகிற செப். 20ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு, அடுத்த படம் பற்றிய அறிவிப்பை வெளியிடுகிறேன் என தெரிவித்துள்ளார்.

Director Mysskins next film update on sep 20

More Articles
Follows